புல்புல் ராய் மிஷ்ரா
புராதன காலத்திலும் உளவு என்பது அறியாத ஒன்றல்ல. ராமாயணம், மகாபாரதம், கெளடில்யரின் அர்த்தசாஸ்திரம், பழைய ஏற்பாட்டில் மோஸஸ் கானான், பிலிஸ்டைன் நாடுகளுக்குள் ஒற்றர்களை அனுப்பியதும், சாம்சனை அழிக்க டிலைலாவை அனுப்பியதும் ஆக நிறைய உதாரணங்கள் உண்டு. ஆனால், ஓலெக் கலுகின் (Oleg Kalugin of the KGB) என்ற கேஜிபி (ரஷ்ய ஒற்றர்படை) தலைவர் இந்தியாவை ‘முழு நாடே விலைக்கு வரும்போல இருக்கிறது ‘ என்று சொன்னது போன்று ஒரு வெளிநாட்டு ஒற்றர் படை இன்னொரு நாட்டை பற்றி சொன்னது மிகவும் அபூர்வம்.
மித்ரோகின் ஆவணங்களின் பின்னணியைப்பற்றியோ அல்லது அதன் உள்ளடக்கங்களைப் பற்றியோ நான் விவரிக்கப்போவதில்லை. அவை அனைத்தும் இந்திய ஊடகங்களில் வெளியாகியிருக்கின்றன. உண்மையைச் சொல்லபோனால், கேஜிபி ஆவணங்களை ஒரு கேஜிபி மேஜரான மித்ரோக்கின் தன்னை பதவியிறக்கம் செய்ததற்காக கோபப்பட்டு அவற்றை கையால் எழுதி, பிரிட்டிஷ் உளவுப்படையின் உதவியோடு வெளியே கடத்திவந்து பிரசுரித்தவைக்கு எந்த விதமான தடய மதிப்பும் கிடையாது.
செப்டம்பர் 1999இல் வாஸிலி மித்ரோக்கின் மற்றும் பேராசிரியர் கிரிஸ்டோபர் ஆண்ட்ரூ ஆகியோர் இணைந்து மித்ரோக்கின் ஆவணங்கள் பகுஇதி 1 என்ற புத்தகத்தை வெளியிட்டனர். அவற்றை ஆராய அமைக்கப்பட்ட பாராளுமன்ற கமிட்டியின் அறிக்கையின் பின்னர், ஜாக் ஸ்ட்ரா என்ற பிரிட்டிஷ் உள்துறை செயலாளர் (உள்துறை மந்திரி) பாராளுமன்றத்தில் அக்டோபர் 21, 1999இல், ‘இவைகளுக்கு உளவு மற்றும் ஆராய்ச்சி முக்கியத்துவம் உண்டு ‘ என்று சொன்னார். இந்த முதல் பகுதியில் பல பிரிட்டிஷ், ஜெர்மன் மற்றும் அமெரிக்க அதிகாரிகள் அரசியல்வாதிகளுக்கு கேஜிபி பணம் பட்டுவாடா செய்தது என்றும் பணம் பெற்றவர்களின் பெயர்களையும்சொல்லியிருந்தது
சென்ற வருடம் செப்டம்பரில் பிரசுரிக்கப்பட்ட மித்ரோக்கின் ஆவணங்கள் பகுதி 2இல், கிருஷ்ண மேனன், லலித் நாராயண் மிஷ்ரா ஆகிய காங்கிரஸ்காரர்கள் கேஜிபி பணத்தை பெற்றுக்கொண்டவர்கள் (தேர்தல் வேலைகளுக்காக) என்று குறிப்பிடுகின்றது. திருமதி இந்திரா காந்தி அவர்கள் நேரடியாக பணம் பெற்றுக்கொண்டதற்கோ அல்லது கேஜிபி இந்த வேலைகள் செய்கிறது என்று தெரிந்திருக்கும் என்றோ ஆதாரம் இல்லை என்று பேராசிரியர் ஆண்ட்ரூ குறிப்பிடுகிறார். தர்க்கப்பூர்வமாக ஆராய்ந்தாலும், அவரை பதவியிலிருந்து இறக்க சிஐஏ வேலை செய்கிறது என்று அவரை நம்பவைக்க செய்த பல்வேறு முயற்சிகள், இந்திராகாந்தி கேஜிபியிடம் எந்தவிதமான பணத்தையும் பெற்றுக்கொள்ளவில்லை என்றே குறிப்பிடுகின்றன என்று சொல்லலாம்.
ஆனால், சிபிஐ என்ற இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் கேஜிபிக்கும் இருந்த நேரடித் தொடர்பும், இணக்கவேலையும் மிகத்தீஇவிரமான பிரச்னையைக் காட்டுபவை. ஏறத்தாழ சிபிஐ கட்சி கேஜிபியின் கையாள் வேலையைத்தான் செய்துவந்தது. டாங்கே, ராஜேஷ்வர் ராவ் ஆகியோர் கேஜிபியிடமிருந்து பணம் பெற்றதாக நேரடியாக குறிப்பிடப்படுகிறார்கள். இந்தியாவில் கேஜிபியின் ஊடுருவலின் தீவிரம், 1972இல், அது 10 இந்திய செய்தித்தாள்களை நேரடி பணப்பட்டுவாடாவில் வைத்துக்கொண்டு, சுமார் 3789 செய்திகளை வெளியிட்டு அதில் பெரும்பாலும் சிஐஏவின் ஊடுருவல் முயற்சிகளை விவரித்தது என்பதக்கொண்டு அறியலாம். சிஐஏவும் இஒன்றும் இந்த விஷயத்தில் புனிதப்பசு அல்ல. பாட்ரிக் மொய்னிஹானின் A Dangerous Place புத்தகம் 1960இலும் 1970இலும் மேற்கு வங்காளத்திலும் கேரளாவிலும் கம்யூனிஸ்டுகள் வெற்றிபெற்றுவிடக்கூடாது என்பதற்காக காங்கிரசுக்கு சிஐஏ பணப்பட்டுவாடா செய்தது என்று குறிப்பிடுகிறது.
மார்க்ஸிஸ்டுகள் மித்ரோகின் ஆவணங்களை அடிப்படையில்லாதவை என்றும், அட்டகாசமான பொய்கள் என்றும் உதாசீனம் செய்தாலும், இன்னொரு ஆவணத்தின் மூலம் அவர்களது கைக்கூலி வேலை நன்றாக வெளிப்பட்டிருக்கிறது. முன்னாள் சோவியத் தூதரான ஐ.ஏ. பெனகிக்டோவ் (vide the New East-Block Documents on Sino-Indian conflict, 1959 and 1962) அவர்களது டயரி, சோவிய்த் நாட்டின் தூதருக்கும் பூபேஷ் குப்தா என்ற கம்யூனிஸ்ட் கட்சி செயலாளருக்கும் இடையேயான பேச்சை பதிவு செய்திருக்கிறது. அஜோய் குமார் கோஷ் இறந்தததனால் பணப்பட்டுவாடாவை நிறுத்திவிடவேண்டாமென்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, சோவியத் தூதரைக் கேட்டுக்கொள்கிறது. ஜனவரி 27இல் சோவியத் ரஷ்யா குப்தாவிடம் ஒப்புதலை தெரிவிக்கிறது. சிபிஐ அதற்கு நன்றியை தெரிவிக்கிறது. சிபிஐக்கு கொடுத்த பணப்பட்டுவாடா ஏற்றுமதி இறக்குமதி வியாபாரம் மூலமாகக் கொடுக்கப்பட்டது என்பதையும் தெரிவிக்கிறது.
இந்திய கம்யூனிஸ்டுகளுக்கு பணப்பட்டுவாடா செய்ய ஒரு வினோதமான முறையை சோவியத் ரஷ்யா கண்டுபிடித்திருந்தது. முதலாவது, சோவியத் ரஷ்யாவிடமிருந்து இந்தியா செய்யும் இறக்குமதி ஓவர்-இன்வாய்ஸ் உண்மையான விலையை உயர்த்திப் போடுவது) போடப்பட்டு வந்தது. இது சோவியத்திடம் இருப்பில் அதிக இந்திய ரூபாயை உருவாக்கியது. இந்த அதிகமான இந்திய ரூபாய், இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு (அதாவது சிபிஐ) ஓவர் இன்வாய்ஸ் காரணமாக கொடுக்கப்பட்டது. வேறு வகையில் சொல்லப்போனால், இந்த வினோதமான முறையால் சோவியத்துக்கு ஒரு ரூபாய் கூட நஷ்டம் இல்லை.லைசன்ஸ் ராஜ்யத்தினால், இந்திய இறக்குமதியாளர்கள் தம் சரக்குகளுக்குக் கொடுத்த அதிக விலை மூலமாக சிபிஐக்குப் பணம் கொடுத்தார்கள்.
இரண்டாவதாக மிகத் தீவிரமான விஷயம் இது பற்றிக் கம்யூனஸ்டுகள் எப்படிப்பட்ட கருத்தைக் கொண்டிருந்தார்கள் என்பது. அமெரிக்க-ரஷ்ய பனிப்போரின் காலகட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டுகள் சோவியத் ரஷ்யாவுக்கும் கையாள் வேலை செய்துகொண்டும், கம்யூனிஸ்ட் சைனாவுக்கு ஆதரவு நிலைப்பாடுடனும் இருந்தார்கள். பெனடிக்டோவின் டயரிகள், அக்டோபர் 25,1962 பிராவ்தாவில் வந்த இந்திய எதிர்ப்பு சீன ஆதரவு கட்டுரைகளுக்கு நன்றி தெரிவித்து நம்பூதிரிபாடு சொன்னதை குறிக்கின்றன.
ஆனால், இதே நம்பூதிரிபாடு பின்னால், சிபிஐ செகரட்டேரியட் பேச்சுவார்த்தைக்குப்பின்னால், இந்த ‘இந்த பிரசுரம் இந்தியாவில் சோவியத் எதிர்ப்பு உணர்வை கிளப்பிவிடும் ‘ என்று கூறுகிறார். சீனாவின் ஆக்கிரமிப்புக்கு இந்திய மக்களிடமிருந்து வந்த ஆவேசமான முன்னெப்போதும் இல்லாத எதிர்ப்புணர்வு, ஆரம்பத்தில் சோவியத்தும், கம்யூனிஸ்டுகளும் சீனாவின் ஆதரவாக இருந்ததை மாற்றிய காரணம் எனலாம். மேலும் இந்த டயரிக்குறிப்புகள், சீனாவின் போர்த்தந்திரம், இந்தியாவை கூட்டுசேரா நாடுகள் அமைப்பிலிருந்து வெளியேற்றி மேற்குலகின் ஆதரவாக திருப்புவதும், அதற்கு உள்நாட்டில் வரும் எதிர்ப்புணர்வை இந்தியா நசுக்குவதும், அதன் விளைவாக மார்க்ஸிஸ்ட் புரட்சி வருவதும் என்று குறிப்பிடுகின்றன. சீனாவுக்கு இந்திய மக்களிடமிருந்து வந்த தீவிர எதிர்ப்புணர்வு கம்யூனிஸ்டுகளின் சோவியத்தின் சீன ஆதரவு நிலைபாட்டைக் கவிழ்த்துவிட்டன.
தேசப்பற்று என்பற்கு கம்யூனிஸத்தில் இடமில்லை. அது உலக உழைப்பாளர்களை ஒன்றுபடுத்த விழைகிறது. சீன-இந்திய போரின்போது, இந்திய நாட்டுப்பற்றை பூர்ஷ்வா தேசியவாதம் என்று நம்பூதிரிபாட் கேலியாகக் குறிப்பிட்டார். ஆனால், விவேகானந்தரும் மகாத்மா காந்தியும் நாட்டுப்பற்றில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டவர்கள். விவேகானந்தரைப் பொறுத்தமட்டில், வெளிநாட்டு உதவியின்றி சுயச்சார்பாக வாழ்வது நாட்டுப்பற்று என்று என்.ராவுக்கு சூலை 14, 1896இல் எழுதிய கடிதத்தில் குறிப்பிடுகிறார். நாட்டுப்பற்று என்பது நாட்டுமக்கள் மீது ஆழ்ந்த அன்பு செலுத்துவது, அந்த உணர்வுகளை செயல்வடிவமாக ஆக்குவது, மலைபோன்ற தடைகளையும் கடக்க கொள்ளும் வைராக்கியம் என்ற மூன்று அடிப்படை பகுதிகளாக நாட்டுப்பற்றை கூறுகிறார் விவேகானந்தர்.
இந்திய மக்கள், மீண்டும் மீஇண்டும் நாட்டுப்பற்றில் வேறு யாருக்கும் குறைந்தவர்கள் அல்லர் என்பதை நிரூபித்திருக்கிறார்கள். இது ஒன்றே பல்வேறு சிக்கல்களிலிருந்தும், இந்தியாவை பல்வேறு வெளிநாட்டுக் கக்கூலிகளிிடமிருந்தும் ‘முழு தேசமும் விற்பனைக்கு ‘ என்ற நிலையிலிருந்து காப்பாற்றியிருக்கிறது.
***
பயனீர் பத்திரிக்கையிலிருந்து
***
- எரிந்த ஊர்களின் அழகி
- கடிதம்
- கற்பு யாருடையது
- கடிதம்
- கவிஞர் புகாரியின் கவிதை நூல் வெளியீட்டு விழாவில் ஆற்ற வந்த எனது கருத்துரை (அக்டோபர்: 1, 2005)
- சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி
- The Almond by Nedjma – ஒரு பார்வை
- வைதீஸ்வரன்
- புகாரி கவிதை நூல் வெளியீடு
- பூமியின் ஓஸோன் வாயுக் குடையில் போடும் துளைகள் [Holes in the Global Ozone Envelope]
- கீதாஞ்சலி (43) எனக்குப் பூரிப்பளிப்பது! ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )
- சூனியக்காரி ஜோன் ஆஃப் ஆர்க் (பெர்னாட்ஷா நாடகத்தின் தழுவல்) (ஆறாம் காட்சி பாகம்-11)
- ஒட்டடை
- கொச்சைப்படுத்துதல்: மனித அவலட்சணம்
- எரியும் மழைத்துளிகள்
- பெரிய புராணம் – 59( திருநாவுக்கரசு நாயனார் புராணம் தொடர்ச்சி )
- நிலத்தடி நீர் உரிமையைக் காக்க கேரளாவின் பிளாச்சிமடா கிராமத்தின் மக்கள் போராட்டம்
- விற்பனைக்கு ஒரு தேசம்
- லிஃப்ட் பைத்தியம்
- சீரழிக்கும் சினிமா, மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (திரு.ராமதாஸ் மற்றும் திரு. திருமாவளவன் ஆகியோர் கவனத்திற்கு)
- குஷ்புவும், ஈ வெ ராவும் – சில சமன்பாடுகள்
- கெளரவம்