author

செய்தி

செய்தி

கேள்வி: உலகமயமாதலின் உச்சம் என்ன ?

பதில்: இளவரசி டயானா கேள்வி: எப்படி ? பதில்: ஒரு ஆங்கிலேய இளவரசி ஒரு எகிப்திய காதலனோடு ஃபிரஞ்ச் சுரங்கப்பாதையில் டச்சு எஞ்சின் பொறுத்திய ஜெர்மன் காரை பெல்ஜிய டிரைவர் ஸ்காட்ச் விஸ்கி குடித்துவிட்டு ஓட்ட பின்னால் இத்தாலிய பத்திரிக்கையாளர் துரத்த எங்கோ இடித்துவிட்டு காயப்பட்டு அமெரிக்க டாக்டர் பிரேசிலிய மருந்துகள் கொடுத்து சிகித்சை செய்ய … செத்துப் போகிறாள் ***

யாரோ சொன்ன புன்னகைமொழிகள்

கடைசியாகச் சிரிப்பவன் மெதுவாகச் சிந்திக்கிறான் நாஸ்திகத்துக்குப் போய்விடலாமா என்று யோசித்தேன். ஆனால் அதில் ரொம்பவும் குறைவாகவே விடுமுறை நாட்கள் இருக்கின்றன கத்தியால் வாழ்பவன் கத்தி இல்லாதவர்களால் சுடப்பட்டு சாகிறான் சூரிய வெளிச்சம் இல்லாத நாள்..ம்ம்.. ஆமாம்… இரவு அப்புறம் வக்கீல்கள், சாட்சிகளிடம் கேட்ட உண்மையான கேள்விகள் ‘உன் இருபத்தியோரு வயசாகும் கடைசிப்பையனுக்கு என்ன வயசிருக்கும் ? ‘ ‘உன்னை இந்த போட்டோ எடுக்கும்போது அங்கே இருந்தாயா ? ‘ ‘போரில் இறந்தது நீயா உன் தம்பியா ? […]

உரத்த சிந்தனைகள்

அறிவியலில் முன்னேற்றம் என்பது ஒவ்வொரு செங்கல் செங்கலாக அடுக்குவதில் வருகிறது. திடாரென தேவதைக்கதை மாளிகைகள் இதில் தோன்றுவதில்லை – ஜே. எஸ். ஹக்ஸ்லி முக்கியமான விஷயம், கேள்வி கேட்பதை நிறுத்தாமல் இருப்பது – ஆல்பர்ட் ஐன்ஸ்டான் வில்லியம் ஜேம்ஸ் ‘நம்புவதற்கான மன உறுதி ‘யை பிரச்சாரம் செய்தார். என் பங்குக்கு நான் ‘சந்தேகப்படுவதற்கான மன உறுதியை ‘ பிரச்சாரம் செய்யவேண்டும். தேவையான விஷயம் நம்புவது அல்ல. கண்டுபிடிப்பது. இரண்டும் நேர்மாறான விஷயங்கள் – பெர்ட்ராண்ட் ரஸ்ஸல் நாம் […]

மார்ட்டின் லூதர் கிங் பேச்சுகளிலிருந்து சில முத்துக்கள்

கறுப்பர்களின் எதேச்சதிகாரம், வெள்ளையர்களின் எதேச்சாதிகாரம் போலவே தீமை நிறைந்தது. *** கறுப்பர்களின் உணர்வைத் தட்டி எழுப்புவது என்பது, வெள்ளையரின் இனத்தை வெறுக்கச் சொல்லிக் கொடுப்பது அல்ல. வெள்ளை இனத்துடன் எமக்குச் சண்டை எதுவும் இல்லை. அடக்குமுறைக் கொள்கைகளும், அடக்குமுறையை நீட்டிக்க வெள்ளையரின் தலைவர்கள் கொண்டு வந்த ஒடுக்கு முறை சட்டமுமே நம் எதிரி. **** என் அம்மா. ஒரு வெற்றிகரமான் பாதிரியாரின் மகள், எனவே அவர் சற்றே வசதியுடன் வாழ்ந்தவர். நல்ல பள்ளிக்கூடமும், கல்லூரியும் அவருக்கு வாய்த்தது. […]

சர்க்கரை சாப்பிடும் இயந்திர மனிதன்.

ஒருவழியாக நாம் சாப்பிடும் உணவுப்பொருள்களைச் சாப்பிட்டு சக்தி பெறும் இயந்திர மனிதனையும் கண்டுபிடித்தாய்விட்டது. டாம்பா நகரத்தில் இருக்கும் தென் ஃபுளோரிடா பல்கலைக்கழகத்தில் Gastronome என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த இயந்திர மனிதன் ஒரு மீட்டர் நீளமாகவும் 12 சக்கரங்களில் செல்லும் மாதிரிக்கு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த இயந்திர மனிதனுக்குள் ஈ-கோலி நுண்ணுயிரிகளைக் கொண்டு இயங்கும் ஒரு எரிபொருளை மின்சாரமாக மாற்றும் என்ஜின் வைக்கப்பட்டுள்ளது. இந்த ஈ-கோலி பாக்டிரீயாக்கள் சர்க்கரையை குளூக்கோஸாகவும் குளூக்கோஸை மறுபடியும் உடைத்து எலக்ட்ரான்களை வெளிப்படுத்துகின்றன. இந்த எலக்ட்ரான்கள் […]

நகல் டாலி ஆடு தயாரித்த அறிவியலாளர் குழு இப்போது கோழிகளை தயாரித்திருக்கிறது

டாலி என்ற நகல் ஆடு தயாரித்த அறிவியலாளர் குழு இப்போது புது கோழிகளை தயாரித்திருக்கிறது. இந்த புதுவிதக் கோழிகள் எந்த கோழியின் நகலும் அல்ல. இவை புத்தம் புது உயிர்கள். இதுபோல் கோழிகள் இதுவரை இருந்ததில்லை. மெயில் என்ற இங்கிலாந்தின் ஞாயிற்றுக்கிழமை பத்திரிக்கை எழுதியிருக்கும் விவரப்படி, இந்த கோழிகளின் டி என் ஏ மாற்றப்பட்டு, இந்த கோழிகளின் முட்டைகள் ஒரு குறிப்பிட்ட புது புரோட்டின் இருக்கும்படியாக வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. இந்த புதுவிதக் கோழிக்கு பிரிட்டனி என்று பெயர் வைத்திருப்பதாக […]

பூச்சுக்கொல்லி மருந்துக்கு புதிய நம்பிக்கை

நிரந்தர தாவர கெடுப்பிகள் (Persistent Organic Pollutants (POPs)) என்னும் வேதிப்பொருட்களை தடை செய்ய வேண்டியும், உபயோகப்படுத்தினால் அவற்றை குறைவாக உபயோகப்படுத்தக்கோரியும் சுமார் 120 தேசங்கள் ஒரு ஒப்பந்தத்தை செய்ய முனைந்திருக்கின்றன. இந்த வேதிப்பொருட்கள் புற்றுநோய், உயிர்களுக்கு (மனிதர்களும் சேர்த்திதான்) குழந்தையில்லாமல் போவது, குழந்தைகள் பிறப்பு குறைபாடுகளுடன் பிறப்பது போன்ற பலவிஷயங்களோடு சம்பந்தப்படுத்தப்படுவதால் பல தேச அரசாங்கங்கள் இந்த வேதிப்பொருட்களை தடை செய்திருக்கின்றன. இந்த வேதிபொருட்களில் பல வேதிப்பொருட்கள், பயிர்களில் பூச்சிக்கொல்லி மருந்துகளாக உபயோகப்படுத்தப்படுகின்றன. ஐக்கியநாடுகள் சபை […]

தினக்கப்ஸா

வீரப்பனிடமிருந்து ராஜ்குமார் விடுதலை ராஜ்குமார் சென்ற வாரம் விடுதலை ஆனது அனைவருக்கும் தெரிந்ததே. அவர் உடல்நிலையை பரிசோதித்த டாக்டர்கள் அவர் முன்பைவிட வலிமையாகவும் பலமாகவும் இருப்பதாக தெரிவித்திருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது. இதற்கு பதில் சொன்ன ராஜ்குமார் தன்னை வீரப்பன் நன்றாக கவனித்துக்கொண்டான் என்றும், மான் கறி, காட்டுக்காய்கறிகள் என்றும் கொடுத்து நன்றாக உடல் நிலை முன்னேற உதவினான் என்றும் தெரிவித்தார். செருப்பில்லாமல் காட்டில் வெகுதூரம் நடந்து உடல்நிலை நன்றாக ஆகியிருக்கிறது என்றும் தெரிவித்ததாகவும் நம்பத்தகாத வட்டாரங்கள் தெரிவித்தன. […]

உலக வெப்ப ஏற்றம் (Global warming) ‘பயந்ததைவிட மோசம் ‘

நன்றி பிபிஸி உலக நாடுகள் தயாரித்திருக்கின்ற உலக வெப்ப ஏற்றம் பற்றிய ஆரம்பப்படிவம், உலகம் எதிர்பார்த்ததைவிட அதிகமாக வெப்பமாகிக்கொண்டு வருகிறது என்று கூறுகிறது. தட்பவெப்ப மாறுதல் பற்றிய பல அரசாங்கக்குழு (Intergovernmental Panel on Climate Change(IPCC)) சார்ந்த விஞ்ஞானிகள், முன்பு எதிர்பார்த்ததை விட இரண்டு மடங்கு அதிகமாக உலக வெப்பம் ஏறும் என்று கூறுகிறார்கள். 1990இல் இருந்ததை விட 6 டிகிரி இந்த வருடம் அதிகமாக இருக்கும் என்று கூறுகிறார்கள். ஐந்து வருடங்களுக்கு முன் இந்தக் […]

சனிக்கிரகத்தைச் சுற்றி மேலும் நான்கு சந்திரன்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன

வேறெந்த கிரகத்துக்கும் இல்லாததாக, சனிக்கிரகத்துக்கு இப்போது 22 தெரிந்த சந்திரன்கள் (துணைக்கோள்கள்). உலக வானவியல் தொலைக்கண்ணாடி நிலையங்கள் இணைந்து இந்த கண்டுபிடிப்பை வெளியிட்டுள்ளன. இந்த நான்கு துணைக்கிரகங்களும் ‘ஒழுங்கற்றவை ‘ என்று வகைப்படுத்தப்பட்டுள்ளன. இவை பெரும்பாலும், சனிக்கிரகத்தால் பிடிக்கப்பட்ட பெரும் எரிகற்களாக இருக்கலாம் என்று கருத்தப்படுகிறது. வானவியலாளர்கள் இன்னும் பல சனிகிரகத்துச் சந்திரன்களை அடையாளம் கண்டுள்ளதாகவும் அவை மற்றவர்களால் உறுதிப்படுத்தப்பட காத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்கள். முதலிரண்டு சந்திரன்கள் சிலிநாட்டில் உள்ள ஐரோப்பிய தெற்கு வானவியல் நோக்ககத்தில் (European Southern […]