வெங்கட்ராம கிருஷ்ணகுமார்
“அப்பா, எனக்கு பள்ளி 2 வாரம் கிறிஸ்துமஸை ஒட்டி லீவுப்பா” என்றான் என் மகன். “ஹேப்பி ஹாலிடேஸ்” என்றேன். “மற்ற வீடுகளில் இருக்கிறதைப் போன்று, ஒரு நல்ல கிறிஸ்துமஸ் மரம் வைப்பா”, வைத்தேன். “ஏதேனும் கிஃப்ட் (பரிசு) இருக்காப்பா ஹ”, “இருக்கும்!” என்று சமாளித்தேன்.
வேலையில் சிலர் “விடுமுறை வாழ்த்துக்கள்” என்றும், பலர் “ ஹேப்பி கிறிஸ்துமஸ் ஹாலிடேஸ்” என்றும் “மெரி கிறிஸ்துமஸ்” என்று தங்கள் மகிழ்ச்சியினைத் தெரிவித்துக் கொண்டனர். என் பங்கிற்கு நானும் “வாயில் வந்ததைச்” சொல்லி வைத்தேன்.
கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் ! அப்படி சொல்லக் கூடாது ! “விடுமுறை வாழ்த்துக்கள் (பே¢பி ஹாலிடேஸ்) என்று பொதுவாகச் சொல்ல வேண்டும்” என்று ஒரு சாரார் அமெரிக்காவில் விவாதம் புரிகின்றனர். கிறிஸ்துமஸ் கொண்டாடாத மக்களைக் கவருவதற்கு இந்தக் கோஷங்கள் எழும்புகின்றன.
இந்தியாவில் எங்கள் ஆபிஸில் ஒரு முஸ்லீம் பாய் இருந்தார். அன்புடன் அரவணைப்புடன் பழகும் அவர் எங்கள் அனைவருக்கும் “பாய்” தான். தீபாவளிக்கு விடுமுறை வரும். முதல் நாள் ஹேப்பி தீபாவளி என்று அனைவருக்கும் சொல்லுவார். விடுமுறைக்கு அடுத்த் நாள் “எப்படிங்க இருந்தது ஹ” என்று விசாரிப்பார்.
தீபாவளி நல்வாழ்த்துக்கள் (இப்படி நடைமுறையில் யாரும் சொல்லாமல், அனைவரும் ஹேப்பி தீபாவளியே சொன்னார்கள் !) என்று நாங்களும் “பாய்” க்கும் சொல்லுவோம். சிலர், ‘தப்பாக நினைக்காதீர்கள் பாய்! என்று சொல்லி தீபாவளி வாழ்த்துக்களைத் தெரிவிப்பார்கள். தீபாவளி பலகாரங்கள், மற்றும் பட்டாசுக்களும் கம்பெனி சார்பில் அவருக்குக் கொடுக்கப்படும். பாய்க்கோ நாலு புதல்விகள் மற்றும் இரு புதல்வர். அவரும் மகிழ்ச்சியாக வாங்கிக் கொள்வார். அவர் தப்பாக எண்ணுவார் என்று யாரும், எண்ணாமல் தீபாவளி வாழ்த்துக்கள் என்று கூறுவோரும் உண்டு.
பள்ளி விடுமுறை அளித்தால் “என்னடா தீபாவளியா ஹ என்னடா புத்த பெளர்ணிமாவா ஹ. ரம்ஜானா ஹ” என்று கேட்டு லீவைக் கொண்டாடுவோம். லீவு கிடைக்கணும், மகாவீர் ஜெயந்தியாக இருந்தாலும் ஓகே.
விடுமுறை வாழ்த்துக்கள் என்று தீபாவளி, கார்த்திகை, ரம்ஜான், கிறிஸ்துமஸ் சேர்த்து யாரும் கூறுவதில்லை. ஈத் அன்று ஈத் முபாரக் என்று கூறுவோம். மற்றவர்கள் தப்பாக நினைப்பார்களேயென்று விடுமுறை வாழ்த்துக்கள் என்று பகருவதில்லை (கூறுவதில்லை!). என் நண்பன் ரேமாண்ட் ராஜுக்கும் சென்னையில் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை அப்படியே கூறி வந்திருக்கின்றேன்.
எங்களிடம் பணி புரிந்த “பாய்” ஈத் தை ஒட்டி இனிப்புக்களை வழங்குவார். எங்கள் ஊர் நாயர் கடைக்காரர், ரம்ஜான் நோன்பு போது எங்கள் வீட்டின் அருகே இருக்கும் மசூதி வெளியே மாலை ஆறுக்கு சுடச் சுட “பஜ்ஜி” போடுவானர். ஆற அமரச் சாப்பிட்டுவிட்டு சூடாக டா சாப்பிடுவோம். நாயர் இன்று விடுமுறையா என்று கேக்காமல் “நோன்பு முடித்தீர்களா, பிரார்த்தனை முடிந்ததா, என்று பண்புடன் அனைவரிடமும் கேட்பார்.
அமெரிக்காவில் என் அலுவுலகத்தில் எனக்கு ஹேப்பி கிறிஸ்மஸ் என்று கூறுவதற்கு முன் தயங்கி ஹேப்பி ஹாலிடேஸ் என்று கூறுகின்றனர். இதற்கு முன்னால் பலர், ஹேப்பி கிறிஸ்மஸ் என்று வெளிப்படையாகக் கூறக் கேட்டிருக்கின்றேன். நானும் பதிலுக்கு ஹேப்பி கிறிஸ்மஸ் என்று வாழ்த்தியிருக்கின்றேன். இந்த வருடம் வால்- மார்ட் என்ற பன்னாட்டு நிறுவனத்தில் “விடுமுறை வாழ்த்துக்கள்” என்று எழுதி வைக்க. ஏன் “கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் என்று 96% கிறித்துவர்கள் வாழும் தேசத்தில் எழுதி வைக்கக் கூடாது ஹ” என்று வாக்குவாதம் செய்த வண்ணமிருக்கின்றனர்.
இந்தியாவில் எங்களிடம் இருந்த “பாய்” போன்று அமெரிக்காவில் நான்.
“பாய்” ரம்ஜானைப் பற்றி விளக்கிய மாதிரி தீபாவளிப் பற்றி மற்றவர்களிடம் சமயம் கிடைத்த போதெல்லாம் வெளிப்படையாகச் சொல்லுவேன். தீபாவளி அன்று விடுமுறை எடுத்துக் கொண்டு சன் டிவியில் சாலமன் பாப்பையா பட்டி மன்றம் பார்க்கவில்லையென்றால் எனக்குத் தீபாவளி கிடையாது.
என் நண்பன் ஜான் என்னிடம் இவ்வாறு கூறினான் ‘உகாண்டாவில் தலையைக் கொய்யும் ஒரு திருவிழா” இருந்தால் நான் வாழ்த்து கூறவேண்டுமா என்ன ஹ. நான் கூறினேன்
“தலையைக் கொய்தாலும், மகிழ்சியாக கலந்து கொள்வது தானே “ என்று வம்பிழுத்தேன்.
மேலும், “நீ முகமூடி அணிந்து, பல்வேறு உடைகளைத் தாறுமாறுமாக அணிந்து” மகிழ்சியாகக் கொண்டாடும் ஹாலோவீன் பற்றி உகாண்டாக்காரன் “இந்தக் கேணப் பயலுகள் கொண்டாடுவதை நான் ஏன் கண்டு கொள்ள வேண்டும் ஹ” என்று நினைக்காமல், உனக்கு ஹேப்பி ஹாலவீன் என்று சொல்லுகின்றானே ஹ” என்றேன்.
ஜான், “ஆனால் அவன் இங்கு வந்து பத்து ஆண்டுகளாகி எங்களுடன் கலந்து வாழ்கின்றானே ஹ” என்றான்.
“ஆனால் உனக்கு உகாண்டாக்காரனைப் பற்றி அதிகம் தெரியவில்லையே ஹ” என்றேன்.
“நீயும் தான் அவனுடன் கலக்காமல் வாழ்கின்றாய், நான் சொல்லித் தான் அவர்களின் திருவிழா பற்றி உனக்குத் தெரியும்” என்றான் ஜான்.
“சரி ! உனக்குத் தெரியுமா ஹ. பிரிட்டிஷ்காரர்கள் எங்களிடையே 300-400 ஆண்டுகளாக வாழ்ந்திருந்தாலும், கிருஷ்ண ஜெயந்தி அல்லது பிள்ளையார் சதுர்த்தி கொண்டாடுவதில்லையே ஹ. ஆனால் நாங்கள் கிறிஸ்துவை 1000 ஆண்டுகளுக்கு மேலாக பல பகுதிகளில் இந்தியாவில் கொண்டாடுகின்றோம் !” என்றேன்.
“சரி! ஜூலூக்களின் திருவிழாக்களை தென் ஆப்ரிக்க இந்திய வம்சாவளியினர் கொண்டாடாமல் அங்கு தங்கள் விழாக்களைத் தானே கொண்டாடுகிறார்கள் ஹ நீயும் இந்தியாவில் வீட்டில் கிறிஸ்துமஸ் கொண்டாடுவதில்லையே ! எனவே “நீ யார் ஹ நாங்கள் யார் ஹ சொல்லு !” என்று பதில் கேள்வி எழுப்பினான் ஜான்.
“நான் யார், நான் யார், நீ யார், யாருக்குத் தெரியும் யார், யார் ஹ” என்று கவிஞர் வாலி போன்று பேச ஆரம்பித்து விட்டேன்.
ஆனால், நானும் விடாமல் “இங்கிருக்கும் நாங்கள் கிறிஸ்துமஸ் விடுமுறை நாட்களில் வீட்டில் அக்கம் பக்கம் போல மின் விளக்குகளை எரிய விடுவோம். பரிசுகள் கொடுப்போம். ஆனால், ஜான், நீ இங்கு தீபாவளிக்கு விளக்குகள் ஏற்றுவாயா ஹ” என்றேன்.
ஜான், பதிலுக்கு “நீ இந்தியாவில் கிறிஸ்துமஸ் கொண்டாடினாயா ஹ”.
“இல்லை! ஆனால் அலுவுலகத்தில் இருப்பவர்கள் என்ன கொண்டாடுவார்கள் என்று தெரியும்!” என்றேன்.
அதற்கு ஜான் “எங்களுக்கு “ஹேப்பி ஹாலிடேஸ்” என்று கூறும் போது ஹேப்பி ஹாலிடேஸ் என்றால், புது வருடம், கிறிஸ்மஸ் போன்ற பல பண்டிகைகள் அடக்கம். நவம்பரில் வரும் தேங்க்ஸ் கிவிங் (நன்றி கூறும் நன்னாள்) ஹாலிடேயும் சில சமயம் அதில் அடக்கம். 96% கிறித்துவர்கள். பாக்கி 4% மக்கள் மற்றவர்கள். இவர்களுக்காக நாங்கள் ஏன் நாங்கள் இதுகாறும் சொல்லுவதை மாற்ற வேண்டும் ஹ தீபாவளி பற்றி உன் மூலம் தெரிந்து கொண்டேன். அடுத்த முறை கண்டிப்பாக உனக்கு வாழ்த்து கூறுவேன்”. என்றான்.
“இல்லை! நாங்கள் சந்திரனை வைத்து நாட்களைக் கணிப்போம். எப்போதும் தீபாவளி ஒரே ஆங்கிலக் காலண்டரில் வராது !” என்றேன்.
“அப்ப நீ சொல்லித் தான் எனக்குத் தீபாவளியைத் தெரியும்” என்றான், ஜான்.
“பாய்”க்கும் எனக்கும் பல வருடங்களுக்கு முன் இவ்வாறு சம்பாஷணை நடந்தது “பாய், தப்பாக நினைக்க மாட்டாங்களே ஹ. ரம்ஜான் நீங்க கொண்டாடும் போது நான் அது பற்றிக் கேக்காம இருந்தால் தப்பாக நினைக்க மாட்டாங்களே ஹ”. பாய் சொன்னார், “எங்களுக்கே பிறை தெரிந்தால் தான் எப்ப கொண்டாடுவோம் என்று இறுதியிட்டுச் சொல்லுவோம். மேலும் இக்கம்பெனியிலும் நான் ஒருவனே மைனாரிட்டி. அதனால் மற்றவர்கள் என்னைக் கண்டு கொள்ளாமல் இருந்தால் நான் அலட்டிக் கொள்வதில்லை ! இதெல்லாம் சகஜம், என்று கண்டு கொள்ள மாட்டேன்” என்றார்.
“ஜான், மற்றவர்களை மதிக்கும் பண்புள்ளவர்கள், “ஹேப்பி ஹாலிடேஸ்” என்று சொல்லுவது நல்லது என்று விழைகின்றனர்.கிறிஸ்துமஸ் கொண்டாடதவர்களுக்குப் இது போதுவாக இருக்கும். மைனாரிட்டிகளைப் புரிந்து கொள்ள வேண்டும்” என்றேன்.
“நான் அவ்வாறாக நினைக்கவில்லை !” என்றான் ஜான்.
“நீ தேவாலயம் போவியா ஹ” என்றேன்.
“என் மனைவி போவாள். எனக்கு அங்கு போர் அடிக்கும். அதுவும் மனிதர்கள் பேசுவதைக் கேக்க நிறைய நிற்க வேண்டும்”. என்றான் ஜான்.
“அப்ப ஹாப்பி ஹாலிடேஸ், ஜான் ”. என்றேன்.
“நீ கோவிலுக்குப் போவாயா ஹ” என்றான் ஜான்.
“இல்லை. கால் கடுக்க பார்ப்பதில் இஷ்டமில்லை !” என்றேன்.
“அப்ப நாம் மைனாரிட்டி தான். ஹேப்பி ஹாலிடேஸ் “, என்றான் ஜான்.
kkvshyam@yahoo.com
- நகைச்சுவைத் தொடர் – இம்மொபைல் ஆக்கும் மொபைல் -3
- நைல் நதி நாகரீகம், எகிப்தியரின் பிரமிட் படைப்பில் காணும் புதிர் வானியல் முறைகள் -9 [Egyptian ‘s Hermetic Geometry]
- 32 வது ஐரோப்பிய இலக்கியச் சந்திப்பு
- கொணர்ந்திங்கு சேர்க்கும் மதுமிதா (நூல் அறிமுகம்)
- ‘நிலாக்கீற்று ‘ தொகுப்பு-1
- பாரிஸில் 12-13 நவம்பர் 2005-ல் 32-ஆவது இலக்கியச் சந்திப்பு
- நான் கண்ட சீஷெல்ஸ் – 2
- சு.ரா.வுடனான முதல் கலந்துரையாடல் – IX
- த.தவமிருந்து ::: திரையில் ஒரு கிராமத்து ‘மெட்டி ஒலி ‘
- பூகோள இடநிலை உணர்த்தும் அமைப்பு (GPS)
- கடிதம் – மலர்மன்னன்: நேர்மையான படைப்பாளியின் தைரியமான கருத்துக்கள்
- தில்லை வாழ் அந்தணர்களுக்கு
- ‘சிந்தனா சுதந்திரம் ‘ என்ற அறக்கட்டளை தொடக்கம்
- பண்பாடும் கருத்தும் – கலந்தாய்வு அரங்கு – 08-12-2005 வியாழன்
- விளக்கு இலக்கிய அமைப்பு – ஒரு வேண்டுகோள்
- சக்கரியாவுக்கு உள்ள மரியாதை எனக்கு ஏன் இல்லை ?
- பாரதி இலக்கிய சங்கமும் காவ்யா அறக்கட்டளையும் இணைந்து நடத்திய 2005 ஆம் ஆண்டுக்கான பரிசுப் போட்டி முடிவுகள் சி. க நினைவுபரிசுப் போ
- ஈ.வே.ரா.: ஒரு முழுமையான பார்வை முயற்சியில்
- அவன் மீண்டான்
- சிங்கிநாதம்
- புனித அணங்கு ஜோன் ஆஃப் ஆர்க் (பெர்னாட்ஷா நாடகத்தின் தழுவல்) (முடிவுக் காட்சி)
- எந்தையும் தாயும்
- என் இனமே….என் சனமே….!
- இந்தியா : உலகமய வெற்றியும் மனிதவள தோல்வியும்
- ஜோஸப் கேம்பெல் -வாழ்க்கைக் கோலம்
- தத்துவார்த்தப் போர்கள்
- மைனாரிட்டி !
- லிஃப்ட்
- பெரியபுராணம் – 68 – 32. திருநீலநக்க நாயனார் புராணம்
- எழுத்து, கவிஞர், படைப்பு – கவிஞர் குஞ்ஞுன்னி நோக்கில்…
- ஒற்றித் தேய்ந்த விரல்
- இடம்
- ஒரு வசந்தத்தின் இறப்பு
- கீதாஞ்சலி (52) எங்கிருந்து வந்ததோ ? ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )