ஈசனுக்கு மறக்குமா அவள் தாட்சாயினி என்பது

This entry is part [part not set] of 33 in the series 20061221_Issue

கூத்தாடி


கவிதைகளை என்னால் உரைநடை போல் தொடர்ச்சியாய் படிக்க முடிந்ததில்லை .பொதுவாய் கவிதைத் தொகுப்பில் இருக்கும் கவிதைகள் தொடர்ச்சியாய் ஒரே பேசு பொருளைக் கொள்ளாமல்் இருப்பதால் ஒரு கவிதையை முடித்து விட்டு அடுத்தப் பக்கம் வரும் போது முந்தையக் கவிதையின் ஹாங் ஓவரிலேயே என் சிந்தனைகள் தறி கெட்டு ஓடிவிடும். கவிதை படிப்பதும் புரிந்து கொள்வதும் என்க்குச் சிரமமே .

பல நாள் வாசிப்பில் சில கவிதைகள் பிடிக்கும் புரியும் .கவிதை வாசிப்பு சிரமாவதற்கு காரணமே பேசு பொருள் பற்றிய கவனம் இல்லாததும் ,கவிஞர்களுக்கே உரிய நுண்ணிய உணர்வை புரிந்து கொள்ளாததுமே என் குறை .கவிஞரின் உணர்வை உணர்வதும் நல்ல வாசிப்பே ,அல்லது கவிதை நமக்கு சில தரிசனங்களை விட்டுச் செல்வது உயர்ந்த வாசிப்பு ,எழுத்தாளரின் உயர்ந்தப் படைப்பும் கூட .

ஜெயமோகனின் சொற்களில் சொன்னால் எழுத்தாளர் எழுதிய போது உணர்ந்த “மன எழுச்சியை” வாசிப்பவனும் உணர முடிவது எழுத்தாளனின் வெற்றி .ஆனால் என்னைப் போன்ற அரைகுறைகளின் வாசிப்ப்பின் ் குறைகளும் பெரும்பாலும் ஒரு எழுத்தாளனின் எழுத்தை புரிந்து கொள்ளாமல் போவதற்கான வாய்ப்பு அதிகம் .

அவ்வாறாக நான் அவ்வம்போது படித்து திரும்ப படித்த புத்தகம் கனிமொழியின் அகத்திணை .அவற்றில் சில என்னைக் கவர்ந்தாக இருந்தது அதைப் பற்றி எழுதத் தொடங்கிய இப்பதிவும் என் வாசிிப்பின் நீளம் போல் அதுவும் காத்துக் கிடந்தது சில நாளாய்.

கனிமொழியின் கருவறை வாசனயையும் படித்து இருக்கிறேன் ,சில கவிதைகள் பிடித்து இருந்தன. கனிமொழி அரசியல் காரணங்களால் பரவலாய் அறியப் பட்டிருந்தாலும் அவரின் செயல் பாடுகள் அவரை ஒரு சுய சிந்தனை உள்ளவராக காட்டியிருக்கிறது ,இன்றைய அரசியல் சூழ்நிலையில் அவரின் கலைஞர் மகள் என்பது அவர் வைக்க வேண்டிய விமர்சனங்களை வைக்க முடியாமலேப் போகும்,அவரின் செயல்களும் சொற்களும் கூர்மையானக் காதுகளால் கவனிக்கப் படும் ,இவரின் சில அவதானிப்புகள் தந்தையை சங்கடப் படுத்தக் கூடும் என்பதால் அடக்கி வாசிக்கிறார் என நினைக்கிறேன் .

கனிமொழியின் கவிதை கலைஞரின் கவிதையில் இருந்து மாறுபட்டது ,கலைஞர் எழுதுவது கவிதையா என்பது பற்றி எனக்கு மாற்று கருத்துக்கள் உண்டு எனினும் அவர் எழுதிய சில ஆக்கங்களை ரசித்து இருக்கிறேன் ,அவர் இன்னமும் சங்ககாலத்தில் தான் இருக்கிறார் .சங்க காலப் பாடல்களை வசனக் கவிதையாக மாற்றுவது மட்டுமே நல்லக் கவிதை ஆகமுடியாது.அந்த விசயத்தில் மகளின் கவிதைகள் சமகால உணர்வுகளையும்,சிரமத்தையும் ,விமர்சனங்களையும் விட்டுச் செல்கிறது .அவர் யாரன்று அறியாமல் படித்தாலும் தாக்கத்தை உண்டாக்க வல்லது ,

அம்மா என்னும் கவிதையில்

..
நிற்காது ஓடிக்கொண்டு
அவ்வம்ப்போது நிறைய அன்ப் செலுத்தும்
என் அம்மாவைப் பற்றி
எந்தக் கதைகளும் சொல்லுவதே இல்லை

என்பது ஊடக அம்மாக்களுக்கும் நிஜங்களுக்கும் ஆன இடைவளியைச் சொல்லுகிறார் ,மொழி நடையும் அருமை

அடுத்து

….
பெருமாள் கோயிலில்
யாரோ ஒருவன்
கையில் பிடித்துக்கொடுத்தபோது
நடுங்கிய உன் நேசத்த
ஏன் ஒளித்துவைத்திருந்தாய்
இத்தனைக் காலமாய் ?

இந்த கடைசி வரிகளே ஒரு அப்பா மகள் உறவுகளைச் சொல்லும் ,நீண்ட கவிதையில் இதுவேப் போதுமானது விசயத்தைச் சொல்ல . கவிதைக்கே உரிய சொல்லாடல் உரைநடையில் இதையே நான் சொல்ல வெண்டுமானல் இரண்டு பக்கம் எழத வேண்டும் (ஜெயமோகனுக்கு ஒரு நாவல் )

பாவ விமோசந்த்திற்கு
ராமனுக்குக் காத்திருக்காதே

அவன் சீதையின்
அக்னிப் பிரவேச ஆயத்தங்களில்
ஆழ்ந்திருக்கிறான்
சீசரின் மனைவி என்பதாலேயே
அவள் கறைகளின்
நிழல் கூடப் படியாதவளாய்
இருந்தாக வேண்டும்

இராவணன் கற்புக்கும்
இவளே பொறுப்பு

ஆம் அப்படித்தானே இருக்கிறோம் ஆண்கள் ,ராவணனாய் இருந்தாலும் சீதைகளைத்தானே தேடிக் கொண்டு இருக்கிறோம் .கள்ளக்காதல் கதைகளில் எத்தனை சீதைகளோ ?


என் உடையும் முகமும்
உங்கள் ஒப்புதலுக்காகக்
க்கத்திருக்கின்றன
..
என் பெயரென்ன
யாராவது
முடிவுசெய்து சொல்லுங்கள்
சில யுகங்களாய்க்
காத்திருக்கிறேன்

உடையும் நடையும் மாறுவாதினாலேயே நாம் கலாச்சாரம் நாசமாகிவிட்டதாய் கூச்சம் போடுகின்ற நாம் ,வேட்டியில் இருந்து வந்த கதையை நைசாய் மறந்து விடுவோம்

..
எந்நாடு போனாலும்
தென்னாடு உடைய சிவனுக்கு
மாதவிலக்குள்ள பெண்கள்
மட்டும் ஆவதே இல்லை

என்றக் கவிதையில் வைத்திருக்கும் ் விமர்சனம் ஒரு விவாதமாய் மாறியிருக்க வேண்டும், நம் சமூகத்தில் ஒரு வெகுஜன விவாதமாய் நடப்பது ஆகாதக் காரியம்.அறிவு ஜீவிகள் சொல்வதில் யாருக்கும் அக்கறையில்லை அதனால் இன்னும் இருவது வருசம் போனாலும் இதே கவிதையை வேறு யாரோ எழுதுவர் 🙁

புதியவளாய்ப் பிறந்தாள் பார்வதி
ஒற்றைக்காலில் ஓராயிரம் வருடம் தவமிருந்தால்
மறுபடியும் சிவபத்தினி

பாவம்
முக்காலும் உணர்ந்த
ஈசனுக்கு மறக்குமா
அவள் தாட்சாயினி
என்பது

எத்தனை பெண்கள் சிவபத்தினிக்ளாய் மாறி சுயம் அழித்தலை , சுகம் காணும் சிவனுக்காய் அவன் பிள்ளைகளுக்காய் செய்கின்றனர் .அவளுக்கே அவள் தாட்சாயினி என்பது தெரியுமா என்பது சந்தேகமே !

அடுக்குமாடியில்
பிள்ளையார் கரைக்க இடமர்இருக்கு
கடலுக்கு ஓடும்போது
பூதாகாரமாய் வாளேந்திய
பிள்ளையார்கள் பயமுறுத்துககறார்கள்
என் மகனை

யாதார்த்தம் ,அடுக்கு மாடி வாழ்வின் இழப்பையும் கூறி பிள்ளையார் சதுர்த்தி என்னும் கொண்டாட்டம் அரசியலாவாதையும் குத்தி ச் செல்கிறார் .

வெளிறிய சடலங்களாய்ச்
சமைந்து வெறிக்கின்றன
அடுக்கு மாடி வீடுகள்

காற்றில் அலையும்
துணிகளையும்
எப்போதாவது கூச்சலிடும்
குழ்ந்தைகளையும் தவிர
சந்தடி ஏது ?

கிராமத்தில் வளர்ந்த என்னைப் போன்றோர்க்கு புரியும் அவஸ்தை . கவிமொழி என்பதே ஆராதிக்க கூடியதாகத் தான் இருக்கிறது. நிஜமாய் பொறாமையாய்க் கூட இருக்கிறது எப்படி இந்த கவிதைகளை எழதுகிறார்கள் என்று .

சுஜாதாவுக்கு அர்பணித்திருக்கும் இந்தப் புத்தகத்திற்கு நஞ்சுண்டன் முகவுரை எழுதியிருக்கிறார் ,வழக்கம் போல் எனக்கு ் அவர் அகத்திணை, படிமம் பற்றிச் சொல்லியது எதுவும் எனக்குப் புரியவில்லை.

சுமை என்னும் தலைப்பில் எழுதியது தான் எனக்குப் பிடித்த ஆக்கம்

கதவு தட்டி அழைத்துவந்து
என்னை உட்கார வைத்தார்கள்

அணிந்திந்த நகைகளுக்காய்
என் குடும்பத்தை அழித்தவன்
போகிறப்போக்கில் என்னைப்
புணர்ந்தவன்

இதோ அவனது தலை
வெட்டுப் பாரையிலிருந்து உருள்கிறது
பார்வை என்மீது குத்திட்டு

கணக்குகளைச் சீர்செய்துவிட்டது அரசு

இனிச் சுமக்க வேண்டும்
இவன் கொலைகளோடு
இவன் மரணத்தை.

கொல்லப் படுபவனை பார்ப்பவரின் நுண்ணுணர்வை புரிந்து எழுதியிருக்கிறார். கொல்வதே தண்டனை எனப் புரிதல் கொண்டவர்களுக்கு மனித மனம் புரிவதேயில்லை, பெண் மனம் ? அப்படி ஒன்று இருக்கிறதா என்ன !

http://koothaadi.blogspot.com

Series Navigation

கூத்தாடி

கூத்தாடி