மெய்ப்பாட்டு நோக்கில் மறுமலர்ச்சிப் பாடல்கள் – (ஆய்வு முன்னோட்டம்)

This entry is part [part not set] of 39 in the series 20060825_Issue

வீ. கருப்பையன்


ஆய்வுக்களம்
நகையே அழுகை இளிவரல் மருட்¢கை
அச்சம் பெருமிதம் வெகுளி உவகை என்று
அப்பால் எட்டே மெய்ப்பாடு என்ப
என்ற தொல்காப்பிய இலக்கணத்திற்கு ஏற்ப மெய்ப்பாட்டு நோக்கில் மறுமலர்ச்சிப் பாடல்களை ஆராய்வதாக இவ்வாய்வுக் களம் அமைகிறது.

மறுமலர்ச்சிப் பாடல்கள்¢ன் தோற்றம்
மறுமலர்ச்சிப் பாடல்கள் இந்திய நாடு விடுதலையை எதிர்நோக்கி இருந்த காலத்திலும், விடுதலையைப் பெற்ற பின்பும் வெளிவரத் தொடங்¢கின. மக்களின் எழுச்¢சியை இளைஞர்களின் உரத்தை வெளிப்படுத்தும் இலக்கிய வடிவமாக இவை விளங்கின. குறிப்பாகச் சொல்லப் போனால் பாரதியின் வருகை மறுமலர்ச்சிப் பாடல்கள் எழ வழிவகுத்தது என்பது தெளிவு. பாரதியின் வருகைக்குப் பின்பு மறுமலர்ச்சிப் பாடல்கள் இயல்பு மாறாமல் உள்ளத்தின் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் நிலையில் தொடர்ந்தன.

மறுமலர்ச்சிப் பாடல்களின் வளர்ச்சி
பாரதியின் வருகைக்குப் பின் தமிழ்க் கவிதை, விடுதலையின் இந்தியாவி¢ன் வளர்ச்சி என்ற நிலையில் அமைந்தது. நாட்டுப் பற்றை ஊட்டும் நல்ல களமாகவும் சமுதாயக் கருத்துக்களின் பெட்டகமாகவும் இப்பாடல்கள் அமைந்தன. பாரதியால் அறிமுகப் படுத்தப் பட்ட பாரதிதாசன் இவ்வகைப் பாடல்களை உணர்ச்சி மிக்க வகையில் படைத்தார். அவரைத் தொடர்ந்து வந்த கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை, நாமக்கல் கவிஞர் கவிதைகள் வழியாக நாட்டுப் பற்றை நாட்டு முன்னேற்றத்தை நிலைநாட்டினர். பிறகு வந்த சுரதா உவமை நயத்தால் சிறந்த கவிதைகளைப் படைத்தார். முடியரசன், வாணிதாசன், கண்ணதாசன், குழந்தை, வாலி, வைரமுத்து போன்றவர்கள் மறுமலர்ச்சிப் பாடல்கள் புனைந்தவர்களுள் சிறந்தவர்கள் ஆவர்.

பாடுபொருள்
பாரதி முதல் தொடங்கி வைரமுத்து வரை நீளும் இப்பட்டியலில் பின்வரும் பாடுபொருள்கள் இடம் பெற்றன. நாட்டு முன்னேற்றம், மொழி வளர்ச்சி, பெண்விடுதலை, இளைஞர்¢ எழுச்சி முதலான கருத்துகள் மறுமலர்ச்சிப் பாடல்களின் பாடுபொருள்களாக உள்ளன. விடுதலைக்கு முன் எழுந்த பாடல்களில் அடிமை வாழ்வைப் பார்த்துக் கோபம் கொள்ளுதல்,மூடப் பழக்க வழக்கங்களில் மூழ்கிக் கிடந்த மக்களை விழித்தெழச் செய்தல் முதலான பாடுபொருள்கள் அமைந்திருந்தன.
மெய்ப்பாட்டு நோக்கு ஆய்வு – அறிமுகம்¢
தொல்காப்பியர் மெய்ப்பாட்டு இயலில் மெய்ப்பாடு என்றால் என்ன என்பதைத் தெளிவுபட எடுத்துரைக்கிறார்.
”உய்ப்போன் செய்தது காண்போர்க்குக் கெய்துதல்
மெய்ப்பாடென்ப மெய்யுணர்ந்தோரே”
என்ற நூற்பா இதனை விளக்கும். நகை என்பது இகழ்ச்சியில் பிறப்பது. அழுகை என்பது அவலத்தில் பிறப்பது. இளிவரல் என்பது இழிப்பில் பிறப்பது. மருட்கை என்பது வியப்பி¢ல் பிறப்பது. அச்சம் அஞ்சத் தகுவனநவற்றாற் பிறப்பது. பெருமிதம் வீரத்தின் இயல்பால் பிறப்பது. வெகுளி என்பது வெறுக்கத் தக்கனவற்றால் பிறப்பது. உவகை சிருங்காரத்தில்¢ பிறப்பது என்பதாக எட்டுவகை மெய்ப்பாடுகளை தொல்காப்பியம் தருகிறது.

இதன் மூலமாக மெய்ப்பாட்டு நோக்கு என்பதன் தேவை தெளிவாக விளங்குகிறது. ஒவ்வொரு இலக்கிய வகையுள்ளும் இம்மெய்ப்பாட்டு பொருந்தி உள்ளது. தொல்காப்பியர் வகுத்துத் தந்த இந்த ஆய்வு நோக்கு தமிழரின் ஆய்வு நோக்கு ஆகும். இதனடிப்படையில் தமிழ் இலக்கியங்கள் ஆராயப்பட வேண்டும். இவ்வகையில் இந்த ஆய்வு இங்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது.

மெய்ப்பாடும் மறுமலர்ச்சிப் பாடல்களும்
தொல்காப்பியர் சுட்டும் காட்டும் எண்வகை மெய்ப்பாடுகள் சங்க இலக்கியங்களில் காணக் கிடைக்கின்றன. இரட்டைக் காப்பியங்களிலும் இவ்வெட்டைக் காணஇயலும்¢. தொடந்து வந்த கம்ப இராமாயணத்திலும், வில்லி பாரதத்திலும் இவை உள்ளன. இக்காலத்தில் தோன்றிய மறுமலர்ச்சிப் பாடல்களிலும்¢ இவ்வெட்டு மெய்ப்பாடுகள் பரவலாகக் காணப்படுகின்றன.

” நாணமும் அச்சமும் நாய்களுக்க வேண்டுமாம் பேணும் நல்லறம் பெண்கள் குணங்களாம் ” என்று எள்ளல் மெய்ப்பாட்டுக் குறிப்பைப் பாரதியார் தன்¢ பாடலடியில்¢ தருகிறார். அவரது பாஞ்சாலி சபதத்தில் வெகுளி மெய்ப்பாடு பின்வருமாறு சொற்களில்¢ இடம் பெறுகிறது.

நாட்டை யெல்லாம் தொலைத்தாய் – அண்ணே
நாங்கள் பொறுத் திருந்¢தோம்
மீட்டும் எமையடிமை – செய்தாய்
மேலும் பொறுத் திருந்தோம்
… …. … ….
கதிரை வைத்திழந்தான் – அண்ணன்
கையை எரித்திடுவோம்.
என்ற அடிகளில் வெகுளி¢யின் உயர்நிலை வெளிப்படுத்தப் படுகிறது.

மனிதன் உடனே வெளிப்படுத்தும் உணர்ச்சி அழுகை ஆகும்.
” தண்ணீர் விட்டோ வளர்த்தோம் சர்வேசா இப்பயிரைக்
கண்ணீராற் காத்தோம் கருகத் தி¢ருவுளமோ?
எண்ணமெலாம் நெய்யாக எம்முயிரி னுள் வளர்த்த
வண்ண விளக்கி·து மடியத் திருவுள மோ?
ஓராயிர வருடம் ஓய்ந்து கிடந்தபினர்
வாராது போல வந்த மாமணியைத் தோற்போமா?
என்ற பாடலி¢ல் அழுகை மெய்ப்பாடு கலந்திருப்பதைக் காணமுடிகிறது.
பாரதிதாசன் கவிதைகளில் மெய்ப்பாடுகள் தேங்கியுள்ளன. சஞ்சீவி பர்வதத்தின் சாரல் என்ற அவருடைய குறுங்காவியம் எள்ளல் சுவைக்கு நல்ல எடுத்துக்காட்டு ஆகும். சமூக மூடப் பழக்க வழக்கங்களையும், சாதி சமய வேறுபாடுகளையும், ஒற்றுமை இல்லா நிலையையும் இப்படைப்பில் பாரதிதாசன் எள்ளல் சுவையோடு எடுத்துரைக்கிறார்.

”ஓ என் சகோதரரே ஒன்றுக்கும் அஞ்சாதீர்
நாவலந்தீவு நமைவிட்டு¢ப் போகாது
வாழ்கின்றார் முப்பத்து முக்கோடி மக்கள் என்றால்
சூழ்கின்ற பேதமும் அந்தத் தொகையிருக்கும்
ஆகையால் எல்லாரும் அங்கே தனித்தனிதான்
ஏகமனதாகி அவர் நம்மை எதிர்ப்பதெங்கே?”
என்ற பாடலடிகளில் எள்ளல் மெய்ப்பாடு கலந்திருக்கிறது.

இவ்வாறு பல படைப்பாளர்களிடம் மெய்ப்பாட்டு வெளிப்பாடு அதிக அளவில் இடம் பெற்றுள்ளன. அவற்றை ஒப்பு நோக்கி ஆய்வதாக இவ்வாய்வு செய்யப் படுகிறது.

(இத்தலைப்பில் முனைவர் பட்ட ஆய்வு செய்யப் பதிந்துள்ளேன். நெறியாளர் முனைவர் மு. பழனியப்பன். மா, மன்னர்¢ கல்லூரி, புதுக்கோட்டை இதுகுறித்த தகவல்கள் ஏதேனும் இருப்பின் கீழ்க்காணும் நெறியாளரின் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ள வேண்டுகிறேன்.)


muppalam2003@yahoo.co.in

Series Navigation

வீ. கருப்பையன்

வீ. கருப்பையன்