அன்புடன் கவிதைப் போட்டி

This entry is part [part not set] of 32 in the series 20070322_Issue

அறிவிப்பு


அன்புள்ள “திண்ணை”
ஆசிரியருக்கு,

வணக்கம்.

அன்புடன் என்ற கூகுள் குழுமம் கடந்த 2 வருடங்களாக யுனிகோடு தமிழில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் முதல் யுனிகோடு தமிழ்க் குழுமம்.

http://groups.google.com/group/anbudan

கனடாவைச் சேர்ந்த கவிஞர் புகாரி அவர்களால் மார்ச் 7, 2005 துவங்கப்பட்டு, பல இளம் எழுத்தாளர்களையும் கவிஞர்களையும் ஊக்குவிக்கும் குழுமமாகத் திகழ்கிறது. இலக்கியம் மற்றும் பல்சுவை மடலாடல்களுக்கும் ஏற்ற இணைய குழுமம் இது.

கடந்த இரண்டு ஆண்டுகளில் பல கவிஞர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் படைப்பாளிகளுக்கும் வலைப்பதிவர்(bloggers)-க்கும் யுனிகோடு தமிழை அறிமுகப்படுத்தி, இணையத் தமிழ்த் தொண்டாற்றி வருகிறோம் என்பதையும் பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறோம். அன்புடனைப் பற்றி மேலும் அறிந்துகொள்ள:

http://groups.google.com/group/anbudan/web
http://buhari.googlepages.com/anbudan.html

இந்த மார்ச் 7 அன்புடனின் இரண்டாம் ஆண்டு விழாக் கொண்டாட்டங்கள் துவங்கியிருக்கின்றன. அதன் ஒரு பகுதியாக,
கவிதைப் போட்டி ஒன்றை அறிவித்திருக்கிறோம். அதைப் பற்றிய தகவல்களைக் காண:

http://groups.google.com/group/anbudan/t/b1e9089129a64843
http://priyan4u.blogspot.com/2007/03/2.html

அறிவிப்புக்கான தகவல்களை

http://priyan4u.blogspot.com/2007/03/2.html

என்ற தளத்திலிருந்து பெற்றுக்கொள்ளலாம்.


http://groups.google.com/group/anbudan/t/b1e9089129a64843
http://priyan4u.blogspot.com/2007/03/2.html

Series Navigation

அறிவிப்பு

அறிவிப்பு

அன்புடன் கவிதைப் போட்டி

This entry is part [part not set] of 37 in the series 20070329_Issue

அறிவிப்பு


இனிய இணைய நெஞ்சங்களுக்கு வணக்கம்!

“இதயம் மீறும் எண்ணங்களால் நாம்
எழுந்து பறப்போமே
இதய நிழலில் இதயம் கிடத்தி
இன்னல் துறப்போமே”

எனப் பாடி, சிறகடித்துப் பறக்கத் தொடங்கியது ஒரு சின்னஞ்சிறு இணையப்பறவை… சிறகை அகலமாய் உயரமாய் விரித்து அன்பால் உலகத்தை அளந்திட்டேன்… இதோ, வானம் விரைவில் என உற்சாகமாய்த் தன்னைச் செலுத்தியபடி இருக்கிறது…

உலகெலாம் அலைந்து தமிழ்ப் பருக்கை கொத்தி, கூடு அடையும் இதயங்களுக்கு ஊட்டியபடி இருக்கும் நம் அன்புடனின் ஈராண்டு நிறைவையும் மூன்றாம் ஆண்டின் தொடக்கத்தையும் ஆனந்தமாய் ஆடலுடன் பாடலுடன் மன நிறைவாய்க் கொண்டாடிட ‘அன்புடன்’ கவிதைப் போட்டி நிகழ்த்த முடிவு செய்துள்ளது.

போட்டி விபரம்:

கவிதைப் போட்டி ஐவகைச் சுவையின் கீழ் நடத்தப்பட உள்ளது.

1. இயல்கவிதை – வாசிக்கச்சுவை

வழமையான வடிவம் தான். படைப்பாளி தன் கவிதையை யுனித்தமிழில்(Unicode) தட்டச்சு செய்து அனுப்பவேண்டும்.(யுனித்தமிழில் தட்டச்ச இயலாதவர்கள் ‘அன்புடன்’ உதவியை அணுகலாம் மின்னஞ்சல் : anbudansupport@gmail.com)

2. இசைக்கவிதை* – பாடச்சுவை

சில பாடல்கள் இசையோடு கேட்க இன்பம் கூட்டும். அவ்வகைக் கவிதைகளுகான (பாடல்களுக்கான) பிரிவு இது. படைக்கப்பட்ட கவிதை பாடலாக இசையோடு பதியப்பட்டு அனுப்பப்படவேண்டும்.

3. ஒலிக்கவிதை – கேட்கச்சுவை

சில கவிதைகள் படைப்பாளியின் உணர்வோடு கேட்க நம்மை உலுக்கியெடுக்கும்.அவ்வகைக் கவிதைகளுக்கான பகுதி இது. படைக்கப்பட்ட கவிதை படைப்பாளியின் குரலில் பதியப்பட்டு அனுப்பப்படவேண்டும்.

4. படக்கவிதை** – பார்க்கச்சுவை

புகைப்படங்களுடக்கான கவிதை. பார்வைக்கு வைக்கப்படும் சில புகைப்படங்களுக்குப் படைப்பாளியின் கற்பனை வடிக்கும் கவிதையைத் தரவேண்டும்.

5. காட்சிக்கவிதை* – இயக்கச்சுவை

இது ஒலி – ஒளி கவிதை. கவிதையைக் காட்சியாக்கித் தரவேண்டும்.

* இசைக்கவிதை, காட்சிக்கவிதை பிரிவுகள் புது முயற்சி என்பதால் பங்கேற்பு குறைவாய் இருக்கும் என்றெண்ணுகிறோம். எனவே அவற்றில் பங்கேற்கும்
படைப்புகளுக்கு வெற்றி பெறும் வாய்ப்பு அதிகம்.

** படக்கவிதைக்கான படங்கள் இப்பதிவுடன் இணைக்கப்பட்டுள்ளது.

விதிமுறைகள்:

1. எந்தப் பிரிவுக்கும் தலைப்பு கிடையாது. எந்தத் தலைப்பின் கீழ் எழுதுவது என்பது படைப்பாளியின் விருப்பத்திற்கு விடப்படுகிறது.

2. ஒவ்வொரு பிரிவின் கீழும் ஒரு படைப்பாளி அதிகபட்சமாக நான்கு படைப்புகளை மட்டுமே அனுப்பலாம்.

3.படக்கவிதைக்கான படைப்பை அனுப்புவோர்,எந்த படத்திற்கான கவிதை எனக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டுகிறோம்.அப்படிக் குறிப்பிடி படாத படைப்புகள் பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்பட மாட்டா.

4. படைப்பு முழுக்க முழுக்கப் புதியதாய் இருக்க வேண்டும். முன்னரே எந்த ஒரு ஊடகத்திலும் வெளிவந்த படைப்பாய் இருத்தல் கூடாது.முடிவுகள் அறிவிக்கப்படும்வரை எங்கும் படைப்பை பிரசுரித்தல் கூடாது.முடிவுகள் வெளியானதும் தாங்கள் தங்கள் கவிதைகளை பிரசுரம் செய்துக் கொள்ளலாம்.

5. படைப்பாளியின் பெயர் , தொடர்பு எண் & முகவரி ஆகியவை ஒவ்வொரு படைப்பு அனுப்பப்படும் போதும் குறிப்பிடப் பட வேண்டும்.அவை எக்காரணம் கொண்டும் எங்கும் பொதுவில் வைக்கப்பட மாட்டாது என்று உறுதி அளிக்கின்றோம்.

6. படைப்புகள் வந்து சேர வேண்டிய கடைசி நாள்: 14-04-2007 (சனிக்கிழமை ஏப்ரல் 14, 2007 – சித்திரை மாத முதல்நாள்) இந்திய நேரம் இரவு 12.00 மணி க்குள்.

7. போட்டிக்கு வரும் படைப்புகளைப் போட்டி முடிந்ததும் அன்புடன் குழுமத்தில் பிரசுரிக்கும் அனுமதியை இப்போதே பெற்றுக் கொள்கிறோம்.

8. படைப்பை anbudan.pootti@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மட்டுமே அனுப்ப வேண்டுகிறோம். அன்புடன் குழுமத்துக்கு நேரடியாய் அனுப்பப்படும்
படைப்புகள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா.

9. ஒலிக்கவிதை, இசைக்கவிதை, காட்சிக்கவிதை போன்றவற்றில் கோப்பின் பருமளவு (file size) அதிகமாகும் பட்சத்தில் ஏதாவது ஒரு கோப்பு மாற்று (File Share) இணைய தளத்தில் ஏற்றிவிட்டு அதைத் தரவிறக்கத் தேவையான (link) சுட்டியை மட்டும் anbudan.pootti@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைத்தால் போதுமானது.

10. நடுவர் குழுவின் தீர்ப்பே இறுதியானது.

பரிசு:

மொத்த பரிசு மதிப்பு : ரூ. 10,000/-

ஒவ்வொரு பிரிவிற்கும்:

முதல் பரிசு: ரூ. 1000/-
இரண்டாம் பரிசு: ரூ. 500/-
ஆறுதல் பரிசு: இருவருக்குத் தலா ரூ. 250/-

எனப் பகிர்ந்தளிக்கப்படும்.பரிசுகள் பணமாக வழங்கப்பட மாட்டாது. அத்தொகைக்கு ஈடான புத்தகங்களாக வழங்கப்படும். பரிசுப் புத்தகங்கள்,பரிசு பெறும் படைப்பாளின் தேர்வு. பரிசு பெறும் படைப்பாளி வெளிநாட்டில் வசிப்பவராக இருந்தால், பரிசுப் புத்தகங்களைப் பெற்றுக்கொள்ள அவர் தமிழக முகவரி ஒன்றைத் தரவேண்டியிருக்கலாம்.

முடிவுகள்:

சித்திரைத் திங்கள் இறுதியில் அறிவிக்கப்படும்.

வாருங்கள் இணையத் தமிழ் மக்களே! இனி இது உங்கள் களம். பங்கேற்று மகிழுங்கள். பரிசுகளை வென்றிடுங்கள். கவிதைச் சாரலால் நனைத்திடுங்கள்.

நன்றி.

**படக்கவிதைக்கான படங்களுக்கு இணைப்பை காண்க.

மேலும் தகவலுக்கு : அன்புடன் ஆண்டு விழா 2 – கவிதைப்போட்டி

படம் : 01

படம் : 02

படம் : 03

படம் : 04

படம் : 05

படம் : 06

படம் : 07

படம் : 08

படம் : 09

படம் : 10

Series Navigation

அறிவிப்பு

அறிவிப்பு