நா கோபால் சாமி
அமெரிக்கத் தமிழ் இலக்கிய ஆர்வலர்களின் அமைப்பான ‘விளக்கு ‘ 2001-க்கான புதுமைப் பித்தன் இலக்கிய விருதை நாவலாசிரியை ஹெப்சிபா ஜேசுதாசனுக்கு வழங்க முடிவு செய்துள்ளது. இதுவரை இந்த விருதைப் பெற்றவர்கள் சி சு செல்லப்பா, பிரமிள் , கோவை ஞானி, நகுலன் பூமணி ஆகியோர். வெளி ரெங்கராஜன், கவிஞர் இன்குலாப், எழுத்தாளர் கோ ராஜாராம் ஆகியோர் கொண்ட நடுவர் குழு, ஹெப்சிபா ஜேசுதாசனை விருது பெறத் தெரிவு செய்துள்ளது.
ஹெப்சிபா ஜேசுதாசனின் ‘புத்தம் வீடு ‘ நாவல் பலவிதங்களில் தமிழ் நாவல் இலக்கியத்தில் சிறப்பான இடம் பெற்றுள்ளது. யதார்த்தத்தின் மிக ஆழமாய்க் கால் பதித்து, தம்முடைய மக்களின் வாழ்க்கையை சிறப்பாய்ப் பதிவு செய்துள்ளார், ஹெப்சிபா ஜேசுதாசன். இது வந்த காலகட்டத்தில் இருந்த கற்பனாவாதத்தின் போக்கை மிக ஆழமாய் இந்த நாவல் கேள்விக்குள்ளாக்கியது. இதன் பிறகு வெளிவந்த டாக்டர் செல்லப்பா, அனாதை, மானீ நாவல்கள் தமிழ் நாவல் பரப்பில் ஹெப்சிபா ஜேசுதாசனுக்கு மிக முக்கியமான இடம் ஒன்றை அளித்துள்ளது.
திருவனந்தபுரம் பல்கலைக் கழகத்தில் பணியாற்றிய ஹெப்சிபா ஜேசுதாசன், தன் கணவர் ஜேசுதாசனுடன் இணைந்து ‘தமிழ் இலக்கிய வரலாற்றை ‘ ஆங்கிலத்தில் எழுதியுள்ளார்.
பரிசளிப்பு விழாவும் அதையொட்டிய கருத்தரங்கும் திருவனந்தபுரத்தில் நடைபெறவுள்ளது.
நா கோபால் சாமி
அமைப்பாளர்
விளக்கு தமிழிலக்கிய நிறுவனம்
மேரிலாந்து அமெரிக்கா.
- காதலும் சிகரெட்டும்
- மலரோடு மலர் சேர்ந்து மகிழ்ந்தாடும்போது – 8 – தொடர்கவிதை
- சொந்தம்
- சிறப்பு தள்ளுபடி
- கண்களே! கண்களே!
- சான்ாீஸ் மலை அழகி
- மனம் என்னும் பறவை (எனக்குப் பிடித்த கதைகள் – 40-சுஜாதாவின் ‘முரண் ‘)
- ஹெப்சிபா ஜேசுதாசனுக்கு ‘விளக்கு ‘ அமைப்பின் விருது
- மலையகத்தின் மூத்த எழுத்தாளர் கே. கணேஷ்
- நிழல் பரப்பும் வெளி – நகுலனின் கவிதைகள் பற்றி
- இலங்கை தமிழ் எழுத்தாளருக்கு கனடாவின் இலக்கிய விருது
- பரிதி மைய நியதியை நிலைநாட்டிய காபர்னிகஸ் [Copernicus] (1473-1543)
- அறிவியல் மேதைகள் பிதாகரஸ் (PYTHAGORAS)
- அவரவர் வாழ்க்கை
- அன்பிற்கோர் அஞ்சலி..
- காதல்
- கிராமத்து அதிகாலை
- காலம் வெல்லும் கலைநெள்ளி
- சொல்லயில்
- பாரதி தரிசனம்
- விளங்காத விந்தை. வியப்பு கொள்ளும் நம் சிந்தை.
- பனி தூவும் பொழுதுகள்…!
- இந்த வாரம் இப்படி – டிஸம்பர் 15, 2002 ( மோடிவித்தை, நாகப்பா கொலை)
- ஹரப்பா ‘குதிரை முத்திரை ‘ : மோசடியாக ஒரு மோசடி
- பாகிஸ்தானிய இயக்கத்தில் இருந்த முதலாளித்துவ இழை
- தென் அமெரிக்காவின் வேலையில்லாத்திண்டாட்டம் உச்சத்துக்குச் செல்கிறது
- ஹெப்சிபா ஜேசுதாசனுக்கு ‘விளக்கு ‘ அமைப்பின் விருது
- வரவிருக்கும் தண்ணீர் போர்கள் – இறுதிப்பகுதி
- சிவராமனின் சோகக் கதை