திருப்புமுனை -1

This entry is part [part not set] of 34 in the series 20090205_Issue

கௌரிகிருபானந்தன்

திருப்புமுனை

“என்னுடைய கண்ணோட்டத்தில் எந்த மனிதனாவது யாருக்காகவோ வருத்தப்பட்டுக் கொண்டு வாழ்க்கையை ஏதோ ஒரு விதமாக கழிக்கிறான் என்றால் வாழ்க்கையின் மதிப்பை சரியாக உணரவில்லை என்று அர்த்தம்.”

நள்ளிரவில் திடீரென்று விழிப்பு வந்தது சுவாமிநாதனுக்கு. உடல் முழுவதும் சோர்வு ஆட்கொண்டது. கைகால்கள் கொறக்களி வாங்குவதுபோல் ஒரே வலி. குரல்வளையிலிருந்து வார்த்தை வெளி வர முடியாததுபோல் வேதனை. தாகம்…. பக்கத்து கட்டிலின் பக்கம் பார்த்தார் விசாலிக்காக. விசாலி எங்கே? தூக்கக் கலக்கத்தில் மறந்துபோன கசப்பான உண்மை நினைவுக்கு வந்தது. விசாலி தன்னை விட்டுப்போய் ஒரு மாதம் கழிந்துவிட்டது. அடிவயிற்றில் பதுங்கியிருந்த துக்கம் இதயத்திற்குள் வந்து சேர்ந்தது.
தன்னைத் தனியாக விட்டுவிட்டு திடீரென்று போய்விட்டாளே விசாலி? இத்தனை வருடங்களும் தன்கூடவே இருந்து, தன்னுடைய தேவைகளை கவனித்துக் கொண்டு, அதுதான் தன் வாழ்க்கையின் லட்சியம் என்பதுபோல் வாழ்ந்த விசாலி இப்படி சொல்லாமல் கொள்ளாமல் போய்விட்டாளே? மனதின் ஆழத்தில் பதிந்துவிட்ட இந்த துக்கம் நாளாக நாளாக வளர்ந்துகொண்டே போய் இதயம் திடீரென நின்றுபோனால்தான் இந்த வாழ்க்கையிலிருந்து மீட்சி கிடைக்குமோ என்னவோ?
பேரன்கள் இருவரும் பக்கத்து அறையில் தூங்கிக்கொண்டு இருந்தார்கள். யாரேனும் கொஞ்சம் தண்ணீர் எடுத்துக் கொடுத்தால் தேவலை என்று தோன்றியது. இதுபோல் தாகம் ஏற்பட்டு பாதி தூக்கத்தில் விழித்துக்கொண்டால் அடுத்த நிமிடமே விசாலியும் எழுந்துவிடுவாள். உடம்பு சரியாக இல்லையா? தூக்கம் வரவில்லையா? என்று அன்பு ததும்பும் குரலில் விசாரிப்பாள். சுவாமிநாதனின் விழிகளில் நீர் சுழன்றது. திரும்பி வரமுடியாத உலகத்திற்குப் போய்விடடாள் விசாலி. இனி யாருக்காக தான் வாழவேணடும் ?
தாயின் ஈமச்சடங்குகளுக்காக மகன்கள் இருவரும் தம் மனைவி குழந்தைகளுடன் வந்திருந்தார்கள். சின்னவன் சுதாகரும் அவனுடைய குடும்பமும் திரும்பிப்போய் ஒருவாரம ஆகிறது. பெரியவன், மருமகள், குழந்தைகள் நான்கு நாட்கள் கழித்து கிளம்பப் போகிறார்கள்.
“அப்பா! நீங்கள் மட்டும் தனியாக இருப்பானேன்? எங்களுடன் வந்து விடுங்கள்” என்று தினமும் கேட்டுக்கொன்டு இருக்கிறான். தனக்குத்தான் போகவேண்டும்போல் இல்லை. வீடு முழுவதும் விசாலி நினைவுகள்தான். அதையும் நீக்கிவிட்டால் தன் வாழ்கையில் என்ன எஞ்சியிருக்கும்?
மெதுவாக எழுந்து தண்ணீர் குடித்துவிட்டு கட்டில்மீது உட்கார்ந்தார். ஜன்னல் வழியாக வந்த நிலவின் வெளிச்சம் அறையில் விழுந்துகொண்டு இருந்தது. வெளியே படர்ந்திருந்த மல்லிகைச்செடி.
அறுபது வயது தாண்டிவிட்டாலும் தினமும் மாலையில் மல்லி மொட்டுக்களை பறித்து, மாலையாகத் தொடுத்து கொஞ்சம் சாமி படத்திற்கு சாத்திவிட்டு, சின்ன துணுக்கை கோடாலி முடிச்சுப்போட்ட கூந்தலில் சொருகிக்கோள்வாள். மெல்லிய நறுமணம் அவள் கூடவே வீடுமுழுவதும் நடமாடிக்கொண்டு இருக்கும். ரிடையர் ஆனபிறகு இருவருக்குள் வளர்ந்த நட்பு, முன்பிருந்த கோபதாபங்கள், எரிச்சல்கள் எல்லாம் குறைந்துபோய் மனதளவில் நெருக்கம் வளர்ந்தபிறகு, ஒருவருடைய தேவைகளை வாய்விட்டுச் சொல்லாமலேயே மற்றவர் புரிந்துகொள்ள முடிந்தது. குழந்தைகளிடமிருந்து கடிதமோ ·போனோ வந்தால் அன்று முழுவதும் அதைப்பற்றியே பேசி காலத்தைக் கழித்துவந்தார்கள். இப்போது, விசாலி இல்லாத குறையை எப்படித் தாங்கிக்கொள்வது?

பிரபாகர், தன்னுடன் கலி·போர்னியாவுக்கு வரச்சொல்லி அழைத்துக்கொண்டுதான் இருந்தான். மகனும், மருமகளும் ஆபீஸ¤க்கும், பேரக் குழந்தைகள் பள்ளிக்கூடத்திற்கும் போனபிறகு தன்னைப் போன்ற ஒன்டியாளுக்கு எப்படி பொழுது போகும்? டி.வி.யையும் விசிஆரையும் மட்டுமே பார்த்துக்கொண்டு எப்படி காலம் தள்ளுவது? பேரக்குழந்தைகள் வீட்டுக்கு வந்த பிறகாவது பேசலாம் என்றால் அவர்களுக்கு தன்னுடைய பேச்சும், கதைகளும் பிடிக்காது. பேரன்களின் மழலைப் பேச்சைக் கேட்டுக் கொண்டும், அவர்களுக்குக் கதைகளை சொல்லிக்கொண்டும் சந்தோஷமாக இருக்கணும் என்று விசாலி ஆசைப்பட்டாலும் அது நடக்கவில்லை.

இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை குடும்பத்துடன் தாய் நாட்டிற்கு வரும் மகன்கள். முதல் நான்கைந்து நாட்கள் குழந்தைகளின் உணவு பழக்கவழக்கங்கள், சுத்தம், சுகாதாரம் தெரிந்து கொள்வதற்கே சரியாக இருக்கும். எது கொடுப்பது, எது கூடாது என்று மருமகள்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்வதிலேயே போய்விடும் அந்த மூன்று வாரங்களும். இதற்கு நடுவிலேயே ஆபீஸ¤க்கு சம்பந்தப் பட்ட டூர்கள், வேட்டாத்திற்குப் போவது, திருப்பதி தரிசனம் என்று ஒரே பரபரப்புதான்.
எல்லோரும் கிளம்பிப் போனபிறகு வீட்டில் தனக்கும் விசாலிக்கும் இரண்டு நாட்கள் வெறிச்சென்று இருந்தாலும் மூன்றாவது நாள் பழையநிலைக்குத் திரும்புவார்கள். குழந்தைகள் வந்தது முதல், திரும்பிப் போகும் வரையில் நின்று போயிருந்த காலைவேளை நடைப்பயிற்சியும், மாலையில் காய்கறி வாங்கப் போவதுமாக ரொட்டீன் வாழ்க்கை ஆரம்பமாகும். காலையில் எழுந்துகொண்டதுமே ·பில்டரில் டிகாக்ஷனை இறக்கிவிட்டு, மாத்திரையைப் போட்டுக்கொண்டு, பிளவுஸ்போல் பின்னிய ஸ்வெட்டரை அணிந்துகொண்டு, தனக்காக முழுக்கை ஸ்வெட்டரை கொண்டு வந்து தந்துவிட்டு “கிளம்புங்க சீக்கிரம்” என்று அவசரப்படுத்துவாள் விசாலி.
ஜனநடமாட்டம் அதிகம் இல்லாத பாதையில் வாக்கிங்கை முடித்துக் கொண்டு வீட்டுக்கு வந்து சேருவார்கள். வந்ததுமே சூடாக காபி கலந்து எடுத்து வருவாள் விசாலி. பிளாஸ்டிக் நாற்காலிகளை கொண்டு வந்து வராண்டாவில் போட்டுக் கொண்டு பேப்பரும் கையுமாக தான் உட்கார்ந்துகொள்வான். பேப்பரில் செய்திகளைப் படித்துக் கொண்டே தன்னுடைய கருத்துக்களையும் சேர்த்து விசாலியிடம் சொல்லுவான். சிரத்தையாக கேட்டுக் கொண்டே நடுவில் திடீரென்று “அதுசரி, சுதாகர் எதற்காக வேலையை மாறினானாம்?” என்றோ “பிரபாகரின் சின்ன மகனுக்கு எதில் பிரைஸ் கிடைத்ததாம்?” என்றோ கேட்பாள்.
சுவாமிநாதனின் இதழ்களில் வருத்தம் கலந்த முறுவல் தவழ்ந்தது. எத்தனை நன்றாக இருந்தன அந்த காலை நேரங்கள்? இத்தணை வருடங்களில் சமையலறை பக்கமே போனதில்லை அவர். காபிகூட கலந்துகொள்ளத் தெரியாது. எல்லா வேலைகளையும் விசாலியே பார்த்துக் கொள்வாள். ஜுரமாக இருந்தாலும் நித்தியப்படி வேலைகள் செய்யாமல் இருக்கமாட்டாள்.
அதேபோல் வங்கிக்கு போகணும் என்றாலும், டெலிபோன் பில்லை கட்டணும் என்றாலும், கடிதத்தை தபால் பெட்டியில் போடணும் என்றாலும் தானே செய்து வந்தார்.
சுதாகர்கூட சில சமயம் சொல்வதுண்டு. “என்னம்மா இது? அப்பாவை சின்னச் சின்ன வேலைகளைகூட செய்ய விட மாட்டேங்கிறாயே. அவரவர்களின் வேலைகளை அவரவர்களே செய்துகொண்டால் இருவருக்கும் சௌகரியமாக இருக்கும் இல்லையா. உடம்பில் தெம்பு இல்லாவிட்டாலும் எல்லா வேலைகளைதும் நீயேதான் செய்கிறாய்.”
“நன்றாகச் சொன்னாய் போ. அப்பா மட்டும் வெளி வேலைகளை முழுக்க முழுக்க பார்த்துக் கொள்ளவில்லையா? அவரவர் வேலைகளை அவர்களே பண்ணிக்கொள்வதாவது ஹாஸ்டலில் இருப்பதுபோல்?” என்பாள் விசாலி.
இனிமேல் தன் வாழ்க்கை முழுவதும் தனிமைதான். இங்கே இருந்துகொண்டு விசாலி இல்லாத குறையை தன்னால் தாங்கிக்கொள்ள முடியாது. மகனுடன் அமெரிக்காவுக்குச் சென்று அவர்களுடைய வாழ்க்கை ஓட்டத்தில் கலந்துகொள்ளவும் முடியாது.
நான்கு வருடங்களுக்கு முன்னால் சுவாமிநாதனும், விசாலியும் மகனிடம் அமெரிக்காவுக்குப் போனார்கள். இருபத்தி நான்கு மணிநேரம் விமானத்தில் பயணம். கால்கள் வீங்கிப்போய் “இனி என்னால் இவ்வளவு தூரம் பயணம் செய்ய முடியாது” என்றாள் விசாலி. அங்கே இருந்த ஆறுமாதங்களும் மகனுடன், பேரன்களுடன் சந்தோஷமாகவே கழிந்தாலும் கடைசி காலத்தை அங்கேயே கழிக்க வேண்டும் என்ற நினைப்பு மட்டும் வரவில்லை.
விசாலியின் துணையில்லாத வாழ்க்கையை அமெரிக்காவில் விட இங்கேயே கழிப்பது மேல். இத்தனை ஆண்டுகளான இதே ஊரில் இருந்ததால் தெரிந்தவர்கள், நண்பர்கள் என்று ஒரு வட்டம் ஏற்பட்டிருந்தது. ஏதோ விதமாக வாழ்க்கையை இங்கேயே தெரிந்தவர்களுக்கு நடுவில் கழிக்க முயற்சி செய்ய வேண்டுமே தவிர, புது சிநேகங்களுக்கும், பது சூழ்நிலைக்கும் பழக்கப்படுத்திக்கொள்ளும் ஆர்வம் தனக்கு இல்லை.

*******************************************************************

தூக்கக் கலக்கத்தில் மறந்துபோன கசப்பான உண்மை நினைவுக்கு வந்தது. விசாலி தன்னை விட்டுப்போய் ஒரு மாதம் கழிந்துவிட்டது. அடிவயிற்றில் பதுங்கியிருந்த துக்கம் இதயத்திற்குள் வந்து சேர்ந்தது.

ஜன்னல் வழியாக சுருக்கென்று விழுந்த சூரிய கிரணங்களின் வெப்பத்திற்கு விழிப்பு வந்தது சுவாமிநாதனுக்கு. தலைவலிப்பதுபோல் இருந்தது. விசாலி தன்னுடைய மெத்தென்ற கரங்களால் பிடித்துவிட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும்? தலைவலி, கால்வலி என்றால் வேண்டாமெண்று சொன்னாலும் கேட்காமல் பிடித்துவிடுவாள். கண்களை மூடி அப்படியே படுத்திருந்தார் சுவாமிநாதன்.
“காபி குடிப்பாரோ என்னவோ? இன்னும் எழுந்துகொள்ளவில்லையே?” மருமகள் ஹாலில் கேட்டுக்கொண்டிருந்தாள்.
“படுத்துக்கொண்டீருக்கிறார், தூங்கட்டுமே. எழுந்து என்ன செய்யவேண்டும்” மகன் சொல்லிக்கொண்டிருந்தான்.
அருகில் வந்து உடல்நலம் சரியாக இருக்கிறதா என்று தொட்டுப்பார்க்கணும் என்று மகனுக்குத் தோன்றவில்லையே. விரக்தியாக இருந்தது சுவாமிநாதனுக்கு. அன்றாட வேலைகளில் சின்ன வித்தியாசம் ஏற்பட்டாலும் ஒருமுறைக்குப் பத்துமுறை கேட்டுக்கொண்டு இருப்பாள் விசாலி. சிலசமயம் தொந்திரவு செய்கிறாள் என்று சலித்துக்கொண்டதும் உண்டு. இன்று அப்படிப்பட்ட சிரத்தை தன்மீது யாருக்கு இருக்கும்? கண்கள் ஈரமாயின. உடம்பில் தெம்பு இல்லாவிட்டாலும் எழுந்து பல் தேய்த்துவிட்டு திரும்பவும் கட்டில்மீது உட்கார்ந்துகொண்டார்.
“மம்மி! தாத்தா எழுந்தாச்சு.” பேரன் மருமகள் காதில்விழுவதுபோல் ஆங்கிலத்தில் கத்தினான்.
பிரபாகர் அறைக்குள் வந்து “இரவு சரியாகத் தூங்கவில்லையா அப்பா? தாமதமாக எழுந்துகொண்டீர்களே?” என்றான்.
“கொஞ்சம் தலைவலி. அதுதான்” என்றார். மகன் அருகில் வந்து உட்கார்ந்துகொண்டு நெற்றியில் கை வைத்துப் பார்க்கவேண்டும் என்றும், அன்பாக நான்கு வார்த்தைகள் பேச வேண்டும் என்றும் எதிர்பார்த்தார்.
“மாத்திரை தரட்டுமா?” என்று கேட்டுவிட்டு பதிலுக்குக் காத்திராமல் க்ரோஸின் மாத்திரையும் டம்ளரில் தண்ணீரும் கொண்டு வந்தான். மருமகள் காப்பி கொண்டு வந்தாள். சமயல்காரமாமி கலந்திருப்பாள் பொலும். ருசியாகவே இல்லை. அல்லது ஜுரத்தினால் நாக்கிற்கு ருசி தெரியவில்லை. எப்படியோ குடித்துவிட்டு டம்பளரைக் கீழேவைத்தார்.
பிரபாகர் குளித்துவிட்டு கட்டிலுக்குப் பக்கத்தில் இருந்த நாற்காலியில் உட்கார்ந்துகொண்டான். வெள்ளை ஜிப்பா வேட்டியில் புத்துணர்வுடன் காட்சியளித்தான். மகனை வெறுமையுடன் பார்த்தார் சுவாமிநாதன். அவன் கண்கள் விசாலியை நினைவுபடுத்தின.
“அப்பா! உங்களை இப்படிப் பார்க்கும்போது எனக்கு வேதனையாக இருக்கிறது. வெள்ளிக்கிழமை நாங்கள் ஊருக்குக் கிளம்பியாக வேண்டும். மேலும் தாமதப்படுத்த முடியாது. நீங்கள் இந்த ஊரைவிட்டு வரமாட்டேன் என்று பிடிவாதமாக இருக்கீங்க. உங்களை தனியாக இங்கே விட்டுவிட்டுப் போனால் எங்களால் நிம்மதியா எப்படி இருக்கமுடியும்? உஙகளுக்கே தெரியாதது இல்லை. யாருமே இந்த உலகில் சாசுவதமாக இருந்துவிடமுடியாது. நம்மால் மாற்ற முடியாததை நாம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். அங்கேயும் நல்ல நல்ல வாலண்டரி ஆர்கனைஜேஷன்ஸ் இருக்கு. ஏதாவது சோஷல் சர்வீஸ், சத்சங்கம் போன்றவற்றில் ஈடுபட்டு பொழுதை போக்கினால் மனதிற்கும் அமைதி கிடைக்கும். அம்மா இன்று நமக்கிடையே இல்லை என்றாலும் அவளுடைய ஆன்மா உங்களுடைய நலத்திற்காக, சௌக்கியத்திற்காக எவ்வளவு தவிக்குமோ யோசித்துப் பாருங்கள்.”
தாழ்ந்த குரலில் நடுநடுவில் தடுமாறிக்கொண்டே ஆங்கிலம் கலந்த தமிழில் அப்பாவுக்கு எடுத்துச் சொல்ல முயன்றான் பிரபாகர்.”எனக்கு கொஞ்சம் சுரத்தாக இல்லை. ஜுரம் வந்தாற்போல் இருக்கு. மாத்திரைதான் போட்டுக் கொண்டு விட்டேனே. ஜுரம் குறைந்துவிட்டால் சரியாகிவிடும்.” குரல் கம்மிவிடாமலிருக்க முயற்சி செய்தார் சுவாமிநாதன்.
பேரன் உள்ளே எட்டிப் பார்த்துவிட்டு “தாத்தா! யாரோ வந்திருக்காங்க” என்றான் மழலைத் தமிழில்.
புதுமனிதர்களை வரவேற்கும் அளவுக்கு உடலில் தெம்பு இல்லாவிட்டாலும் நெருங்கியவர்கள் யாராவது வந்து தன் அருகில் உட்கார்ந்துகொண்டால் நன்றாக இருக்கும்போல் தோன்றியது சுவாமிநாதனுக்கு. ஜுரம் என்று கேள்விப்பட்டதும் பிரபாகர் பதற்றமடைந்து தந்தையின் அருகில் வந்து நெற்றியில் கையை வைத்துப் பார்த்தான்.
“ஜுரம் இருக்கு அப்பா! சொல்லவே இல்லையே?” வருத்தப்பட்டுக் கொண்டான். ஒரு நிமிடம் யோசித்துவிட்டு “யார் வந்திருக்கிறாங்களோ பார்த்துவிட்டு உங்களுக்கு உடல்நலம் சரியாக இல்லையென்று சொல்லி அனுப்பிவிடுகிறேன்” என்று வெளியே போனான்.
“வீடு வாடகைக்கு கிடைக்குமா தம்பீ?” வந்தவர் கேட்டுக் கொண்டிருந்தது காதில் விழுந்தது. பிரபாகர் உள்ளே வந்து “அப்பா! யோசித்துப் பாருங்கள். வீட்டை வாடகைக்கு கொடுத்துவிட்டு கொஞ்சநாள் என்னுடன் இருங்கள். இரண்டு வாரங்களில் திலீப் கலி·போர்னியாவுக்கு வருகிறான். உங்களுக்கு வேண்டிய ஏற்பாடுகளை எல்லாம் அவன் செய்வான். உங்களை இப்படி தனியாக விட்டுவிட்டு என்னால் போக முடியாது” என்றான். வாசற்படியில் மருமகள் நின்றுகொண்டிருந்தாள். அவள் முகத்தைக் கூர்ந்துப் பார்த்தார சுவாமிநாதன். கணவன் ரொம்பவும் வற்புறுத்தினால் இந்தக் கிழவன் வந்துவிடக் கூடும் என்று அவள் பயப்படுவதுபோல் தோன்றியது. அத்தனை வேத¨னிலும் சுவாமிநாதனுக்குச் சிரிப்பு வந்தது. தன்னுடைய ஊகம் சரியா தவறா என்று சோதித்துப் பார்க்கத் தோன்றியது.
“அவரை உள்ளே வரச் சொல்லு” என்றார்.
சுமார் அறுபது வயது மதிக்கத்தக்க நபர் உள்ளே வந்தார். கையில் சிறிய பை. உட்காரச் சொன்னதும் எதிரே இருந்த நாற்காலியில் அமர்ந்துகொண்டார்.
“உங்களுடைய பெயர்?” கேட்டார் சுவாமிநாதன்.
“ராஜாராமன்.”
“வாடகைக்கு போர்ஷ்ன் மட்டும் போதுமா? வீடு முழுவதும் வேண்டுமா?”
“சுற்றிலும் தாராளமாக இடம் இருக்கும் பெரிய வீடு கிடைத்தால் தேவலைன்னு பார்க்கிறோம். நாங்கள் ஒரு ஆசிரமத்தை நடத்தி வருகிறோம். அதற்காகத்தான்” என்றார் முறுவலுடன். அவருடைய முகத்தில் ஒரு விதமான தேஜஸ்ஸ¤ம், பொலிவும் தென்பட்டன சுவாமிநாதனுக்கு.
“ஆசிரமமா? என்ன ஆசிரமம்?”
“உங்களுக்குத் தெரிந்துகொள்ளணும் என்றால் ஒரு முறை நேரில் ஆசிரமத்திற்கு வந்து பாருங்கள். புது வசந்தம் என்ற பெயரில் சில சீனியர் சிடிஜன்ஸ் ஒன்றாகச் சேர்ந்து ஒரு ஆசிரமத்தை நிறுவியிருக்கிறோம். இப்போ அதில் மெம்பர்கள் கூடிவிட்டதால் இடம் போதவில்லை. சமீபத்தில்தான் ஒரு மருந்து கம்பெனிக்காரர்கள் பொருள் உதவி செய்வதற்கு முன் வந்திருக்கிறார்கள். அதனால் கொஞ்சம் பெரிய இடமாக பார்த்து ஆசிரமத்தை மாற்ற வேண்டும் என்று நினைக்கிறோம். இந்தக் காலனியில் சூழ்நிலை ரொம்ப அமைதியாக இருக்கிறது. மேலும் எங்களுடன் இருக்கும் குழந்தைகள் படிக்கும் ஸ்கூல்கள் இந்த ஏரியாவில்தான் இருக்கின்றன. ரொம்ப நாட்களாய் இங்கே வீடு ஏதாவது கிடைக்கும் என்று தேடி வருகிறோம்.”
அவர் சொல்லி முடிக்கும் வரையில் சுவாமிநாதன் அவரையே பார்த்துக் கொண்டிருந்தார். பிரபாகர் இடையில் புகுந்து “அப்பா! நீங்க கொஞ்சம் ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள்” என்று தந்தையிடம் சொல்லிவிட்டு அவர் பக்கம் திரும்பி “மிஸ்டர் ராஜாராமன்! அப்பாவுக்கு உடல்நலம் கொஞ்சம் சரியாக இல்லை. உங்களால் நாளைக்கு வர முடியும் என்றால் நாம் சாவகாசமாக பேசிக் கொள்ளலாம். முடிந்தால் உங்கள் ஆசிரமத்தையும் பார்க்க விரும்புகிறோம்” என்றான்.
அவர் உடனே எழுந்துகொண்டு “நீங்க ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள். நான் நாளை காலையில் வருகிறேன்” என்று விடைபெற்றுக் கொண்டு போய்விட்டார்.
சோர்வுடன் படுத்துக் கொண்டிருந்த சுவாமிநாதனுக்கு புது வசந்தம் என்ற பெயரும், ஆசிரமத்தைப் பற்றி அவர் சொன்னதும் திரும்பத் திரும்ப நினைவுக்கு வந்தன. கட்டாயம் அந்த ஆசிரமத்தைப் போய் பார்க்க வேண்டும் என்று நினைத்தார். ஜுரம் குறையவில்லை என்றால் மகன் போகவிட மாட்டானோ என்ற பயத்தில் மதியமும் க்ரோசினைப் போட்டுக் கொண்டார். கொஞ்ச நேரம் கழித்து வியர்த்துக் கொட்டியதில் ஜுரம் குறைந்து போனாலும் தொண்டைவலி மட்டும் போகவில்லை. அவருக்கு தொண்டை வலி வந்தால் ஜலதோஷமும், இருமலும் பிடித்துக் கொண்டு ஒரு வாரம் தோல்லையில் ஆழ்த்திவிடும். அதனால் அவருக்கு தொண்டை கொஞ்சம் கரகரவென்று இருந்தாலே விசாலி உடனே வென்னீரில் உப்பு போட்டு தந்து கொப்புளிக்கச் செய்வாள். சூடான பாலில் மிளகை தட்டிப் போட்டு மஞ்சள் தூளையும் சேர்த்து குடிக்கத் தருவாள். அது நினைவுக்கு வந்ததும் மதியம் சமையல் அறைக்குச் சென்று வென்னீர் போட்டு பிளாஸ்கில் எடுத்து வந்தார். இரவு படுத்துக் கொள்வதற்கு ஏழெட்டு தடவை உப்புத் தண்ணியைக் கொப்புளித்துவிட்டு, சமையல்கார மாமியிடம் சொல்லி மிளகு கஷாயம் தயாரிக்கச் செய்து குடித்தார்.
ராஜாராமன் வந்துவிட்டுப் போன பிறகு தந்தையிடம் ஏற்பட்ட மாறுதலைக் கவனித்தான் பிரபாகர். இரவு தந்தையின் பக்கத்தில் அமர்ந்துகொண்டு “அப்பா! வீட்டை வாடகைக்கு விட்டால் நன்றாக இருக்கும் என்று உங்களுக்குத் தோன்றினால் சொல்லுங்கள். மாடியில் உங்களுக்கு வசதியாக இருப்பதுபோல் அட்டாச்ட் பாத்ரூமுடன் ஒரு அறையை கட்டிவிடலாம். கீழ் வீட்டை முழுவதும் அவர்களுக்கு வாடகைக்கு விடலாம். பால்கனியிலிருந்து பார்த்தால் ஆசிரமவாசிகளின் நடமாட்டம் உங்களுக்கு கலகலப்பாக இருக்கும். அமைதியை விரும்பினால் நீங்கள் அறையிலேயே ஓய்வு எடுத்துக் கொள்ளலாம். சின்னதாக சமையல் அறையையும் கட்டினால் உங்களுக்கு சௌகரியமாக இருக்கும். உங்களுக்கு எப்படி வேண்டுமோ அப்படியே செய்யலாம்” என்றான்.
மகன் கட்டிலுக்குப் பக்கத்தில் இருந்த நாற்காலியில் உட்கார்ந்தபடி சொல்லிக் கொண்டிருந்த போது அவனுடைய கண்களைக் கூர்ந்து பார்க்கணும் என்று முயற்சி செய்தார் சுவாமநாதன். அந்தக் கண்களில் லேசாக ஈரம் இருப்பதுபோல் தோன்றியது. உண்மையிலேயே தன்மீது அன்பு இருந்தால் ஒருதடவையாவது விசாலியைப்போல் தன் கையைப் பிடித்துக் கொள்ளக் கூடாதா? இப்படி தொலைவிலேயே இருந்தபடி பேசுவானேன்?
“அப்பா! கேட்கிறீங்க இல்லையா? உங்களுக்கு எப்படி வேண்டுமோ அப்படியே செய்து விடலாம். உங்கள் மனதில் இருப்பதைச் சரியாகச் சொல்லுங்கள்” என்றான்.
சுவாமிநாதன் குரலை கணைத்துக்கொண்டு “அப்படி ஆகட்டும். உன்னிடம் சொல்லாமல் வேறு யாரிடம் சொல்லப் போகிறேன்? நாளை காலையில் போய் ஆசிரமத்தைப் போர்ப்போம்” என்றார் சுருக்கமாக. தன் மனதில் இருக்கும் எண்ணங்களை வெளிப்படுத்தத் தெரியாத இயலாமையோ அல்லது ஏன் சொல்ல வேண்டும் என்ற வீராப்போ.
இரவு சாப்பாடு அனபிறகு எல்லோரும் அவரவர்களின் அறைகளில் படுத்துக் கொண்டபோது தாங்க முடியாத தனிமை சுவாமிநாதனை சூழ்ந்துகொண்டது. இரவு முழுவதும் சரியாக தூங்கவில்லை. விடியற்காலையில் லேசான தூக்கக் கலக்கத்தில் ஒரு கனவு. விசாலியின் தெளிவற்ற உருவம் அருகில் வந்து நெற்றியில் கையைப் பதித்து “ஜுரம் இல்லை. உப்பு தண்ணீரை கொப்புளித்தது நல்லதாகிவிட்டது” என்பது போல். விழிப்பு வந்ததும் தெம்பை வரவழைத்துக் கொண்டு குளித்துவிட்டு தயாராக இருந்தார். சொன்னது போலவே ராஜாராமன் ஒன்பது அடிக்கும் போது வந்துவிட்டார்.
அன்புடன் அவரை வரவேற்று உட்காரச் சொன்னார் சுவாமிநாதன். பேரனை அழைத்து “இந்த தாத்தாவுக்கு காபி கொண்டுவரச் சொல்லு கண்ணா உன் அம்மாவிடம்” என்றார்.
முறுவல் மாறாமல், ஒளி வீசும் அவருடைய முகத்தைப் பார்த்துக் கொண்டே “உங்களுடைய ஆசிரமத்தைப் பற்றித் தெரிந்து கொள்ளணும் என்று விரும்புகிறேன்” என்றார்.
“கட்டாயம் சொல்கிறேன். உங்களுடைய உடல்நலம் எப்படி இருக்கிறது?” அன்பு ததும்பும் குரலில் கேட்டார் ராஜாராமன்.
“நேற்றை விட சற்று தேவலை” சொன்னார் சுவாமிநாதன். அன்புக்காக தவிக்கும் பலவீனமான நிலையில் இருந்த அவருக்கு ராஜாராமனின் குசல விசாரிப்பில் ஏதோ நிவாரணம் கிடைத்தாற்போல் இருந்தது. “என் மனைவி இறந்துபோய் ஓரு மாதமாகிறது.” கம்பீரமாக சொல்லணும் என்றுதான் நினைத்தார். ஆனால் சாத்தியப்படவில்லை.
ராஜாராமனின் முகத்தில் “அடப் பாவமே” என்பது போல் இரக்கம் தென்பட்டது.
“இந்த தனிமையான வாழ்க்¨க்குக் கொஞ்சம் ஆறதலாக இருக்குமே என்றுதான் வாடகைக்கு விட நினைக்கிறேனே தவிர வாடகைக்கு கொடுப்பதற்கு தோதாக கட்டப்பட்ட வீடு இல்லை இது” என்றார் பொருள்பொதிய.
“பரவாயில்லை. உண்மையில் எங்கள் ஆசிரமம் நிறுவப்பட்டு நான்கு ஆண்டுகள் முடிகின்றன.” நாற்காலில் பின்னால் சாய்ந்துகொண்டு கடந்தகால நினைவுகளில் முழ்கிவிட்டதுபோல் சொல்லத் தொடங்கினார் ராஜாராமன.
“எனக்கு சிறுவயது முதல் இந்த சமுதாயக் கட்டுப்பாடுகளை எதிர்த்து மனம் விரும்பியதுபோல் புதிய முறையில் வாழவேண்டும் என்ற விருப்பம் இருந்தது. பெற்றோரின் பொறுப்பு, மூன்று மகள்களை வளர்த்து ஆளாக்கி கட்டிக் கொடுக்கும் பொறுப்பும், சீமந்தம் பிரசவம் என்று அடுத்தடுத்து கடமைகள்…. பந்தங்கள். மனம் விரும்பியது போல் வாழ முடியவில்லை. அம்மா அப்பாவைக் கடைசி காலம் வரையில் காப்பாற்றி என் கையாலேயே அவர்களை கரை சேர்த்துவிட்டேன். என் மனைவி பெராலிஸிஸ் வந்து ஒரு வருடகாலம் படுத்தப் படுக்கையாக இருந்தாள். அவளும் போய்ச் சேர்ந்து ஐந்து வருடங்கள் ஆகிவிட்டன.”
“எவ்வளவு தனிமை……” சுவாமிநாதன் ஏதோ சொல்லப் போனார்.
“ரொம்ப பேர் அப்படித்தான் சொன்னார்கள். ஆனால் எனக்கு அப்படித் தோன்றவில்லை. ஒருக்கால் என் ஆழ்மனதில் கடமைகள் எல்லாம் முடிந்த பிறகு மனதிற்குப் பிடித்ததைச் செய்ய வேண்டும் என்ற தவிப்பு தீவிரமாக இருந்திருக்க வேண்டும். கொஞ்சம் வெறுமையாக இருந்தது உண்மைதான். ஆனால் யாருடைய இழப்பும் என்னை அதிகமாக பாதிக்கவில்லை. என் பெற்றோரின் மரணம், என் மனைவியின் மரணம்கூட என்னை அதிகமாக வருத்தப்பட வைக்கவில்லை.”
சுவாமிநாதன் திறந்த வாய் மூடாமல் அப்படியே கேட்டுக் கொண்டிருந்தார்.

Series Navigation

கௌரிகிருபானந்தன்

கௌரிகிருபானந்தன்