ஜெயமோகனின் “கொற்றவை “

புதியமாதவி, மும்பை



அ.முத்துலிங்கம் & ஜெயமோகன் உரையாடலை வாசித்தேன். எதையும் திட்டமிட்டு எழுதவில்லை என்கிறார் ஜெயமோகன்.
அவருடைய சிறுகதைகளுக்கு வேண்டுமானாலும் அக்கூற்று பொருந்தும். அவருடைய சில நாவல்களுக்கும் பொருந்தக்கூடும். ஆனால்
அவர் அண்மையில் எழுதியிருக்கும் கொற்றவை நாவலுக்கு..?

ஒவ்வொரு வரியும் ஆரம்பமும் முடிவும் மிகச் சிறந்த திட்டமிடலுடன் எழுதப்பட்டிருப்பதாகவே நினைக்கிறேன்.
கொற்றவை நாவலுக்கு கோவை.ஞானி தொகுத்து வெளியிட்டிருக்கும் தமிழ்நேயம் விமர்சனக்கட்டுரைகளை வாசித்துவிட்டு அதன்பின் தான்
கொற்றவையை வாங்கி வாசித்தேன். ஒரு பக்கத்தை வாசிக்க மட்டுமல்ல ஒவ்வொரு வரிகளையும் கடப்பதற்கே சில மணிநேரங்கள் ஆகிறது.
தரவுகள், அதைக் கோர்வையாக கொடுத்திருக்கும் இடங்கள், காப்பிய நயத்துடன் அதே உரைநடையை மிகவும் கவனத்துடன்
கையாண்டிருக்கும் பாங்கு, நாட்டுப்புறக் கதைகள் என்று…ஜெயமோகனின் “கொற்றவை ” …தனித்து நிற்கிறது.


புதியமாதவி, மும்பை

புதியமாதவி, மும்பை

புதியமாதவி, மும்பை