திணை பாடாண்டினை
துறை: வாழ்த்தியல்
சேரமான் மாவெண்கோவும், பாண்டியன் கானப்பேர் தந்த உக்கிரப்பெருவழுதியும் சோழன் ராயசூயம் வேட்ட பெருநற்கிள்ளியும் ஒருங்கிருந்தாரை ஒளவையார் பாடியது.
நாகத்தன்ன பாகார் மண்டிலம்
தமவே யாயினுந் தம்மொடு செல்லா
வேற்றோராயினு நோற்றோர்க் கொழியும்
ஏற்ற பார்ப்பார்க் கீர்ங்கை நிறையப்
பூவும் பொன்னும் புனல்படச் சொரிந்து
பாசிழை மகளிர் பொலங்கலத் தேந்திய
நாரரி தேறன் மாந்தி மகிழ்சிறந்
திரவலர்க் கருங்கல மருகாது வீசி
வாழ்தல் வேண்டுமிவண் வரைந்த வைகல்
வாழச் செய்த நல்வினை யல்ல
தாழுங் காலைப் புணைபிறிதில்லை
ஒன்றுபுரிந்தடங்கிய விருபிறப்பாளர்
முத்தீப்புரையக் காண்டக விருந்த
கொற்ற வெண்குடைக் கொடித்தேர் வேந்திர்
யானறி யளவையோ விதுவே வானத்து
வயங்கித் தோன்று மீனினு மிம்மென
இயங்கு மாமழை யுறையினும்
உயர்ந்துமேந் தோன்றிப் பொலிகநுந்நாளே.
- காதல் எனும் ஒரு தொல்காப்பியம்.
- பூரிப் பாயாசம்
- அரிசி வடை
- இந்திய மருத்துவம் சீனாவில் பரவிய வரலாறு- 3
- யூரேக்கா! (அல்லது) அறிவியலில் படைப்புத் தருணங்கள்
- The Hitchhiker ‘s Guide to the Galaxy எழுதிய டோக்ளஸ் ஆடம்ஸ் மறைவு
- ஓசைகள்
- துணை
- புறநானூறு 367: ஒளவையார்
- மெளனம்
- புலவி நுணுக்கம்
- புஷ்ஷின் ‘வெற்றி முரசு கொட்டும் நூறாவது நாள் ‘
- அரசியல்வாதிகள் வேலைக்குத் தகுந்த ஊதியம் – எதிர்வினை 1
- கணினி யுகத்திற்கான இன்றியமையாச் சமூகச் சிந்தனை 2
- இந்திய மருத்துவம் சீனாவில் பரவிய வரலாறு- 3
- இந்த வாரம் இப்படி – மே 13 2001
- யூரேக்கா! (அல்லது) அறிவியலில் படைப்புத் தருணங்கள்
- இரண்டாம் பீஷ்மன்