மார்க்ஸின் ஆவியுடனான உரையாடல்

This entry is part [part not set] of 39 in the series 20060526_Issue

செல்வன்


மார்க்ஸ் இறந்த பின் அவரது கொள்கைகளை வழியெடுப்பது எங்கல்ஸுக்கு வேலையாய்போனது.மார்க்ஸின் எழுத்துகளை தேடி தொகுத்து டாஸ் கேபிடலின் இரண்டு வால்யூம்களை வெளியிட்டார்.அது போக “பியுயர் பாக் தீஸிஸ்” எனும் புத்தகத்தையும் வெளியிட்டார்.

மார்க்ஸியம் அதன்பின் சோஷியாலஜிஸ்டுகளால் ஆழ்ந்து நோக்கப்பட்டது.மாக்ஸ் வெபர் இவர்களில் முக்கியமானவராவார்.நீட்ச்சேவும்,மார்க்ஸும் வெபரை மிகவும் பாதித்தனர்.அப்போதைய பிரிட்டானிய சோஷியலாஜி மாணவர்களுக்கு பரிட்சையில் இம்மாதிரி கேள்வி கேட்கப்பட்டது

“வெபரின் சோஷியாலஜி மார்க்ஸின் ஆவியுடனான உரையாடல் எனும் வாக்கியத்தை விவரி”

“மார்க்ஸியத்தில் மாற்றம் தேவை” எனும் கருத்து அப்போது வலுப்பெறத் துவங்கியிருந்தது.எடுவார்ட் பெர்ன்ஸ்டீன்(1850-1932) மார்க்ஸியத்தில் மாற்றம் தேவை எனும் கருத்தை துணிந்து முன்வைத்தார்.சோஷியல் டெமாக்ராட் இதழில் “சோஷலிசத்தின் பிரச்சனைகள்” எனும் தொடரை எழுதினார்.மார்க்ஸ் எதிர்த்த முதலாளித்துவம் மறைந்துவிட்டது,இப்போதைய முதலளித்துவத்துக்கு ஏற்ப மார்க்ஸீயம் மாற வேண்டும் என அவர் வாதிட்டார்.ஆனால் கார்ல் காடுஸ்கி(1854 – 1938) தலைமைலான அதிதீவிர மார்க்ஸிஸ்டுகள் அவரது வாதங்களை நிராகரித்தனர்.மார்க்ஸியத்தில் மாற்றம் கேட்ட முதல் முயற்சி இவ்வாறு தோல்வியில் முடிந்தது.

காரல் காடுஸ்கி அதிதீவிர மார்க்ஸிஸ்ட்.டாஸ் கேபிடலின் நாலாம் பாகத்தின் எடிட்டர் அவர்தான்.எங்கெல்ஸின் மறைவுக்கு பின் மார்க்ஸிஸத்தின் தலைவரானார்.ஜெர்மானிய சோஷியல் டெமாக்ராட் கட்சியின் மார்க்ஸிஸ்ட் பிரிவு தலைவராக இருந்தார்.ஆனால் ரஷ்யாவில் அமைந்த கம்யூனிஸ்ட் அரசை அவரால் ஏற்க முடியவில்லை.லெனினுடன் கடுமையாக மோதத்துவங்கினார்.

“அவர் ஒரு பிரிவினைவாதி” என லெனின் அவரை சாடினார்.காடுஸ்கியின் பதில் அதை விட தீவிரமாக இருந்தது.மார்க்ஸிசமும் போல்ஷ்விசசமும் (1934) எனும் புத்தகத்தில் கீழ்க்கண்டவாறு எழுதினார் காடுஸ்கி

“லெனினின் தலைமயிலான போல்ஷிஸ்டுகள் ஜாரின் காட்டாட்சியை அகற்றிவிட்டு புது காட்டாட்சியை அங்கு நிறுவியுள்ளனர்”

ரஷ்ய மார்க்ஸிசம், ஐரோப்பிய மார்க்ஸிசம் என இரண்டு பிரிவினைகள் ஏற்பட்டது இவர்கள் மோதலுக்கு பிறகுதான்.ஐரோப்பிய மார்க்ஸியம் ஜார்ஜ் லூகாஸ்,அன்டோனியோ கிரம்ஸ்சி போன்ற அறிஞர்களால் வளர்ந்தது.ரஷ்ய மார்க்ஸியம் லெனின் ஸ்டாலின் வழியில் சென்றது.

பிரான்க்பர்ட் பள்ளி பெலிக்ஸ் வெய்ல் முயற்சியால் 1924ல் நிறுவப்பட்டது.அறிவியல் மார்க்ஸியத்தை ஆய்வதே இதன் முக்கிய பணியாக இருந்தது.ஆனால் இவர்கள் மார்க்ஸியத்தை மார்க்ஸின் எல்லைகளை தாண்டி விரிவுபடுத்துவது பழமைவாத மார்க்ஸிஸ்டுகளுக்கு பிடிக்கவில்லை.மார்டின் ஜே “பிரான்ப்க்பர்ட் பள்ளி சொல்லித்தருவது மார்க்ஸீயமே அல்ல” என கடும்கோபத்துடன் எழுதினார்.சோஷியாலஜி பற்றி ஆராய்ந்ததால் அது வெபரியம் மார்க்ஸியமல்ல என்று கண்டித்தவர்களும் உண்டு.

இப்பள்ளியை முக்கிய உறுப்பினர்கள் யூதர்கள் என்பதால் இவர்களை வெறுத்தவர்களும்,உள்நோக்கம் கற்பித்தவர்களும் உண்டு.பெரியாரியத்தை பிராமணர்கள் கற்பித்தால் தற்போது எப்படி நோக்குவார்களோ அப்படி அன்று அவர்கள் நோக்கப்பட்டனர்.இட்லர் ஆட்சிக்கு வந்ததும் பள்ளிக்கு இரட்டை ஆபத்து வந்தது.இட்லருக்கு யூதர்களையும் பிடிக்காது,கம்யூனிஸ்டுகளையும் பிடிக்காது.யூதர்கள் கம்யூனிஸ்டுகளாக இருந்தால் சொல்லவும் வேண்டுமோ?

இந்த பள்ளி இழுத்து மூடப்பட்டு ஐரோப்பிய மார்க்ஸிஸ்டுகள் அமெரிக்காவுக்கு தப்பி ஓடினர்.அவர்கள் ஐரோப்பாவில் வேண்டாத விருந்தாளிகள்,ரஷ்யர்களுக்கு எதிரிகள்.ஆக மார்க்ஸிஸ்டுகளுக்கு பாதுகாப்பு அமெரிக்காவில் கிடைத்தது என்பது தான் ஐரனி.அங்கு சென்ற இவர்கள் அமெரிக்க அரசின் பாதுகாப்பில் இருந்துகொண்டு அமெரிக்க முதலாளித்துவத்தை எதிர்த்து குரல் கொடுத்தனர்.ரஷ்யாவில் இருந்துகொண்டு ரஷ்ய அரசை எதிர்த்து குரல் கொடுத்திருந்தால் என்ன நடந்திருக்கும் என சொல்லித்தெரியவேண்டியதில்லை.

ரஷ்யாவுக்கும் அமெரிக்காவுக்கும் உறவு மோசமானதும் இவர்களுக்கும் பிரச்சனை வந்தது.ஆனால் லாஸேஞெலிசுக்கு சென்ற மார்க்ஸிஸ்டுகள் அங்கிருந்து தம் வேலைகளை தொடர்ந்தனர்.1947’ல் dialectic of enlightenment எனும் புத்தகத்தையும், 1951ல் மினிமா மொராலியா எனும் புத்தகத்தையும் வெளியிட்டனர்.

உலக யுத்தம் முடிந்து 1950ல் (முதலாளித்துவ) வடக்கு ஜெர்மனிக்கு திரும்பிய ஐரோப்பிய மார்க்ஸிஸ்டுகள் பிரான்க்பர்ட் பள்ளியை மீண்டும் நிறுவினர்.மார்க்ஸிஸத்தை தத்துவ ரீதியில் இவர்களும் அரசியல் ரீதியில் ஸ்டாலினும் அதன் பின் முன்னெடுத்து சென்றனர்
————————-
holyox@gmail.com

Series Navigation

செல்வன்

செல்வன்