This entry is part of 52 in the series 20040617_Issue


மூழ்கடிக்கும் நதிகள்

சிறு பிள்ளை விளையாட்டாய்

கால்தடங்கள் பதிய

ஓடித்திரியும் காலம் என் கரையில்

என் அருகில் ஓடி வந்தும்

நான் தொட்டு விட முடியாமலும்

காற்று என்னோடு கலக்கின்ற

ஷணத்தில்

எனை ஏய்த்துத் திரும்பிய

பாதச் சுவடுகளை மட்டுமல்லாது

சுவடுகள் பதித்த பாதங்களையும்

இழுத்து நனைத்துப் போடுவேன் என்றறியாது

சிரிக்கின்ற காலம்

புரையேறித் தவிக்கும்

ஓடித் திரும்பும் அலைகள் தொலைத்து

நதியாய் ஓடத் துவங்குவேன்

நீ ஓட்டம் நிறுத்தி

என்னில் வந்து மூழ்கிப் போக

—-
mathibama@yahoo.com

Series Navigation