சுதந்திரத்துக்கான ஏக்கம் ‘ஒரு மாலையும் இன்னொரு மாலையும்’-சல்மாவின் கவிதைத்தொகுப்பு

This entry is part [part not set] of 36 in the series 20061006_Issue

பாவண்ணன்


தலைப்பிட்டும் தலைப்பிடப்படாமலும் 59 கவிதைகள் இத்தொகுப்பில் உள்ளன. எல்லாக் கவிதைகளையும் ஒருசேரப் படித்து முடித்த பிறகு ‘சுதந்திரத்துக்கான ஏக்கம்’ என்பதையே சல்மாவின் படைப்புமையமாகக் கொள்ளலாம் என்று தோன்றுகிறது.
சுதந்திரம் என்பது தளைகள் எதுவுமற்ற இனிய உலகம். கடமைகள் ஒரு பாரமாக அழுத்தாத உலகம். உரிமையின் பெயரில் எதையும் பறித்துச்செல்ல யாரும் கைநீட்டாத உலகம். தனிமையின் இடுக்கில் நசிந்து விழும் மாலை நேரங்கள் இல்லாத உலகம். கண்ணாடிமுன் சிரிக்கும்போது கூட பொய்சொல்லத் தேவையில்லாத உலகம். கண்காணிப்புகளும் கலவரங்களும் அற்ற உலகம். கருணையும் இனிமையும் அமைதியும் ஆனந்தமும் நிறைந்த உலகம். சல்மாவின் மனம் விரும்பும் சுதந்திரம் இவைமட்டுமல்ல. இவற்றை உள்ளடக்கிய இன்னும் பெரிதான உலகுக்கான ஏக்கம் அது.

சுதந்திரத்துக்கான நாட்டம் சல்மாவின் எல்லாக் கவிதைகளிலும் நேரிடையாக முன்வைக்கப் படவில்லை. அவை சித்தரிப்பவை வேறு தன்மைகள் நிறைந்த காட்சிகள். பெரிதும் அறைக் காட்சிகள். அக்காட்சிகளில் கலவரமும் பதற்றமும் தனிமையுணர்வும் அச்சமும் புகார்களும் நிறைந்துள்ளன். அவை கூடிக் குறிப்பால் உணர்த்தும் புள்ளிதான் சுதந்திரத்துக்கான் ஏக்கம்.

‘என்னோடு பேசும் காற்று தோட்டத்து மரத்தைச் சாய்க்கவும் செய்கிறது’ என்றொரு வரி தொகுப்பில் தலைப்பில்லாமல் இடம்பெற்றுள்ளது . இன்னொரு இடத்தில் ‘மலைமுகடு தொட்டுப் பறந்தாலும் கூடடைகிறது இந்தப்பறவையும்’ என்றொரு வரியும் இன்னொரு இடத்தில் எழுதப்பட்டுள்ளது. ஒரு கண்டடைதலாக அல்லது அதிசயமாக் முன்வைக்கப் பட்டிருக்கும் இவ்வரிகளுக்கும் சல்மாவின் மொத்தக் கவிதை உலகத்துக்கும் நெருக்கமான தொடர்பு இருக்கிறது.

முதல் வரியைச் சற்றே காட்சிப்படுத்திப் பார்க்கலாம். உருவமற்ற காற்று வேகமுடன் வீசிக்கொண்டிருக்கிறது. ஒருபுறம் உயர்திணையைச் சேர்ந்த உயிர். மறுபுறம் அ·றிணையைச் சேர்ந்த உயிர். காற்று இருவரிடையேயும் புகுந்து வருகிறது. உருவமில்லாத காற்று இரண்டு உயிர்களையும் இருவேறு விதமாக அணுகுகிறது. ஓர் உயிருடன் உறவாடுகிற காற்று
இன்னொரு உயிரை வீழ்த்தி வேடிக்கை பார்க்கிறது. சித்தரிக்கப்பட்டுள்ள தருணத்தில் உயர்திணையோடு உறவும் அ·றிணையை வீழ்த்துவதும் நிகழ்ந்தாலும் வேறொரு தருணத்தில் வேறொரு கோணத்தில் வீசும்போது காற்று உயர்திணையை வீழ்த்தி அ·றிணை உயிருடன் நட்பு பாராட்டவும்கூடும். அந்தச் சாத்தியப்பாட்டை நாம் மறுப்பதற்கில்லை. காற்றுக்குத் திசையில்லை என்பதைப்போல, காற்றுக்கு உருவமில்லை என்பதைப்போல காற்றின் குணமும் நிரந்தரமற்றது என்பதுதான் எல்லாவற்றுக்கும் அடிப்படையில் பொதிந்திருக்கும் உண்மை. ஒருகணம் நேசம். மறுகணம் முரட்டுத்தனம். ஒருகணம் இனிய உரையாடல். மறுகணம்
சூறையாடும் மூர்க்கம். புரிந்துகொள்ளமுடியாட புதிராக இருக்கிறது காற்று. புதிரென நினைத்து காற்றிடமிருந்து நம்மால் ஒருபோதும் விலகிவர வாய்ப்பில்லை. அதே தருணத்தில் நெருங்கிச் செல்லவும் இயலவில்லை. ஒப்படைக்கப்படும் ஒரு செல்வமாக நம்மை நாமே காற்றின் கரங்களில் அர்ப்பணித்துக்கொள்கிறோம். ஒப்படைத்தாலும் புகார் நிறைந்த பெருமூச்சுகள் நம்மையறியாமலேயே வெளிப்பட்டுவிடுகின்றன.

‘மலைமுகடு தொட்டுப் பறந்தாலும் கூடடைகிறது இந்தப்பறவையும்’ என்னும் வரியில் வெளிப்படும் பெருமூச்சின் வெப்பமும் ஏறத்தாழ இதே தன்மையுடையது. சிகரம் நம் பயணத்தின் பரவசப்புள்ளி. கூடு நாம் இளைப்பாறும் இடம். கூட்டுக்கும் சிகரத்துக்கும் இடையே ஊடாடுகிறது இந்த மானுட வாழ்க்கை. சிகரத்தைத் தொடுவதும் காண்பதும் அனைவருக்குமே ஒரு மாபெரும் கனவு. அது சாதாரணமாகக் கண்டடையக்கூடிய எல்லைப்புள்ளி அல்ல. அலைந்து திரிந்து பறந்து களைத்துத் தேடி கண்டடையவேண்டிய ஒன்று. எல்லாருமே அதைநோக்கிப் பயணப்படுகிறவர்களே தவிர அந்தப் பயணத்தில் வெற்றி பெற்றவர்கள் மிகச்சிலரே இருக்கமுடியும். சிகரத்தின் காட்சி மனத்தில் நிரப்பும் பரவசத்துக்கு ஈடு இணையாக எதையுமே சொல்லமுடியாது. அது ஓர் ஆனந்தத்தருணம். அந்த ஆனந்தம் திளைத்திருக்கக்கூடிய ஒரு புள்ளியே தவிர, இளைப்பறுவதற்குப் பொருத்தமான புள்ளியல்ல. இளைப்பாற அது கூட்டுக்குத் திரும்பவேண்டியிருக்கிறது. இந்த நியதியிலிருந்து யாரும் தப்பிவிட முடிவதில்லை. இளைப்பாறும் தருணத்தில் ஆனந்தப் பரவசத்தை நினைத்து பெருமூச்சுவிடுவதும் ஆனந்தத்தில் திளைத்திருக்கும் தருணத்தில் இளைப்பாற எண்ணித் துவளுவதும் விசித்திரமான முரண்.

சல்மாவின் உலகத்தில் நாம் காணும் கவிதைகளில் புகார்களும் பெருமூச்சுகளும் முரண்களும் தொடர்ந்து வெளிப்பட்டபடி உள்ளன். இவற்றைப் பின்பற்றிச் சென்றால்மட்டுமே அக்கவிதைகளில் பொதிந்திருக்கும் சுதந்திரத்துக்கான ஏக்கத்தைப் ுரிந்துகொள்ளமுடியும். ‘ஒப்பந்தம்’ இத்தொகுப்பிலேயே முக்கியமான கவிதை. படுக்கையறையின் தவறுகளிலிருந்து மீள்வதற்காக ஏற்படுத்திக் கொள்ளக்கூடிய எழுதாத உடன்படிக்கையே இந்த ஒப்பந்தம். அம்மாவும் அக்காவும் சகƒமாக ஏற்றுக்கொண்டு வாழ்ந்த வாழ்க்கையை ஒரு புதிய பெண்ணால் ஏற்றுக்கொள்ள இயலாததாலேயே இந்த ஒப்பந்தம் எழுதப்படுகிறது. அந்தப் புதிய பெண் காற்றின் புதிரைக்கண்டு பெருமூச்சு விடுகிறாள். இளைப்பாறுவதற்கு கூட்டுக்குத் திரும்பவேண்டிய முரணையும் அறிந்திருக்கிறாள். இதனாலேயே பெண்கள் சகƒமாக காலம் காலமாக ஏற்றுக்கொண்ட ஒன்றை ஏற்கவியலாமல் புதிய பெண் தவறுகள் புரிகிறவளாக இருக்கிறாள். அவை ஏன் தவறுகளாகக் கருதப்படுகின்றன என்பதையும் தெரிந்து கொண்டவளாக இருக்கிறாள். சரி, தவறுகளையும் அவற்றின் முன்விளைவுகள் பின்விளைவுகளையும் தொகுத்துப்பார்த்துக்கொள்ள அவளுக்குத் தெரிந்திருக்கிறது. அவற்றிலிருந்து தப்பிக்க முடியாத நிலையில் குறிப்பிட்ட அதே சூழலை கூடியமட்டும் தனக்குச் சாதகமாக எப்படி பயன்படுத்திக்கொள்ளமுடியும் என்பதையும் யோசிக்கத் தெரிந்திருக்கிறது. இதனாலேயே வழங்குபவையும் பெறுபவையும் முறையே பட்டியலிடப்படுகின்றன. ஒவ்வொருவருக்குமான ஆதாயமும் வரையறுக்கப்படுகிறது.

அகவாழ்வில் முதன்முறையாக வணிகமுறையின் விதிகள் அறிமுகமாகின்றன. காதலில்லாத ஒருமித்த கருத்துமில்லாத வாழ்வை வணிகமுறை ஒப்பந்தத்தால்மட்டுமே முன்னெடுத்துச் செல்ல வேண்டிய நெருக்கடி நேர்ந்துவிடுகிறது. ‘எல்லா அறிதல்களுடன்’ என்னும் சொல்லில் இருக்கிற அழுத்தம் ஆழ்ந்து கவனிக்கத்தக்கது. அம்மாவின் தலைமுறையைச் சேர்ந்த பெண்களுக்கும்
அக்காவின் தலைமுறையைச் சேர்ந்த பெண்களுக்கும்கூட இந்த ஒப்பந்த விவரங்கள் பிரிந்திருக்கக்கூடும். ஆனால் ஏதோ ஒரு தயக்கம் ஒப்பந்தத்தன்மையை உடைத்துப் பேசவும் அலசிப்பார்த்து விளங்கிக்கொள்ளவும் அவர்களைத் தடுத்திருக்கக்கூடும். அந்தத் தயக்கம் என்னும் தடை இந்தத் தலைமுறையில் உடைந்துவிட்டது. அது உடைந்து நொறுங்கியதால்தான் எந்தப் புனிதப்போர்வையையும் போர்த்திக்கொண்டோ அல்லது காலம் காலமாக சகƒமாக நம்பப்பட்டதுதான் என்னும் எண்ணத்துக்குப் பணிந்தோ அவளால் படுக்கையறைக்குள் நுழையமுடியவில்லை. பரŠபரத்தேவைகளை நிறைவேற்றிக்கொள்ளும் நிகழ்விடமாக மட்டுமே அது மாறிவிடுகிறது. ‘ஈன்று புறந்தருதல் எந்தலைக்கடனே’ என்ற புறநானூற்று வரிக்கும் ‘உனது குழந்தையின் தாய் என்னும் பொறுப்பை நிறைவேற்ற’ என்ற வரிக்கும் இடையே உள்ள வேறுபாட்டைக் கவனிக்கும்போது இந்த வேறுபாட்டைத் தெளிவாக உணரமுடிகிறது.

‘தடயங்கள் அழிக்கப்பட்ட பிறகு’ என்னும் கவிதையில் புதிய் பெண்ணின் பார்வை இன்னும் தெளிவாக முன்வைக்கப்படுவதைப் பார்க்கலாம். அக்கவிதையில் இடம்பெறுவதும் ஓர் அறைதான். கட்டில், நிலைக்கண்ணாடி, மின்விசிறி, ƒன்னல் மற்றும் விருந்தினருக்காகக் காத்திருக்கும் பாத்திரங்கள் என பலவிதமான பொருள்களால் நிறைந்திருக்கிறது அறை. எந்தப் பொருளோடும் அவளால் ஓர் உறவை நிறுவிக்கொள்ளமுடியவில்லை. உறவை உருவாக்கிக்கொள்ள இயலாததாலேயே அவை உயிரற்றவையாக உள்ளன. வண்ணாத்திப் பூவில் தேன்குடித்தும் வாதாம்பழம் திருடித்தின்றும் புளியஞ்செடியென வி„ச்செடியைத ் தின்றும் கழித்த இளமை நினைவுகள் ஒரேநாளில் அந்நியமாகிப் போய்விட்டன. பழகிய முகங்கள் நினைவுகளாக மட்டுமே தோன்றி மிதந்து மறைந்துபோகின்றன. நினைவுகளை உயிராக நினைத்தவளை அவற்றையெல்லாம் உதறும்படி வைத்துவிடுகிறது சூழல். ஒருபுறம் நினைவுகள் உதிர்ந்துவிட்ட தவிப்பு. இன்னொருபுறம் அறையின் பொருள்களுடன் எவ்விதமான உறவையும் உருவாக்கிக்கொள்ள முடியாத பதற்றம். இரண்டுக்கும் நடுவே அகப்பட்ட அவளுடைய வாழ்க்கை தனிமை மிகுந்ததாக துரதிரு‰டமாக மாறிவிடுகிறது. ‘யாருமில்லாத இடத்தில்’ கவிதையில் முன்வைக்கப்படுவதுகூட இவ்விதமான ஒரு தனிமையுணர்வின் அனுபவத்தைத்தான். தீராத தனிமைக்கும் தீர்ந்துகொண்டிருக்கும் வாழ்க்கைக்கும் இடையே கரைந்துகொண்டிருக்கிறது புதிய பெண்ணின் வாழ்க்கை.

இந்தத் தனிமையின் தீவிரத்தை உணர்த்தவைக்கிற ‘இரண்டாம் ƒ¡மத்துக்கதை’ கவிதையும் தொகுப்பில் முக்கியமான ஒன்றாகும். முதல் ƒ¡மத்தைக் காட்டிலும் விபரீதமாக இருக்கிறது இரண்டாம் ƒ¡மம். முதல் ƒ¡மத்தில் முன்வைக்கப்பட்ட வார்த்தைகளும் விமர்சனங்களும் அதிருப்திக்குறிப்புகளும் இரண்டாம் ƒ¡மத்துத் தனிமையில் பூதாகரமானதாகத் தோற்றம ் தருகின்றன. சுவரோவியத்தில் அமைதியாக அமர்ந்திருக்கிற புலியின் காட்சி உற்றுப் பார்க்கிற உலகத்தின் படிமமாக விரிவாக்கம் பெறுகிறது. செப்பனிடமுடியாத பிரசவக் கோடுகளை முன்வைத்து ‘வெட்டி ஒட்டிவிட இவ்வுடல் காந்தமில்லை’ என்று அவள் சொல்லிக் கொள்ளும் துயரடர்ந்த குரலில் படர்ந்திருக்கும் வெப்பமும் விமர்சனமும் சாதாரணமானதல்ல. மனிதர்களைவிட மோசமான துரோகத்தைப் புரிந்திருக்கும் இய்ற்கையின்மீது அவள் மனத்தில் எழும் புகாருக்கு யார் பதில் சொல்லமுடியும்?

( ஒரு மாலையும் இன்னொரு மாலையும் – சல்மா. கவிதைத்தொகுப்பு. காலச்சுவடு பதிப்பகம். 669, கே.பி.கோவில் தெரு, நாகர்கோயில். விலை.ரூ.40)

paavannan@hotmail.com

Series Navigation

பாவண்ணன்

பாவண்ணன்