மவ்லிதுகளின் பண்பாட்டு அரசியல்

This entry is part [part not set] of 31 in the series 20060728_Issue

ஹெச்.ஜி.ரசூல்


1) மவ்லிது எனும் கவிதை பாடுதல் இஸ்லாத்திற்கு எதிரானது என்று எவரேனும் சொல்வாரெனில் அந்த வாக்கியங்களை முறித்து குப்பைக் கூடையில் வீசி எறிந்து விட்டு வரலாறு தன் பயணத்தை மீண்டும் கவிதை பாடுதலோடு தொடரும். இசைத்தன்மை நிரம்பிய கவிதை பாடலாக மலர்கிறது. ஒலிகள், குரல்கள், வண்ணங்களை மனசில் அடியாளத்தில் வரைந்து செல்கிறது. திருக்குர்ஆனிய வசனங்களும், அரபு மொழி கவிதைத் தன்மையை சுடர்விட்டு பிரகாசிக்கச் செய்கின்றன. அசை, சீர், தளை, அடி, எதுகை, மோனை, ஓசைநயம், ஒலிநயம் என்பதான அமைப்பாக்க பண்புநிலைகளே இசைத்தன்மை பொருந்திய கவித்துவ வரிகளை உற்பத்தி செய்கின்றன. அர்த்தக்கூறுகளை உணராமலேயே ஓசைக்கூறுகளின் லயத்தில் வாசகனை/பார்வையாளனை ஈர்த்துக் கொள்கிற சாகசம் இசைக் கவிதைக்கு உண்டு.

குல் ஹ¤வல்லாஹ¤ அஹது அல்லாஹ¤ஸ் ஸமது
லம் யலித் வலம் யூலது வலம் யக்குன்லஹ¤ குபுவன் அஹது
(அல்லா ஒருவன் என கூறுவீராக; அல்லாஹ் தேவையற்றவன்
யாரையும் அவன் பெறவுமில்லை யாருக்கும் அவன் பிறக்கவுமில்லை
அவனுக்கு நிகராக யாருமில்லை)

அஹது. சமது. யலிது. யூலது. அஹது என்பதான வார்த்தைகளின் ஓசைகளுக்குள் திருக்குர்ஆனே தன்னை கவிதையாக அடையாளப்படுத்திக் கொள்கிறது. திருமறையின் 6666 வசனங்களுக்குள்ளும் இத்தகையதான தொல் இலக்கண மரபார்ந்த ஓசை உட்கட்டமைப்பு உள்ளதை கவனத்தில் கொள்ளலாம்.

2) திருக்குர்ஆன் கவிதைப் படைப்பாளிகளைப் பற்றி என்னவிதமான கருத்தியலை முன்வைக்கிறது என்பது குறித்து பேச வேண்டியுள்ளது. எந்த படைப்புக்கும் அடையாளமாக கருத்துருவமாக சில அறிவியல் மதிப்பீடுகள் முன்வைக்கப்படுகின்றன. இந்த வகையில் நற்செயல் புரிதல், அல்லாஹ்வை அதிகம் நினைப்பதன் மூலம் உளத்தூய்மையை உருவாக்குதல், இழைக்கப்பட்ட கொடுமைக்கு எதிராக போராடி எதிரிகளை முறியடித்தல் என்பதான நோக்கங்களுடன் செயல்படும் கவிஞர்களை பின்பற்றலாம் என ஷ¤றா 26-வது அத்தியாயம் கவிஞர்களைப் பற்றி பிரகடனம் செய்கிறது.

“எவர் நம்பிக்கை கொண்டு நற்செயல் புரிந்தார்களோ
அல்லாஹ்வை அதிகம் நினைத்தார்களோ. மேலும்
தமக்கு கொடுமை இழைக்கப்பட்டபோது அதற்காக
பழிவாங்கினார்களோ அத்தகைய கவிஞர்களைப் பின்பற்றலாம்”
– என்பதாக அக்கருத்து அமைகிறது.

இச்சொல்லாடல்கள் கவிஞர்கள் வழிகேடர்கள் அவர்களைப் பின்பற்ற வேண்டாம். ஒரு மனிதனுடைய இதயம் கவிதையால் நிரம்புவதைவிட சீழினாலும், ரத்தத்தினாலும் நிரம்புவதே மேலானது என்பதான கருத்தாக்கங்களை மெளனமாக, அழுத்தமாக மறுத்துப் பேசுகின்றன.
நபிகள் நாயகத்தின் வாழ்வில் நடந்த சம்பவங்களில் சில கவிதைக்கும் அதை ரசனையோடு கேட்டு மகிழும் நபிகள் நாயகத்திற்கும் இடையிலான உறவுநிலைகளைப் பற்றி சொல்லித் தருகின்றன. இஸ்லாம் மக்கள் மத்தியில் விரைவுசக்தியாக பரவியகாலம் மக்காவை வெற்றி கண்டபோது எதிரிகள் மன்னிப்பு கேட்டு சரணடைந்தனர். ஆனால் உயிருக்கு அஞ்சி மாறுவேடமணிந்து தலைமறைவாக வாழ்ந்து வந்த க·பு இப்னு சுஹைர் ஒருநாள் நபிகள் நாயகத்தின் முன் திடீரென வந்து நின்று மன்னிப்பு கேட்டார். நபிகள் நாயகத்தை புகழ்ந்து பாடல்கள் பாடினார். இப்பாடல்களைக் கேட்டுப் பரவசப்பட்ட நபிகள் நாயகம் தன் மேனியில் கிடந்த போர்வையை அவருக்குப் போர்த்தினார். இந்த பாடல்களே பானத்சுஅத் மவ்லிது எனப்படுகிறது.
மற்றுமொரு தடவை நபிகள் நாயகத்திற்கென அமைக்கப்பட்ட தனிமிம்பாரில் (மேடை) நபிநாயகத்தை புகழ்ந்து ஹஸ்ஸான் இப்னு தாபித் கவிதை பாட அல்லாஹ்வின் தூதரைப் புகழும் காலமெல்லாம் பரிசுத்த ஆவியைக் கொண்டு ஹஸ்ஸானை நிச்சயமாக அல்லாஹ் வலிமைப்படுத்துகிறான் என நபிகள் நாயகம் வாழ்த்தியதும், ஹதீஸ்கிரந்தங்களின் சரித்திர சம்பவங்களாக நிலை பெற்றுள்ளன.
“ஒரு முமீன் தன் வாளினாலும், நாவினாலும், மார்க்கத்திற்காக போராடுகிறான். எதிரிகளை நோக்கி வீசுகின்ற வசைக்கவிதைகளோ எறியப்பட்ட அம்பின் கூர்முனைக்கு ஒப்பாகும் ¦ என்பதாக இடம் பெறுகின்ற தொடர்களின் வாயிலாக ஹஸ்ஸான் இப்னு தாபித், அப்தில் லாஹாப்னு ரவாஹா, க·பு இப்னு மாலிக் உள்ளிட்ட கவிஞர்களுடன் நபிகள் நாயகம் நெருங்கிய தொடர்பு வைத்துள்ளதும் அவர்களைப் பாராட்டி உள்ளதும் தொ¢யவருகிறது. அபுசுப்யான் இப்னுஹர்த், அக்ரபின் ஹாபிஸ், ஸபர்கான் இப்னுபத்ரு உள்ளிட்ட குலப்பெருமை பேசித்திரிந்த கவிஞர்களுக்கு மறுப்பு சொல்ல நபிகள் நாயகத்தின் தரப்பில் ஹஸ்ஸான் இப்னு தாபித் அவர்களுக்கு வாய்ப்புத் தரப்பட்டது. பிறிதொரு தடவை அண்ணல் நபிநாயகம் ஸப்பத்தல்லாஹ¤ என்று முதல் சொல்லை எடுத்துக் கொடுக்க அப்துல்லாஹ் இப்னு ரவாஹா பதில் கவிதை பாடியுள்ளதும் நிகழ்ந்துள்ளது.
“சிலை வணக்கம் செய்வோர் பாதுகாப்பு தேடி வந்தால் அவர்களைப் பாதுகாப்பது உங்கள் கடமை” – என திருமறையின் அத்தவ்பா அத்யாயம் ஆறாவது வசனம் சுட்டிக் காட்டுகிறது. இத்தகைய நெகிழ்ச்சித் தன்மையை, சிலை வணக்கம் செய்யும் சகோதர மத நண்பர்களிடமும் காட்ட வேண்டுமென வலியுறுத்தும் இஸ்லாம் நபிகள் நாயகத்தின் புகழ்பாடும் மவ்லிதை ஓதக்கூடாது என்று எந்த இடத்திலும் தடை விதிக்கவில்லை. திருக்குர்ஆனிய பார்வையில் மவ்லிது ஓதுதலை ஒரு நற்செயலாக கருதலாம். நபிகள் நாயகம் வாழ்ந்து காட்டிய இலட்சிய மாண்புகளை ஞாபகப்படுத்தி ஒவ்வொரு இஸ்லாமியனும் தன்னை அகா£தியாக புதுப்புத்துக் கொள்ளுதல் என்பதான அர்த்தத்தையே இது ரகசியமாக விளக்குகிறது.

3) நபிகள் நாயகத்தின் சிறப்பைப் போற்றி பாடுதல் உலகம் முழுவதும் வாழும் முஸ்லிம்களின் பிரதேச மொழிகளில் எண்ணற்ற கணக்கில் உருவாகி வந்துள்ளன. நமக்கு நெருக்கமான உள்ள தமிழ், மலையாளம், அரபு மொழிகளில் உருவான பாடல்களை (பைத்) இதற்கு உதாரணப்படுத்தலாம். இப்பாடல்கள் காலங்காலமாக வாய்மொழி மரபாக, தலைமுறைத் தலைமுறையாக இஸ்லாமிய மக்கள் ஞாபகப் பரப்பின் வழி பரப்பப்படுகின்ற பாடல்களாகவும் இருக்கின்றன. இந்த வகை மக்கள் சார் பாடல்களை எழுதியது யாரென்று கூட துல்லியமாக கூற முடியாது. மக்களே திரும்பத்திரும்ப புதுப்புதுப் பிரதிகளாக இதனை உருவாக்கிக் கொள்கிறார்கள். மற்றுமொருவகை இப்பாடல்களை எழுதியது யாரென்ற வரலாற்றுக்குறிப்புகளோடு மக்கள் மத்தியில் பாடப்படுகிற பாடல்களாகும்.
பாரசீக நாடுகளைச் சேர்ந்த மார்க்க ஞானிகள் ஹஜ்ரி எட்டாம் நு¦ற்றாண்டு முதல் நபிகள் நாயகத்தின் மீதான வற்றாத நேசத்தால் உலகப்புகழ்பெற்ற மவ்லிதுகளை எழுதி பரப்பியுள்ளார்கள். இத்தகையதான மவ்லிதுகளை இயற்றிவர்களில் சி¡¢யாவைச் சேர்ந்த இப்னு நாஸாறுத்தீன், இராக்கைச் சேர்ந்த ஹ·பிழுல் இராகிய்யி, எகிப்தைச் சேர்ந்த ஸகாபி, ஏமனைச் சேர்ந்த வஜுஹ¤த்தீன், அப்துர்ரகுமான், இப்னு அலிய்யுல், முஹம்மது ஷைபானி உள்ளிட்டோரின் பங்களிப்புகளைச் சொல்லாம். பர்ஸன்ஜு மவ்லிது, ஹாரிரி மவ்லீது, மின்ஹத்துலு¦ ஸறந்தீப் மவ்லிது வரிசையில் சுபுகான மவ்லிது தமிழ் சூழலில் அதிகமும் பிரசித்திப் பெற்ற பாடல் தொகுப்பாகும். இதை எழுதியது இமாம் கஸ்ஸாலி அல்லது இமாம் கத்தீப் முஹம்மது மதனி என்பதான இருவித தகவல் குறிப்புகள் உள்ளன.

நபிகள் நாயகத்தின் பிறப்பு, வளர்ப்பு, வாழ்க்கை, மாண்பு, பண்பு நலன்கள் கூறும் அரபு மொழிப்பாக்களின் தொகுப்பே சுபுஹான மவ்லிது என்றழைக்கப்படுகிறது. திருக்குர்ஆனின் பாத்திஹாசூரா உள்ளிட்ட வசனங்களை ஓதுவது, நபிகள் நாயகத்தின் சா¢த்திரத்தை வசன வடிவில் ரிவாயத்து செய்வது, நபிகள் நாயக புகழ்மாலைகளை மஜ்லிசுகளில் ஒன்றாக உட்கார்ந்து கூட்டுக்குரலாக இசையோடு பாடுவது என்பது மவ்லிது ஓதலின் மரபுகளாகும். இது ரபியுல் அவ்வல் மாதம் பன்னிரெண்டு நாட்களின் இரவுப் பொழுதுகளில் இஸா தொழுகைக்குப் பின்னர் பள்ளிவாசல்களில் ஓதுவது வழக்கம். இந்நிகழ்வு முடிந்ததும் கலந்து கொள்வோர் அனைவருக்கும் நேர்ச்சை விநியோகிக்கப்படுகிறது. முஸ்லிம்கள் அல்லாஹ்வை ஐந்து நேரம் தொழுவது. இறையைப் பற்றி அறிந்து கொண்டது உட்பட அனைத்துமே நபிகள் நாயகத்தால் சொல்லித்தரப்பட்டது தான். நபிகள் நாயகம் இல்லாமல் இஸ்லாம் இல்லை. திருக்குர்ஆனும் இல்லை. ஆதம் நபி துவங்கிய நபிமார் வரலாற்றினு¦டே மனித குல வரலாற்றை அறிந்து கொள்ள முடியும். ஏழாம் நு¦ற்றாண்டில் அரேபியச் சூழலிலே பழங்குடி கலாச்சார வழக்கங்களை பேணிக் கொண்டிருந்த குலத்திலிருந்து தோன்றி உலக வரலாற்றையே மனிதநேய சமத்துவப்பாட்டையில் மாற்றியமைத்த நபிகள் நாயகத்தின் முக்கியத்துவத்தை திரும்ப திரும்ப சொல்லியாக வேண்டும். இந்த ஞாபகமூட்டுதலைத் தான் மவ்லீது ஓதுதல் எனும் நிகழ்வு அனைத்து முஸ்லிம்கள் வாழும் பகுதிகளிலும் செய்து வருகிறது.
சுபஹான மவ்லிதுவில் யாசெய்யதிமாலையும், பதினொன்று பாடல் (பைத்து)களும் உள்ளன. இப்பாடல்கள் அண்ணல் முகம்மதுநபியை ஆழ்ந்த மனநெருக்கத்துடன் நேசித்து புகழப்பட்ட வா¢களின் பல்வித வண்ணங்களாக அமையப்பெற்றுள்ளன. இப்பாடல் வா¢களில் தென்படும் நேரடி யதார்த்தம் சார்ந்த பதிவும் படிமமொழி சார்ந்த புனைவும் கவிதைக்கே உரிய குணங்களுடன் ஒன்று கலந்திருப்பதை பார்க்கலாம். பல பாடல் வரிகள் மிக எளிமையான முறையில் நபிகள் நாயக்ததை போற்றிப் பாடுகின்றன. ஸலாம்பைத்தில் இடம்பெறும் சில வரிகளை கவனத்தில் கொள்ளலாம்.

தெளிந்தவர்களில் மிகத் தெளிந்தவரே உம்மீது ஸலாம்
தூயவர்களில் தூயவரே உம்மீது ஸலாம்
(அஸ்ஸலாமு அலைக்க அஹ்மதுயா முகம்மத்
அஸ்ஸலாமு அலைக்க தாஹாயா முமஜ்ஜத்)

இப்படியாகத் தொடரும் பாடல் வரிகளில் வெற்றியின் அழைப்பாளர், நன்மையின் தூண், ஏழைகளின் பேருதவி, வழிகாட்டிகளின் வழிகாட்டி, படைப்பினத்தில் சிறந்தவர், ¦ என்பதான யதார்த்த மொழிக்கூறுகள் நபிகள் நாயகத்தின் அழகிய முன் மாதி¡¢யை, வரலாறு சார்ந்த உள்ளடக்கத்தை வெளிப்படுத்துகிறது. இப்பாடல்களின் மற்றொருவித அமைப்பாக்க முறை படிம மொழியாக உணர்வுகளை வெளிப்படுத்துதலாகும். பாதுகாப்பு குகையே, நறுமணம் கமழும் கஸ்தூ¡¢யே, விடியற்காலை வெளிச்சமே, பூரண முழுமதியே, இருட்டுகளின் பேரொளியே, மேகத்தால் நிழலிடப்பட்டவரே என்பதான சொல்லாடல்களில் வாசிக்க வாசிக்க புதுப்புது அர்த்தங்களை நபிகள் பெருமானின் வாழ்விலிருந்து உருவாக்கிக் கொள்ள முடியும். சுப்ஹான மவ்லிதுவில் இடம் பெறும் ஏனைய பாடல் பைத்துகளிலும் இத்தகையதான அமைப்பு முறையும் வடிவாக்கமும் இணைந்திருக்கின்றன.
யாநபி ஸலாம் அலைக்கும் – (நபியே உம்மீது சாந்தி உண்டாவதாக) எனத்துவங்கும் பாடலும் நபிகள் நாயகத்தை தூதரே (யாரசூல்) அன்பரே (யாஹபீப்) என அழைத்து அல்லாஹ்வின் அருள் உம்மீது பொழிவதாக என வாழ்த்துகிறது. இப்பாடலிலும் பூரணச்சந்திரன், பகலொளிச் சூ¡¢யன், பவுர்ணமி நிலவு, உன்னதஒளி, அஞ்சுகமருந்து, நெஞ்சங்களில் படர் இருளகற்றும் நித்திய விளக்கு என்பதான வர்ணனைகள் இடம் பெற்றிருப்பதைப் பார்க்கலாம்.
நபிகள் நாயகத்தின் பிறப்பை ஒட்டிய காலத்தின் குரலும், ஆட்சிமுறை, பண்பாட்டு மாற்றம் குறித்த பதிவுகளும் புனைவியல் தன்மைகளோடு இப்பாடல்களில் பேசப்படுகின்றன.

மாநபி பிறப்பினால் கிஸ்ராமன்னனின் கோட்டை பிளந்து
இதுகேட்டு திடுக்கிட்டதால் அவன் புத்தியும் பறந்தோடிவிட்டது
(வன்ஷக்கலில் மெளலிதி ஈவானுஹ¤ வஅக்லுஹ¤ மின்தஹ்ஷத்தில் அம்ரித்தாற்)

அவர்களின் பிறப்பின் காரணத்தால் சிலைகள் குப்புறவிழுந்தன.
சிலைகளில் பொ¢யவை சிறியவற்றின் அடக்குமுறையால் அற்பநிலை அடைந்தன.
(வகர்றத்தில் அஸ்னாமு மின்அஜ்லிஹா கிபாறுஹா தல்லு¦ பி கஹ்ரிஸ் ஸகார்)

தைபா எனும் மணக்கும் மதிநாவிலிருந்து நறுமணம் பரவியது
தூயவர்களிலிருந்துள்ள மனிதர்களுக்கு மாநபி தலைவராகி விட்டார்கள்.
அவர்களின் ஒளியினால் சந்திரன் துலங்கியது.
அவர்கள் படைப்பினங்களில் மிகத்தூயவரும் வழிகாட்டிகளில் சிறந்தவருமாவார்கள்.
(மின்தைப தத்ப்புன்தஷற், மின்தய்யி பின் ஹாதல் பஷற்
மின்னுரி ஹாலாஅல்கமற் அஸ்கல் பறா யாகைறுஹாத்)

நபிகள் நாயகத்தின்மீது ஸலவாத்து சொல்லுதலை மிகத்தீவிரமாக வற்புறுத்தும் பாடல் வா¢களும் உண்டு. ஸலாத்து ரப்பில் அனாமி எனத்துவங்கும் பாடலில் இறை ஆற்றலையும், நபிப் பெருமையையும் தனித்தனி அடையாளங்களோடு நுட்பமாக பேசுவதைப் பார்க்கலாம்.

எலும்புகளை உயிர்ப்பிக்கும் இறைவனின், நேசரும்
படைப்பினங்களுக்கு பா¢ந்துரைப்பவருமான நபிமீது
முக்கியத்துவமாக எங்களுடன் சேர்ந்து ஸலவாத்து சொல்லுங்கள்
அல்லாஹ்வின் மிகத்தூயசாந்தி அவர்கள் மீது உண்டாவதாக.
(ஸல்லு பிநா பிக்த்திமாமி அலஷ் ஷபீஹால் அனாமி
ஹபீபி முஹ்யில் இலாமி, அலைகி அஸ்கா ஸலாமி)

இஸ்லாமியம் முன் வைக்கிற மறுமை எனும் படைப்புலகம் குறித்தசிந்தனைகளும், மீட்சி பெறுதலை நோக்கிய தவிப்புகளும் இப்பாடல் வா¢களுனு¦டே உயிர்த்துடிப்பு சப்தத்தை உருவாக்கியவாறு இணைந்துள்ளன. நரகநெருப்பிலிருந்து விடுபடுதல், மாநபி மூலமாக தாகித்து வறண்டவர்கள் கவுஸர் பானத்தை அருந்தி புத்துயிர்ப்பு பெறுதல், நயீம் என்னும் சுவனத்தை நாடுதல் என்பதாக இதன் நீட்சி வி¡¢கிறது. இத்தகையதான உணர்வுகளை தீவிரமாக வெளிப்படுத்தும் போது நபிகள் நாயகத்தை பாவங்களை அழிப்பவரே, கவலைகளை அகற்றுபவரே, பிணி தீர்க்கும் மருத்துவரே, நோய்களை குணமாக்குபவரே, பிழைகள் பொறுப்பவரே என்பதான சொல்லாடல்கள் வந்துபோகின்றன.

நரக நெருப்பின் ஜுவவாலையினாலும் கடும் வெப்பத்தினாலும்
கா¢ந்து போகாமல் காப்பாற்றுவது தாங்களே
கண்ணீர் வடிப்பதிலிருந்தும் கதறுவதிலிருந்தும் எம்மை தடுத்துவிடும்
(அந்த முஞ்ஞனா மினல் ஹ¤றகி மின்லஹ¤பின்ன வல்அஜஜா
தன்புன மாஹா லயம்னஉன மின்துரூபித்தம்இ வல்அஜஜா)

மேற்சொல்லப்பட்டது போன்ற எழுத்தின் பகுதிகளை வைத்துக் கொண்டு அல்லாஹ்வின் ஆற்றலை/நபிகள் நாயகத்தின் ஆற்றலாக உருவகித்து மவ்லிதுகள் இணை வைத்தலை செய்கின்றன என்று சொல்வது அறிவுபூர்வமான வாதமல்ல. ஏனெனில் இஸ்லாம் நபிகள் நாயகத்தின் ஆற்றலை புனைவுலக நோக்கில் ஒரு படிமமாகவே எடுத்துச் சொல்லித் தருகிறது.
திருமறையின் 21வெது அல்அன்பியா அத்தியாயம் 28வது வசனம் பா¢ந்துரைத்தல் (ஜபாஅத்) தொடர்பான ஒரு கருத்தை முன்வைக்கிறது.

“அவர்களுக்கு முன்னும் பின்னும் உள்ளதை அவன் அறிவான்
அவன் பொருந்திக் கொண்டோருக்காகவே தவிர மற்றவருக்கு
அவர்கள் பா¢ந்துரை செய்ய மாட்டார்கள்”. (21:28)

இக்கருத்தாக்கத்திற்கு அல்லாமா இப்னுல் கைய்யாம் விளக்கம் அளிக்கும் போது நபிகள் நாயகம் மறுமை நாளில் செய்யும் ஷபாஅத் என்னும் பா¢ந்துரைகளில் ஆறு வகையானவை இருக்குமென கூறுகிறார்.
மஹ்சர் மைதானத்தில் மக்களுக்கு பரிந்துரை செய்வதிலிருந்து பிற நபிமார்கள் பின்வாங்கும்போது நபிகள் நாயகம் மட்டுமே ஷபாஅத் செய்ய முன்வருவார்கள்.
சொர்க்கத்திற்கு தகுதியானவர்களை அதில் நுழையச் செய்வதற்காக பரிந்துரை செய்வது.
நரகத்திற்கான பாவிகளை அதில் நுழையச் செய்யாதிருப்பதற்காக பரிந்துரை செய்வது
ஏகத்துவ கொள்கை உடையவர்களெனினும் தாங்கள் செய்த பாவத்தின் காரணமாக நரகத்தில் தள்ளப்பட்டவர்களுக்கான பரிந்துரை
சொர்க்கவாசிகளுக்கு அதிகபட்ச உயர்வும், மகிழ்வும் கிடைப்பதற்காக பரிந்துரை
நரகத்தில் வீழ்ந்தவர்களுக்கு அதிலிருந்து மீட்சி பெற செய்யும் பரிந்துரை என்பதாக இந்த ¡ஷபாஅத்¡ எனும் பரிந்துரை நபிகள் நாயகத்தால் செய்யப்படும் என்கிற அழுத்தமான கருத்தின் அடிப்படையில் நபிகள் நாயகத்தின் பேருரு கருணை உணர்ச்சியை பாவங்களை பொறுப்பவரே, பிழைகளைப் பொறுப்பவரே என்றெல்லாம் அடையாளப்படுத்துவது இணைவைத்தல் (ஷிர்க்) வகையினத்தை சார்ந்ததல்ல என்பதை நுட்பமாக புரிந்து கொள்ளலாம்.

4) மவ்லிது பாடல்கள் பாடும்போது இடையிடையே ஓதப்படும் சா¢த்திரத்தன்மை வாய்ந்த ஹாக்காயத் குறித்தும் விவாதிக்க வேண்டியுள்ளது. நபிமுகம்மதுவின் பெருமையையும் முக்கியத்துவத்தையும் உணர்த்தும் வகையில் நபிகளின் பிறப்புச் சூழல் குறித்த புனைவு மொழியுலகம் இந்த ஹாக்காயத்துகளில் படைக்கப்பட்டுள்ளது. ஒளிகுறித்த படிமம் இதில் கவனத்திற்குரியதாக இருக்கிறது.
“ஆதம் நபியை நடைப்பதற்கு ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே நபிகளை படைப்பதற்கான ஒளியை அல்லாஹ் உண்டாக்கிவிட்டான். அந்த நேரம் அவர்களுடைய ஒளி ஏகம் அல்லாஹ்வை தஸ்பீக் செய்து கொண்டிருந்தது. மலக்குகளும் கூடவே அல்லாஹ்வை தஸ்பீஹ் செய்தனர். ஆதம் நபியை அல்லாஹ் படைத்தபோது இந்த ஒளி ஆதம்நபி நோக்கி இடம் பெயர்ந்தது. படைக்கப்பட்ட ஆதம்நபி தன் இருகண்களையும் திறந்தபோது சொர்க்கத்தின் வாசல்மீது லா இலாஹா இல்லல்லாஹ¤ முஹம்மதுர் ரலுல்லாஹா எனும் திருவசனம் எழுதப்பட்டிருந்தது. பின்னர் இந்த ஒளி கப்பலில் இருந்த நு¦ஹ் நபியின் முதுகுத்தண்டில் இருந்தது. கப்பல் பாதுகாப்பாக கடல்களையும், அலைகளையும் தாண்டிச் சென்றது. மேலும் அவர்களின் ஒளி இபுராகீம் நபியின் முதுகுத்தண்டில் இருந்தது. நெருப்பு குளிர்ச்சியாக மாறியது. நபியவர்களின் தாய் தந்தையருக்கு மத்தியில் இருந்து அல்லாஹ் அவர்களை வெளியேறச் செய்யும் வரை அவர்களின் ஒளி கண்ணியமான முதுகுத் தண்டுகளிலிருந்து தூய்மையான கருவறைகளை நோக்கி நகர்ந்து கொண்டே இருந்தது”.
– ஆதம் நபியின் பிறப்புக்கு முந்திய ஆதி நிலையிலிருந்து பிற நபிமார்களின் வரலாற்றை உள்வாங்கிய படைப்புலகமாக இந்த சா¢த்திர படிமம் விரிகிறது. இதற்கெல்லாம் ஆதாரம் இருக்கிறதா என்றெல்லாம் அறிவுபூர்வமாக கேள்வி கேட்க முடியாது. ஏனெனில் இது உணர்ச்சி சார்ந்த படிமம். அறிவின் போலியான வரம்புகளைத் தாண்டி இதில் பயணம் செய்ய முடியும். ஒரு படைப்பின் ஆழத்தை வாசகனால் உணரச் செய்யும் முயற்சி இது. திருக்குர்ஆனிலும் கூட இத்தகையதான உணர்தலை முதனிலைப்படுத்தும் புனைவுலகு சார்படிமங்கள் உள்ளன.
அறிதல் x உணர்தல் என்பதான சொல்லாக்கங்கள் வாசகனிடத்தில் வெவ்வேறு அர்த்தங்களை உருவாக்கும் “தீ சுடும்” என்பது அறிதல் வகைப்பட்டது. “தீ இனிது” என்பது உணர்தல் வகைப்பட்டது. திருக்குர்ஆன் பேசும் இரண்டரை சதவீதம் வருமானத்தில் ஏழைவா¢யாக ஜகாத் கொடுக்க வேண்டுமென்பது நேரடி அறிதல் சார்ந்தது. நபிகள் நாயகம் “புராக்” வாகனமேறி விண்வெளியில் பயணித்து அர்ஷ¤க்கு சென்று இறைவனை சந்தித்து உரையாடி திரும்பி மண்ணிற்கே வந்த மி·ராஜ் பயணம் உணர்தல் வகைப்பட்டது. கவிதைகள், பாடல்கள் பெரும்பாலும் உணர்தல் வகைப்பாட்டையே அதிகமும் சார்ந்திருக்கின்றன. இந்த பின்னணி சார்ந்தே மவ்லிது பாடல்களின் ஹாக்காயத்துகளும் உருவாகியுள்ளன.
தமிழ் சூழலில் மவ்லிதுகளையும், இஸ்லாமிய வெகுமக்கள் சார்ந்த தர்காமரபுகளையும் ஷார்க், பித்அத் என்று பேசும் சில தெளகீது பிராமணர்கள் இன்னும் தங்கள் திருமறை மொழிபெயர்ப்புகளிலும், மீடியா பிரச்சாரங்களிலும் கூட “இறைவன் நாடுகிறான் – ஆட்சிச் செய்கிறான் – என அல்லாஹ்வை ஒரு ஆணுக்கு இணைவைத்தே பேசுகிறார்கள். இதுவும் மொழி ¡£தியான ஷிர்க்கு தான்.
இந்த வகை ஷிர்க்குகளுக்கெல்லாம் இவர்களிடம் எந்த பதிலும் இல்லை. அரபுமொழியில் அப்படி அல்ல, தமிழின் போதாமைதான் காரணம் என்பார்கள். தர்க்கம் சார்ந்த மழுப்பல் வாதங்களால் மட்டுமே தங்களை தக்லீது செய்யும் இளைஞர்களை திருப்திபடுத்தி வருகிறார்கள் என்பதை வாசகர்கள் பு¡¢ந்து கொள்ளலாம்.

—————–

Series Navigation

ஹெச்.ஜி.ரசூல்

ஹெச்.ஜி.ரசூல்