The Almond by Nedjma – ஒரு பார்வை

This entry is part [part not set] of 22 in the series 20051006_Issue

கூத்தாடி


‘The sexual awakening of a muslim women ‘ என்ற கவர்ச்சியான அறிவுப்புடன் இருந்த புத்தகத்தை வலையில் படித்த சில விமர்சனங்கள் படிக்கத் தூண்டியது. படித்ததை பகிர்ந்து கொள்ளவும் என் கருத்துக்களை சொல்லவே இந்தப் பதிவு.

மொராக்கோ வின் கிராமத்து பெண் பத்ரா ,அவளுடைய ஒவ்வாத் திருமண பந்ததிலிருந்து தப்பி tangier நகரத்திற்கு அவரின் அத்தை செல்மாவின் வீட்டிற்கு வருவதில் இருந்து கதை தொடங்குகிறது.செல்மாவின் வீட்டில் வாழத் துவங்கும் பத்ராவின் tangier நகர அனுபவங்களும் அவரின் பழைய கிராமத்து வாழ்க்கையை விவரிப்பதுமாக மாறி மாறி தொடர்கிறது நெட்ஷ்மா என்ற புனைப் பெயரில் எழுதும் 50 வயதுக்கு பக்கத்திலுள்ள மொராக்கோ பெண்ணின் எழுத்து.

டிரிஸ் என்ற மேல்த்ட்டு டாக்டரின் தொடர்பின் மூலம் பத்ராவிற்கு எற்படும் பாலியல் விழிப்புணர்வுகளை பக்கம் பக்கமாக விவரித்து porno மொழியில் விவரித்து செல்லுகிறது.ட்ரிஸ்யுடன் ஏற்படும் முதல் புணர்ச்சிக்குப் பின் சொல்லும் பத்ராவின் வார்த்தைகளில் ( ‘The world had suddenly become a caress.the world become a kiss.And I was nothing but a floating lotus flower…and it was not only in love with driss .My genitals,too ,revered him ) பத்ராவின் உணர்ச்சி கொந்தளிப்பை அறியச் செய்பவை.தொடர்ந்து வருபவை ட்ரிஸுடன் கூடிய உறவுகளின் பரிமாணங்களை அவர்களின் பல புணர்ச்சிகளை விவரிப்பதின் மூலமும் ,ட்ரிஸின் பல வித மான பாலியல் பகிர்வுகளின் மூலமும் விவரித்து செல்கிறது.அதே சமயம் பத்ராவின் கிராமத்து குழந்தைப் பருவ வாழ்க்கையயும் அவரின் கிராமத்து பாலியல் அனுபவங்களையும் மாறி மாறி சொல்லி செல்கிறது. பாலியல் அனுபவங்களை விவரித்து சொல்வதில் தான் முக்கால் வாசி நாவல் செல்லுகிறது.

nedjma வின் நேரிடையான கதைச் சொல்லும் எழுத்து சில இடங்களில் கவித்துவமாக மாறுவது ரசிக்க தக்கது . பத்ரா,ட்ரிஸின் முதல் புணர்ச்சிப் பற்றிய எழுத்து கண்டிப்பாக கதைச் சொல்லியின் துணிச்சலான் நடைக்காக ரசிக்கப் படும்.

கிராமத்து அனுபவங்கள் பல மொராக்காவின் வாழ்க்கையும், அங்குள்ள மனிதர்களைப் பற்றிய சில செய்திகளுடன் விமர்சனங்களை சொல்லியவாறே நகர்கிறது . பல பாகங்கள் நல்ல சிறுகதைக்கு ஒத்ததாக இருக்கிறது.எனக்கு பிடித்த நாவல் பகுதி இந்த கிராமத்து பகுதி தான்.

இதில் மொராக்கோ பற்றிய செய்திகளில் இருப்பவையின் நம்பகத் தன்மையை தெரிந்தவர்கள் தான் சொல்ல வேண்டும் .சொல்லப்படும் tangire யின் மேல்த்தட்டு வாழ்க்கை மேற்கு நாடுகளில் கூட குறைவுதான் ,அது மொராக்காவின் வாழ்க்கை முறையை பிரதிபலிப்பதல்ல.ஆனால் கிராமத்து விவரிப்புகள் பற்றித் தான் என் ஆர்வம்.

இது கதை சொல்லியின் வாழ்க்கையா அல்லது புனைக்கதையா என்பது பற்றி என்னால் ஒரு முடிவுக்கு வர முடியவில்லை.ஆனால் nedjma வாழ்க்கையின் ஒரு பகுதியாக இருக்க கூடும்.

பிரான்ஸிலிருந்து ஆங்கிலத்திற்கு வந்த இந்த நாவலின் popularity வியக்கவைக்கிறது. எனக்கென்னமோ ‘முஸ்லீம் பெண் ‘ விடயம்த் தான் இந்த அளவு புத்தகம் விற்பதற்கும் காரணம் எனத் தோன்றுகிறது.தலீபான்,அல் குயாடா பற்றி பேசியே காலம் கடத்தும் அமெரிக்க ஊடகங்களுக்கு முஸ்லீம் பெண் எழுத்தாளரின் பாலியல் புத்தகத்தை உயர்த்தி பிடிப்பது அரசியல் ம்ற்றும் வியாபார தந்திரம் .

Nedjama வின் இந்த நாவல் ஒரு பெண்ணின் அனுபவமே அல்லாமல் அதில் எந்த பெண்ணியமோ அல்லது முஸ்லீம் பெண் விடுதலை பற்றியோ எதுவும் இருப்பதாக நான் நினைக்கவில்லை. எழுத்தாளரின் எண்ணம் கூட அப்படி இருப்பதாக தெரியவில்லை.இதில் மதம் பற்றி எதுவுமே இல்லை.இதில் எழுத்தாளர் முஸ்லீம் என்பதாலும் கதைக் களம் மொராக்கோ என்பதாலும் மட்டுமே இஸ்லாம் இந்த கதையில் வருகிறது.Nedjma விற்கு இஸ்லாமை விமர்சிக்க ஒரு நோக்கமும் இருப்பதாக தெரியவில்லை.

ஆனால் இதே நாவல் மேற்கு கிறித்துவ பெண் எழுத்தாளரால் எழுதப்பட்டிருந்தால் அமெரிக்காவில் கண்டிப்பாக இந்த அளவுக்கு கவனிக்கப்பட்டிருக்காது.

மற்ற படி இந்த நாவல் வாசிப்பு ஒரு நல்ல அனுபவமாகவே இருந்தது.

பின்குறிப்பு: The almond – தலைப்பு பெண்களின் clitoris யை குறிப்பது என்பதே பெரும்பான்மையோர் எண்ணம் .என்னுடைய கருத்தும் அதுவே.

—-

koothaadi@gmail.com

Series Navigation