நீயே உனக்கு சாட்சியாளன்!

This entry is part [part not set] of 46 in the series 20031218_Issue

ஸ்ரீ

நீ உனக்குள் உள்முகமாக பயணம் செய்து பார்த்தாலங்கு உனக்கு இன்பமோ துன்பமோ இருக்க போவதில்லை.இதைத்தான் அன்று சாக்ரடாஸ் ‘உன்னை அறிதல் ‘ என்றான்.

கருவி-கருத்தா-கருபொருள்-காாியம்-காரணம்

இந்த 5 சொற்களிலும் ஆழ்ந்த உண்மை பொதிந்து கிடக்கிறது. ஒரு செயல் நிகழவேண்டும் எனில் அதற்கு கருவி கருப்பொருள், கருத்தா, காாியம், காரணம் இருந்தாக வேண்டும். இந்த பிரபஞ்சமே காரண காாியங்கள் நிகழ்ந்து கொண்டு இருப்பது! அதில் நீ ஒரு கருவி மட்டுமே!

கருத்தா என்பது உன்னை இயக்கும் சக்தி! அதுவும் உனக்குள்ளே இருப்பது! கருப்பொருள் என்பது நீ செய்யும் செய்கைக்குாிய பொருள்! நீ செய்யும் செயல் காாியம்!ஆனால் அதற்குாிய காரணம் பற்றி ஆராயும்போது உன்னால் சொல்ல இயலாது! விஞ்ஞான பூர்வ துணை கொண்டு ஓரளவு பயணம் செய்ய முடியும். அதற்கும் அப்பால் அதுவும் கை விாித்து விடுகிறது.

இப்போது சொல்லப்போவது என்னவெனில், நீ காாியமாக மாறும்போது அது உனக்கு காரணம் குறித்து உணர்த்தும். அப்போது காரணம் பற்றி உணர்வதற்கு நீ அங்கு இருக்கப்போவதில்லை!நீயே காரணமாகி விடுவாய். அங்கு நீ விளக்குவதற்கு ஒன்றும் இருக்கப்போவதில்லை. கேள்விக்குாிய பதிலை கேள்வியிலேயே அறிந்து கொள்ளும் நிலை பெற்றவனாகிவிடுவாய்!

உணர்வில் இருந்து உணர்வு பூர்வமற்ற நிலை!

இப்போது உனக்கு சிந்தனை அற்ற, காலமற்ற, உணவற்ற நிலையை அடைகிறாயோ அப்போது நீ உள்முக பயணத்திற்கு ஆரம்பமாகிவிட்டாய்! நீ ஆரம்பமாவதை உணர முடியாது.

100% உணர்வு பூர்வமான நிலை என்பது சாதரணமானது என்று. எதில் ஒன்றில் முழு உணர்தலை பெறுகிறாயோ அது உனக்கு உணர்வற்ற நிலைக்கு எடுத்து செல்லும். அப்போது நீ செயல் ஆகிவிடுவாய்.

நீ இயற்கையை ரசித்தல்-காாியம்!

ரசிக்கும் சக்தி – கருத்தா

இயற்கை – கருப்பொருள்

நீ – கருவி

நீ எதற்காக ரசிக்க வேண்டும் ? என்றதற்கான சூழலமைய வேண்டும் ? இந்த வினாவிற்கு உன்னால் விடை அளிக்க முடியாது!அது காரணம்! நீ எப்போது காாியமாகி அதாவது முழு ரசிப்பில் ஈடுபடுகிறாயோ, நீ ரசிப்பதை, நீ எப்போது பார்க்கிறாயோ, அது உனக்கு இயங்கு நிலை தியானத்தை கொடுக்கும்.

இயங்கு நிலை தியானம் முழு ரசிப்பில் ஆரம்பித்து உணர்வற்ற நிலைக்கு எடுத்துச்செல்லக் கூடியது! உன் வேலை செயல்களை கண்காணித்தல். அந்த நாடகத்தை பார்க்கின்ற பார்வையாளன்! நீ நடிக்கும் நாடகத்தை நீயே பார்க்கும் நிலை! அது ஒரு விழிப்பு உணர்வு!

நீ அந்த நிலை அடையும் போது பிரசங்கம் செய்பவன் ஆக இருக்க மாட்டாய்! ஏன் எனில் அங்கு விளக்குவதற்கு ஒன்றுமில்லை!

நிகழ்காலம் உண்மையானது

இறந்தகால பதிவுகள் முடிந்து போனவை! அவை இந்த நொடி உண்மை அல்ல! ஒவ்வொரு நொடியிலும் நீ புதியவன். ‘குவாண்டம் இயற்பியல் ‘ கூற்றுப்படி ஒவ்வொரு செல்களும் ஒவ்வொரு நொடியும் புதிதாக பிறக்கின்றன.

அப்படி என்றால் சென்ற நொடியில் இருந்தவன் இந்த நொடியில் இருக்க முடியாது. இறந்த காலம் புகைப்படம் போன்றது. உண்மை அல்ல!

எதிர்/ நிகழ்காலம் என்பது உன்னிடமல்ல! அது யாருக்கும் சொந்தமானது அல்ல! அது ஒரு உத்தேசம்-கற்பனை-அனுமானம்-உண்மையல்ல!

இந்த வினாடி மட்டுமே உண்மை! உன் வசமிருப்பது! அந்த உண்மையை நீ பாிபூரணமாக அனுபவித்தது உண்டா ? உனக்கிருக்கும் உண்மை வினாடியை முழுமையாய் உணரவேண்டுமாயின் அதை நீ முழுமையாக ரசிக்கவேண்டும்.

இனிப்பு தொியுமா ?

இனிப்பு ஒரு சுவை! அதை எல்லோரும் ஒரே மாதிாி உணர முடியாது. ஒரு ‘ஜிலேபி ‘ யின் சுவை ஒன்று தான். ஆனால் ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிாிதான் உணர முடியும். இது தான் இனிப்பு என்று யாரும் அறுதியிட்டு கூற முடியாது. சுவை மட்டும் அல்ல. உணர்வுகளும் அப்படித்தான். ஒவ்வொருவருக்கும் அந்த உணர்வுகளின் அதிர்வு எண் மாறுபடும்.

அப்படி என்றால் 100% உணர்வு யாருணர்வது ? இதுதான் பிரபஞ்ச தத்துவம்!

இது இரு முனைகளால் ஆனது! ஆனால் அந்த இருமுனைகளும் ஒரே முனை ஆகும்!

இரண்டு முனைகளில் எந்த முனைகளை வேண்டுமானாலும் பற்றிக்கொள்ளலாம்! இது ஒரு வட்டம் போன்றது!

100% உணர்வு எட்டும் போது உணர்வற்ற நிலை அடைவாய்! (மெய் மறத்தல்) ஏன் எனில் இரு எதிர் எதிரான முனைகளு ம் ஒரே புள்ளியில் சந்தித்து விடுகின்றன!

நேர் சக்தி-எதிர்சக்தி – இரண்டும் ஒரே சக்தி!

நன்மை-தீமை, இரவு-பகல், உண்டு-இல்லை என்ற வெவ்வேறு முனைகளில் உள்ள இரு வேறு சக்திகளும் ஒன்றுதான்! (ஏகத்துவம்)! அந்த ஒரே சக்தியே இருவேறு நிலைகளை அடைந்து போட்டியிட்டுக்கொள்கின்றது! வெற்றி பெரும் சக்தியே தோல்வி அடைகிறது! அது தனக்கு எதிராய் தானே அமைகிறது!

(தொடரும்..)

sreee_tamil@yahoo.com

Series Navigation

ஸ்ரீ

ஸ்ரீ