செல்வன்
பாண்டியன் கலைஞரை சந்திக்கபோனபோது அவர் மிகவும் உற்சாகமாக இருந்தார்.”வாய்யா.பாண்டியா.என்ன ரொம்ப நாளா காணோம்?” என அன்போடு கேட்டார்.
“ஆயிரம் சொன்னாலும் உங்க ராசியே ராசிங்க.அஞ்சாவது தரம் ஜெயிச்சுட்டீங்க.மெஜாரிடி இல்லை,அது இல்லைனு என்ன சொன்னாலும் இந்த தரம் ஆட்சி கவுராதுங்க” என்றார் பாண்டியன்
“எப்படிப்பா சொல்றே?” என குதூகலத்துடன் கேட்டார் ஆர்க்காட்டார்.
“13ம் தேதி சித்ராபவுர்ணமிங்க.அருமையான நாள்.அன்னைக்கு பதவி ஏத்திருக்கீங்க.ஒரு நாள் விட்டிருந்தீங்கன்னாலும் தேய்பிறையாயிருக்கும்.பதவி ஏத்த தேதி 13.அமைச்சர்கள் எண்ணிக்கை 31.கூட்டுத்தொகை நாலு.நல்ல ராசியான எண்.கண்டிப்பா ஆட்சி அருமையா ஓடுங்க” என்றார் பாண்டியன்.
“என்னப்பா பாண்டியா தலைவருக்கு அந்த மாதிரி மூட நம்பிக்கை எல்லாம் கிடையாதுப்பா” என்றார் ஆர்க்காட்டார்.”மஞ்சள் துண்டு விவகாரத்தை வெச்சுகிட்டு முன்னாடி இப்படித்தான் கிளப்பி விட்டாங்க.ஆனா கலர்ல என்னப்பா இருக்கு?மஞ்சள் கலர்ல ஒரு புண்ணாக்கும் கிடையாது.இந்த மாதிரி மூட நம்பிக்கைல வர்ர பலன் எதுவும் எங்களுக்கு வேண்டாம்” என்றார் ஆர்க்காட்டார்.
“சும்மா இருங்க.இப்படி பேசினா மஞ்சள் துண்டால வர்ர பலன் கம்மி ஆயிடுங்க.சாமி குத்தம்” என்றார் பாண்டியன்.
“யோவ் ஆர்க்காடு.சும்மா இருக்க மாட்டியா?ஆட்சியை கவுத்து சரண்சிங் ஸ்டைல்ல முதல்வராவதுன்னு திட்டமா?போயி பாண்டியனுக்கு இளநி சொல்லு” என்றார் கலைஞர்.
இளநீர் கொண்டுவந்த சமயல்காரரிடம் “முந்திரிபருப்பு,நெய் எல்லாம் போட்டு பதமா கிண்டனும்.தெரிஞ்சுதா?” என சொன்னார் கலைஞர்.
“என்னங்க விஷேசம்.ஸ்வீட் ஏதேனும் பண்றீங்களா?” என ஆவலுடன் கேட்டார் பாண்டியன்.
“ஆமாம்பா.கூட்டணி ஆட்சி வேணும்னு கேட்டு காங்கிரஸ்காரங்க இன்னைக்கு பேச வர்ராங்க.அவங்களுக்கு ஸ்பெஷலா நெய்மணக்கும் அல்வா கிண்டிகிட்டிருக்கோம்” என சொன்னார் ஆற்காட்டார்.
“அப்ப காங்கிரசுக்கு மந்திரி பதவி?” என கேட்டார் பாண்டியன்.
“குடுத்துட வேண்டியதுதான்” என சொல்லி சிரித்தார் கலைஞர்.
“எது?அல்வாவா,பதவியா?” என கேட்டார் பாண்டியன்.
பதில் சொல்லாமல் நமட்டு சிரிப்பு சிரித்தார் கலைஞர்.
“சரி.பொதுவுடமை கட்சிக்காரங்களுக்காவது மந்திரி பதவி உண்டா?” என கேட்டார் பாண்டியன்.
“இப்ப நடக்கறது பொதுவுடமை ஆட்சிதான பாண்டியா” என சொல்லி சிரித்தார் கலைஞர்.
“சரி.தமிழ்நாட்டு ஜனங்கள் எல்லாருக்கும் 2 ஏக்ரா நிலம் தர்ரேன்னு சொன்னீங்களே?அத்தனை இடத்துக்கு எங்க போவீங்க?” என கேட்டார் பாண்டியன்.
“இதுல என்னப்பா சிரமம்?ஆஸ்திரேலியாவிலிருந்து லெமூரியா கண்டம் துவங்குது.லெமூரியா கண்டம் பூரா தமிழ்நாடு தான்.ஆளுக்கு 2 ஏக்ரா என்ன 50 ஏக்ரா கூட தரலாம்” என்று சொல்லி சிரித்தார் ஆற்காட்டார்.
“அடப்பாவமே.கடலுக்கடிலியா நிலம் தர்ரிங்க?” என கேட்டார் பாண்டியன்.
“போர்வெல் போடற செலவு மிச்சம் தானே” என சொன்னார் ஆற்காட்டார்.
“சரி எல்லாத்துக்கும் டீவி தர்ரோம்னு சொன்னீங்களே?அத்தனை டீவிக்கு எங்க போவீங்க?” என கேட்டார் பாண்டியன்.
“பழைய ஈயம் பித்தளைக்கு பேரிச்சம்பழம்” என்ற குரல் கேட்டது.”ஈயம் பித்தளை பேரிச்சம்பழக்கடைக்காரர் வந்திருக்கார்.டீவி டீலை முடிச்சுட்டு வந்துடறேன்” என்று சொல்லிவிட்டு வெளியே கிளம்பினார் ஆற்காட்டார்.
“ஈயம் பித்தளை பேரிச்சம்பழக்கடைக்காரர் கிட்டயா டீவி வாங்கறீங்க?” என கேட்டார் பாண்டியன்.
“அல்வா ரெடி” என உள்ளிருந்து சத்தம் கேட்டது.”அல்வா சாப்பிடு பாண்டியா” என அன்புடன் சொன்னார் கலைஞர்.
“வேண்டாங்க.ஜனங்களுக்கு தர்ரப்ப லைன்ல நின்னு வாங்கிக்கறேன்” என சொல்லிவிட்டு ஓட்டம் பிடித்தார் பாண்டியன்.
—————————
holyox@gmail.com
- எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்: அங்கம்-1, பாகம்-2)
- “தமிழர் மருத்துவமே வர்மக்கலை!” – சித்த-வர்ம மருத்துவர் மூலச்சல் த.இராஜேந்திரன் நேர்காணல்
- பூநீறு: சித்த மருத்துவத்தின் பெருமிதம்
- செர்நோபில் அணுமின் உலை விபத்தின் காரணங்கள் -5
- இளவேனில் கடற்கரை – புகைப்படத் தொகுப்பு
- கீதாஞ்சலி (74) ஆத்மாவின் கருவில் உறைபவன்.
- வளர்ந்த குதிரை (4)
- இளவேனில் நிழல்கள் – புகைப்படத் தொகுப்பு
- கடித இலக்கியம் – 6
- நரசய்யாவின் ” கடல்வழி வணிகம் ” : மகிழ்வூட்டும் ஒரு சிறப்பான வரவு
- ஆராய்ச்சிப் பேரறிஞர் மயிலை சீனி.வேங்கடசாமியின் வாழ்வும் பணியும்
- மரணத்தை விடக் கொடிய வேதனை உலகில் இருக்குமோ..?
- யாருமற்ற கடற்கரை
- லெமூரியா கொண்ட கலைஞர்
- கடிதம்
- கடிதம்
- அறிவு ஜீவிகள்………?!
- கடிதம்
- கடிதம்
- ஓட்டைப் பானைகளில் ஊற்றப்பட்ட தண்ணீர்
- அக்ஷ்ய திருதியை
- கடிதம்
- புதுவை ஞானத்தின் நாட்குறிப்பிலிருந்து 5 : வியப்பில் வாழ்தல்
- மறுபடியும் ஒரு மகாபாரதம் அத்தியாயம் – 22
- குறுநாவல்: சேர்ந்து வாழலாம், வா! – 4
- ஐயம், சந்தேகம், அயிர்ப்பு (இலக்கிய நாடகம் – பகுதி 7)
- வானமே கூரை.
- தனிமரம் நாளை தோப்பாகும் – 4
- மார்க்ஸின் ஆவியுடனான உரையாடல்
- புலம் பெயர் வாழ்வு – 12 – ‘Free Man’ பட்டத்தோடு இருக்கும் தமிழர்கள்
- சாதியத்தின் பண்பாட்டுச் சிக்கல்
- புன்னகையின் பயணம்…
- நான் என்ன சொல்ல, அன்னிபெசன்ட் சொல்லட்டும், மாப்பிள்ளைமார் கலகம் பற்றி
- இட ஒதுக்கீடு: எதிர்க்க வேண்டியவர்கள் தலித்துகளும் வனவாசிகளும்
- ஆய்வுக் கட்டுரை: பாதை மாறிய கொள்ளிடம்
- கயிறெடுத்தான் உயிரெடுக்க
- நெருப்பு நெருப்பு
- பெரியபுராணம் – 89 – திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி
- அரவாணிகளின் முதல் வாழ்க்கை ஆவணம்