சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா
புதியதோர் பாலம் அமைத்து
நிலவினில் குதித்தாடி
உலவி வந்தோம்!
சுக்கிரனைச் சுற்றி வந்தோம்,
தூரத்தில் பறந்து!
செவ்வாய்த் தளச் செம்மண்ணில்
தவ்வித் தவழ்ந்தன ஊர்திகள்!
வியாழக்கோள் மடி தொட்டு
வெடி மின்னல் படமெடுத்தோம்!
சனிக்கோள் வளையங்களின்
சந்து ஊடே நுழைந்து,
குட்டி நிலவுகளை
எட்டிப் பிடித்து விட்டோம்!
பரிதி ஈர்ப்பு வலையில் ஈசலாய்த்
திரிந்து வரும்
வால்மீன் வயிற்றைக்
கவணால் அடித்துக்
காயப் படுத்தி விட்டோம்!
வால்மீன் வெளியேற்றும்
வாயுத் தூசிகளை
வடிகட்டிப் பிடித்து வந்தோம்!
முடிவில்லா தேடற் பயணத்தில்
நாசாவின் ஏவுகணை
நடமாடும் அண்டம் எது?
“புதியதாகத் தயாரிக்கப்படும் ஏரெஸ் ஏவுகணைதான் [Ares Rockets] விண்வெளியில் பயணம் செய்து, மனித இனத்தைப் பரிதி சூழ்மண்டலத்தின் நான்காவது அண்டமான செவ்வாய்க் கோளுக்குத் தூக்கிச் செல்லப் போகிறது! நாசாவின் விண்வெளித் திட்டத்தில் ஈடுபாடுள்ள ஒவ்வொருவரும் கனவு கண்டு, எதிர்பார்த்து, ஏமாந்து பன்முறைக் கைவிடப் பட்டத் திட்டமிது! .. நான் முழுக்க முழுக்க நாசாவின் அண்டவெளித் தேடல் பயணங்களை ஆதரிப்பவன். அவற்றிலும் சிறப்பாக மனிதரியக்கும் பயணங்களை வரவேற்று ஊக்குவிப்பவன். அண்டவெளிப் பறப்புத் திட்டங்களில் மானிடப் பயணச் சாதனைகளே அமெரிக்காவின் உன்னதப் பணியாக நம்புகிறவன் நான்.”
மைக்கேல் கிரி·ப்பின் [Michael Griffin, NASA’s Adminitrator (2003)]
“மனிதர் 2020 ஆண்டுக்குள் அண்டவெளி நோக்கிப் பயணம் செய்து, முதன்முதல் செவ்வாய்க் கோளில் தடம் வைத்துத் தங்கி மீளப் போகிறார்கள்.”
ஜியார்ஜ் புஷ், அமெரிக்க அதிபதி (ஜனவரி 2004)
“செவ்வாய்க் கோள் நோக்கிச் செல்லப் போகும் விண்வெளிக் கப்பலுக்கு எரிசக்தி, மற்றும் சில தேவைப் பொருளைப் பூமியிலிருந்து சுமந்து கொண்டு போக வேண்டிய தில்லை. அதற்குப் பதிலாக பயணக் கோளில் உள்ள மூலத் தாதுக்களைப் பயன்படுத்தி [In-situ Resource Utilization (ISRU)] புதிய முறையில் செவ்வாய்த் தளத்திலே நீர், பிராணவாயு, எரிசக்தி மூலப்பண்டத்தை உற்பத்தி செய்து கொள்ளப் போவதாகத் திட்டம் உள்ளது.”
ரூபெர்ட் ஸ¤ப்ரின் [Rubert Zubrin, Mars Society Founder]
முன்னுரை: 2003 பிப்ரவரி முதல் தேதி நேர்ந்த கொலம்பியா விண்கப்பலின் கோர விபத்தை உளவு செய்து வெளியிட்ட ஆய்வறிக்கையின் தீர்வுகளை மெச்சிய, அமெரிக்க அதிபதி ஜியார்ஜ் புஷ் 2004 ஜனவரியில் நாசா விண்வெளித் திட்ட நிபுணர்களின் முன்பாக, 2020 ஆண்டுக்குள் சந்திரனைத் தொட்டு மீளும் மனிதப் பயணத்துக்குப் புதியதோர் விண்வெளிக் கப்பல் தயாரிக்கும் படியும், செவ்வாய்க் கோளுக்கு மனிதர் சென்று மீளும் குறிக்கோளுடன், நிலவில் நிரந்தரத் தங்குமிடம் [Lunar Base] ஒன்றைக் கட்டும் படியும் கூறியதாகத் தெரிகிறது. ஆறு மாதங்களுக்குப் பிறகு அரசாங்கப் பிரதிநிதிகள் 383 பேர் ஆமோதித்தும், 15 பேர் எதிர்த்தும் வாக்கெடுப்பில் அத்திட்டம் வரவேற்கப் பட்டு ஆரம்பமானது. பிறகு அந்த விண்வெளிக் குறிப்பணியைச் செனட்டர்களும் ஏக மனதாய் ஆமோதித்து ஆதரவளித்தார்.
செவ்வாய்க் கோளை நோக்கி நாசாவின் எதிர்காலத் திட்டம்
ஈராண்டுகளுக்கு [26 மாதங்கள்] ஒருமுறை, செவ்வாய்க் கோள் பூமியை நெருங்கும் போது, அவ்விரு கோள்களின் சுற்றுவீதிகள் அருகி, இடைத்தூரம் குறைந்து விண்வெளிக் கப்பல் பயணத்துக்குக் குன்றியளவு எரிபொருளே தீய்ந்து செலவாகிறது. அவ்விதத் தவணைகளில் மீண்டும், மீண்டும் விண்கப்பல்கள் அனுப்பப் பட்டுச் செவ்வாய் கோளின் தளத்தில் ஊர்திகள் பன்முறை உலவி, அது வெற்றிகரமாக உளவப் பட்டுள்ளது! 1996 ஆம் ஆண்டில் செவ்வாய்க் கோள் தளநோக்கி [Mars Global Surveyor (MGS)] அனுப்பப்பட்டு, அதன் காந்த தளம், தளப் பொருட்கள், தள அமைப்புகள், காலநிலை போன்ற தகவல் இன்னும் வந்து கொண்டிருக்கின்றன.
2001 ஆம் ஆண்டில் செவ்வாய்க் கோளை நோக்கி அடுத்து மார்ஸ் ஆடிஸ்ஸி [Mars Odyssey] ஏவப்பட்டது. அது செவ்வாய் தளத்தின் தாதுக்கள், உலோகவியல் தன்மைகளையும், உயிரியல் தோற்ற நியதிகளையும் [Mineralogy & morphology] ஆய்வுகள் செய்தது. மேல்தளத்தில் உள்ள ஹைடிரஜன் செழிப்பையும், மற்ற பிற மூலகங்களையும் [Hydrogen Abundance & other Elements] அதன் உளவிகள் ஆராய்ந்தன. மேலும் துருவப் பனிப்பாறைகளில் உறைந்திருக்கும் நீரை, முதன்முதலில் காட்டியதும் அந்த ஹைடிரஜன் தள ஆய்வுகளே.
2005 ஆம் ஆண்டில் ஏவப்பட்ட செவ்வாய் உளவுக் கோள் சுற்றி [Mars Reconnaissance Orbiter (MRO)] முன்பு அனுப்பட்ட உளவிகள் துருவப் பனிக் குன்றுகளில் கண்ட நீர்மைத் தகவலை உறுதியாக்கியது. செவ்வாய்த் தளத்தில் உயிரினங்கள் ஒருகாலத்தில் தோன்றினவா என்றறிய அடுத்து ஏவப்போகும் உளவிகளுக்குச் செம்மையான இடத்தையும் அதுவே காட்டியது.
அடுத்து 2007 இல் ·பீனிக்ஸ் உளவி [Phoenix Probe] ஏவப்படுவதற்கு ஏற்பாடுகள் முன்னேறிக் கொண்டிருக்கின்றன. செவ்வாய்க் கோளின் அடித்தளத்தில் நீர்மை உள்ளதா என்று குழி தோண்டி ஆராயும் குறிப்பணிகளை அது முக்கியமாக மேற்கொள்ளும். மேலும் கீழ்த்தளங்களில் ஆர்கானிக் மூலக்கூறுகள் [Organic Molecules] உள்ளனவா வென்றும் உளவுகள் செய்யும். செவ்வாய்த் தளத்தின் மேடு பள்ளங்களில் மிகையான அளவு நீரோட்டம் நதிகளாய் ஓடியிருப்பதைக் கண்டுபிடித்தது செவ்வாய் ஆடிஸ்ஸி உளவி. ·பீனிக்ஸ் அதைத் தொடர்ந்து மாதிரிகள் எடுத்து உறுதிப் படுத்தும்.
2009 ஆம் ஆண்டில் முதன்முதலாகச் செவ்வாய் விஞ்ஞான ஆய்வுக்கூடம் [Mars Science Laboratory] அனுப்பப் போவதாய்த் திட்டம் உருவாக்கப் பட்டுள்ளது. அதில் செவ்வாய்த் தளத்தில் ஊர்ந்திடும் புதுப்பிறவி வாகனம் ஏவப்படும். அது அடுத்து வரப் போகும் அண்டவெளி உயிரியல் குறிப்பணிகளுக்கு [Astrobiology Mission] தேவையான செவ்வாய்த் தள மண் மாதிரிகளை எடுத்துக் கொண்டு முதன்முதல் பூமிக்கு மீளும். அந்த ஆய்வுக்கூட வாகனம் செவ்வாய் தளத்தில் ஈராண்டுகள் பணிபுரியும். அதன் தோண்டிகள் செவ்வாய்த் தளத்தில் பல அடி ஆழத்தில் துளை போடும் ஆற்றலும், தகுதி உடையவை.
2014 ஆம் ஆண்டில் செவ்வாய்த் தள உளவி செவ்வாய்க் கோளின் மண் மாதிரிகளை எடுத்துக் கொண்டு முதன்முதல் பூமிக்கு மீண்டு வரும். அடுத்து 2018 இல் நாசா 20 அடிப் பரிமாணமுள்ள விண்வெளிக் கப்பலில் முதன்முதல் நான்கு விண்வெளி விமானிகளைச் செவ்வாய்க் கோளுக்கு அனுப்புவதாகத் தீர்மானம் செய்திருக்கிறது. போகும் பாதையில் அவர்கள் நிலவில் அமைக்கப்படும் நிரந்தரத் தங்கு கூடாரத்தில் சில நாட்கள் ஓய்வெடுத்துப் பிறகு செவ்வாய்க் கோள் நோக்கிப் பயணம் செய்வார்கள்.
“செவ்வாய்க் கோளின் நீண்ட விண்வெளிப் பயணக் கப்பலுக்கு பேரளவு எரிசக்தி, தேவைப் பொருள் பூமியிலிருந்து முன்போல சுமந்து கொண்டு போகப் போவதில்லை. அதற்குப் பதிலாக பயணக் கோளில் உள்ள மூலப் பண்டங்களைப் பயன்படுத்தி [In-situ Resource Utilization (ISRU)] புதிய முறையில் செவ்வாய்த் தளத்திலே நீர், பிராணவாயு, எரிசக்தி மூலப்பொருள் போன்றவற்றை உற்பத்தி செய்து கொள்ளப் போவதாகத் திட்டம் உள்ளது,” என்று ரூபெர்ட் ஸ¤ப்ரின் [Rubert Zubrin, Mars Society Founder] கூறுகிறார்.
செவ்வாய்க் கோளுக்குச் செல்ல முதன்முதல் பளுதூக்கி ராக்கெட் எஞ்சின் [Heavy Lift Booster (HLB)] ஒன்று சுடப்பட்டு, அது 45 டன் எடையுள்ள புவிமீட்சி வாகனத்தை [Earth Return Vehicle (ERV)] தூக்கிச் செல்லும். திரும்பி வரும் போது, அதில் விண்வெளி விமானிகள் நான்கு பேர் வீற்றிருக்க மாட்டார்! அது போகும் போது எரித்திரவமான திரவ ஹைடிரஜனையும், ரசாயன இயக்கச் சாதனங்களையும் கொண்டு செல்லும். செவ்வாய்த் தளத்தில் உலவும் ஊர்திகளையும் ஏந்திச் செல்லும். முக்கியமாக 100 கிலோவாட் ஆற்றல் உற்பத்தி செய்யும் அணுசக்தி உலையும் அதற்குள்ளே வைக்கப் பட்டிருக்கும்.
பூமியிலிருந்து விண்சிமிழ் புறப்பட்டுச் செவ்வாயின் ஈர்ப்பு மணடலத்தில் சிக்கிக் கொள்ள 8 மாதங்கள் பிடிக்கும். பிறகு வாயுத்தடை கட்டுப்பாடு முறையில் [Aerobraking Maneuver] விண்சிமிழின் வேகம் குறைவாக்கப் பட்டு, ஈர்ப்பு எதிர்ப்பு வீச்சு [Retro-Rockets] இயக்கத்தில் செவ்வாய்த் தளம் நோக்கி யிறங்கிப் பாராசூட் குடைகளை விரித்து ஊர்திகளும், மனிதரும் தளத்தில் இறங்கித் தடம் வைக்கலாம். விண்சிமிழின் ரசயானச் சாதனத்தை யியக்கி, செவ்வாய்க் கோளில் உள்ள கார்பன் டையாக்ஸைடு [CO2] வாயுவைக் கலந்து, மீதேன், ஆக்ஸிஜென், நீர் [CO2+Chemical –> Methane+O2+H2O] ஆகியவற்றைச் சேமித்து வைத்துக் கொள்ளலாம். மீதேன், ஆக்ஸிஜென் வாயுக்கள் விண்சிமிழ் பூமிக்கு மீள எரிசக்தி அளிக்கும்.
நாசாவின் நிதித்தொகை எவற்றுக் கெல்லாம் பங்கீடாகிறது?
2007 ஆம் ஆண்டு நாசாவின் விண்வெளித் திட்ட நிதிவகுப்பு [2007 Budget] 16.8 பில்லியன் டாலர். தேசீய உடற்பாதுகாப்பு நிதிவகுப்பில் அது பாதியளவு! தேசீய விஞ்ஞான அறக்கட்டளைகளின் நிதிவகுப்பு போல், அது மூன்று மடங்கு! விண்வெளி விஞ்ஞான உளவுகளுக்கும், அண்டவெளி மனிதப் பயணங்களுக்கும் 16.8 பில்லியன் டாலர் நிதிதொகை பங்கீடாகும் என்று புதிதாய் நியமனமான நாசா ஆணையாளர் மைக்கேல் கிரி·ப்பின் கூறுகிறார். செவ்வாய்க் கோள், வால்மீன்கள் ஆகியவற்றில் அண்டவெளி உயிரியல் உளவு, விண்வெளி ராக்கெட்டுகளுக்கு அணுசக்தி உந்தியல் ஏற்பாடு [Astrobiology, Nuclear Propulsion System] போன்ற சில திட்டங்கள் முறையே 50%, 97% வெட்டப் பட்டன. 2011 ஆம் ஆண்டு முதல் செவ்வாய்க் கோள் மனிதப் பயணத் திட்டங்களுக்குத் தற்போது ஒதுக்கப்பட்டுள்ள 10% தொகையிலிருந்து, 40% ஆக உயர்த்தப்படும் என்றும் அறியப் படுகிறது. நாசாவின் நிதி ஒதுக்கீடு ஐந்து வித துறைகளுக்காகப் பிரிக்கப் பட்டிருக்கிறது.
1. அண்டவெளிப் பயணத் திட்டங்கள்:
நாசாவின் மிகப் பெரிய திட்டமிது. அதற்கு நிதி ஒதுக்கீடு: 6.23 பில்லியன் டாலர். அதில் விண்வெளி மீள்கப்பல் திட்டங்களுக்கு [Space Shuttle Programs]: 4.06 பில்லியன் டாலர்; அகில நாட்டு விண்வெளி நிலையம் [International Space Station] 1.81 பில்லியன் டாலர். அண்டவெளிப் பயணத் துணை ஏற்பாடுகள் [Space Flight Support, Astronaut Health & Safety, Earth Based Satellite Communications with Missions]: 370 மில்லியன் டாலர்.
2. விஞ்ஞானத் திட்டங்கள்:
மனிதரற்ற விண்கப்பல் ஆய்வுத் திட்டங்களுக்கு [Unmanned Space Research Missions] நிதி ஒதுக்கீடு: 5.33 பில்லியன் டாலர். அத்தொகையில் பூகோளத்தின் காலநிலை மாறுதல்கள், ஆய்வுகள், விளைவுகள் [Earth-Sun System (Earth’s Weather)]: 2.21 பில்லியன் டாலர். செவ்வாய்க் கோள் விண்ணுளவிகள், வியாழன், சனிக்கோள்களுக்கு விண்ணுளவிகள், வால்மீன் ஆராய்ச்சிகள் [Solar System Reseach]: 1.6 பில்லியன் டாலர். பிரபஞ்ச ஆராய்ச்சிகள்: ஹப்பிள் தொலைநோக்கி [Universe]: 1.51 பில்லியன் டாலர்.
3. விண்வெளித் தேடல் திட்டங்கள்:
விண்வெளித் தேடல் திட்டங்களுக்கு நிதி ஓதுக்கல்: 3.98 பில்லியன் டாலர். அதில் சந்திரனுக்கு மீண்டு தங்கு கூடாரம் அமைத்தல், அங்கிருந்து செவ்வாயிக்குப் பயணம் சென்று தடம் வைத்து மீளல் [Human Exploration of Moon & Mars]: 3.06 பில்லியn டாலர். வாகன ஊர்திகளை இறக்கி நிலவு, செவ்வாய்த் தள ஆய்வுகள். அண்டவெளி விண்மீன்கள் ஆராய்ச்சிகள் [Constellation Systems]: 650 மில்லியன் டாலர். விண்வெளிப் பயணங்களில் பங்கெடுக்கும் விமானிகளின் உடல்நலப் பாதுகாப்பு ஆராய்ச்சிகள் [Human System Research & Technology, Space Exposure Health]: 270 மில்லியன் டாலர்.
4. விண்வெளி விமானிகளின் ஆராய்ச்சிகள்:
அண்டவெளிப் பயணம், விமானப் பறப்பு பாதுகாப்பு முறைகள், ஏவு கப்பல்களைத் தூக்கிச் செல்ல புதுப்புது ராக்கெட் உந்துவியல் எஞ்சின்கள் [Rocket Propulsion Sysytems], நாசா காற்றுக்குகை ஆராய்ச்சிகள் [NASA Wind Tunnel Research Facilities]: 720 மில்லியன் டாலர்.
5. அரசாங்கத் தனியார் துறைப் பங்கீடு திட்டங்கள்:
தனியார், அரசாங்க விஞ்ஞானப் பொறியியல் ஆராய்ச்சிக் கூடங்களுடன் உடன்பாடுகள்: 490 மில்லியன் டாலர்.
[தொடரும்]
தகவல்:
Image Credits: NASA, Discover Magazine (Sep. 2006)
1. Discover Magazine Science, Technology & The Future: Does NASA have A Future? By: David Freedman (September 2006)
2. Back to the Future for NASA in 2005 By: Brian Berger Staff Writer
3. NASA’s Future Plans for Mars Exploration.
4. Future Manned Mars Missions [www.vectorsite.net/]
******************
jayabarat@tnt21.com [August, 23 2006]
- கடித இலக்கியம் – 19
- அதிநவீன மின் துகள் நட்சத்திரங்கள்
- பேச்சு
- திருப்பெரும்புலியூர் தலப்பெருமை
- கடிதம்
- மங்கையராகப் பிறப்பதற்கே..
- மக்களின் மொழி சம்ஸ்க்ருதம்
- நாசா விண்வெளித் தேடல் நிறுவனத்தின் எதிர்காலத் திட்டங்கள்
- தமிழ் மக்களின் பழமொழிகளைத் தொகுத்துப் பதிப்பித்த தரமிக்கவர்கள்
- புதுக்கோட்டையின் இலக்கிய இயக்கங்கள் – ஆய்வு முன்னோட்டம்
- மெய்ப்பாட்டு நோக்கில் மறுமலர்ச்சிப் பாடல்கள் – (ஆய்வு முன்னோட்டம்)
- தமிழர்களின் அணு அறிவு – கணிதம் என்பது அறிவியல் மொழி -தொடர்ச்சி
- ஏலாதி இலக்கிய விருது 2006
- நளாயினி தாமரைசெல்வன் எழுதிய ‘நங்கூரம்’, ‘உயிர்த்தீ’ ஆகிய நூல்கள் வெளியீடும் ,அறிமுகமும்
- செங்கடலை தாண்டி- வஜ்ரா ஷங்கர் அறிய
- கடிதம்
- கள்ளர் சரித்திரம்
- நியூ ஜெர்சி திரைப்படவிழா
- பயங்கரவாதம் – பல தலையுள்ள பாம்பு – தேவை பலமுனை யுத்த தந்திரம், ஆயத்தம்
- என் – ஆர் – ஐ
- மூவேந்தரும் முக்குலத்தோரும் – சில விளக்கங்கள்
- வ னா ந் தி ர ரா ஜா
- மறுபடியும் ஒரு மகா பாரதம் – அத்தியாயம் – 35 ( முடிந்தது )
- எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்: அங்கம்-2, பாகம்-15)
- திண்ணை வாசகர்களுடன் தொடரும் உறவுகள்
- பின்நவீன ஜிகாத்தும் தலித்தும்
- எண்ணங்கள் – இந்துக்களின் நற்குணத் திரிபு, இஸ்ரேலின் தார்மீகப் போர், அரபு-அமெரிக்க பெண் உளவியலாளர், ஜிகாதுக்கு எதிராக முஸ்லீம்
- எண்ணச் சிதறல்கள் – நளினி ஜமீலா, அரவக்காவு, பெஸண்ட் நகர் டாபா, மாமியார்-மருமகள், மீன் குழம்பு, அம்மி-உரல்-குடக்கல்..
- வந்தே மாதரம் படும் பாடு
- கேட்பாரில்லாமல் கீழ்சாதிகளாக்கப்பட்ட சங்கத் தமிழர்
- ஓதி உணர்ந்தாலும்!
- சுதந்திர தேவியின் மகுடத்தில் ஒரு தூத்துக்குடி முத்து
- வந்தே மாதரம் பாடலின் அமர வரலாறும், பாடல் மறுப்பின் பின் நிற்கும் தேச விரோத விஷ விருட்சங்களும்
- பறவையின் பாதை
- மெய் காட்டும் பொய்கள்
- கீதாஞ்சலி (87) அவளைத் தேடிச் செல்கிறேன்!
- பெரியபுராணம் – 101 – திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி
- புரட்சிக்காரனின் புல்லாங்குழல் இசை – ஹொசே மார்த்தியின் எளிய கவிதைகள் (1-20)
- என்ன செய்து கொண்டு இருக்கிறோம்