எச். பீர்முஹம்மது
தமிழின் நவீன காலகட்டத்து கவிஞர்களில் நகுலன் குறிப்பிடும் படியான இடத்தை பெறுகிறார். அவாின் கவிதைகள் தமிழ் கவிதை பரப்பிற்குள் மிதந்து செல்கின்றன. செறிவனான மொழி/ கோட்பாட்டு புனைவு/ இறுக்கம் தளர்ந்த அதிரூபமான வடிவம்/ ஊசி குத்தியது போன்ற சொல்லாடல்கள் இவற்றின் கலப்பாக காட்சியளிக்கிறது அவருக்கான பரப்பு. வாழ்வில் கவனம் குவிக்கத்தக்கது எது, குவிக்கத்தகாதது எது, லயிக்கப்படுவது எது, லயிக்கப்படாதது எது, போன்ற பதில்களற்ற கேள்விகளோடு சில கவிதைகள்.
அருகில்
தரையில்
ஒரு பாம்பு
சுருண்டு கிடக்கிறது
காலம் கண்ணாடியாக கரைகிறது
ஒரு நதியாக ஒரு ஜலப்ரளயமாக
கழித்து செல்லுகிறது
விறைந்த/ கண்களுடன்
அதன் மீது செத்தமீன்கள்
மிதந்து செல்கின்றன.
‘நண்பா/ அவள்
எந்த சுவாில்
எந்தச் சித்திரத்தை
தேடுகிறார், ‘
சில சமயங்களில் வீட்டில் யாருமே இல்லாது போகிறார்கள். கோட் ஸ்டாண்ட் மட்டும் இருக்கிறது.
‘யாருமில்லா பிரதேசத்தில்
என்ன நடந்து கொண்டிருக்கிறது
எல்லாம் ‘
நீட்சியாக செல்லும் தமிழ் கவிதை பரப்பில் அடிக்கடி எதிரொலி செய்து கொண்டிருக்கும் நகுலனிடமிருந்து அற்புதமான படிகங்கள்/ தொடர்கள்/ அருவியின் நாத ரூபமான ஒலி மாதிாி வெளிப்படுகிறது. கொட்டும் அருவிக்கு காலம் என்ற ஒன்றே கிடையாது. அம்மாதிாியான அகாலத்திற்குள் நீந்தி வருகிறது.
பெயராடல் மனித இனம் ஒவ்வொன்றுக்குமே இருக்கிறது. மனிதன் பெயர் வழியாகவே அறியப்படுகிறான். அடையாளப்படுகிறான். ஒரு விதத்தில் ஙநான்ங என்பது அதன் வழியாக தான் அறியப்படுகிறது. ஏக வெளியில்/ ஏக காலத்தில்/ ஏக பெயர்கள் மனிதனை எவ்வாறு அடையாளமிடும்,
‘ராமச்சந்திரனா என்றேன்
ராமச்சந்திரன் என்றான்
எந்த ராமச்சந்திரன் என்று
நான் கேட்கவுமில்லை
அவன் கூறவுமில்லை ‘
பாரசீகத்து சூபி கவிஞர் ஒருவர் இன்னொரு வகையில் இந்த சொல்லாடலை தருகிறார்.
பிாியமானவேளின் இடத்துக்கு வந்து கதவு முடியிருக்க கண்டேன். கதவை நான் தட்டவும் யாரது, என்னும் குரல் உள்ளிருந்து கேட்டது. நான் நான் என்றேன். கதவு திறக்கவில்லை. இரண்டாம் முறை வந்து கதவை தட்டிய போது யாரது என்னும் குரல் உள்ளிருந்து வந்தது. நான் இன்னார் என்றேன். கதவு திறக்கவில்லை. மூன்றாம் முறையாக அங்கு வந்து தட்டிய போது யாரது என்ற அதே குரல் கேட்டது. ஙஎன் அன்பே நான் நீ தான்ங என்றேன். கதவு திறந்தது.
பாரசீக சூபி கவி ‘ர் ரூமியும் இதனை தன்னை மையப்படுத்தி சொல்கிறார். மரத்தின் காட்சி மீது அவதானிப்பு நிகழ்த்தும் போது/ புல்லின் நடனத்தை கவனிக்கும் போதும்/ இயற்கையின் விசாரமான தோற்றத்தை காணும் போதும் நமக்குள் ஏதோ ஒன்று நகர்கிறது. எழுத்தின் இருப்பே எழுத்தற்ற வெளியின் இருப்பாகிறது. அனைத்தையும் எழுத்தின் தொழிற்பாடாய் மாற்றி வரும் போக்கும் நகுலன் கவிதைகளில் இருக்கிறது.
‘அதற்கு பல கிளைகள்
ஒரு சொல் தொடர்
அதில் அதனுள்
பல வளைவுகள்
சில நேர்த்திகள்
ஆழங்கள்
நுணுக்கங்கள்
சப்த விசேஷங்கள்
நிசப்த நிலைகள்
நேரம் சென்றது
அதனுள் அறியாமல் நான் ‘
உறவுகளிலிருந்து விலகி நின்று/ பற்றறுத்தலாக ஆக்கிக் கொண்டு/ பயணம் செய்வதாக தொடங்கினாலும்/ அங்கு ஏளனம் செய்யும் குரல் எல்லாவற்றையும் பாிசீலித்து பார்க்கிறது. தன்னை அந்நியாயமாக கருதுகிறது. நந்தனோடு அடையாளம் காண்கிறது.
‘நந்தனை போல்
நான் வெளியில் நிற்கிறேன்
நானும் ஒரு பறையன் தான்
அதில் தான் எவ்வளவு
செளகாியங்கள் ‘
எல்லா குழுவிற்கும் வெளியில் இருப்பதால் தனி ஒரு செளகாியம். இராமாயணத்தை நகுலன் மறுவாசிப்[ செய்யும் விதம் விநோதமானது. சாதகம் புாிவது யோகத்தில் ஆழ்வது/ தன்னை அறிவது என்பதான வேத மரபுக்கு மாறான எதிர்கதையாடலாக இருக்கிறது
சாபத்தால் அரக்கனாய்ப் பிறந்த விராதன் சீதையைக் கவர முற்படும் போது இராம இலக்குவரால் வீழ்த்தப்படும் போது இப்படி உரைக்கின்றான்.
‘சற்று முன்னர்
என்னை நானென்று அறிந்து
நானும்
இவ்வமயம்
நானறிந்த நானும்
வேறொருவன்
என்றுணர்வது ஏதோ, ‘
நகுலனின் கவிதைகள் கருத்துக்களை வளர்த்தெடுத்து அதனை உச்சத்துக்கு போவதில்லை. இயற்கைக்கும் மனிதனுக்குமான உறவாடலான தத்துவ சார்பும் இல்லை. ஒன்றை ஸ்வீகாித்து மற்றொன்றை மறுதலிக்கும் போக்கும் இல்லை. குறிப்பாக சொன்னால் முடிவற்ற எழுத்து வெளி தான் அவருக்கான முறையியல். அவாின் எழுத்துக்கள் ஒரு விதத்தில் சுய சாிதை பாங்கானவை தான். தான் சார்ந்த உலகமே அவருக்கான எழுத்து. மனித அகலங்களை பாிசீலித்துப் பார்த்த காப்கா போன்று நகுலனுக்கு ஒரு வித அகப்பாிசீலனையே பிரக்ை ‘ நிலையின் தீவிரத்திற்கும் அதன் உக்கிரத்திற்கும் ஏற்ப ஒருங்காமைவாக இருந்தது.
வார்த்தைகளில் தேடலாகவும் அமைகின்றன. சில கவிதைகள்
‘உன் போல்
தன்னைக் கண்டு
தம்மை மறந்தவர்
இங்கு நின்னைத் தவிர
வேறு யார், ‘
அவரது எழுத்து பின்நவீனத்துவ கூறுகளை கொண்டதாக இருக்கிறது. மையங்களை நோக்கியதல்ல. மாறாக திசைவெளியில் சிலாகிப்பது. ஙமனம் தான் மதத்தை விட முக்கியம் என்று சொல்வதை என்னால் ஏற்றுக் கொள்ள முடிவதில்லை. இந்தியன் என்ற வகையில் ஒரு மையத்தை நினைவு கூர்கையில் மற்ற எல்லா மையங்களும் வெறும் நிழல்கள்ங என்று ஒரு நூலுக்கான முன்னுரையில் குறிப்பிடுகிறார்.
தமிழ்க்கவிதை வெளி பல்வேறு பரப்புகளாக/ வரப்புகளாக பிாிந்து கிடக்கிறது. அது பல்வேறு விதமான கால இயங்குதலின் மீது தன்னை ஆட்படுத்துகிறது. உடலின் வெதுமை தாங்க முடியாமற் போவது மாதிாியான உணர்வு தமிழ்க்கவிதை வாசகனுக்குள் இருந்து வருகிறது.
இந்நிலையில் தமிழ்க்கவிதைக்கான வரலாற்றில் நகுலன் சில பக்கங்களில் பதிவாகிறார். அடுத்த கட்ட புதிய வளர்ச்சி நிலையை நோக்கி கவிதை உலகம் இன்னும் நகர வேண்டியதிருக்கிறது.
நகுலன் கவிதைகள் (தொகுப்பு)
காவ்யா
பெங்களூர்.
peer13@asean-mail.com
- காதலும் சிகரெட்டும்
- மலரோடு மலர் சேர்ந்து மகிழ்ந்தாடும்போது – 8 – தொடர்கவிதை
- சொந்தம்
- சிறப்பு தள்ளுபடி
- கண்களே! கண்களே!
- சான்ாீஸ் மலை அழகி
- மனம் என்னும் பறவை (எனக்குப் பிடித்த கதைகள் – 40-சுஜாதாவின் ‘முரண் ‘)
- ஹெப்சிபா ஜேசுதாசனுக்கு ‘விளக்கு ‘ அமைப்பின் விருது
- மலையகத்தின் மூத்த எழுத்தாளர் கே. கணேஷ்
- நிழல் பரப்பும் வெளி – நகுலனின் கவிதைகள் பற்றி
- இலங்கை தமிழ் எழுத்தாளருக்கு கனடாவின் இலக்கிய விருது
- பரிதி மைய நியதியை நிலைநாட்டிய காபர்னிகஸ் [Copernicus] (1473-1543)
- அறிவியல் மேதைகள் பிதாகரஸ் (PYTHAGORAS)
- அவரவர் வாழ்க்கை
- அன்பிற்கோர் அஞ்சலி..
- காதல்
- கிராமத்து அதிகாலை
- காலம் வெல்லும் கலைநெள்ளி
- சொல்லயில்
- பாரதி தரிசனம்
- விளங்காத விந்தை. வியப்பு கொள்ளும் நம் சிந்தை.
- பனி தூவும் பொழுதுகள்…!
- இந்த வாரம் இப்படி – டிஸம்பர் 15, 2002 ( மோடிவித்தை, நாகப்பா கொலை)
- ஹரப்பா ‘குதிரை முத்திரை ‘ : மோசடியாக ஒரு மோசடி
- பாகிஸ்தானிய இயக்கத்தில் இருந்த முதலாளித்துவ இழை
- தென் அமெரிக்காவின் வேலையில்லாத்திண்டாட்டம் உச்சத்துக்குச் செல்கிறது
- ஹெப்சிபா ஜேசுதாசனுக்கு ‘விளக்கு ‘ அமைப்பின் விருது
- வரவிருக்கும் தண்ணீர் போர்கள் – இறுதிப்பகுதி
- சிவராமனின் சோகக் கதை