வாதாம் கோழி

This entry is part of 26 in the series 20050722_Issue

திண்ணை


தேவையான பொருட்கள்

1 கிலோ எலும்பில்லாத கோழிக்கறி

1 இஞ்ச் இஞ்சி

10 பூண்டு பற்கள்

1/2 கோப்பை சீவிய வாதாம் கொட்டைகள் (blanched almonds)

1/2 கோப்பை எண்ணெய்

1 பட்டை துண்டு

2 பிரியாணி இலைகள்

5 கிராம்புகள்

10 ஏலக்காய்கள்

2 நடுத்தர வெங்காயங்கள், அரைத்துக்கொண்டது

2 தேக்கரண்டி சீரகம், வறுத்து அரைத்துக்கொண்டது

1/2 தேக்கரண்டி மிளகாய்த்தூள்

1/4 தேக்கரண்டி ஆல்ஸ்பைஸ் தூள்

1 கொத்து கொத்துமல்லி இலைகள்

உப்பு ருசிக்கேற்ப

செய்முறை

இஞ்சி, பூண்டு, வாதாம் ஆகியவற்றை தண்ணீரோடு சேர்த்து அரைத்துக்கொள்ளவும். ஒரு எண்ணெய் பாத்திரத்தில் எண்ணெய் விட்டு கோழிக்கறியை பொன்னிறமாகும் வரைக்கும் வறுத்துக்கொள்ளவும். தனியே எடுத்து எண்ணெயை துடைத்துக்கொள்ளவும். இதே எண்ணெயில் ஏலக்காய், பிரியாணி இலை, கிராம்பு ஆகியவற்றை போட்டு பிரியாணி இலை பொன்னிறமாகும்வரை வறுக்கவும். இத்துடன் வெங்காயம் அரைத்து வைத்ததை சேர்த்து வதக்கவும்

இதில் இஞ்சி பூண்டு வாதம் கூழை சேர்த்து எண்ணெய் பிரியும் வரைக்கும் வதக்கவும். இதில் ஒரு மேஜைக்கரண்டி தயிர் சேர்த்து 30 வினாடிகள் வதக்கவும். மென்மையான கலவை கிடைக்கும் வரைக்கும் தயிர் சேர்த்து வதக்கலாம். இதில் கோழி உப்பு சேர்த்து 20 நிமிடங்கள் மென் தீயில் வைத்து வதக்கவும்.

இதில் ஆல்ஸ்பைஸ் தூள் சேர்த்து, கொத்துமல்லி இலைகள் சேர்த்து 10 நிமிடங்கள் வதக்கவும். மேலே மீதமிருக்கும் கொஞ்சம் வாதாம் சீவலை போட்டு பரிமாறலாம்.

Series Navigation