“மனிதர்கள் பல விதம் இவன் ஒரு விதம்”

This entry is part [part not set] of 34 in the series 20090205_Issue

உஷாதீபன்


“என்னங்க…இங்கே வா ங்களேன்…வந்து பாருங்க…!” – சொல்லியவாறே ஜன்னல் வழியாக வெளியே மறைத்திருந்த மரக் கிளைகளின் அடர்ந்த இலை அடுக்குகளின் வழியே பார்த்துக் கொண்டிருந்த சாந்தியின் பின்னால் போய் நின்று, இவனும் உற்றுப் பார்த்தான். “அங்கே பார்த்தீங்களா? என்ன அநியாயம்?” “மெதுவா…மெதுவா…எதுக்கு சத்தமாப் பேசுறே?…” என்றான் இவன். பொழுது அப்பொழுதுதான் விடிந்திருந்த வேளையில் தெருவும், மனிதர்களும், இன்னும் இயங்க ஆரம்பிக்காத நேரத்தில், அவளின் குரல் சற்று சத்தமாகத்தான் இருந்தது. மாடியிலிருந்து பார்க்க பச்சை இலைகளின் நடுவே துல்லியமாய்த் தெரிந்தது அது. “பாருங்களேன்.,..எங்கே தள்ளுறாங்க பாருங்க…?” எனக்குச் சிரிப்புத்தான் வந்தது. கூடவே மனதுக்கு அருவருப்பாகவுமிருந்தது. “அய்யய்ய…காலங்கார்த்தால என்ன கண்றாவி இது?” – என்றேன். பக்கத்து எதிர்வீட்டின் வாசலில் ஒரு பெருச்சாளி செத்துக் கிடந்தது. உடல் ஊதிப்போய்க் காணப்பட்டது. வாயில் துணியைக் கட்டிக் கொண்டு அந்த வீட்டுப் பெண்மணி அதைத் துடைப்பத்தால் பெருக்கி, நேர் எதிர் வீட்டுப் பகுதியில் குப்பையோடு சேர்த்துத் தள்ளிக்கொண்டிருந்தது. “அவுங்க வீட்டுப் பக்கத்துப் ப்ளாட் சும்மாக் கெடக்கு. புதர் மண்டிப் போச்சு. இடம் வெறுமனே கிடந்தாலே, இதெல்லாம் வரத்தான் செய்யும். ஏதாச்சும் நாயோ, ப+னையோ, சாகடிச்சுக் கொண்டு வந்து போட்டிருக்கும்…” “அது சரிங்க…அதுக்காக இப்டியா? அதை யாராச்சும் ஆளைக் கூப்பிட்டு அப்புறப்படுத்தாம இப்படியா மொத்தமாத் தள்ளி விடுவாங்க? யாரும் பார்க்கமாட்டாங்கன்னு நினைக்கிறாங்களா? அல்லது யார் கேட்கப் போறாங்கன்னு நினைச்சிட்டாங்களா? இது தப்பில்லை…?” “அதுக்குக் காசு செலவு பண்ணனுமே? அப்பத்தானே நடக்கும்? யாரும் கவனிக்கிறதுக்கு முன்னாடி இப்படிப் பொசுக்குன்னு தள்ளிவிட்டுட்டா, பிறகு என்ன ஆவுதுன்னு வேடிக்கை பார்க்கலாமில்ல? அதான்…! நீ கவனிச்சதில்லை போலிருக்கு…அந்தம்மா தினசரிக் குப்பைகளையே இப்படித்தானே தள்ளுவாங்க…அதப் போலவே இதையும் செய்றாங்க…அவுங்க வீட்டு காம்ப்பவுண்ட் சுவருக்கு ஒரு அடி தள்ளித்தானே தினமும் குப்பையைக் குவிப்பாங்க…நீ பார்த்ததில்லையா? “பார்த்திருக்கேன்…பார்த்திருக்கேன்…பக்கத்து வீட்டு மாமிதான் தினமும் அந்தக் குப்பையையும் சேர்த்து எறிக்கிறாங்க…ரெண்டு பேரும் தோழிகளோ என்னவோ? யார் கண்டது?” “தோழியுமில்லே…கோழியுமில்லே…எதுக்கு அநாவசியச் சண்டைன்னு எல்லாஞ் சேர்ந்து எரிஞ்சிட்டுப் போகட்டுமேன்னு செய்திட்டிருக்காங்க…அவ்வளவுதான்…” “அது தப்புங்க.!..சொல்ல வேண்டாமா? ஒரு முறையாவது சொன்னாத்தானே தெரியும் அவுங்களுக்கும்…” “உன்னை மாதிரி இப்படி நினைக்கிற நிலையெல்லாம் கடந்தவங்களா இருக்கும்…மனுஷங்கன்னா பலமாதிரிதான் இருப்பாங்க…இதிலென்ன கௌரவம் இருக்குன்னு நினைக்கிற பரந்த மனசா இருக்கும்…” “அப்போ அது எனக்கு இல்லைங்கிறீங்க…அப்படித்தானே.? ..புரியுது…புரியுது…” …..2……. – 2 – “நான் எங்க சொன்னேன்? நீயா அப்படி நினைச்சிட்டா அதுக்கு நா என்ன பண்ணட்டும்?” “அப்படிச் சொரணை இல்லாம இருக்க முடியாதுங்க…நானா இருந்தா சொல்லத்தான் செய்வேன்…தெரியாதவங்களுக்கு; சொல்லித்தான் புரிய வைக்கணும்…” “ரொம்ப சந்தோஷம்…இப்போ இந்தப் பெருச்சாளிப் பிரச்னைக்குப் போய்ச் சொல்ல வேண்டிதானே?” “நல்லாயிருக்கு நீங்க பேசுறது? என் வீட்டுப் பக்கமாவா அது வந்திருக்கு? அதை எதிர் வீட்டுக்காரங்;கல்ல கேட்கணும்?” “ஆக, பிரச்னை நம்மை எட்டாதவரைக்கும், நம்மைப் பாதிக்காதவரைக்கும் நாம அதில ;தலையிடமாட்டோம்…எதுக்கு வம்புன்னு ஒதுங்கிப் போயிடுவோம்…அப்டித்தானே?” “ஆமா…வலியப் போய்ச் சண்டை போட முடியுமா? வேறே வேலையே இல்லையா நமக்கு? அவுங்கவுங்க பிரச்னையை அவங்களேதான் தீர்;;த்துக்கணும்…அந்தம்மாவோட குறுகின புத்தியைக் காண்பிக்கத்தான் நான் உங்களைக் கூப்பிட்டேன்…நீங்க என்னடான்னா என்னையே பதம் பார்க்குறீங்களே…?” “இப்போ, எதிர் வீட்டம்மா, அதே பெருச்சாளியை நம்ம வீட்டுப் பக்கம் தள்ளி;விட்டிருந்தா என்ன பண்ணுவே…?” “கிழிச்சு நார் நாரா ஆக்கிப்புடுவேன்…” “எதை? பெருச்சாளியையா? “ கையை ஓங்கிக்கொண்டு அடிக்க வந்தாள் சாந்தி. சிரித்தான் இவன். “இன்றைக்குக் காலைல வேடிக்கை பார்க்கிறதுக்கு உனக்கு ஒரு விஷயம் கிடைச்சிருச்சுன்னு சொல்லு…” “உங்களுக்கு வேறே வேலையே இல்லை…ஈரைப் பேனாக்கி, பேனைப் பெருமாளாக்குறீங்க…இன்னைக்கு ஞாயிற்றுக் கிழமை வேறே…கேட்கணுமா? லீவு நாள்…பொழுது போகலை…” “அடடே…!ஆஉறா..!! இன்னைக்குக் குப்பை வண்டி வராதே?” “ஆமாங்க…என்னங்க பண்றது? எங்கேயாவது குப்பை வண்டிக்கு லீவு விடுவாங்களா? தினசரி குப்பையை அள்ளினாத்தானே தெரு சுத்தமாகும்?” “அது சரிதான்…அதுல உழைக்குற ஆளுகளுக்கு ஒரு நாளாவது லீவு வேண்டாமா?” “ரெண்டு பேரை வேலைக்குப் போட்டு, மாத்தி மாத்தி அள்ளச் சொல்ல வேண்டிதானே?” “ஆஉறா…! தாராளமாச் செய்யலாமே…!! மாதச் சந்தா இருபதை இருபத்தஞ்சாக்கினவுடனே பாதிப் பேர் குப்பையே போடுறதில்லை…வேண்டாம்னுட்டாங்க…இதிலே ரெண்டு பேரை எங்கேயிருந்து போடுறது? போட்டா சம்பளம் கொடுக்க வேண்டாமா?” “அப்போ நாறிட்டே கெடக்கட்டும்…வியாதி வரட்டும்…அப்பத்தான் புத்தி வரும்…” -சொல்லிவிட்டுக் குளியலறை நோக்கிப் போய் விட்டாள் சாந்தி. செத்த பெருச்சாளியை விடிகாலை கண்கொண்டு பார்த்த அசிங்கத்தையும் சேர்த்துக் கழுவ வேண்டும் என்ற அவசரம் அவளுக்கு. இவன் ஜன்னல் வழி பார்த்தான். அது நடு ரோட்டில் கிடந்தது. வாகனங்கள் அவ்வப்போது கடந்து கொண்டிருந்தன. பார்த்தர்வறே போயினர் பலர். . …………3……….. – 3 – வேக வேகமாய்ப் பக்கத்துக் கண்மாய்க்குக் காலைக் கடன்களை கழிக்கச் செல்லும் வழக்கமான ஒருவர், அவசரத்தில் கவனிக்காமல் அதை மிதிக்கப்போய் நிலை தடுமாறினார். “சே!; அநாச்சாரம்..!! – என்றவாறே மேல் துண்டால் மூக்கையும் வாயையும் பொத்திக் கொண்டு விலகி விரைந்தார். தன் வீட்டிலிருந்து எதிர்வீட்டுப் பக்கம் தள்ளிவிட்ட அந்த அம்மாளின் பெயர் நீலாம்பரி. இவனுக்கு சினிமா ஞாபகம் வந்தது. வாழ்க்கையைப் பார்த்து சினிமா எடுக்கிறார்களா அல்லது சினிமாவைப் பார்த்து வாழ்க்கை அமைந்து போகிறதா? என்று தோன்றியது. என்னவோ எண்ண பொருந்தியோ, பொருந்தாமலோ இதை நினைத்துக் கொண்டான். எதிர் மரங்களில் ஐந்தாறு காக்கைகள் வந்து உட்கார்ந்திருந்தன. வழக்கமாய் அந்த நேரத்திற்கு அங்கு காக்கைகளைப் பார்த்ததில்லை இவன். இன்று எப்படி மூக்கில் வேர்த்தது அவைகளுக்கு.? கழுகுகளுக்குத்தானே அப்படி வியர்க்கும் என்பார்கள்? அவைகளின் பார்வை அந்த இரையின் மீதே நிலைத்திருந்தது. ஒரு நாய் போகிற போக்கில் அதை முகர்ந்துவிட்டுப் போனது. எங்கோ வெளிய+ர் செல்லும் ஒருவர் கையிலும், முதுகிலும், சுமைகளோடு அரக்கப் பரக்க நெடும் போக்கில் வேகமாய் வந்து கொண்டிருந்தார். அந்தப் பெருச்சாளியின் வால் பகுதியை அவர் மிதித்து நகர்ந்ததுபோல் இருந்தது. இப்போது அது இடம் பெயர்ந்திருந்தது லேசாக. காக்கைகள் ஒன்றன்பின் ஒன்றாய்ப் பறந்து வந்து அமர்ந்து அதைக் கொத்திக் குதற ஆரம்பித்திருந்தன இப்போது. காட்சி ரொம்பவும் அருவருப்படைந்து கொண்டிருப்பதாய்த் தோன்றியது. கைலியிலிருந்து விடுபட்டு பேன்ட் சட்டையை மாட்டிக்கொண்டு கிளம்பினான். கீழே வந்து சாலையில் கால் வைத்தபோது, நாற்றம் மூக்கைத் துளைத்தது. அப்பகுதியின் குறைந்தது நாலைந்து வீடுகளுக்காவது இது பாதிக்கும் என்று நினைத்தான். அந்த அம்மாளின் வீட்டைக் கடக்கும்போது பார்த்தான். வாசலில் டெட்டால் தெளித்துள்ள வாடை. சுற்றி வர ப்ளீச்சிங் பவுடர் பரவலாகத் தூவப்பட்டிருந்தது. பெருச்சாளி கிடந்த எதிர்வீட்டினை நோக்கினான். உள்ளே நாற்காலியில் அந்த வீட்டுப் பெரியவர் வாசலைப் பார்த்தபடி ஏதும் செய்யத் திறனின்றி…! செய்வதறியாது ;பார்ப்பது போலிருந்தது. அதற்குப் பக்கத்து வீட்டுப் பெண்மணியின் கண்கள் இங்கேயே நிலைத்திருந்து இவனைக் கண்டதும் உள்ளே போனது. யாராவது செய்ய மாட்டார்களா என்று எதிர்பார்த்திருக்கிறார்கள் போலிருக்கிறது? – நினைத்துக் கொண்டான் இவன். “யம்மா…யம்மோவ்…”- கீழே அலறலைக் N;கட்டு பால்கனிக்கு ஓடி வந்தாள் சாந்தி. “கீழ் வீட்டுல யாரும் இல்லீங்களா…?” “ஊருக்குப் போயிருக்காங்க…என்ன வேணும்? ஏனிப்படிக் கத்துறே? மெதுவாக் கூப்பிடப்படாது?” “உங்க வீட்டு அய்யா சொல்லிதாம்மா நானு வந்திருக்கேன்…ஏதாச்சும் ஒரு பை இருந்தாக் ;கொடுங்க…” “”எதுக்கு? குப்பையைப் போட்டுத் தரவா? ;ப்ளாஸ்டிக் பைதான் இருக்கு…” “வெறும் பை குடுங்க தாயி…குப்பை வண்டி பத்து மணிக்கு மேலதான்…” “நீ பஞ்சாயத்து ஆளா…? “ “ஆமாம்மா…அன்னைக்குக்கூட உங்க வீட்டு மொட்டைக் கெணத்துல செத்த ப+னையை எடுத்துக் க்ளீன் பண்ணல…? நாந்தாம்மா அது…” ……………..4……….. – 4 – “சரி…சரி…இந்தா…” – மேலேயிருந்து ரெண்டு மூன்று பாலித்தின் பைகளைப் பறக்க விட்டாள் சாந்தி. “இத்தனை எதுக்கம்மா? ஒண்ணு போதுமே? “- என்றவாறே பொறுக்கிக் கொண்டான் அந்த ஆள். சாந்தி உள்ளே போய் விட்டாள். “என்னப்பா, எடுத்திட்டியா…?” – கேட்டவாறே அந்தத் தெருத் திருப்பத்தில் கையில் தினசரியோடு வந்து கொண்டிருந்தான் இவன். “ஆச்சுங்கய்யா…எடுத்தாச்சு…இதோ, இந்தப் பைக்குள்ள போட்டிருக்கேன்யா…”-சாக்கடை தோண்டும் கொண்டியின் நுனியில் பை குத்தித் தொங்கிக் கொண்டிருந்தது. “குப்பை வண்டி இன்னைக்கு வருமா? வராதா?” “வண்டி டயர் அவுட்டுங்கய்யா…டிராக்டர்தான் வந்தா வரும்…” “சரி…இதைக் கொண்டுபோய் உங்க வழக்கமான குப்பைக் கெடங்குல சேர்த்துடணும்… வழில எங்கேயும் போட்டுட்டுப் போயிடக் கூடாது…புரிஞ்சிதா…?” “அதெல்லாம் மாட்டேனுங்கய்யா…நேரா சாமிக்குப்பத்துக் கெடங்குல கொண்டு சேர்த்துட்டுத்தான் போவேன்…” “இந்தா இதை வாங்கிக்க…”- சொல்லியவாறே ஒரு பத்து ரூபாயை எடுத்து நீட்டினான் இவன். “வேணாமுங்கய்யா…வேணாம்…” “இருக்கட்டும்ப்பா…வச்சிக்க…நான் கூப்டவுடனே வந்தீல்ல…? வாங்கிக்க…” “இல்லீங்கய்யா…வைங்க…” “அட…! கிராக்கி பண்ணாதப்பா…சும்மா வாங்கிக்க…” “அப்படியில்லீங்கய்யா…அன்னைக்குக் கெணத்த சுத்தம் பண்ணினபோதே நெறையக் கொடுத்திட்டீங்கய்யா…;அதுவே மனசு நெறஞ்சு போச்சு…” – போயே போய் விட்டான் அவன். அவன் செல்வதையே பார்த்துக் கொண்டிருந்தான் இவன். அன்று அந்த வறண்ட கிணற்றில் செத்து நாறிக் கொண்டிருந்த ப+னையை அகற்றி, இரண்டடி மண்ணை எடுத்து வெளியேற்றி, மருந்து தெளித்து, ப்ளீச்சிங் பவுடர்போட்டு – இன்னொரு ஆளுடன்தான் என்றாலும் சாதாரண வேலையா என்ன? இருநூறு ரூபாய் கொடுத்தான் இவன். சாந்தி கூட சத்தம் போட்டாள். “ரொம்ப ஜாஸ்திங்க இது…” என்று. அது அவன் எதிர்பாராத தொகையோ என்னவோ? கூட வந்தது அவன் மகன் என்பது பிறகுதான் தெரிந்தது. அந்த வேலைக்கு எவ்வளவு கொடுத்தாலும் தகுமே? வேறு யார் செய்வார்கள்? நம்மால் முடியுமா? அதற்குப் பின் சிமிண்ட் ஸ்லாப் போட்டு கிணற்றை மூடிவிட்டான். அதற்காக இதை வேண்டாம் என்று சொல்ல வேண்டுமா? அவன் இதைச் சொல்லி மறுத்தே விட்டது இவனுக்கு ஆச்சரியமாய்த்தான் இருந்தது. ஒன்றை சரியான முறையில் உணருதல், ஈவு, இரக்கம், கருணை இப்படியெல்லாமும் எல்லா மனிதர்களுக்கும் பொதுவானதுதானே? இருநாறு ரூபாயைத் தாராளமாகக் கொடுத்தவரிடம், இந்த வேலைக்குப் பைசா வாங்கக் கூடாது என்று அவன் மனம் சொல்லியிருக்கிறது! அதுதானே? …………5…………….. – 5 – இவன் செயலில் கூட ஒரு நியாயம் இருக்கிறது? ஆனால் படித்த, கௌரவமான வாழ்க்கையை வாழக் கூடிய இந்தத் தெருவில் உள்ள சிலர் ஏனிப்படி இருக்கிறார்கள்? இந்த வாழ்க்கையும், சமூகமும் அவனுக்குக் கற்றுக் கொடுத்த பண்பாட்டை, நற்சிந்தனையை, ஏன் இவர்களுக்கும் கற்றுக் கொடுக்கவில்லை? கற்றுக் கொடுக்கவில்லையா அல்லது கற்றதனாலேயே அது புத்திசாலித்தனமல்ல என்ற எண்ணத்தில் செயல்படுகிறார்களா? மனிதர்களே பெரும்பாலும் சுயநலம் மிக்கவர்கள்தான். அப்படிப் பார்த்தால் அவன் செயலும் கூட ஒருவகையில் சுயநலம் மிக்கதுதானே? நேர்மையான சுயநலம்! அல்லவா? யோசித்தவாறே வீட்டினுள் நுழைந்தான் இவன். “போயிட்டு வந்திட்டீங்களா?” “ம்…ம்…ஆச்சு…” “காலங்கார்த்தாலே நல்ல வேலை உங்களுக்கு? யார் வீட்டு முன்னாடியோ கிடக்குற அசிங்கத்துக்கு நீங்க ஏன் இப்படி வலிய மெனக்கிடணும்? உங்களுக்கு ஒரு விவஸ்தையே கெடையாதா? கிறுக்கு…” பெரிதாகச் சிரித்தான் இவன். மனதில் உள்ளதைப் ப+ட்டி வைத்துப் பொசுங்காமல் பட்டென்று போட்டு உடைத்து விடுகிறாளே? அந்த மட்டுக்கும் இது உத்தமம்…” “அது யார் வீட்டு முன்னாடியோ இல்ல சாந்தி…நம்ப தெருவுல, நடுவீதில கெடக்குற அசிங்கம்…அவ்வளவுதானே? இதுக்கு மத்தவங்களை ஏன் குறை சொல்லணும்? எல்லார் சார்பாகவும் நாந்தான் செய்தேன்னு இருக்கட்டுமே…? ஒரு சாதாரண வேலை…பெரிய சேவையா என்ன?” – ரொம்பவும் யதார்த்தமாய்ச் சொன்னான் இவன். கேட்டுக்கொண்டிருந்து விட்டு கடைசியாய் அவள் சொன்னாள்: “அது சரி! எத்தனை பேர் செய்வாங்களோ இப்படி?” +++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

Series Navigation

உஷாதீபன்

உஷாதீபன்