ஸ்ரீ குருஜி நூற்றாண்டு விழா சிந்தனையாளர் அரங்கம்

This entry is part [part not set] of 41 in the series 20061109_Issue

அறிவிப்பு



ஸ்ரீ குருஜி நூற்றாண்டு விழா சிந்தனையாளர் அரங்கம்

இடம்: ஜனரஞ்சனி அரங்கம், காந்தி பார்க் எதிர்புறம், கும்பகோணம்

நாள்: ஐப்பசி 27 ( 13.11.06), திங்கள் கிழமை

நேரம்: சரியாக மாலை 5.30

தலைமை: ஸ்ரீ சுவாமி ப்ரஹ்ம்மவித்யானந்தா
இவர், பூர்வஸ்ரமத்தில் பொறியியல் பட்டமேற்படிப்புப் படித்தவர்; பின் தனது பொறயாளர் பதவியை உதர்விட்டு ஸ்ரீ சுவாமி தயானந்த ஸ்ரஸ்வதி அவர்களிடம் ஸ்ன்யாசம் பெற்று, ரிஷிகேசத்தில் வேதாந்தம் மற்றும் ஸ்ம்ஸ்க்ருத பாடங்க்ளில் ஆச்சார்யர்ராக இருந்தவர்.

முதல் அமர்வு

நெறியாளர்: டாக்டர் பத்ரிநாராயணன் M.com,M.phl, Phd.
தலைப்பு: “பாரதீய வாழ்க்கை முறையில் சுற்றுப்புறச்சூழல் பாதுகாப்பு”

இவர், ஆராய்ச்சியாளர், கட்டுரையாளர், பேச்சாளர், சுற்றுப்புற சூழல் ஆர்வலர்; “பசுமைக் காவலர்” விருது பெற்றவர்; சுற்றுச்சூழல் பாதுகாப்பையே தனது வாழ்க்கை லக்ஷ¢யமாகக் கொண்டவர்; ஸ்ரீ ஆண்டவன் கல்லூரி, திருச்சியில் முன்னாள் முதல்வர்; இன்நாள் பேராசிரியர், SASTRA.

இரண்டாம் அமர்வு

நெறியாளர்: மதிப்பிற்குரிய மலர்மன்னன் அவர்கள்
தலைப்பு: “ஹிந்துத்வமும் ஊடகங்களும்”

இவர், நாற்பதாண்டு கால எழுத்தாளர்; ஆங்கிலத்திலும் தமிழிலும் தேர்ந்த பத்திரிகையாளர்; இலக்கிய சொ¢வும், கலாசார மேம்பாட்டையும் நோக்கமாகக் கொண்ட தரமான பத்திரிகைகளின் ஆசிரியராய் இருந்தவர்; மலைவாழ் மக்களின் மேம்பாட்டிற்காக அவர்களிடையே பல்வேறு மாநிலகளில் பணியாற்றியவர்; முன்நாள் முதல்வர்கள் மாண்புமிகு அண்ணாதுரை மற்றும் மாண்புமிகு காமராஜ் ஆகியோரின் நண்பர்.

மூன்றாம் அமர்வு

நெறியாளர்: மதிப்பிற்குரிய ரவிகுமார் அவர்கள்
தலைப்பு: “நமது கலாசாரத்தில் உலகமயமாக்கலின் தாக்கம்”

இவர், சென்னை,Madras Institute of Technology யின் முன்னாள் மாணவர்; எல்&ட்டி, டாட்டா ஆகிய நிறுவனங்களில் திட்ட பொறியாளராக(Project Engineer) இருந்தவர்; 1975 முதல் தனது வருமானம் தரும் பணிகளை உதவிட்டு மலைவாழ் மக்களிடையே அவர்களது கல்வி, சுகாதாரம் இவற்றின் மேம்பாட்டிற்க்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றியவர்; 1982 முதல் ஆசியா பசிபிக் நாடுகள், வளைகுடா நாடுகள் மற்றும் அமொ¢க்க ஐரோப்பிய நாடுகளில் தொடர்ந்து சுற்றுப் பயணம் செய்து அந்நாடுக்ளின் பல்கலைக் கழகங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள் இவற்றில் வேத கணிதம், வேத விஞ்ஞானம் இவற்றுக்கான் ப்யிலரங்குகளை நடத்தி வருபவர்; அந்நாடுகளில் இளைஞ்ஞர்களுக்கும், சிறுவர்களுக்கும் பண்பு பயிற்சி மற்றும் யோகப் பயிற்சி முகாம்களை நடத்தியுள்ளார்; தமிழ், ஹிந்தி, மராத்தி, ஆங்கில மொழிகளில் பேசக்கூடியவர். 1964 முதல் ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக சங்க ஸ்வயம்சேவகர்; 1975 முதல் அதன் முழு நேர தொண்டர்(ப்ராசரக்); தற்பொழுது அதன் சர்வதேச இணை ஒருங்கிணைப்பாளர்.

வாய்ப்புள்ளோர் வருகை தந்து பங்கு கொள்ள வேண்டுகிறோம்.
நன்றி

கண்ணன்
கும்பகோணம்.


kannankumbakonam@yahoo.com

Series Navigation

அறிவிப்பு

அறிவிப்பு