காய்கறி முட்டைதோசை (வெஜிடபிள் ஆம்லெட்)

This entry is part [part not set] of 29 in the series 20020728_Issue


தேவையான பொருட்கள்

3 முட்டைகள்

1/4 கோப்பை காரெட்

1/4 கோப்பை குடமிளகாய்

1/4 கோப்பை பட்டன் காளான்

1/4 கோப்பை பாலாடைக்கட்டி (சீஸ்)

வெண்ணெய் 1 தேக்கரண்டி

உப்பு ருசிக்கேற்ப

மிளகுத்தூள் 2 தேக்கரண்டி

பால் 2 மேஜைக்கரண்டி

எண்ணெய் வறுக்க

செய்முறை

முட்டைகளை உப்பு, மிளகு, வெண்ணெய், பால் ஆகியவற்றுடன் சேர்த்து நன்றாக மிக்ஸியில் போட்டு கலக்கவும். மறுபுறம், காளான்களை கொதிக்கும் தண்ணீரில் 5 நிமிடம் போட்டு வைக்கவும். கேரட், குடமிளகாய், காளான், முட்டைக்கோஸ் ஆகியவற்றை மிகச்சிறிய நீளவாக்கு துண்டுகளாக (சூலியன்) வெட்டிக்கொள்ளவும். இந்த காய்கறிகளையும் அடித்துவைத்திருக்கும் முட்டைக்கலவையில் சேர்த்து, பாலாடைக்கட்டித் தூள் போட்டுக் கலக்கவும். பிறகு அடி ஒட்டாத வாணலியில் சிறிதளவு எண்ணெய் தடவி இந்த கலவையைக் கொட்டவும். ஒருபுறம் சற்றுவெந்ததும்., திருப்பிப் போடக்கூடிய பதம் வந்ததும், திருப்பிப்போட்டு வேகவைக்கவும்.

Series Navigation