லாரி பேக்கர்

This entry is part [part not set] of 33 in the series 20070405_Issue

சேது-வேலுமணி


லாரி பேக்கர்
01.03.1917 – 01.04.2007

இங்கிலாந்தில் பிறந்து, இரண்டாம் உலகப் போரின் போது மிஷினரியின் மூலம் சேவை செய்ய 1945 ல் இந்தியா வந்து தற்செயலாக காந்தியடிகளைச் சந்தித்து அவருடைய விருப்பப்படி இந்தியாவில் தங்கி, கட்டடக் கலையில் காந்தியத்தன்மையைப் புகுத்தியவர் ஏப்ரல் 1 ம் தேதி திருவனந்த புரத்தில் காலமானார்.

அவருடைய கட்டடங்கள் மிக எளிமையான அருகில் கிடைக்கக் கூடிய eco frindly பொருட்களைக் கொண்டு கட்டியவர். அவர் கட்டிய 3000 தனியார் ம்ற்றும் கேரள அரசு கட்டிடங்கள் கேரளா முழுவதும் காண முடியும்.

ஏராளமான விருதுகளை வாங்கிய அவருக்கு இந்திய அரசு 1991 ல் பத்மஸ்ரீ விருதை வழ்ங்கி கௌரவித்தது.

கேரள டாக்டர் எலிசபெத்தை மணந்து, இந்தியக் குடியுரிமை பெற்று கடந்த 50 வருடங்களாக திருவனந்தபுரத்தில் வாழ்ந்தவர்.

அவர் கேரள அரசுடன் இணைந்து COSTFORD எனும் தொண்டு நிறுவனத்துடன் செயல் பட்டு வந்தார்.

இனிமேல் வீடு கட்டுவ்தாக இருப்பவர்கள், Life, Work & Writings – Laurie Baker என்ற புத்தகம் G.Bhatia Penguin Publishers வாங்கிப் படித்து பயனடையலாம்.

சேது-வேலுமணி

sethuramalingam_velumani@yahoo.com

Series Navigation

சேது-வேலுமணி

சேது-வேலுமணி