பாரி விழா

This entry is part [part not set] of 39 in the series 20090402_Issue

ஸ்ரீரஞ்சனி



“இந்த முறை பாரி விழாவில் எங்கடை ஊர்க்காரரின் பங்குபற்றுதல் தான் கூடவாய் இருக்க வேணுமஇ; அல்லது பாரி விழா என்று சொல்லுறதிலை ஒரு பொருளும் இல்லை-“பாரி ஊர்ச்சங்க செயலாளார் மீனா. கொஞ்சம் உரமாய் சொல்லிப்போட்டு தன்ரை கருத்தை ஆதரிப்பினமோ இல்லையோ என்று ஒரு குழப்பத்தில் சுத்திப் பாக்கிறாள். கூட்டங்களுக்கு வர முன்னமே அங்கை என்ன கதைக்க வேண்டும் என்று ஒத்திகை பாத்துப் போட்டுத்தான் பலர் வருகினம் எண்டது அவளுக்கும் தெரிந்த சங்கதி தான். ஆனால் அவளுக்கு மற்றவையை வசப்படுத்தி தன்ரை கருத்தைத் ஆமோதிக்கப் பண்ணக்கூடிய அந்த கெட்டித்தனம் இல்லை. அதாலை எதைச் சொல்ல வெளிக்கிட்டாலும் அவளுக்கு இதயம் பலதடவை வேகமாய் அடித்துக் கொள்ளும்.

“இப்ப மூன்று வருஷமாய்இ விழா நல்லா நடக்க வேணுமஇ; மண்டபம் நிறைய வேணும்இ எண்டால் பிரபலங்களைத் தான் மேடை ஏத்த வேணும் என்று ஏத்தியாயிற்றுஇ இந்த முறை எங்கடை ஆக்களுக்கும் ஒரு சந்தர்ப்பம் கொடுக்கத்தான் வேணும்” என்று மாலா சொன்னதும் தான் நினக்கிற விசயத்தை ஒரு ஆளாவது விளங்கிக் கொண்டதில் மீனாவுக்கு கொஞ்சம் ஆறுதல் வந்தது. “எங்கடை ஊர் கலைஞருக்கா இங்கை பஞ்சம்? அவையளை ஒன்று சேக்கிறதிலை தான் எங்கடை வெற்றியிருக்கு.” “அப்படி நாங்கள் செய்ய சங்கமும் அந்த மாதிரி வலுப்பெறும்.” தொடர்ந்து மனோவும்; கதிரும் சொன்னவுடன் வரதனின் முகம் இறுக்கமடைந்ததை அங்கிருந்த பலர் கவனிக்கத் தவறவில்லை. “போன முறை பாரிவிழாவில் போட்ட எல்லா pசழபசயஅ ம்; நல்லது எண்டு சொல்ல முடியாது தானே” என்று நவம் சொல்ல வரதன் ஓரக்கண்ணால் தலைவர் சிவத்தைப் பார்த்தான்.

சிவத்துக்கு அந்தப் பார்வையின் பொருள் விளங்கியது. “நீ தலைவனாய் இருந்தால் தான் நான் உந்தச் சங்கத்துக்கை வருவன். சும்மா ஒவ்வொருவரும் கேள்வி கேட்டுக் கொண்டிருக்க பாத்துக் கொண்டிருக்கேலாது” எண்டு வரதன் சொன்னதை நினைவு படுத்திப் பாத்த சிவம், “சரி இப்ப எல்லாரும் சொஞ்சம் அமைதியாய் இருங்க பாப்பம்இ நாங்கள் ஒரு நல்ல பாரி விழாவை நடாத்த வேணும் எண்டால் முதல் அது தரமாய் இருக்கவேணுமஇ; அதுக்காண்டி தான் வரதன் கடந்த வருடங்களில் பலரை வெளியிலிருந்து கொண்டு வந்திருக்கிறாரஇ; அதை அவரால் தான் செய்ய ஏலும.; இந்த முறையும் அவர் யோசித்துப் பாத்து செய்வார.; முதலிலை அதுக்கு என்று ஒரு உழஅஅவைவநந போட்டிருக்கிறம். இதுதான் ஆக்கள்” என்று கொஞ்சப் பெயர்களை வாசித்தான.;

அதில் போட்ட அத்தனை பேரும் எது சொன்னாலும் சரி எண்டு தலையாட்டக் கூடிய ஆட்கள் எண்டதை விளங்கி கொண்ட மீனா “வேறு யாரும் அந்த உழஅஅவைவநந க்கு போக விருப்பமா?” எனக் கேட்க வரதன் “10 பேருக்குக் கூடினால் வேலை செய்யக் கஷ்டம்” என்று அவசரப்பட்டான். “வரதன் அடிக்கடி கூட்டம் கூடுவார்இ நிறைய நேரம் செலவழிக்க முடியாது என்று நினக்கிறவை போகாமலிருப்பது நல்லம்.” என்று சிவம் எச்சரிக்கை ஒலி எழுப்ப மாலாவும் மனோவும் மட்டும் முடிவில் இணைந்து கொண்டனர்.

“என்னவாயிருந்தாலும் தலைவரின் முடிவு தான் முடிவு” என நல்லதம்பியரும் முடிவாகச் சொல்லிக்கொண்டார் அது தலைவருக்கு கொடுத்த கௌரவம் அல்ல. அப்பத்தான் தம் முடிவுகளை தலைவர் ஊடாக செயலாக்கலாம் என்பதை விளங்கிக் கொண்ட வரதன் “ஓமோம் தலைவரைக் கேட்டுத்தான் எதுவும் செய்வோம்” என்றான்

அந்தக் கூட்டத்தை முடிக்கும் போதே இனி இன்னொரு தனி ஆலோசனக் கூட்டம் இருக்கு என்று சிவத்துக்கு நிச்சயமாகத் தெரிந்திருந்தது. எப்படி இந்த விசயத்தைக் கையாளுகிறது என்று வரதன் தான் இனி அவனுக்கு வழி காட்டவேணும் என்றும் புரிந்தது. இரண்டு மாதங்களுக்கு முன் தான் தலைவனாய் வருவன் என்று சிவம் கனவிலும் நினைத்திருக்க மாட்டான். பழைய தலைவர் தனது உடல் நிலை காரணமாய் ஓய்வு எடுக்கப் போறார் என்று கதை வந்த போது இனி யார் தலைவர் எனப் பல ஊகங்கள் நடந்தன.

“நீ இந்தச் சங்கத்தில் ஐந்து வருஷத்துக்கு மேலாய் இருக்கிறாயஇ; நீ தான் பொருத்தம் நாட்டு நிலைமை மோசமடைந்து கொண்டு போற நேரத்திலை ஊர்க்காரர் எல்லாரையும் சேர்த்து எங்களை வலுப்படுத்தினால் தான் நாம் ஊரைக் கட்டி எழுப்பலாம்” என்று சிலர் அவனுக்கு சொன்ன போது அவனையும் தலைவர் ஆசை கொஞ்சம் ஆட்கொண்டு விட்டது. போதாதற்கு பாரிவிழாவாஇ வரதன் விழாவா என்று விமரிசையாய் நடக்கும் பாரிவிழாவை மனதில் வைத்துக் கொண்டு வரதனும் “சிவம் நீதான் தலைவனாய் இருக்க வேண்டும்இ அப்பத்தான் எங்கடை சங்கம் உருப்படும்|| என்று தன்ரை எண்ணப்படி நடக்க அவன் தான் வசதியான ஆள் என்ற நினைப்பில் அவன் தலையில் ஐஸ் வைக்க தலைவர் பதவி அவனுக்காக இல்லை அது சங்கத்தின் நன்மைக்காக என தன்னை தானே மூளைச் சலவை செய்து கொண்டான் அவன்.

தன் பலவீனங்களை பற்றி சற்று சிந்தித்தவன் மீனாவை செயலாளாரப் போட்டால் பொருத்தமாயிருக்கும் என முடிவெடுத்தான். ஆரம்பத்தில் சங்கத்தில் இருந்தவள் தனது தாயின் நோய் காரணமாய் சில வருடங்கள் விலகி இருந்திருந்தாள். அவளிடம் “நீங்கள் வீட்டுக்குள் இருந்து எல்லா எழுத்து வேலையும் செய்து தந்தால் போதும். நான் வழமை போல் ஓடித்திரிவேன்” எனச் சொல்லி சம்மதிக்க வைத்தான.; ஆனால் அவள் தான் ஓடித்திரியத் தேவையில்லாமல் எல்லாத்தையும் வீட்டில் இருந்த படியே iவெநசநெவ மூலம் செய்து விடுகிறாள.; அது மட்டுமன்றி கூட்டத்தில் நியாயமும் கதைக்கிறாள் என்பது சிவத்துக்கு அவள் தன்னை மிஞ்சி விடுவாளோ என்று இப்ப கொஞ்சம் பயத்தைக் கொடுத்தது.

“என்ரை வீட்டை போவமோஇ வுiஅ ர்ழசவழளெ க்குப் போவோமோ?” என்றான் வரதன் “உங்கடை வீட்டை போனால் தான் வடிவாய் இருந்து கதைக்கலாம”; என்று வழிந்தார் நல்லதம்பி வரதனின் மனைவியின் கோப்பியை காசு செலவழிக்காமல் குடிக்கலாம் என்ற நினைப்பில்.

வரதனின் வீட்டுப்படியை சிவம் மிதிக்க அவன் உநடட phழநெ அலறியது. “நான் இப்ப ஒரு முக்கியமான கூட்டத்தில் இருக்கிறேன். ஒரு மணித்தியாலத்துக்குள் வந்து விடுவேன்” என்று சொன்னபடி சிவம் உநடட phழநெ ஐ வைத்தான.; “சிவம் இங்கை தா” என்று உழயவ ஐ வாங்கிய வரதன் “நாங்கள் எல்லோரும் ரனெநசளவயனெiபெ உள்ளனாங்கள். முதலிலை எதுஇ ஏனஇ; எப்படிச் செய்ய வேண்டும் என்று ஒரு ஒருமித்த முடிவுக்கு வருவது நல்லம் என அவனது வழமையான முறையில் குரலில் அமைதியை வரவழைத்துக் கொண்டு பேச ஆரம்பித்தான்.

“மீனாவுக்கு நான் கனதரம் சொல்லியிருக்கிறனஇ; தேவையில்லாத குழப்பங்கள் வாறது அழகில்லை எல்லாரோடையும் ஒத்துப் போகவேணும் எண்டு” தான் பெரிய உதவி ஒன்றை செய்ய முயன்ற பெருமிதத்துடன் சொன்னார் நல்லதம்பி. சொல்லும் போது அவளுடன் அவர் பரிமாறிய வசனங்களும் அவருக்கு ஞாபகம் வந்தன. “நீ கொஞ்சம் கவனமாய் கதைக்கிறது நல்லம் பிள்ளை. பிறகு உந்த சாதி இப்படித்தான்இ இவை சொல்கிறதோ என்று நினைப்பினம்..;” –அப்படி அவர் குழைந்து அவளை அடக்கி வாசிக்கச் சொல்ல முயன்ற போது “இந்தக் காலத்திலை சாதி எண்டு என்ன கிடக்குது? நியாயத்தை யாரும் சொல்லலாம்.|| என்று அவள் சொன்னது அவருக்கு கொஞ்சமும் பிடிக்கவில்லை தன்ரை சொல்லை அவள் மதிக்கவில்லை என்ற கோபத்தை கோபமாகக் காட்டாமல் அதை அவளின் கூடாத ஒரு குண இயல்பாக காட்ட வேணும் என்று அவரின் மூளை அவருக்கு சொன்னது.

“சிவம் பாத்தீரோஇ ஒரு வயசானஇ அனுபவமுள்ள ஒருவர் குழப்பங்கள் கூடாது என்று சொல்லேக்கை அப்படி அவ முறித்துக் கதைக்கிறது எவ்வளவு பிழை. அவருடைய மனதை எவ்வளவு பாதித்திருக்கும்இ நாங்கள் எல்லாம் ஒற்றுமையாய் நிற்க வேணும் எண்டு தானே நினைக்கிறம். எங்களுக்கு எங்கடை ஊரவை முன்னுக்கு நிற்கிறது விருப்பமில்லையேஇ ஆனால் எங்கடை நோக்கம் என்னஇ விழா மூலம் நல்ல வசூல் தேடுறதுஇ எங்கடை சங்கத்துக்கு பெயர் எடுக்கிறது… அதைவிட தமிழன் தன்னைச் சுற்றி பல சிறிய வட்டங்களைப் போட்டு போட்டு மற்றவையிலிருந்து பிரிச்சுப்பாத்து வாழுறதாலை தான் தமிழரின்ரை பிரச்சனை இப்படி வளந்து விசுவருபம் எடுத்திருக்குது.” வரதன் சொல்லச் சொல்ல சிவத்துக்கு மீனாவில் கோபம் கோபமா வந்தது

“நீர் தானோ வரதன் அவவைத் பதவி கொடுத்து உயத்தி விட்டது. எங்கடை சங்கம் அவவாலை உடைந்தால் உம்மால் உடைந்தது எண்டு தான் நான் சொல்லுவன்!” பாரி சங்க சேவையால் பெயரும் தன் வாழ்வில் செய்த தான் பாவங்களுக்கான பிராயச்சித்தமும்; கிடைக்கும் என்று சங்கத்தில் இருக்கும் குமாரும் தன் பங்குக்கு கொட்டித்தீத்தான். அந்த நேரம் பாத்து சிவத்தின் உநடட phழநெ மீண்டும் அலறியது. “நீர் இப்படியான் சந்தர்ப்பங்களில் உநடட phழநெ ஐ ழகக பண்ணி வைக்க வேணும.; என்றான் வரதன்.

ஊநடட phழநெ ல் மீண்டும் சிவத்தின் மனுசி தான் கதைத்தா. “என்ன வெளிக்கிட்டிட்டியளோ? அனு நேரத்துக்கு பள்ளிக்கூடம் போக வேண்டுமென்று அழுது கொண்டிருக்கிறாள் ஆறு மணியாச்சுது இப்ப வெளிகிட்டால் தானே அவள் அங்கே நேரத்துக்கு நிக்கலாம்” “எனக்கு இன்னும் கூட்டம் முடியல்லைஇ நீ கூட்டிக்கொண்டு போ. பிறகு நான் அங்கை வாறன்.|| “உங்களுக்கு எப்பவும் ஊர் வேலை தான் முக்கியம.; எங்களிலை கரிசனை இருந்தால் தானே” கோபமாக சிவத்தின் மனுசி phழநெ ஐ வைத்தாள்.

“அது மனுசி—“ என்ற சிவத்திடம் “என்னவாம்இ?”; என்றார் நல்லதம்பி “அனுவின்ரை பள்ளிக்கூடத்திடலை இன்டைக்கு றுiவெநச குநளவ அதுதான்–“ “சரி அப்ப போய் அதைப் பாரும்இ எண்ட வரதனிடம், “சீ இந்த ளழெற க்கை நான் ஓடிப் போய் நேரத்துக்குச் சேர மாட்டன்இ அவவாலை செய்யக்கூடியதை அவ செய்யலாம் தானே எல்லாத்துக்கும் நான் போக ஏலுமே. வந்த விசயத்தை முடிப்பம். பிறகு போய் ஏத்தினால் காணும்”; என்றான் சிவம் “சரி அப்ப என்ன செய்யலாம் எண்டு நீரே சொல்லுமன்!” எண்டான் வரதன் நாடி பிடித்துப் பாக்குமால் போல்.

“நீங்கள் ஒண்டுக்கும் யோசிக்காதேங்கோ. நான் அவவுக்கு pழiவெ டிடயமெ ஆக நேர சொல்லுவன்||; எங்களோடை சேந்து வேலை செய்ய ஏலாட்டி விலத்தி நிண்டு; எங்களையாவது வேலை செய்ய விடுங்கோ எண்டு..” சிவம் சொல்லி முடிக்க முன் “அது சரிஇ அது சரி” என அவர்களிடையே ஆரவாரம் எழுந்தது. வரதனுக்கு பெரியதொரு நிம்மதிப் பெருமூச்சு வந்தது. புதுமைப்பித்தர்கள் நாடகக் குழுவினருடன் தெறித்த பின் தான் பாரி ஊர்ச்சங்கத்துடன் முழுமையாக இணந்து நாடகம் போடத் தொடங்கினான் வரதன.; தான் இதில் மவுசாக இருக்க வேண்டுமென்றால் பிரபலங்களுடன் சேர்ந்து தான் நடக்க வேணும் அப்பத்தான் அவர்களின் ஆதரவாளர்கள் எல்லாம் நாடகம் பாக்க வருவார்கள் அவர்களுக்கு அணைவான பத்திரிகைகள் எல்லாம் அதை ஓகோ எண்டு எழுதும் சும்மா ஊர் முன்னேற்றத்து உதவுறம் எண்டு பலனில்லாமல் குப்பை கொட்ட ஏலுமோ————— தன்னுடன் தானே கதைத்துக் கொண்டவன் “மலர் இன்னும் கொஞ்சம் ளாழசவ நயவள கொண்டு வாரும்” எண்டு தன்ரை மனுசியைக் கூப்பிட்டுப் போட்டு, “இன்னொரு கோப்பி போடச் சொல்லட்டோ?” என்றான்.

சிவமும் தன்ரை கெட்டித்தனத்தைக் காட்ட விரும்பி உடனேயே மீனாவுக்கு phழநெ பண்ணினான். “நீங்கள் இண்டைக்கு கூட்டத்திலை நடந்த முறை சரியில்லை. அதாலை எல்லாரும் குழம்பிப் போய் நிக்கினம். நாங்கள் எல்லோரோடையும் சேர்ந்து நடந்தால் தான் எதையும் சரி வரச் செய்யலாம். அப்படித்தான் நாங்கள் இவ்வளவு காலமும் இந்தச் சங்கத்தை வளத்து வந்தனாங்கள். வரதனும் உங்களுக்கு கொஞ்சம் யனஎiஉந சொல்ல விரும்புறார”; என்று மூச்சு விடாமல் சொல்லி முடித்தவனையே மனதால் மெச்சியபடி பாத்துக் கொண்டிருந்தவர்கள் “என்னவாம் விளங்கிக் கொண்டாவோ?” எண்ட போது “கூட்டத்துக் கதையை கூட்டத்தில் கதைப்பம்” என்கிறா எனச் சற்று சலித்தவன் “நாங்கள் விடுகிறது இல்லை பாப்பம் எல்லாம் வெல்லலாம்” என்று எழும்பினான்.

“அது கொஞ்சம் அவவின்ரை இறுமாப்பைத் தான் காட்டுது” என்றபடி பின் தொடர்ந்தார் நல்லதம்பி. “ஆக்களுக்கு சொல்லுற மாதிரி சொல்லி முதலே விளங்கப்படுத்திப் போட்டு கூட்டத்திலை கை உயத்தச் சொன்னால் எங்கடை பக்கம் தான் வெல்லும் என வரதன் பெருவிரலை உயத்திக் காட்டினான் “என்றாலும் அடுத்த முறை இன்னும் கவனமாக இருக்க வேணும் எங்களோடை ஒத்து வரக் கூடியவர்களைத் தான் சங்கத்திலை சேர்க்க வேணும – உள்ளுக்கு கொண்டு வர வேணும். அப்பத் தான் எங்களின் ஆள் பலம் கூடும்” நினைக்கிற நல்ல விஷயங்களை சோலியில்லாமல் செய்யலாம் என்றான் குமார்.

நல்லதம்பியை அவர் வீட்டில் விட்டுவிட்டுஇ pசழபசயஅ முடிந்திருக்கும். இனி மனுசியின்ரை முறைப்பாட்டை வேறு கேட்கவேணும் என நினைத்த போது மீண்டும் உநடட phழநெ அலறியது. அவனுக்கு மீனாவிலிருந்த கோபம் இப்ப மனுசியில் வந்தது. ஆனால் உயடட பண்ணியது hழளிவையட.

ர்ழளிவையட லில்இ 7 மாதம் உடலாலும் மனதாலும் சுமந்து எப்போ வரும் என ஆசையுடன் காத்திருந்த தன் ஆண்பிள்ளையை ளழெற ல் வழுக்கி விழுந்து குறைப்பிரவசத்தில் பெற்றதால்இ பிள்ளைக்கு என்னவாகுமோ என்ற வேதனையில் கண்ணீரும் கம்பலையுமாக அவனுடனும் கதைக்கப் பிடிக்காமல் இருக்கும் அவன் மனைவியையும்இ அம்மாவுக்கு நடந்த அசம்பாவிதத்தால் குழப்பமும்இ தனது pசழபசயஅ க்கு போக முடியாததால் கவலையும் கொண்டு அழுது கொண்டிருக்கும் அவன் மகளையும் என்ன செய்வதுஇ எதைச் சொல்லிஇ எப்படிச் சமாதானம் செய்வது என்று தெரியாமல் குழம்பிப்போய் நின்றான் சிவம். ஊரைப் பாத்து வீட்டைப் பாக்காமல் விட்டுவிட்N;டனோ என ஒருபக்கம் குத்தலாக இருந்தாலும் மறுபக்கம் விதியை என்ன செய்கிறது என்ற நினைப்பும் வந்தது.

அவன் கதை கேட்டு வந்த வரதன்இ நல்லதம்பிஇ குமார் எல்லாரும் ஊருக்காக வாழ்ந்து ஊருக்காக பாடுபடும் அவனுக்;கு இப்படி ஒரு நிலை கொடுத்த கடவுளுக்கு எங்கே கண் இருக்குது எனக் குறைப்பட்டுக் கொண்டார்கள.;


sri.vije@gmail.com

Series Navigation

ஸ்ரீரஞ்சனி

ஸ்ரீரஞ்சனி