தேவமைந்தன்
அன்புள்ள ஆசிரியர் அவர்களுக்கு,
வணக்கம்.
இன்றுதான், 28/03/2008 வெள்ளிக்கிழமை திண்ணையைப் பார்க்க இயன்றது. ஓய்வில்லாத பணிகளுக்கிடையிலும் நான் வாசிக்க வாய்த்த – திண்ணையில் வந்துள்ள தங்களின் ‘திண்ணைப் பேச்சு – அன்புள்ள வஹாபி’ என்ற அக்கறை மிக்க அறிவுப் பகிர்தல், இஸ்லாம் குறித்து நான் கொண்டிருந்த கருதுகோள்மீது தெளிவான வெளிச்சத்தை வீசியது.
தாங்கள் குறிப்பிடுவதுபோல், நாம் பிறக்கும்பொழுது எழுதப்படாத சிலேட்டுகளாகத்தான் பிறக்கிறோம்; பிறகுதான் வளர வளர, பெற்றோர் உற்றோர் தொடக்கமான சமூகத்தாலும்தான் ‘பணித்திட்டம்’(Programme) எழுதப்பெறுகிறோம் என்பதும்தான் இயல்பான உண்மைகள்.
“அறிவு பெற்றபிறகு பகுத்தறிவால் ஆய்ந்து உணர்ந்து தேர்வு செய்துகொள்கிற நம்பிக்கை தான் உண்மையானதாய் , ஒரு மனிதனின் இயல்பிற்குத் தக்கதாய் இருக்க முடியும்” என்பதைத்தான் இங்கர்சாலும் தன் வாணாள் கருத்தியலாக உலகின் முன்வைத்தார். கருத்துத் திணிப்பாலும் கட்டாயத்தாலும் வன்முறையாலும் உலகில் எந்தச் சமயமும் வளர்ந்ததில்லை. மிகமிக அருமையான கருத்தாடல்களைத் தமிழ்ச் சமூகத்தின்முன் வைத்த திருக்குறள், சிலப்பதிகாரம், சீவக சிந்தாமணி முதலிய அரிய நூல்களைத் தந்த சமணமும்(நண்பர் ஜடாயு பொறுத்துக்கொள்க!); ‘மக்களின் பசிப்பிணி போக்குவதே மெய்யான அறம்’(“மண்திணி ஞாலத்து வாழ்வோர்க் கெல்லாம்/ உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே!”), “சிறைச்சாலையை அறச்சாலை ஆக்க வேண்டும்!” முதலான சீரிய கருத்தியல்களை வள்ளலார் போன்ற தமிழ்ச் சமூகப் புரட்சியாளர்களுக்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே தந்த மணிமேகலை என்னும் அறநூலைத் தமிழர்களுக்கு நல்கிய பெளத்தமும் அவற்றின் கடுத்தமான – இயல்பாக ஓர் ஆணோ பெண்ணோ பின்பற்ற மிகுதொல்லையான – இறுக்கமான – ஆகவும் விட்டுக்கொடுக்காத தன்மைகளால்தாமே இன்று ஆய்வுக் கட்டுரை எழுதும் அறிஞர்களோடு மட்டுமே நிலைப்பட்டுவிட்டன? இதற்கு ஜார்ஜ் போன்றோர் ‘நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ இதழில் என்ன காரணிகளை எழுதினாலும் சரியே..அவற்றை எதிர்த்து நிலைப்பட ஏன் இந்தச் சமயங்களால் முடியவில்லை? – என்ற கேள்விக்கு – “அறிவு பெற்றபிறகு பகுத்தறிவால் ஆய்ந்து உணர்ந்து தேர்வு செய்துகொள்கிற நம்பிக்கை தான் உண்மையானதாய் , ஒரு மனிதனின் இயல்பிற்குத் தக்கதாய் இருக்க முடியும்” என்ற தங்களின் கூற்றே ஏற்ற மறுமொழியாக இருக்க முடியும்.
“மனிதனின் இருப்பு முன் கூட்டியே நிர்ணயிக்கப் பட்டுவிட்டால், அவனுடைய சுயம் என்பது என்ன? சுதந்திரத் தேர்வு என்பது என்ன? அப்படித் தேர்வு இல்லையென்றால் அவன் செயல்களுக்கு அவன் எப்படி பொறுப்பாவான்? சொர்க்கம் நரகம் என்ற கருத்தாக்கம் எப்படி பொருள் கொள்ளும்?” என்ற தங்கள் கேள்வியை வஹாபி போன்றோர் கருத்தில் எடுத்துக் கொண்டு, ‘தயாராக உள்ள பதில்களைப் பதிவு செய்வதை’த் தவிர்த்துக் கொண்டு அளவையியலை(Logic) சற்றே மதித்துத் தம் கருத்தாடல்களை முன்வைத்தால் இஸ்லாத்தை இயல்பாகப் பலர் புரிந்து கொள்வார்கள். இஸ்லாமுக்கு அவர்கள் தருகின்ற, ஆகவும் சிறந்த பங்குப்பணியாகவும் அது திகழும் என்று கருதுகிறேன்.
அன்புடன்,
தேவமைந்தன்
- தொடுவானம் தொட்டுவிடும் தூரம் – அத்தியாயம் 5
- வீடு
- அஷ்டாவதானம்
- நாயைப் போல் எனது வாழ்க்கை – My life as a dog
- பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! வியாழன் ஏன் பரிதிபோல் விண்மீனாக வில்லை ? (கட்டுரை: 23)
- எனிஇந்தியனின் வார்த்தை இதழ், நான்கு புதிய புத்தகங்கள் வெளியீடு
- உன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 3 பாகம் 1 (சுருக்கப் பட்டது)
- காற்றினிலே வரும் கீதங்கள் – 13 காதல் யாசகி நான் !
- தாகூரின் கீதங்கள் – 24 இறைவனைத் தேடி இல்லறத் துறவி !
- வார்த்தை ஏப்ரல் 2008 இதழ் – ஒரு முன்னோட்டம்
- சம்பந்தமில்லை என்றாலும் – திராவிடச்சான்று -எல்லிசும் திராவிடமொழிகளும்
- அவன்
- கோஸவா சுதந்திர பிரகடனமும் அதன் பின்னுள்ள உலக அரசியலும்
- ஆறு கவிதைகள்
- “நாம்” அறிமுகம் “சிங்கப்பூரில்”
- தமிழுலகத்தின் ஆதரவில் – ‘பிரான்சு இலக்கியக் கூடல்’- மூன்றாம் சுற்று
- மறைந்த எழுத்தாளர் அசுரனின் சிந்தனைகளைத் தொகுத்து வெளியிடும் திட்டம்
- ஆ கா ய ம் வா ட கை க் கு…”வானவில் கூட்டம்” – உலகத் தமிழர் கதைகள் தொகுப்புக்கான அணிந்துரை
- தமிழ்,திராவிட இயக்க உணர்வாளர்கள் பார்வையில் திருக்குறள் – 1
- எழுத்துக்கலை பற்றி இவர்கள்………..18 வாசந்தி
- பாகிஸ்தான் பாரதி
- அகரம்.அமுதாவின் வெண்பாக்கள்!
- ‘திண்ணைப் பேச்சு – அன்புள்ள வஹாபி’ பற்றி
- முகமதியர் பார்ப்பனர் சர்ச்சை: ஒரு குறுக்கீடு
- விரைவில் இலண்டனில் ஈழத்து தமிழ் நூற் கண்காட்சி – 2008
- குழந்தை
- தமிழ்பிரவாகத்தின் அறிவிப்பு
- அடையாளங்களை அழித்துக் கொள்ளும் சிலேட்டுகள்
- ஊழிக்கூத்து – எழுத்து, இயக்கம் – வெளி ரங்கராஜன்
- காட்டாற்றங்கரை – 1
- கடவுள் வந்தார்
- அடுக்குமாடி காலணிகள்
- கர்நாடகம் தமிழகம்
- என் வீடு
- “ஏர்வாடியில் கண்டெடுத்த ஏட்டுச்சுவடிகள்”
- கவிதைகள்
- நினைவுகளின் தடத்தில் – (7)
- பின்னை தலித்தியம்
- தித்திக்கும் தீந்தமிழ் எத்திக்கும் பரவட்டும்!
- கடவுள் தொகை
- மன்னியுங்கள் தோழர்களே…
- ஜனவரி இருபது
- நடை
- கழுதை வண்டிச் சிறுவன்