நான் என்ன சொல்ல, அன்னிபெசன்ட் சொல்லட்டும், மாப்பிள்ளைமார் கலகம் பற்றி

This entry is part [part not set] of 39 in the series 20060526_Issue

மலர் மன்னன்


!921ல் நடந்த மாப்பிள்ளைமார் கலவரம் சுரண்டலை எதிர்த்துப் பொங்கியெழுந்த பாட்டாளி வர்க்கப் போராட்டந்தான் என்றும், உழவுத் தொழில் செய்த முகமதியரான மாப்பிள்ளைமாருடன் ஹிந்து சமூகத்தைச் சேர்ந்த விவசாயக் கூலிகளான தாழ்த்தப்பட்ட மக்களும் இணைந்து தங்கள் உரிமைக்காகப் போராடினர் எனவும் ஆகையினால் அந்த எழுச்சியை முகமதியரான மப்பிள்ளைமார் ஹிந்துக்கள் மீது நடத்திய வகுப்புக் கலவரத் தாக்குதல் என விவரிப்பது தகாது என்றும் சொல்கிறார்களே, இதற்கு உங்கள் விளக்கம் என்ன என்று கேட்டு எனக்கு மின்னஞ்சல்கள் வருகின்றன.

மீண்டும் சொல்கிறேன், பழையனவற்றைக் கிளறி துவேஷத்தை விதைக்கிற நோக்கம் எதுவும் எனக்கு இல்லை. ஆனால் ஒரு சம்பவம் பற்றித் தவறான தகவல் பதிவாகியிருக்குமானால் சரியான தகவலைத் தெரிவிக்கிற பொறுப்பை மேற்கொள்வது தவிர்க்க முடியாததாகிறது. சுய சிந்தனையோ, எது பற்றியும் ஆழமானதும், முழுமையானதுமான வாசிப்போ இல்லாமலும், பல்வேறு கோணங்களிலிருந்து விவகாரத்தை ஆராயாமல் ஒரு தரப்புப் பிரசாரத்தை மட்டுமே உரத்துப் பேசுவது தமிழ்ச் சூழலில் வழக்கத்திற்கு வந்துவிட்டிருக்கிறது. மனம் போன போக்கிலும், தவறான கிரகிப்பின் விளைவாகவும் எதையாவது எகத்தாளமான நடையில் எழுதுவது இங்கு மிகவும் சாமர்த்தியமான தர்க்கமாகக் கருதப்படுகிறது போலும். தவறான தகவல்களையெல்லாம் சரியில்லை என எதிராளி வேலை மெனக்கெட்டு ஆதாரங்களைத் தேடித் துருவியெடுத்து உண்மை இன்னதென்று நிறுவ வேண்டும்; ஆனால் அதன் பிறகு தவறான தகவலைத் தந்தமைக்காக ஒரு சம்பிரதாயமான வருத்தம் தெரிவிப்பது கூட அவசியமாகப் படுவதில்லை. மாறாக, தவறான தகவல்களின் அடிப்படையில் வேறொரு எதிர்வினை எள்ளல் தொனியில் புறப்படும்! அதனையும் கர்ம சிரத்தையாக ஆதார பூர்வமாக மறுக்க வேண்டும். இல்லாவிட்டால் அந்தத் தவறான தகவலே சரியானதாக அங்கீகரிக்கப்பட்டு விடும் போலும். நமது மரபில் மட்டுமின்றி, மேற்கத்திய சம்பிரதாயத்திலும் தர்க்க சாஸ்திரம் இம்மாதிரியான வரம்பற்ற வம்புகளை அனுமதிப்பதோ அங்கீகரிப்பதோ இல்லை. ஆனால் தமிழ்ச் சூழல் மட்டும் இதற்கு விதிவிலக்கு! இங்கே எதையும் கேலியும் கிண்டலும் ததும்ப ஆரவாரக் கூச்சலாகச் சொல்லி அதற்குக் கண்ணை மூடிக்கொண்டு பலத்த கைதட்டலைச் சிலர் வழங்கிவிட்டாலே போதும் போலும், வாதில் ஜயித்து, தனக்குத்தானே பூச்சொரிந்துகொள்ள! அருகாமையிலுள்ள கேரள, கன்னட சிந்தனைச் சூழலில் இம்மாதிரியான சீரழிவுப் போக்கு இல்லை. தமிழ்நாட்டில் மட்டும் இவ்வாறான முதிர்ச்சியின்மைக்கு என்ன காராணம் இருக்கக்கூடும் என யோசிக்கும் வேளையில், கடந்த அறுபது எழுபது ஆண்டுகளாக இங்கு காலூன்றிக் கொண்ட திராவிட இயக்கத்தின் தாக்கம்தான் நிதரிசனமாகப் புலப்படுகிறது.

எதுவும் தேவையின்றித் தோற்றம் கொள்வதில்லை. அவ்வாறு தோற்றம் கொள்ளும் எதுவும் வெறும் தீங்கானதாகவேயோ அல்லது முற்றிலும் நன்மையேயாகவோ இருப்பதற்கும் சாத்தியமில்லை. திராவிட இயக்கத்தின் தோற்றமும் இவ்வாறானதுதான். ஆனால் அது தேவைக்கு அதிகமாகவும் தன் இருப்பை நீட்டித்துக் கொள்ள முடிந்ததும், நன்மையைக் காட்டிலும் தீமையைக் கூடுதலான அளவில் அது விளைவித்ததும் தமிழ்நாட்டின் சகல துறைகளிலும் வீழ்ச்சிக்குக் காரணமாகிவிட்டன.

இதற்கிடையே தமிழ் நாட்டில் மட்டுமின்றி, பாரதம் முழுவதுமே மதச்சார்பின்மை என்ற உயரிய கோட்பாட்டை வேண்டுமென்றேயோ, அப்பாவித்தனமாகவோ அணுகியதன் விளைவும் எதிர்மறையான உணர்வுகளைத்தான் தூண்டிவிட்டிருக்கிறது. மக்களிடையே சமயங்களின் அடிப்படையில் பெரும்பான்மையினர், சிறுபான்மையினர் என்கிற பிளவை நிரந்தரமாகத் தோற்றுவித்திருப்பதுதான் நமது மதச் சார்பின்மையின் சாதனை!

மத நல்லிணக்கத்தைப் பாதுகாக்கும் பொருட்டுப் பல சம்பவங்களை வேண்டுமென்றே மூடி மறைப்பதும், திரித்துக் கூறுவதும் எதிர் விளைவுகளைத்தான் காலப்போக்கில் தோற்றுவித்துவிடுகிறது. வரலாறு என்பது அவரவர் பார்வைக்கு ஏற்றவாறு எழுதி வைக்கப்படுவதுதான் என்று சமாதானம் சொல்வது வரலாறு என்கிற இயலையே ஒரு தேவையற்ற பாடதிட்டமாக்கிவிடக்கூடும். அதன் பிறகு வரலாற்று நாவல் எழுதுபவர்கள் என்பதாக ஒரு பிரிவு நம் எழுத்தாளர்களின் மத்தியில் உள்ளது அல்லவா, அவர்களுக்கு மட்டுமே உபயோகப்படுகிற விஷயமாக வரலாறு தன் பயன்பாட்டைச் சுருக்கிக்கொண்டுவிட வேண்டியதுதான்!

இப்படித்தான் 1971ல் நடந்த பங்களா தேஷ் போரின் போது பாகிஸ்தான் சிப்பய்களாலும், அங்கு குடியேற்றப்பட்ட பிஹாரி முகமதியர்களாலும் சீரழித்துக் கொல்லப்பட்ட முப்பத்தைந்து லட்சம் கிழக்கு வங்காளியரில் இருபத்தைந்து லட்சம் மக்கள் ஹிந்துக்கள் என்ற உண்மையினை நமது மத்திய அரசே திட்டமிட்டு மறைத்தது, இங்கே பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டுவிடும் என்பதாக. ஆனால் கிழக்கு வங்காளத்தில் திட்டமிட்ட ஹிந்து இன அழிப்பு நடந்துள்ளது என்கிற தகவலை அமெரிக்க உளவு ஸ்தாபனம் உறுதி செய்து அறிக்கை தாக்கல் செய்தது. இது வெளிப்பட்ட பிறகும் மத்திய அரசு தயங்கியதுபோல் பெரிய கொந்தளிப்பு ஏதும் நிகழ்ந்துவிடவில்லை! இன்றும் பாகிஸ்தானிலும் பங்களா தேஷிலும் எஞ்சியுள்ள ஹிந்துக்களுக்கு இழைக்கப்பட்டுவரும் பலவாறான கொடுமைகளைப் பற்றி ஆதாரபூர்வமாகத் தகவல்கள் வெளியானாலுங்கூட பாரத அரசு அதைப்பற்றி அலட்டிக்கொள்வதில்லை. மாவோயிஸ்ட்களின் பிடியில் சிக்கித் தவிக்கும் நேபாளத்தைத் தட்டிக் கேட்கிற முற்போக்கு அரசான இன்றைய மத்திய அரசுக்கு பாகிஸ்தானிடமோ பங்களா தேஷிடமோ அங்கு ஹிந்துக்களுக்கு இழைக்கப்படும் அக்கிரமங்களைப் பற்றி விசாரிக்கும் அக்கரை இல்லை. அது அந்நாடுகளின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதாகிவிடுமாம்! தானாகவே முந்திக்கொண்டு இவ்வாறு சமாதானம் சொல்லிக்கொள்கிறது, நமக்கு வாய்க்கிற மத்திய அரசு. அதே சமயம், இங்கு முகமதியருக்குச் சிறிது சங்கடம் என்றாலும் பாகிஸ்தான் அரசோ, இங்குள்ள அதன் தூதுவரோ பகிரங்கமாகக் கண்டனம் தெரிவிக்கத் தயங்குவதில்லை!

பாகிஸ்தானில் இன்று எஞ்சியுள்ள ஹிந்துக்களில் எழுபது சதமானம் தலித்துகள்தான். உடலுழைப்புக்கும் துப்புரவுப் பணிகளுக்கும் ஆள் தேவை என்பதற்காகவே இந்த தலித்துகள் அங்கு நீடித்திருக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர். பாகிஸ்தானின் மொத்த மக்கள்தொகையில் ஹிந்துக்கள் ஒரு சதவீதம்தான் இருப்பார்கள். இரண்டு சதம் என்றும் ஒரு குறிப்பு உள்ளது. இவர்களில் மிகப் பெரும்பாலானவர்கள் சிந்து மாகாணத்தில்தான் உள்ளனர். பலுசிஸ்தான் போன்ற இடங்களிலும் பாரம்பரியமாக ஹிந்துக்கள் உள்ளனர். அனேகமாக இவர்கள் அனைவருமே போக்கிடம் இல்லாததால் அங்கு எல்லாவிதமான அவமானங்களையும் ஆபத்துகளையும் சகித்துக்கொண்டு தொடர்ந்து வாழ்ந்துவருகிறார்கள். இவர்களுக்கு எவ்விதமான ஜீவாதார உரிமைகளோ உத்தரவாதங்களோ இல்லை என்றும் இவர்களுக்கு எதிராக எத்தகைய அக்கிரமங்களும் அத்துமீறல்களும் நிகழ்ந்தாலும் கேட்பதற்கு நாதியில்லை என்றும் மனித உரிமைக் குழுக்கள் பதிவு செய்துள்ளன. ஹிந்துக் குடும்பங்களின் சிறுமியர் கடத்தி செல்லப்படுவதும் வலுக்கட்டாயமாக எவருக்கேனும் திருமணம் செய்விக்கப்படுவதும் சிறிது காலத்திற்குப் பிறகு அச்சிறுமியர் மீது சலிப்பு ஏற்பட்டதும் அவர்கள் அடிமாடுகளைப்போல் பாலியல் தொழில் சந்தையில் விற்கப்படுவதும் சர்வ சாதாரணமாக நடந்து வருகின்றன. இந்த அத்துமீறல்களையெல்லாம் சர்வ தேச அரங்கிற்கு எடுத்துச் சென்று பரிகாரம் தேட எவருக்கும் அவகாசம் இல்லை. இங்கே மதநல்லிணக்கம் காப்பாற்றப்பட வேண்டும் என்பதற்காக இவற்றைப் பற்றிப் பேசுவதும் மதவாதம் என்று வர்ணிக்கப்படுகிறது.

ஏறத்தாழ எண்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன் கேரளத்தில் நிகழ்ந்த மாப்பிள்ளைமார் கலகமும் மத நல்லிணக்கம் காக்கப்பட வேண்டும் என்பதற்காகவே ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தையும் நிலப்பிரபுக்களையும் எதிர்த்து ஏழை எளிய மக்கள் நிகழ்த்திய வீரஞ்செறிந்த உரிமைப் போராட்டமாக விவரிக்கப்பட்டுள்ளது போலும்.

காந்திஜி தாம் தொடங்கிய ஒத்துழையாமை இயக்கத்திற்கு முகமதியரின் ஆதரவையும் திரட்டவேண்டும் என்பதற்காக முகமது அலி, சவுக்கத் அலி என்ற இரு மதவாத சகோதரர்களைச் சேர்த்துக்கொண்டு கிலாபத் என்கிற பெயரில் ஒரு இயக்கத்தையும் தொடங்கி இரண்டு இயக்கங்களையும் ஒருங்கிணைத்தார். பல மூத்த காங்கிரஸ் தலைவர்கள் இது தவறான முன்னுதாரணமாகிவிடும் என எச்சரித்தனர். அரசியலில் மதத்தைக் கலக்காதீர் என்று கண்டனம் தெரிவித்தார், முகமதலி ஜின்னா! முகமதியர் மீதான ஆளுமை தம் கையைவிட்டுத் தீவிர மதவாதிகளான அலி சகோதரர்களிடம் சென்றுவிடுமே என்கிற கவலை வேறு, அவருக்கு!

துருக்கியரான எங்களுக்கே கலீபா என்கிற முகமதிய மதத் தலைமை அதிகாரம் எமது மன்னராட்சியின் கைவிட்டுப் போனதுபற்றிக் கவலை இல்லாதபோது இதில் எவ்வித சம்பந்தமும் இல்லாத இந்தியருக்கு என்ன அக்கரை என்று துருக்கியின் சீர்திருத்தவாதி கமால் அடாதுர்க் ஆச்சரியப்பட்டார். கலீபா அதிகாரம் துருக்கியர் கைவிட்டுப் போனதில் அராபியருக்கும் மகிழ்ச்சிதான். அவர்களுக்கும் இந்தக் கிலாபத் இயக்கத்தின் மீது எவ்வித ஈடுபாடும் இல்லை.

ஆனால் காந்திஜி எதையும் பொருட்படுத்தாமல், பாரத தேசத்து முகமதியரின் ஆதரவு தமக்குத் தேவை என்கிற ஒரே காரணத்திற்காகத் தமது ஒத்துழையாமை இயக்கத்துடன் கிலாபத்தை இணைத்துக் கொண்டார். விளைவு, முகமதியர்தான் ஒத்துழையாமை இயக்கத்தைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டார்களேயன்றி, காந்திஜிக்கு கிலாபத்தால் எவ்விதப் பயனும் கிட்டவில்லை! முகமதியரின் ஆதரவைத் தாம் பெற வேண்டும் என்பதற்காக காந்திஜி மேற்கொண்ட விஷப் பரீட்சை, பல்லாயிரம் அப்பாவி ஹிந்துக்களைப் பலவாறு பலிகொண்டது, கொலை, கொள்ளை, பெண்கள் கடத்தல், கட்டாய மதமாற்றம், பலர் சேர்ந்து பாலியல் வன்முறையில் இறங்கி அகமகிழ்தல் என்றெல்லாம்!

ஒத்துழையாமை இயக்கமும் கிலாபத்தும் ஒருங்கிணைந்தது ஹிந்துமுஸ்லிம் ஒற்றுமைக்கு எடுத்துக் காட்டு என்று மனதார உண்மைக்கு மாறான செய்தியை காந்திஜி பரப்பினார். காந்திஜி நினைத்ததற்கும், சொன்னதற்கும் முற்றிலும் மாறாக, பாரதம் முழுவதுமே முகமதியர் தம் மதத்தைச் சேராத மாற்று மதத்தினர் மீது தாக்குதல் நடத்துவதற்குத்தான் அந்த இயக்கத்தைப் பயன்படுத்திக்கொண்டனர். ஏனெனில் அவர்களைப் பொருத்தவரை சுயராஜ்ஜியம் என்பது முகமதிய மத அடிப்படையிலான ஆட்சியின் ஸ்தாபனம்தான். அதில் பிற மதத்தினருக்கு உரிமையில்லை.

கிலாபத்தின் விளைவு வட கேரளத்தில் மிக மோசமாக இருந்தது. மலபார் என்று அறியப்பட்ட அப்பகுதி அன்று விசாலமான சென்னை ராஜதானியின் ஓர் அங்கமாக விளங்கியது. ஒத்துழையாமைகிலாபத் கூட்டு இயக்கத்தால் என்ன நடந்தது என்பது பற்றி தியாசபிகல் சொசைட்டியின் தலைவரும், ஹோம் ரூல் இயக்கத்தை முன்னின்று நடத்தியவருமான அன்னி பெசன்ட் தமது “நியு இந்தியா” இதழில் எழுதினார். கள்ளிக் கோட்டை மாவட்ட காங்கிரஸ் தலைவர் மாதவன் நாயரும் அது பற்றி ஓர் அறிக்கை தாக்கல் செய்தார்.

கிலாபத் இயக்கம் நடத்திய மாப்பிள்ளைமார், ஹிந்துக்கள் மீதும் கிறிஸ்தவர்கள் மீதும் சகலவிதமான அட்டூழியங்களையும் நிகழ்த்துவதற்கும் பலரை வலுக் கட்டாயமாக முகமதியராக மத மாற்றம் செய்வதற்கும்தான் அவ்வியக்கத்தைப் பயன்படுத்திக் கொண்டனர். தமது ஆதிக்கம் மிகுந்த இடங்களில் சுயராஜ்ஜியம் ஏற்பட்டுவிட்டதாக அறிவித்து அரசாங்க அலுவலகங்கள் இயங்கிய கட்டிடங்களின் மீது கிலாபத் கொடி என்பதாகப் பச்சை நிறப் பிறைக் கொடியை ஏற்றி
வைத்தனர். சுயராஜ்ஜியம் என்கிற பெயரில் எங்கும் அராஜகம்தான் கொடிகட்டிப் பறந்தது. பிரிட்டிஷ் அரசாங்கம் நிலமையைக் கட்டுக்குள் கொண்டுவர மாப்பிள்ளைமார் மீது மிகக் கடுமையான அடக்குமுறையை கையாண்டது. உடனே, ஏதோ இரு நாடுகளுக்கிடையே யுத்தம் நடக்கிற மாதிரி, காந்திஜி “பிரிட்டிஷ் அரசாங்கம் தனது தாக்குதல் நடவடிக்கையை நிறுத்திவைக்க வேண்டும்” என்று போர் நிறுத்த அறைகூவல் விடுத்தார்!

இதற்கெல்லாம் பதில் சொல்கிற மாதிரி அமைந்திருக்கிறது, அன்னி பெசன்ட் அம்மையார் தமது பத்திரிகையில் எழுதிய கட்டுரை. இந்தக் கட்டுரையோடு, காங்கிரஸ் தலைவர் மாதவன் நாயர் தாக்கல் செய்த அறிக்கையையும் அப்படியே தருகிறேன், ஆங்கிலத்தில், எனது குறுக்கீடு இருக்க வாய்ப்பில்லாமல். திண்ணையின் அறிவார்ந்த வாசகர்களுக்கு எனது மொழியாக்கம் தேவைப்படாதுதான். ஆனால் அர்த்தத்தை அனர்த்தமாகப் புரிந்துகொண்டு விவாதிக்க முன்வருவதை வழக்கமாகக் கொண்டுள்ள எதிர்வினையாளர்கள் விஷயத்தைச் சரியாகப் புரிந்துகொள்ள விரும்பினால் மொழிபெயர்த்துத் தருகிறேன், பிற்பாடு.

அன்னிபெசன்ட் அம்மையார் தமது கட்டுரையின் இறுதியில் ஒரு மகத்தான தியாகச் செயலையும் பதிவு செய்துள்ளார். இழுத்து வரப்பட்ட இரு புலையர்கள், முகமதியராக மதமாற்றம் செய்யப்படுவதற்கு ஒப்பாமல், ஹிந்து சமூகத்தவர் தங்களைத் தீண்டாதவராக ஒதுக்கி வைத்துள்ள போதிலும் அது சமுதாயக் கோளாறேயன்றி, சமயத்தின் கோட்பாடு அல்ல என்பதைப் புரிந்துகொண்டவர்களாய், ஹிந்துக்களாகவே மரிக்க விரும்பி மகிழ்ச்சியுடன் மரணத்தை ஏற்றுக்கொண்டனர் என்கிற மெய்சிலிர்ப்பூட்டும் தகவலைத் தந்து தமது கட்டுரையை முடிக்கிறார், அன்னி பெசன்ட்.

இந்த உயிர்த் தியாக அருஞ்செயலைப் பதிவு செய்ததன் மூலம், மாப்பிள்ளைமாருடன் ஹிந்து சமூகத்து தாழ்த்தப்பட்டோரும் இணைந்து போராடியதாகக் கூறி மாப்பிள்ளைமார் கலவரத்திற்கு வர்ர்க்கப் போராட்டம் என்கிற போர்வையைப் போர்த்தும் முயற்சியை மெல்ல விலக்கி வைக்கிறார், அன்னி பெசன்ட். இப்போது, அன்னி பெசன்ட் அம்மையாரும் மாதவன் நாயரும் பதிவு செய்துள்ளதைப் படிப்போம்:

[The following is the account signed by Annie Beasant under the title ‘Malabar’s Agony’, appeared in New India dated 29 November 1921. It is one of literally hundreds of similar reports that appeared in the press at the time. The account given here is slightly abridged, with some irrelevant history about the Zamorins removed. It has also been organized into smaller paragraphs to smooth the somewhat awkward writing. In particular, Beasant charged that by making the Non-Cooperation part of the Khilafat movement, his Gandhism was also part of the violence that it gave rise to, and that he could not escape responsibility. Here is her report.]
“It would be well if Mr. Gandhi could be taken into Malabar to see with his own eyes the ghastly horrors which have been created by the preaching of himself and his “loved brothers” Mohammad and Shaukat Ali. The Khilafat Raj is established there; on August 1. 1921, sharp to the date first announced by Mr. Gandhi for the beginning of Swaraj and the Vanishing of the British Rule, a police inspector was surrounded by Moplas, revolting against that rule. From that date onwards thousands of the forbidden war-knives were secretly made and hidden away, and on August 20, the rebellion broke out, Khilafat flags were hoisted on police stations and Government offices. …
Our correspondent has sent accounts of the public functions connected with my hurried visit to Calicut and Palghat, and that which I wish to put on record here is the ghastly misery which prevails, the heart-breaking wretchedness which has been caused by the Mopla outbreak, directly due to the direct and unscrupulous attacks on the Government made by the Non-Co-operators and the Khilfatists and the statements scattered broadcast, predicting the speedy disappearance of British Rule, and the establishment of Swaraj as proclaimed by the N.C.O. and Khilafat Raj as understood by the Moplas from the declaration of the Khilafatists. On that there is no doubt whatever, so far as Malabar is concerned. The message of the Khilafatists, of England as the enemy of Islam, of her coming downfall, and the triumph of the Muslims, had spread, to every Mopla home. The harangues in the Mosques spread it everywhere, and Muslim hearts were glad. They saw the N.C.O. [Non-Co-Operators] preachers appealing for help to their religious leaders, and naturally identified the two. The Government was Satanic, and Eblis [English], to the good Muslim, is to be fought to the death.
Mr. Gandhi may talk as he pleases about N.C.O.’s accepting no responsibility. It is not what they accept; it is what facts demonstrate. He accepted responsibility for the trifling bloodshed of Bombay. The slaughter in Malabar cries out his responsibility. N.C.O. is dead in Malabar. But bitter hatred has arisen there, as fighting men from the dragon’s teeth of Theseus. That is the ghastly result of the preaching of Gandhism, of N.C.O. of Khalifatism. Everyone speaks of the Khilafat Raj, and the one hope of the masses is its crushing by the strong arm of the Government. Mr. Gandhi asks the Moderates [of the Congress] to compel the Government to suspend hostilities, i.e., to let loose the wolves to destroy what lives are left. The sympathy of the Moderates is not, I make bold to say, with the murderers, the ravishers, who put into practice the teachings of paralyzing the Government of the N.C.O.s, who have made “war on the Government” in their own way?
How does Mr. Gandhi like the Mopla spirit, as shown by one of the prisoners in the hospital, who was dying from asphyxiation? He asked the surgeon, if he was going to die, and the surgeon answered that he feared that he would not recover. “Well, I’m glad that I killed fourteen infidels,” said the Brave, God-fearing Mopla whom Mr. Gandhi so much admires, who “are fighting for what they consider religion, and in a manner they consider as religious.” Men who consider it “religious” to murder, rape, loot, to kill women and children, cutting down whole families, have to be put under restrain in any civilized society.
Mr. Gandhi was shocked when some Parsi ladies had their saries torn off, and very properly, yet the God-fearing hooligans had been taught that it was sinful to wear foreign cloth, and doubtless felt they were doing a righteous act; can he not feel a little sympathy for thousands of women left only with rags, driven from home, for little children born of the flying mothers on roads in refugee camps? The misery is beyond description. Girl wives, pretty and sweet, with eyes half blind with weeping, distraught with terror; women who have seen their husbands hacked to pieces before their eye, in the way “Moplas consider religious”, old women tottering, whose faces become written with anguish and who cry at a gentle touch and a kind look, waking out of a stupor of misery only to weep, men who have lost all, hopeless, crushed, desperate.
I have walked among thousands of them in refugee camps, and sometimes heavy eyes would lift as a cloth was laid gently on the bare shoulder, and a faint watery smile of surprise would make the face even more piteous than the stupor. Eyes full of appeal, of agonized despair, of hopeless entreaty of helpless anguish, thousands of them camp after camp.
“Shameful inhumanity proceeding in Malabar,” says Mr. Gandhi. Shameful inhumanity indeed, wrought by the Moplas, and these are the victims saved from extermination by British and Indian swords. For be it remembered, the Moplas began the whole horrible business; the Government intervened to save their victims and these thousands have been saved. Mr. Gandhi would have “hostilities suspended” – so that the Moplas may sweep down on the refugee camps, and finish their work?
I visited in Calicut three huge Committee camps, two Christian, and the Congress building and compound where doles of rice are given daily from 7 AM to noon. In all the arrangements were good. Big thatched sheds and some buildings shelter the women and children; the men sleep outside. They are all managed by Indians, the Zamorini Committee [set up by Zamorin, the Maharaja of Cochin] distributing cloths and money to all, except the Congress committee, which independently gives food from its own resources. At Palghat, similar arrangements are made by the Zamorini Committee, and the order and care in feeding are good to see.
Let me finish with a beautiful story told to me. Two Pulayas, lowest of the submerged classes were captured with others and were given the choice between Islam and Death. These, the outcaste of Hinduism, the untouchables, so loved the Hinduism which had been so unkind a step-mother to them that they chose to die Hindus rather than to live Muslims. May the God of both, Muslims and Hindus send His messengers to these heroic souls, and give them rebirth into the Faith for which they died.”

Report by Madhavan Nair, Secretary, Calicut District Congress Committee
Maulana Mohani justified the looting of Hindus by the Moplas as lawful by way of commandeering in a war between the latter and the Government or as a matter of necessity when the Moplas were forced to live in jungles. The Maulana perhaps does not know that in the majority of cases, the almost wholesale looting of Hindu houses in portions of Ernad, Valluvanad and Ponani Taluques [counties] was perpetrated on the 21st, 22nd and the 23rd of August [1921] before the military had arrived in the affected area to arrest or to fight the rebels even before Martial Law had been declared [in Malabar].
The Moplas had not betaken themselves to the jungles as the Maulana supposes nor had the Hindus as a class done anything to them to deserve their hostility. The outbreak commenced on the 20th of August [1921], the police and the District Magistrate withdrew from Tirunangadi to Calicut on the 21st and the policemen throughout the affected area had taken to their heels. There was no adversary to the Moplas at the time whom the Hindus could possibly have helped or invited, and the attack on them was most wanton and unprovoked.

மாதவன் நாயர் அளித்த அறிக்கைக்குப் பின்னர் எழுந்த விமர்சனம்:

Maulana Mohani, like a hundred other Khilafat leaders, well knew the truth but arrogantly justified the Mopla atrocities as a ‘military necessity’ driven by self-defense. But these reports clearly show that the Mopla Rebellion was a planned uprising that began immediately after the expiry of Gandhi’s promise of ‘Swaraj within the year’ and not a sporadic outbreak. According to Annie Beasant, it began on the day of expiry, and soon spread to the whole region – becoming a full-blown rebellion on or about August 20. (This is confirmed by other sources.) The district authorities, including the police, were caught unawares and also not equipped to handle a large-scale rebellion. Chaos reigned in Malabar for several months, forcing the Government to declare Martial Law. The Army had to be called in and it was months before the rebellion was put down after the loss of several thousand lives and unspeakable atrocities. The Congress historians like to pretend that all this never happened, while the Marxists glorify the Moplas as ‘freedom fighters’!
Madhavan Nair sent several other reports, a few of which are included in the Appendix to Sankaran Nair’s Gandhi and Anarchy. Murders, rapes and forcible conversions were the order of the day. I find most of them too gruesome to be included here, but the following except should give an idea: “Can you conceive of a more ghastly and inhuman crime than the murder of babies and pregnant women? … A pregnant woman carrying 7 months was cut through the abdomen by a rebel and she was seen lying dead with on the way with the dead child projecting out … Another baby of six months was snatched away from the breast of the mother and cut into two pieces. … Are these rebels human beings or monsters?”
These are by no means the most gruesome of the accounts described, but enough to give an idea of the atrocities committed by the “God-fearing” Moplas acting “in a manner they consider as religious.”

தேவைப்பட்டால் இவற்றுக்கெல்லாம் தமிழாக்கமும், மாப்பிள்ளைமார் கலவரம் குறித்து இனியும் எவருக்கேனும் சந்தேம் இருப்பின் மேலும் பல தகவல்களும் அடுத்த தவணையில் தர ஆயத்தமாயிருக்கிறேன்.
————————————————————————
malarmannan79@rediffmail.com

Series Navigation

மலர் மன்னன்

மலர் மன்னன்