சர்வோதயா தினத்தில் தேசத்தந்தைக்கு சேவாலயாவின் அஞ்சலி

This entry is part [part not set] of 34 in the series 20090205_Issue

மதுமிதா


சர்வோதயா தினத்தில் தேசத்தந்தைக்கு சேவாலயாவின் அஞ்சலி. காந்தியடிகள், பாரதியார், விவேகாநந்தர் ஆகியோரது வாழ்வும் வாக்கும் பற்றி சிறைக்கைதிகளுக்காக சேவாலயா நடத்தும் 30 வார வகுப்புகளின் துவக்க விழா.

தேசத்தந்தை ம?¡த்மா காந்தியின் 61 ஆவது மறைவு தினத்தில் அன்னாருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், காந்தியடிகள், பாரதியார், விவேகாநந்தர் ஆகியோரது வாழ்வும் வாக்கும் பற்றி சிறைக்கைதிகளுக்காக சேவாலயா நடத்தும் 30 வார வகுப்புகளின் துவக்கவிழா 30.01.2009 அன்று காலை 11 மணிக்கு சென்னை புழல் இரண்டாம் சிறைச்சாலை தியான மண்டபத்தில் நடைபெற்றது.

வகுப்புகளைத் துவக்கிவைத்த திரு. R. நடராஜ் IPS, DGP (Prisons) அவர்கள் நலிவுற்ற பிரிவினருக்கு சேவாலயா ஆற்றிவரும் சேவைகளைப் பாராட்டினார். காந்தியடிகள், பாரதியார், விவேகாநந்தர் ஆகியோரது வாழ்வும் வாக்கும் பற்றி சிறைக்கைதிகளுக்காக சேவாலயா நடத்தும் 30 வார வகுப்புகளை அண்ணல் காந்தியின் நினைவு நாளன்று துவங்குவது அன்னாருக்கு செய்யப்படும் மிகச் சிறந்த அஞ்சலியாகும் என்று தன்னுரையில் குறிப்பிட்டார். சிறைக்கைதிகளுக்கு நல்ல நேர்மறையான சிந்தனைகளைத்தூண்டி, விடுதலையாகி அவர்கள் வெளியே சென்றதும் புதிய வாழ்க்கைமுறையை அவர்கள் மேற்கொள்ள உதவும் வகையில் பல நிகழ்ச்சிகளை அவர்கள் மேற்கொள்ள உதவும் வகையில் பல நிகழ்ச்சிகளை சிறையில் ஏற்பாடு செய்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

சேவாலயாவின் நிர்வாக அறங்காவலர் திரு. V. முரளிதரன் வரவேற்புரை வழங்கினார். காந்தி, பாரதி, விவேகாநந்தர் ஆகிய முப்பெருந்தலைவர்களைப் பற்றிய செய்திகளை மாணவர்களுக்கு கொண்டு செல்லும் நோக்கத்தோடு சேவாலயா ஆண்டுதோறும் மாநில அளவில் இத்தலைவர்களின் வரலாற்றைப் பற்றிய இலவசத் தேர்வினை நடத்தி வருகிறது என்று குறிப்பிட்டார். தற்போது துவங்கப்பட்டுள்ள 30 வார வகுப்புகள் சிறைக்கைதிகள் இத்தலைவர்களின் வாழ்வையும் செயல்பாடுகளையும் பற்றி அறிந்து கொண்டு தங்களை மேம்படுத்திக் கொள்ள ஒரு வாய்ப்பாக அமையும் விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது என்ற அவர் “முதலில் சென்னையிலுள்ள சிறைச்சாலைகளில் மட்டுமே இவ்வகுப்புகளை நடத்த முடிவு செய்திருந்தோம். ஆனால் அவர்கள் தமிழகத்தில் உள்ள அனைத்து சிறைச்சாலைகளிலும் இந்த வகுப்புகளை நடத்த அனுமதி அளித்துள்ளார்” என்றும் இவ்வரிய வாய்ப்பிற்கு அவர்களுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் கூறினார்.

ஓய்வு பெற்ற இரயில்வே பாதுகாப்பு ஆணைய அதிகாரியும், காந்திய அறிஞருமான திரு. G. ராம் மோஹன் அவர்கள் ஒரு மணிநேரம் காந்தியடிகளின் வாழ்க்கை வரலாற்றைப் பற்றிய அரிய புகைப்படங்கள் கொண்ட ‘ slide show’ ஒன்றை அளித்தார்.

சேவாலயா வளாக பொறுப்பாளரான திரு. G. சிட்டிபாபு அவர்கள் நன்றியுரை நவில, அனைவரும் தேசிய? கீதம் பாட விழா இனிதே நிறைவுற்றது.

இது போன்று 30 வாரங்கள் சிறைச்சாலையில் வகுப்புகள் நடத்த உள்ளனர்.

Series Navigation

மதுமிதா

மதுமிதா