‘விண்மீன் விழுந்த இடம்;’-கவிஞர் கடற்கரய்யின் இரண்டாவது கவிதைத் தொகுப்பு குறித்த சில கருத்துப் பதிவுகள்-

This entry is part [part not set] of 26 in the series 20050722_Issue

லதா ராமகிருஷ்ணன்


-கவிஞர் கடற்கரய்யின் இரண்டாவது கவிதைத் தொகுப்பு குறித்த சில கருத்துப் பதிவுகள்- வெளியீடு காவ்யா பதிப்பகம் – முதற் பதிப்பு – டிசம்பர் 2004

ஓர் ஆப்பிளை புசிப்பதற்கு ஓர் ஏவாள் தேவையாயிருக்கிறாள் நமக்கு

அநாவசியமோ – அவசியமோ – வஸ்திரத்தின் வாசைன நுகர – ஓர் ஆப்பிள் அவசியமாக இருந்திருக்கிறது – நமக்கு_

தேவையோ – தேவையில்லையோ – பூடகக் கதையொன்று சொல்ல – ஒரு சர்ப்பம் தேவையாகி இருக்கிறது நமக்கு,

அது நம் விலா எலும்புக் கூட்டிலிருந்து – பிரித்து உயிர் உண்டாக்கப்பட்ட – ஓருடலுக்கு நம்மையே தாங்கும் வலிமை எங்கிருந்து கொடுக்கப்பட்டது – நண்பரே_

– கவிஞர் கடற்கரய்யின் ‘விண்மீன் விழுந்த இடம்;’ இரண்டாவது கவிதைத் தொகுப்பில் இடம் பெறும் இருந்த கவிதையில் வெளிப்படும் பகிர்வுத் தொனியும். பார்வைத் துலக்கமும். பூசி மெழுகாமல் கேட்கப்பட வேண்டிய கேள்விகளை கேட்கும் பாங்கும் கவிஞரின் கவித்துவ சிறப்புகளாக புரிபடுகிறது, தம் இனத்தை கேள்வி கேட்டு சிந்திக்க தூண்டும் வகையில் மேற்படி கவிதை ஒரு ஆணால் சிறந்த பெண்ணியக் கவிதையாகக் கொள்ளப்படத்தக்கது, ஆனால். எந்தவொரு விஷயத்தைப் பற்றியும் பேசுவதற்கான வலிந்த ஆயத்தங்கள் இவருடைய கவிதைகளில் தென்படுவதில்லை என்பதையும் இவருடைய கவித்துவத்தின் ஆக்கப்பூர்வமான அம்சமாகக் குறிப்பிடத் தோன்றுகிறது.

சமகால வாழ்வுச் சிக்கல்களைப் பற்றிய முழுப் பிரக்ஞையோடு கற்பனையுலகை சமைத்துக் கொள்பவன் கவிஞன், இந்த அம்சத்தை கடற்கரய்யின் பெரும்பாலான கவிதைகளில் காண முடிகிறது, வாழக் கிடைத்த வாழ்க்கை. வாழ விரும்பும் வாழ்க்கை ஆகிய ஏறத்தாழ இரு துருவங்களை இணைக்கும் பாலங்களாக குழந்தை. இயற்கை. பறவை. சூரியன் முதலிய படிமங்களைப் பயன்படுத்துகிறார் கவிஞர், கவிதை பரப்பில் வெளிப்படும் கற்பனா தீதங்களும் மேற்படி பாலங்களை கட்டமைக்கும் யத்தனங்களாகவே புரிபடுகின்றன,

‘ஏழாம் நூற்றாண்டில் தொலைத்திட்ட – வாழ் நெறியைத் தேடி – நேற்றொரு காட்டு மனிதன் எனதறைக்கு – வருகை புரிந்திருந்தான’ என்று தொடங்கும் ‘காட்டு மனிதன’; என்ற கவிதையில் ‘காட்டு மனிதனின்’; பாடலை நிறுத்த – மூன்றாம் உலக நாடுகளின் பரிணாம – பிரணவம் ஓத ஆரம்பித்தேன் என்று பேசி. இறுதியில் பிறகொரு நாள் அவன் கடந்திட்ட – பாதைகளில் கண்டெடுத்திட்ட துடுப்பு ஓலையொன்றில் – என் பெயர் பொறித்திருக்கக் – கண்டேன்’ என்று முடியும் போது கவிதைக்குள் காலப்பிரக்ஞையும். முக்காலங்களின் ஊடாட்டமும் இயங்கும் விதங்களைக் காண முடிகிறது, ‘வெயில் காகம் ’ கவிதை ‘காகம’; என்ற வழக்கமாக வாழ்வின் சராசாரித் தனத்தோடும். யந்திர தனத்தைத் தோடும் அதிகம் தொடர்பு படுத்திப் பேசப்படும் சாதாரணப் பறவைக்கு (அதாவது பொதுப் பார்வையில்) செய்யப்பட்ட சிறப்பு மரியாதை ‘தன் கரைப்பொலியின் அலகால் – ஆகாயம் கீறி – நகரத்தின் சர்வ உடலையும் – வெயிலால் ஸ்பரிசித்த காகம் – தன் தேகம் முழுமைக்கும் – கருமை சுமந்தலைந்தது’,

காகத்தின் கருணை – நகரத்தை மிருதுவாக்கி வைத்திருக்கிறது – எனவும். ‘ஒரு துண்டு’ ஒளி உண்ட காகம் ஊரெல்லாம் விரைந்து – வெளிச்சம் ததும்பும் நகரத்தினை – ஓவியமாய்த் தீட்டி நகர்நதது,

– இப்படி – நீர் நிலம் காற்று வானம் எல்லாம் – எல்லாம்- முன்பாகவே யாரோ ஒருவன் – புழங்கிப் போனதாக – எப்படி சாத்தியம் – என்னிலிருந்து – இதற்கு முன்பாக – எழுதப்படாத – பாடப்படாத – ஒரு கவிதை – ஒரு பாடல்,

– கவிஞர் ‘கடற்கரய்யின்’ ‘ஏற்கனவே’ என்ற தலைப்பிட்ட கவிதையின் முடிவு வரிகள் மேலே தரப்பட்டிருக்கின்றன, ‘விண்மீண் விழுந்த இடம்’ என்ற அவரது இரண்டாவது தொகுப்பில் இடம் பெற்றுள்ள கவிதைகள் நிறுத்தற்புள்ளிகளற்ற வரிகளைக் கொண்டமைந்திருப்பது பிரக்ஞைபூர்வமான கட்டமைப்பு என்று கொள்ள (திறந்த முனைக் கவிதைகள் நவீன கவிதையாக்கப் போக்கு என்ற அளவில்) – மேற்படி வரிகள் இரண்டு விதமாக வாசிக்கப்பட வழியிருக்கிறது, ‘ஏற்கனவே’ என்ற தலைப்போடு பொருத்திப் பார்க்க முன்பாகவே யாரோ ஒருவன் புழங்கிப் போனதாக இருக்கும் நிலையில் இதற்கு முன்பாக எழுதப்படாத ஒரு கவிதை எப்படி சாத்தியமாகும் ‘என்னிலிருந்து’ என்று எதிர்மறை பதிலைத் தரும் கேள்வியாய் விளக்கம் தரும் இதே வரிகள் மறு வாசிப்பில் ‘எல்லாம் முன்பாக யாரோ ஒருவன் புழகிப் போனதாக இருப்பது சாத்தியமில்லை – எனவே. இதற்கு முன்பாக எழுதப்படாத. பாடப்படாத ஒரு கவிதையும். பாடலும் என்னிலிருந்து வரும் வருவதற்கான சாத்தியப்பாடு ‘உண்டு’ என்பதாகவும் பொருளைத் தருவது சாத்தியமாகிறது, அவரவர் மனதில் மனநிலைக்கேற்பவும். வாசிப்பு சாத்தியங்களுக்கு ஏற்பவும் நிறுத்தற்குறிகளும். அவற்றின் இடங்களும் பிறப்பெடுக்கும், அப்படித்தான் ‘விண்மீண் விழுந்த இடம்’ குறித்த கவிஞனின் ‘முதிர்ச்சியடைந்த மனித மனஅறிவும்’ குழந்தைக் கனவுமாக கவிதைகளாக உருப்பெற்றிருக்கும் இத்தொகுப்பிலும். ஓரே பிரதி வெள;வேறு விதமாக அர்த்தம் தரும் சாத்தியப்பாடுகள் கணிசமாகவே உள்ளன, உதாரணத்திற்கு ‘வெட்டுக்கிளி’ மதுக்குவளை என்ற கவிதையைப் பற்றி குறிப்பிடுகையில் கவிஞர் ஞானக்கூத்தன் ‘உரையாடியின் நடத்தை வெட்டுக்கிளி போல் மாறுவது அவன் மீது நமக்கு வருத்தத்தைத் தருகிறது’ என்று தனது முன்னுரையில் கூறியிருக்கிறார், அதுவே என் வாசிப்பில் போதை வஸ்துகள் என் பச்சை நரம்பு – தார்ச்சாலை வழியே ஊர்ந்து சென்றன ஒரு – கனரக வாகனமாய் – அங்கங்கள் யாவும் விரவி – எகிறி எகிறி உயர்ந்து கொண்டே போனேன் – போதை மரத்தின் மேலே’ என்று முன்னேறும் கவிதை. ‘தனிமைச் சுகம் – பருகப் பருக இனிமை ஏறுகிறது – இறுதிப் பகிர்வின் சமயம் – அதுவரை துள்ளித் துள்ளி அறையை வட்டமடித்திருந்த – வெட்டுக்கிளியொன்று மதுக் கோப்பையுள் விழுந்தது, அதைப் பருகியது – துள்ளித் துள்ளித் தாவலானேன் – வானுக்கும் தரைக்குமாய்’ என்று முடியும் வரிகளில் வெட்டுக்கிளியையொத்து கவி ?ன் துள்ளித் துள்ளித் தாவுவதில் ஒரு வித அபூர்வ ஆனந்தமே புரிபடுகிறதே தவிர வருத்தப்பட எதுவுமில்லை, யாருடைய வாசிப்பு சரி என்பதல்ல இங்கு முக்கியம், பன்முக வாசிப்பிற்குக் கவிதையில் இடமிருக்கிறது என்பது தான் பிரதானம், தவிர தனிமைச் சுகம் என்பதோடு வெட்டுக்கிளி எப்படி தொடர்புடையதாகிறது – ஆக்கபூர்வமாகவா. எதிர்மறையாகவா என்றெல்லாம் நமக்குள் கேள்விகள் எழுகின்றன, இந்தக் கவிதையில் இடம் பெறும் படிமங்கள். குறியீடுகள் யாவும் குறிப்பாலுணர்த்ப்படும் விஷயத்தோடும். ஒன்றுக் கொன்றும் ஒத்திசைவு கூடியினவாக உள்ளதா. இல்லையா என்பதெல்லாம் இரண்டாம் பட்சமாக அந்தப் படிமங்களும். பிம்பங்களும் விரித்து வைக்கும் காட்சிகள் நமக்குள் இலகுவாக இடம்பிடித்துக் கொள்கின்றன, (உ-ம்) அறை ஒரு மதுக்குடவையானது – நான் ஒரு துண்டு ஐஸ்கட்டியாய் அதனுள்,

மற்றும் கனரக வாகனத்தின் குதியோட்டமும். வெட்டுக்கிளியின் குதியோட்டமும் கவிதையில் போதையின் கட்டந்தனை அல்லது மட்டந்தனைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டிருக்கும் விதமும் கவித்துவம் மிக்கதாய் அனுபவமாகிறது,

‘தும்பைப் பூ நிறம்’; என்று அப்பழுக்கற்ற வெள்ளை நிறத்தைக் கூறுவது வழக்கம், ‘தும்பிப் பூ’ என்று தும்பியைப் புகழ்ந்தேத்துகிறது இந்த கவிமனம், அதன் சன்ன இறகுகளை நாம் மனதில் கொண்டு வந்தால் அதை பூ என்று கூறுவதன் பொருத்தம் துலக்கமாகும், தும்பியைப் பிடிக்கும் பிள்ளை விளையாட்டை அழகுறப் பேசுவதோடு நில்லாமல் கவிதை அதை முன்வைத்து வாழ்க்கை விளையாட்டை பேசுவதும் புரிகிறது,

குதிரை சவாரி. நீராடும் மங்கை. தைல வண்ண மனிதன் என வரைச் சட்டங்களுக்குள்ளான படங்கள் கவிஞர் கைவண்ணத்தில் உயிர்த்தெழுகிறார்கள், கவிதைகளின் தலைப்புகளே ஒற்றை வரிக் கவிதைகளாக ஏற்றும் பெறுவதையும் பல இடங்களில் காண முடிகிறது, அன்பின் குளம். வெயில் காகம். கோடைப்புலி. விறுவிறுப்பாகப் பறக்கும் பகல் என பல தலைப்புகளை உதாரணங்காட்டலாம், நேயம் மிக்க மனம். வாழ்வின் அடிமட்டப் பிரிவினரிடம் நேயம் மிக்க மனம். சாதாரண வாழ்க்கை என்று எதுவுமேயில்லை, வாழ்க்கையே அசாதாரண விஷயம் தான் என்று அன்பு ததும்பக் கூறும் கவி மனம் ‘தொப்பி நெய்பவள்’ பரிசளித்த தொப்பிக்குள் எட்டிப் பார்க்க அங்கே ‘சின்னதொரு குளம்’ இருந்ததில் எந்த வியப்புமில்லை_

இத்தகைய அன்பு ததும்பும் விவரிப்புகள். அநாயாசமாய் வாழ்க்கையில் அசாதாரணத்தைக் காட்டும் விவரிப்புகள் இந்தத் தொகுப்பில் கணிசமாகவே உள்ளன, ‘அதிகாலை தேநீர்’ கவிதையில் அப்படிதான் அமைந்துள்ளன வரிகள், தேநீரில் மிதக்கும் – இந்த அதிகாலையைச் – சட்டைப் பைக்குள் திணித்தேன் – முயல் குட்டி போன்று துள்ளிற்று, – இரண்டு காதுகள் பிடித்து – தூக்கிய அதிகாலையோடு – வந்து விழுகிறது – இரண்டு மாமிசத் துண்டுகள் – என்ற வரிகளில் எங்கோ ஒளிந்திருக்கின்றன சில ‘புரிதல் தொடர்பான மர்ம முடிச்சுகள்’, அவற்றைக் கண்டுபிடித்து அவிழ்க்க முடியாமல் போனாலும் கூட ‘தேனீரில் மிதக்கும் அதிகாலை’. அது சட்டைப் பைக்குள் திணிக்கப்படுவதால். முயல் குட்டி போல் துள்ளுதல் முதலிய காட்சிப் படுத்தல்களைக் கட்டாயம் ரசிக்க முடியும், இந்த மர்ம முடிச்சுகள் தாங்கிய கவிதைகளும் தொகுப்பில் கணிசமாகவே இடம் பெற்றுள்ளன, ஒரு கவிஞரின் தொகுப்புகளிலான படிமங்கள். குறியீடுகள் பற்றியெல்லாம் அகல்விரிவான ஆய்வலசல்கள் மேற்கொள்ளப்படும் போது அவர் கையாளும் சங்கேதக் குறிப்புகள் நமக்கு பிடிபட்டு விடும் என்று தோன்றுகிறது, நிறைய கவிஞர்களின் தொகுப்புகளில் ஒரு கவிதை முன் வைக்கும் கேள்வி அதே தொகுப்பிலோ. அல்லது சம்மந்தப்பட்ட கவிஞரின் வேறு தொகுதிப்பிலோ பதிலளிக்கப்படுவதை அவதானிக்க முடியும், இந்த அம்சம் கடற்கரய்யின் கவிதைகளிலும் உண்டு, எட்டு கவிதைகளை கொண்ட ‘வீடு’ என்ற நீள் கவிதையும். ஐந்து கவிதைகளை கொண்ட ‘மீன் வியாபாரி’ என்ற நீள் கவிதையும். ஏழு கவிதைகளைக் கொண்ட ‘குழந்தைச் சரித்திரம’; என்ற நீள் கவிதையும் குறிப்பிடத்தக்க படைப்புகள், குழந்தைகள் கற்பனை. எதிர்காலம். கபடின்மை. ஆழகு. தூய்மை என மனிதனின் இலட்சியார்த்த இயக்குவிசைகள் பலவற்றிற்குக் குறியீடாத அமைபவர்கள், கவிஞர் கடற்கரய்யின் கவிதைகளில் குழந்தைகளுக்கென்று பிரத்யேக இடமும். பங்காற்றலும் அமைந்திருப்பதை உணர முடிகிறது,

அருகம் புல் மீதமர்ந்த பனித்துளி போன்று – சோபை கொண்டிந்த நிசப்தத்தின் மேலூர்ந்து (வீடு) என் பூர்வீக வீட்டில் குருவிகள் குடியிருக்கும் – நல்ல வாசனையை உருவாக்கித் தரும் – என் கிராமத்து வீடு விலை மதிப்பற்றது – நல்ல வாசனையை உள்ளிழுக்கத் திணறும் – என் நகரத்து வீடு விலை மதிப்புள்ளது (வீடு – 7) மதிப்பற்ற. மதிப்புள்ள என்ற வார்த்தைகளில் மதிப்பு புதுப் பரிமாணம் எய்துகிறது, இரவுப் பழத்தை – முந்திரிக் கொட்டை – உடைப்பதைப் போல் லாவகமாய்ப் பிடித்து – உடைக்கிறேன் (இரவு மரம் -3) ‘பூனையாகி விழித்திருக்கும் – இரவிற்குப் – பிள்ளைகள் பகல் வேளைகளில் – பிஸ்கெட் இடுகிறார்கள் (இரவு மரம் -4) – என கவித்துவம் மிக்க. கற்பனை வளம் மிக்க வரிகள். ஆநாயாசமாய் கவிஞரிடமிருந்து கிளம்பி தொகுப்பு பூராவும் விரவியிருக்கின்றன,

‘பகல் – இரவாகிறது – இரவு பகலாகிறது – பைத்தியத்தின் மொழியில் – இரவும் பகலும் ஒன்றாகிறது’ என்று வெறும் விரிவுரையாய் சுருங்கி விடும். ஏற்கனவே நிறையப் படித்தாகி விட்ட உணர்வைத் தரும் கவிதைகளும். ஆங்கங்கே காணப்படுகின்றன, (உ-ம் மாற்று. பூட்டிய கதவு) சில சமயங்களில் கவிதைகளில் தத்துவத் தொனியும். விரக்தி மனப்பான்மையும் தேவைக்கு மீறி தூக்கலாகத் தெரிவதாகப்படுகிறது,

வீட்டிடமிருந்து கற்றுக் கொள்ள – என்ன இருக்கிறது – நமக்கு – எதற்கும் மெளனம் சாதிக்கும் – அதனிடமிருந்து எதை நாம் கிரகித்துக் கொள்ள – இயலும்’ என்று ஆரம்பமாகும் கவிதை (வீடு – 2) வீட்டிடமிருந்து கிரகிக்க உள்ளது ஏராளம் – நிசப்தம் தழைக்க தருவாகி நிற்கும் – அதன் விசால மனப்பாங்கிலிருந்து கற்றுக் கொள்ள – ஒரு மிடறு நிசப்தத்தை என்பதாய் முடியும் போது வீடு என்ற கட்டிடமும். அதற்குள் இருக்கும் மனிதர்களும் தரஒவயிடிளந செய்யப்படுகிறார்களா அல்லது ஒரு பார்வைக்கு ஒருவாறு தெரியும் ஒன்று மறு பார்வையில் வேறு பரிமாணத்தில் புரிபட வாய்ப்புண்டு என்று சுட்டுவதுதான் கவிதையின் நோக்கமா என சில கேள்விகள் நம்முள் எழுகின்றன,

மரவட்டை போல் சுருண்டு கிடக்கிறேன் – ஒரிடத்தில்

மழையைப் பார்க்க லபிக்காத ஷென்மத்தில் –

என்ன தான் மகத்துவம் கிட்டுமோ போங்கள்

என்ற வரிகளின் அலுப்பு (கிடக்கிறேன் என்ற வார்த்தை முன்னிலையாகவும் பிரயோகப்படுத்தப்பட்டிருக்கலாம் என்ற போதும்) சற்று மிகையுணர்ச்சி கூடியதாகக் தோன்றுகிறது, மழையைப் பார்க்காமல் எதற்காக நான் சுருண்டு கிடக்க வேண்டும்; நடைமுறை வாழ்க்கையில் அதை செய்தாக வேண்டியிருக்கிறதென்றால் அந்த அறிதலின் பின் இத்தனை அலுப்பும். புலம்பலும் அவசியமா ? என்றெல்லாம் சில இருத்தலியல்சார் கேள்விகள் எழுகின்றன,

அதேபோல் ‘திடார்’ மழையில் பூரிப்புடன் குழந்தைகள் டூ கப்பல் செய்யத் தயாராகி விட்டார்கள்’ என்ற ஆரம்ப வரிகளில் ‘திடார் மழை;’ என்ற சொற்பிரயோகம் ஆனந்தத்திற்கு உரியதாக இடம் பெற்று அடுத்த சில வரிகளில் ‘உள்ளிருந்து திடார் மழைச் சாயலோடு – ஒரு திடார் குரல் – ‘எங்கிருந்தெடுத்தீர்கள் இந்த காகிதத்தை’ – அதட்டும் பேர்வழிகள்,

– என்பதாய் அதே ‘திடார் மழை’ என்ற சொற்பிரயோகம் அச்சத்திற்குரியதாகவும் இடம் பெறுவது வாசிப்பனுபவத்திற்கு இடையூறு செய்கிறது,

ஒரு கவிஞர் எழுதியுள்ள விஷயங்களைப் பற்றிய நம் கருத்துக்களை முன் வைப்பதைவிட்டு இதை ஏன் எழுதவில்லை ? என்று கேள்வியெழுப்புவது சரியல்ல, வாழ்வின் அத்தனை விஷயங்களையும் கவிஞர் ஒரே தொகுப்பில் எழுதி விட இயலாது, எல்லா தொகுப்புகளையும் சேர்த்த அளவில் கூடி எழுதி விட முடியும் என்று சொல்லிவிட முடியாது, இதைத்தான் நான் எழுத வேண்டும் என்று திட்ட வரைவு தீட்டிக் கொண்டு ஒரு கவிஞன் எழுதப் புகுவதும் எவ்வளவு தூரம் சரி என்று தெரியவில்லை, எனவே கவிஞர் கடற்கரய் தொகுப்பில் எந்தெந்த விஷயங்களைப் பேசவில்லை என்று பட்டியலிட வேண்டியதில்லை என்று படுகிறது,

கவிஞர்களுடைய மொழிப் பிரக்ஞை பிரத்யேகமானது; உள்ளார்ந்த அளவில் அது அவர்களை இயக்கி வருகிறது என்ற நம்பிக்கை எனக்குண்டு, அதனால் கவிஞருடைய கவிதை வரிகளில் இலக்கண சுத்தம் பார்க்க முற்படவில்லை நான், அது தேவையுமில்லை, அதே சமயம் ‘வெளிக்கோடி’ என்பதாய் ‘திறந்த வெளிக்குள் ஓடி’ என்ற பொருளைத் தரவென்று உபயோகிக்கப்படும் சொல் குழப்பமுண்டாக்கும் பொருளை தருகிறது, இத்தகைய பிரயோகங்களை அதிக கவனத்துடன் நாம் கையாள வேண்டும், (கவிதை ஸ்ரீ பறவைகள் அழகை கவிதையில் ரசிப்பவன் -ப,21)

சிறந்த அரசியல் கவிதை என்று சொல்லத்தக்க ‘தைலவண்ண மனிதன்’ நவீன கவிதை மொழியை இறுக்கமாகத் தன் வசப்படுத்தியிருக்கும் ‘காட்டு மனிதன்’ என நிறைய கவிதைகளை கவிஞர் கடற்கரய்யின் கவித்துவத்திற்கு உதாரணங்காட்ட முடியும், எளிமையான. ஏனில் நிறைவான முன் அட்டை. அதிகம் பிழையற்றிருக்கும் அச்சாக்கம் முதலியவற்றை பிரத்யேகமாகக் குறிப்பிட்டுச் சொல்லத் தோன்றுகிறது

(‘பன்முகம்’ இதழில் வெளியான கட்டுரை)

Series Navigation

லதா ராமகிருஷ்ணன்

லதா ராமகிருஷ்ணன்