முஷாரஃபின் வாக்கெடுப்பு

This entry is part [part not set] of 32 in the series 20020407_Issue

சாமுவேல் பைத்


ஒருமுறை, முன்னாள் பாகிஸ்தான் பிரதம மந்திரி பெனசீர் புட்டோ பேசும்போது, பாகிஸ்தான் மூன்று Aக்களால் ஆளப்படுகிறது என்று சொன்னார், அது ஆர்மி, அமெரிக்கா, அல்லா. எப்போதுமே பாகிஸ்தானை ராணுவம் (ஆர்மி) தான் ஆள்கிறது. பாகிஸ்தான் ராணுவம் மூலமாக, அமெரிக்கா மறைமுகமாக பாகிஸ்தானை ஆள்கிறது. திருமதி புட்டோ அல்லாவையும் சேர்த்துக்கொண்டார். பாகிஸ்தான் ராணுவம் அடிக்கடி அல்லாவின் பெயரை உபயோகப்படுத்திக்கொண்டு பாகிஸ்தானை ஆள்வதால் அப்படிச் சொல்லியிருக்கலாம். அல்லாவின் பெயரை உபயோகித்துக்கொள்பவர்கள் எப்போதுமே முதலாவது Aஆன ஆர்மியோடு கூட்டணி வைத்துக்கொள்பவர்கள்தான். மக்களது தேர்வால், அவர்களது வாக்குகளால் எப்போதுமே பாகிஸ்தான் ஆளப்பட்டதில்லை.

ஆகவே, ஜெனரல் பெர்வேஸ் முஷாரஃப் பொது வாக்கெடுப்பு மூலமாக ஜனாதிபதி ஆனாலும் ஒன்றுதான், அது இல்லாமல் ஜனாதிபதி ஆனாலும் ஒன்றுதான். அதுவெல்லாம் முக்கியமல்ல. எது முக்கியமென்றால், இன்றைக்கு பாகிஸ்தானின் தோளில் துப்பாக்கியை வைத்து தாலிபானையும் அல்குவேதா, அமெரிக்க எதிர்ப்பு ஆசாமிகளையும் சுடுவதற்காக அமெரிக்காவுக்கும், அமெரிக்காவின் கூட்டாளிகளுக்கும் பாகிஸ்தான் சர்வாதிகாரி தேவை. ஜெனரல் முஷாரப் தான் ஐந்து வருடங்கள் தொடர்ந்து ஜனாதிபதியாக இருக்க விரும்புவதை அமெரிக்க மண்ணில் அறிவித்ததில் என்ன ஆச்சரியம் இருக்கிறது ? பாகிஸ்தானுக்கு வந்ததும், சமூக பொருளாதார திட்டங்களைத் தொடர்ந்து செயல்படுத்துவதற்காக தான் இன்னும் ஐந்து வருடங்கள் தொடர்ந்து ஜனாதிபதியாக இருக்க விரும்புவதாகப் பேசுகிறார். முன்பு ஜெனரல் அயூப்-உம், ஜெனரல் ஜியாவும் இதைப் போலவே காரணங்கள் சொல்லிச் சொல்லி முடிவின்றி தொடர்ந்து சர்வாதிகாரியாய் இருந்தார்கள். அன்றைக்கு, அமெரிக்காவுக்கும் அதன் கூட்டாளிகளுக்கும் கம்யூனிஸ உலகத்தை எதிர்ப்பதற்கு இந்த பாகிஸ்தான் வேண்டியிருந்தது.

இருப்பினும், இந்த பொது வாக்கெடுப்பை பாகிஸ்தான் மக்களால் வெறுப்புடனும், சட்டத்துக்கு புறம்பானதாகவுமே பார்க்கிறார்கள். 1977இல் பிரதமர் ஜ்உல்1பிகர் அலி புட்டோ பாகிஸ்தான் தேசீயக் கூட்டணியின் வளர்ச்சியால், மார்ச்சிற்குப் பிறகு பதவியில் தொடர முடியாது என்றான பின்பு, இது போலப் பொது வாக்கெடுப்பு நடத்தினார். ஆனால் புட்டோவும் போக வேண்டித்தான் வந்தது : காரணம் : இரண்டாவது A-யான அமெரிக்கா புட்டோவின் அணு ஆயுத முயற்சிகளை விரும்பவில்லை. புட்டோவைப் படஹ்வி இறக்கிக் கொலையும் புரிந்த ஜியா-உல்-ஹக் , ஆஃப்கானிஸ்தான் போரின் போது,அமெரிக்காவிற்கு மிகவும் தேவைப்பட்டார். அதனால் அப்போதைய ஜனாதிபதி ஃபாசல் இலாஹி-யைத் துரத்திவிட்டு, பொது வாக்கெடுப்பின் மூலமாக ஜனாதிபதி ஆனார். இந்தப் பொது வாக்கெடுப்பு ஒரு விசித்திர நிகழ்ச்சி . வாக்காளர்களுக்கு முன்வைத்த கேள்வி : ஜியா-உல்-ஹக் தொடங்கிய இஸ்லாம்மயமாதலை ஆதரிக்கிறீர்களா என்பது.வாக்காளர்கள் முன்பு வைக்கப் பட்ட கேள்வி. ‘ஆமாம் ‘ என்று முத்திரை குத்தலாம். இந்த ‘ஆமாம் ‘ என்ற பதிலுக்கு உண்மையில் அர்த்தம் ஜியா-உல்-ஹக் தொடர்ந்து ஜனாதிபதியாய் இருக்கலாம் என்பது. அலுவலக ஊர்திகளைப் பயன்படுத்தி வாக்காளர்களை வாக்குப்பதிவுத் தலங்களுக்குக் கொண்டு வர முயன்றார்கள். ஆனாலும் மக்கள் வீட்டை விட்டு வெளியே வரவில்லை. இறகு காவல் துறை களத்தில் இறங்கியது. குழந்தைகளைக் கொண்டு வாக்களிக்க வைத்தார்கள். ஒவ்வொரு குழந்தையும் 50 வாக்குகள் போல முத்திரை குத்தினர். 15 சதவீத வாக்குகள் அளிக்கப்பட்டன். பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவி திருமதி நுஸ்ரத் புட்டோ கணக்குப் படி 7 சதவீத வாக்குகளே பதிவாயின. ஆனால் தேர்தல் கமிஷன் 65 சதவீதம் பேர் வாக்களித்தார்கள் என்றும், அதில் 97 சதவீதம் ஆதரவு கிடைத்தது என்றும் சொன்னார்கள். ஜியாவின் வாக்கெடுப்பு, பெரும் பம்மாத்து மற்றும் ஏமாற்று வித்தை. ஆனால் உலகம் கவலைப்படவில்லை . ஏனென்றால் இரண்டாவது A அமெரிக்கா ஜியாவை முழுக்க ஆதரித்தது. ஜியாவின் திருட்டுத்தனமான அணுகுண்டு தயாரிப்பு முயற்சியும், போதைப்பொருள் வியாபாரமும் கண்டுகொள்ளப்படவில்லை.

முஷரஃப் இன்னும் ஐந்து வருடங்கள் சர்வாதிகாரியாய் இருப்பார் என்று வதந்திகள் கிளம்பியபோது ஜியா பாணியில் வாக்கெடுப்பு நடத்துவார் என்று ஊகம் கிளம்பியது. ஆனால் அமைச்சர்கள் இதை மறுத்தார்கள். இதுவும் ஜியா பாணிச் செய்கை தான். முதலில் வதந்து , அதன் மறுப்பு. மக்கள் கருத்தை வளைக்க இது ஒரு முயற்சி. முஷரஃப் மார்ச் 30-ல் பத்திரிகை ஆசிரியர்களைச் சந்தித்த போது இந்த ‘வதந்தி ‘கள் பற்றியும் பதில் அளித்தார்.

இந்த் வாக்கெடுப்பு சட்ட பூர்வமாய் சரியானது என்பது மிக முக்கியமான கேள்வி. சட்ட அமைப்பில் இப்படிப்பட்ட வாக்கெடுப்பிற்கு எந்த விதி முறைகளும் கிடையாது. சட்ட அமைப்புப் படி, ஜனாதிபதி நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளினாலும், நான்கு பிராந்திய அரசுகளினாலும் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். இந்த வழியில் செல்ல முஷரஃப் விரும்பவில்லை: காரணம் 1. தேர்தலுக்குப்ப்பின்பு வரும் அரசுபிரதிநிதிகள் மீது இவருக்கு நம்பிக்கை இல்லை. 2. சட்ட அமைப்பின் படி ஜனாதிபதி அதிகாரங்களற்ற தலைவரே. ஆனால் முஷ்ரஃப் சட்டபூர்வமான அதிகாரங்களை விரும்புகிறார். வாக்கெடுப்பு சட்ட் பூர்வமற்றது என்பதற்கு முஷரஃபின் பதில் : சுப்ரீம் கோர்ட் 2000 ஆண்டில் ஜனாதிபதியாய்த் தொடர்வதற்கு வாக்கெடுப்பு நடத்த அனுமதி அளித்துள்ளது என்பது தான்.ஆனால் இந்த அனுமதி , 2002 அக்டோபர் வரையில், பொதுத் தேர்தல் வரையில் தான் என்பது பாகிஸ்தானில் யாரும் உணர்வதில்லை.அக்டோபர் தேர்தலில் தேர்வு செய்யப்படுபவர்கள் தமக்குக் கீழ்படிந்து இருக்க வேண்டும் என்பதும் முஷரஃபின் எதிர்பார்ப்பு ஆகும். முஸ்லீம் லீக், பாகிஸ்தான் மக்கள் கட்சி என்ற முக்கிய அரசியல் கட்சிகளையும் இவர் செயலிழக்கச் செய்து விட்டார். அவற்றின் தலைவர்களை ஊழல் குற்றம் சாட்டி சிறையில் அடைத்துவிட்டார். சட்டசபைகள் எந்த அதிகாரமும் அற்று தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் கீழ் செயல்படும். அதாவது முதல் Aயான ராணுவம்(ஆர்மி) அரசோச்சும். ஜிம்பாப்வேயில் ராபர்ட் முகாபே குளறுபடி செய்த தேர்தலுக்காக உலக நாடுகளெல்லாம் முகாபேயைக் கண்டனம் செய்தன. பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்று சாக்குப் போக்கு சொல்லி முஷரஃப்-ஐ யாருமே கண்டனம் செய்யாமல் இருக்க முக்கிய காரணம் அமெரிக்கா தான்.

***

டெய்லி எக்ஸெல்ஸியர் என்ற காஷ்மீரிலிருந்து வெளிவரும் தினசரியிலிருந்து

**

Series Navigation

சாமுவேல் பைத்

சாமுவேல் பைத்