அறிவியல் சிறுகதைப் போட்டி

This entry is part of 1 in the series 20050414_Issue

அறிவிப்பு


அறிவியல் சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்ற கதைகள் கடந்த மூன்று வாரங்கள் திண்ணை ஏட்டில் பிரசுரம் பெற்றுள்ளன. என் சொக்கனின் மூன்றாம் பரிசு பெற்ற கதை அடுத்த வாரம் பிரசுரமாகும். மொத்தம் 40 கதைகள் வரப்பெற்றோம். இவற்றில் சிங்கப்பூர், தமிழ்நாடு, கனடா, ஜெர்மனி, அமெரிக்கா, மலேசியா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளிலிருந்து அனைவரும் உற்சாகமாகத் தம்முடைய படைப்புகளை அனுப்பித் தந்திருந்தனர். போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் திண்ணை குழு சார்பிலும் ,மரத்தடி இணையக் குழுமம் சார்பிலும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

பரிசு பெறாத கதைகள் திண்ணையில் பிரசுரத்திற்குக் கருதுமாறு திண்ணையைக் கேட்டுக் கொள்கிறவர்களின் கதைகள் மட்டுமே பிரசுரத்திற்குக் கருதப் படும். திண்ணையில் கதைகள் வெளிவரவேண்டும் என்று விரும்புவோர் editor@thinnai.com – க்கு தங்கள் விருப்பத்தை எழுதவும். வேறு இதழ்களுக்கு அனுப்பித்தர விரும்புகிறவர்கள் அனுப்பித் தரலாம். தடையில்லை.

இந்தப் போட்டியினால் அறிவியல் புனைகதை பற்றிய பரவலான உணர்வு ஏற்படின் திண்ணை குழுவும், மரத்தடி இணயக் குழுமமும் மகிழ்ச்சி அடைவோம்.

நடுவராய் இருந்து போட்டிக்கு வந்த அனைத்துக் கதைகளையும் படித்து பரிசுக்குரிய கதைகளைத் தேர்ந்தெடுத்த சுஜாதா அவர்களுக்கு எங்கள் நன்றி. இந்தப் போட்டி பற்றி பரவலான கவனம் பெறச் செய்து, இந்திய இணைப்பாளராய்ப் பணியாற்றிய மனுஷ்ய புத்திரன் அவர்களுக்கும் எங்கள் அனைவரின் நன்றி.

திண்ணை குழு – மரத்தடி குழு


  • அறிவியல் சிறுகதைப் போட்டி