சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு

This entry is part of 26 in the series 20100516_Issue

கவி. செங்குட்டுவன்


சாதிகள் இல்லையடி பாப்பா, குலத்தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம் என்றான்பாரதி. இக்கூற்று பாரதி வாழ்ந்த காலதில் அவன் கண்ட சமூகஅவலங்களின் வெளிப்பாடு. மேலும் அன்று சாதிகள் பலநூறுஇருந்திடினும் சமுதாயத்தில்வெளிப்பட்டது மேல்சாதி, கீழ்சாதி எனும்இரு பிரிவுகள் மட்டுமே. ஆனால்இன்று நாட்டில் உள்ள அனைத்து சாதிகளும் தத்தம் சாதியினரின் எண்ணிக்கையை வெளிக்காட்டி அதை தமது பலமாகக் காட்டிடும் அவலமே அரங்கேறி வருகிறது. இதன் காரணமாகத்தான் இன்று அரசியல் போர்வை போர்த்திக்கொண்டுள்ள பல சாதித் தலைவர்களும் சாதி அடிப்படையில் மக்கள் தொகை கணக்கெடுப்பை கோருகிறாகள்.
உண்மையிலேயே ஒட்டுமொத்த நாட்டு மக்களின் நலம் நாடுவோர் கேட்க வேண்டியதுசாதிமதங்களைக் கடந்த பொருளாதாரக் கணக்கெடுப்பே. இதன் மூலமே அடித்தட்டுமக்களின் எண்ணிக்கைக்கேற்ற வளர்ச்சித் திட்டங்களைத் தீட்டி நாட்டைமுன்னேற்றப் பாதைக்கு வழி நடத்திட முடியும்.

கவி. செங்குட்டுவன்,
ஊத்தங்கரை.

Series Navigation