தமிழர்களின் அணு அறிவு – கணிதம் என்பது அறிவியல் மொழி -தொடர்ச்சி

This entry is part [part not set] of 39 in the series 20060825_Issue

புதுவை ஞானம்



நாம் ஏற்கனவே கணக்கதிகாரத்தின் பாடல்களைக் கொடுத்திருக்கிறோம் என்பதுடன் அவற்றின் பயன் பாடுகள் என்னவாக இருந்திருக்கும் என்பது பற்றியும் விவாதித்து இருக்கிறோம்.

மூன்று தொகுதி பாடல்கள் தரப்பட்டுள்ளன.அவற்றுள் ஒன்று காலம் பற்றியது. மற்ற ஒன்று தூரம் பற்றியது. பிறிதொன்று கன பரிமானம் பற்றியது என்பதையும் குறிப்பிட்டு இருந்தோம்.

முதலில் கன பரிமானம் பற்றிய தமிழரின் நுண்ணிய அளவைகள் பற்றிய எனது யூகத்தினை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். நான் தேடும் கால நிகண்டு மற்றும் காரக நிகண்டு பற்றி தமிழறிஞர்கள் மவுனம் சாதிப்பதால் நான் யூகத்தின் பேரில் (HYPOTHESIS) தொடர வேண்டி இருக்கிறது. எல்லா ஆய்வுகளுமே யூகத்தில் தொடங்கி தான் இறுதியில் நிறுவப் படுகின்றன என்பதாக நான் ZEN AND THE ART OF MOTOR CYCLE MAINTANENCE என்ற நூலில் படித்ததே எனது தலைப்பிரட்டைத் தனத்துக்கு மூல வேர். எனது கருது கோள் தவறாகிப் போனாலும் கவலை இல்லை. அதே நூல் TO TRAVEL IS MORE PLEASURE THAN TO REACH என்பதையும் எனக்கு சொல்லிக் கொடுத்து இருக்கிறதே !

கணிதம் என்பது அறிவியல் மொழி என்ற கட்டுரையில் ( திண்ணை – ஜுலை,13,2006) அணு தொடங்கி கீழ்வாய் இலக்கங்களை அவற்றின் எழுத்துரு மற்றும் எண் வடிவில் பின்னங்களாகக் கொடுத்திருந்தேன் அல்லவா ? அந்த பின்னங்கள் (FRACTIONS) DECIMALS ஆக மாற்றப்பட்டால் எவ்வாறு இருக்கும் என்பது கீழே தரப்படுகிறது***. நவீன துகள் அறிவியலில் ( MODERN QUANTUM PHYSICS ) NEGATIVE NUMBERS ஆக இவை வெளிப்படும் போது தற்போதைய இந்தோ-அராபிய எண் வடிவில் எவ்வாறு இருக்கும் என்பதும் கீழே தரப்பட்டுள்ளது. இந்த அளவைகளை நவீன துகள் அறிவியலோடு பொறுத்திப் பார்த்து ELECTRON, MUON, PION, KAON, ETA, PROTON, NEUTRON, LAMBDA, SIGMA, CASCADE, OMEGA எனவெல்லாம் அழைக்கப்படும் எவை எவற்றுடன் தமிழ் அளவைகள் பொருந்தும் என சொல்வதற்கு யாராவது அருள் கூர்ந்து முன் வருவார்களா? தமிழும் நவீன அறிவியலும் தெரிந்த யாரும் எனக்குத் தெரியவில்லை. எவ்வளவு காலம் நான் தன்னந்தனியே தவிப்பது ? யாருக்காவது இது தொடர்பாக ஏதாவது தெரிந்தால் எனது E-MAIL முகவரிக்கு அருள் கூர்ந்து எழுதும்படி தாழ்மையுடன் வேண்டிக்கொள்கிறேன். FRITJOF CAPRA _வின் TAO OF PHYSICS நூலினைத் தமிழில் மொழி பெயர்த்த திரு.பொன்.சின்ன தம்பி முருகேசன் உதவிடுவாரா?

கற்பம் 47 கொண்டது புற்புதம்
புற்புதம் 41 கொண்டது புணரி
புணரி 37 கொண்டது பற்பம்
பற்பம் 33 கொண்டது பனிச் சங்கம்
பனிச்சங்கம் 31 கொண்டது தாய்
தாய் 29 கொண்டது தந்தை
தந்தை 27 கொண்டது தனிவருக்கம்
தனி வருக்கம் 23 கொண்டது முத்தொகை
முத்தொகை 19 கொண்டது பந்தம்
பந்தம் 17 கொண்டது சின்னம்
சின்னம் 15 கொண்டது குணம்
குணம் 3 கொண்டது சிந்தை
சிந்தை 13 கொண்டது கும்மி
கும்மி 11 கொண்டது இம்மி
இம்மி 21 கொண்டது அணு.

47 * 41 = 1927
1927 * 37 = 71299
71299 * 33 = 2352867
2352867 * 31 = 72938877
72938877 * 29 = 2115227433
2115227433 * 27 = 57111140691
57111140691 * 23 = 1313556235893
1313556235893 * 19 = 24957568481967
24957568481967 * 17 = 424278664193439
424278664193439 * 15 = 6364179962901585
6364179962901585 * 3 = 19092539888704755
9092539888704755 * 13 = 248203018553161815
248203018553161815 * 11 = 35493031653102139545
5493031653102139545 * 21= 745353664715144930445

ஒன்று / 320 முந்திரி
முந்திரி 1 / 320
கீழ் முந்திரி 1 / 102400 21
இம்மி 1 / 2150400 11
மும்மி 1 / 23654400 7
அணு 1 / 165580800 7
குணம் 1 / 1490227200 9
பந்தம் 1 / 7451136000 5
பாகம் 1 / 4470,6816000 6
விந்தம் 1 / 31294,7712000 7
நாக விந்தம் 1 / 532011,1104000 17
சிந்தை 1 / 7448155,5456000 14
கதிர் முனை 1 / 14,8963110,9120000 20
குரல் வளைப்பிடி 1 / 59585244436,480000 40
வெள்ளம் 1 / 35751,1466188,8000000 60
நுண் மணல் 1 / 35751,1466188,800000000 100
தேர்த்துகள் 1 / 2,3238245,30227200000000 65

(இந்த அட்டவணை மே, 2000 தில் ஆறாம் திணையின் திண்னைப் பள்ளிக் கூடத்தில் ஆண்டி வாத்தியார் என்ற பெயரில் என்னால் எழுதப்பட்டது.)

ஆக அணு என்பது தேவனேய பாவாணர் தனது தமிழர் பண்பாடும் நாகரிகமும் என்ற நூலில் குறிப்பிட்டதைப் போல 1 / 165580800 என்று எடுத்துக்கொண்டாள் அதனை கணக்கதிகாரப் பாடலில் குறிப்பிட்டதைப் போல கற்பம், புற்புதம், புணரி, பற்பம் என்ற வரிசை கிரமத்தில் பகுப்போனால் அதன் விடை கீழ்கண்டவாறு வருகிறது.

ஏற்கனவே தமிழர்களின் அணு அறிவு என்ற கட்டுரையில் அணு 1 / 165580800 என்பதை நிறுவியிருக்கிறோம்.

***
Anu/21 =4.8319801711140174914724296993026 e-19 (emmi)
Emmi/11 =4.3927092464672886286112997266387 e-20 (mummi)
Mummi/13 =3.3790071126671450989317690204913 e-21 (sindhai)
Sindhai/3 =1.1263357042223816996439230068304 e-21 (gunam)
Gunam/15 =7.5089046948158779976261533788696 e-23 (sinnam)
Sinnam/17 =4.4170027616563988221330313993351 e-24 (bandham)
Bandham/19 =2.3247382956086309590173849470184 e-25 (muththogai)
Muththogai/23 =1.0107557806994047647901673682689 e-26 (thanivarkam)
Thanivarkam/27 =3.74353992851631394366728654914074 e-28 (thanthai)
Thanthai/29 =1.6276260558766582363770811083235 e-29 (thai)
Thai/31 =5.2504066318601878592809068010435 e-31 (panisangam)
Panisangam/33 =1.5910323126849054119033050912253 e-32 (parpam)
Parpam/37 =4.3000873315808254375765002465549 e-34 (punari)
Punari/41 =1.0488017881904452286771951820866 e-35 (purputham)
Purputham/47 =2.23149316636264942271743655763051 e-37 (karpam)

இந்த கணக்கைப் பார்த்தால் தேவனேய பாவாணர் கணக்கதிகாரத்தை தவிர வேறு ஏதோ நூலில் இருந்து இந்த அளவைகளை எடுத்திருப்பதாக தோன்றுகிறது. ஆக ஒன்றுக்கு மேற்பட்ட நூல்கள் கீழ் வாய் இலக்கம் பற்றி பேசி இருப்பதாகவும் தோன்றுகிறது. ஏனெனில் அணுவுக்கு கீழ் மேலே குறிப்பிட்ட சிற்றளவைகலுக்கு பதிலாக கீழே தரப்படும் அளவைகளை அவர் குறிப்பிடுகிறார்.

தமிழ் ஆர்வலர்களின் ஆக்க பூர்வமான ஆலோசனைகள் அன்புடன் வரவேற்கப் படுகின்றன.

அன்புடன் ,

புதுவை ஞானம்.


Series Navigation

புதுவை ஞானம்

புதுவை ஞானம்