மூதாய் சொல்லித் தந்த மார்க்ஸீய கதைகள்

This entry is part [part not set] of 31 in the series 20060908_Issue

ஹெச்.ஜி.ரசூல்


முனைவர் முத்துமோகனின் வெகுசன மார்க்ஸியம் பின்னை காலனியம் மற்றும் பின் நவீனத்துவ மார்க்ஸிய உரையாடல் சார்ந்த தொகுப்பு நூலை வாசித்ததின் விளைவாக உருவான ஒரு உப பிரதியாக இதனைக்கொள்ளலாம்.

ஈரம்பட்ட சிறகுகளோடு நீந்திக் கரைசேர்தல் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. தூரத்தில் மங்கலாய் தெரியும் மலையுச்சியை உரசிக் கொண்டு ஒரு கூட்டம் செண்பகப் பறவைகள் வருகின்றன. அடர்ந்த காடுகளின் சரிவுகளில் வீழ்த்தப்பட்ட பறவைகள் மெளனங்களில் புதையுண்டு கிடக்கின்றன வெவ்வேறு காட்சிகளினூடே காலம் தன்னை நகர்த்திக் கொள்கிறது.

வார்த்தைகள், தத்துவங்கள், இலக்கியங்கள் நம்முன் கொட்டிக் குவிக்கப்படுகின்றன. தொடர்பியலைத் தாண்டிய கலாச்சாரப் பரிவர்த்தனை, ஊடக வெளியின் மையமாய் மாறுகிறது. வாழ்வின் பிரதிகளை வாசித்து கண்டறிவதில் ஒற்றைத் தன்மை மீறப்பட்டுள்ளது. இது பன்மையின் சாத்தியங்களை உருவாக்கியுள்ளது.

ஒற்றைப்படுத்தப்பட்ட வடிவத்தை மீறி மார்க்ஸியத்தின் பன்மைத் தன்மையை புரிந்து கொள்வதில் எந்த சிரமமும் இருப்பதாக தெரியவில்லை. மண் சார்ந்த அடையாள அரசியலை உட்செரித்துக் கொண்டு மேற்கத்திய மார்க்ஸியம், கீழை மார்க்சீயம். கறுப்பு மா¡க்சீயம். அரபு மார்க்சீயம் பின்னைக் காலனிய மார்க்ஸீயமென தனது இருப்பை விரிவுபடுத்தியுள்ளது. சனாதனிகளின் கைகளிலிருந்து மார்க்ஸியத்தை விடுதலையும் செய்கிறது. இது மரபு வழி மார்க்ஸியத்தை உயிர்ப்புத் தன்மைமிக்க மார்க்ஸியமாக உருமாற்றியுள்ளது.

பியர்பாக், ஹெகல், இமானுவேல் கான்டின் தத்துவப் புலன்களின் தடயங்களினூடே மார்க்ஸ், ஏங்கல்ஸ், லெனின், ஸ்டாலின், ரோசாலக்சம்பெர்க், மாவோ, ஹோசிமின், பிடரல் காஸ்ட்ரோ, பிரான்ஸ் பனோன், என நடைமுறை சார்ந்த முறை மார்க்ஸீயர்களின் சோசலிசத்தை நோக்கியதான சமூகப் புரட்சிகள் சில நேரம் வீழ்ந்தும் பல நேரம் புதுமுறையில் துலக்கம் பெற்றும் பாசிசத்தை எதிர்த்தும் கடக்கப்பட்டுள்ளன.

ஐரோப்பிய முதலாளித்துவத்தின் உழைப்புச் சுரண்டலையும், உபரி மதிப்பு கோட்பாட்டையும் மூலதன மறு உற்பத்தியையும் புரிந்து கொள்ளும் முறையியல் முன்வைக்கப்பட்டது. வரலாறு, சமயம், தத்துவம் குறித்தான பார்வையை அகம், புறம் பற்றிய இயங்கியலோடு வெளிப்படுத்தியது. இராணுவம், காவல்துறை, சிறைச்சாலைகள், சட்டங்கள், நீதிமன்றங்கள் என அரசு எந்திரம் சார்ந்த ஒடுக்குமுறைகளைப் பற்றிய மார்க்ஸீய அணுகுமுறை முக்கியமாக தொழிற்பட்டது. பொருளாதார அரசியலும், அரசியல் பொருளாதாரமும் அடித்தளம் மேற்கோப்பென்ற பிரிவினையை தகர்த்துக் கொண்டு ஒன்றோடொன்று உரையாடலை நிகழ்த்தி பண்பாடு அறிவு தளங்களில் வினை புரிந்தன. சடங்கு, மொழி அறிவு பாலினம், உடல், நிறம், குடும்பம், கல்வி, இலக்கியம், செய்தி உருவாக்கம் என பண்பாட்டு நடத்தைகளின் மீதான கவன ஈர்ப்பையும், நுண் அளவிலாக கட்டமைக்கப்பட்டிருக்கும் அதிகாரத்தையும் மீள்வாசிப்பு செய்தன.

ஜெர்மனியின் பிராங்கபட் பள்ளியைச் சேர்ந்த ஹெபாமா¡ ஹோகைமா, அடோ¡னா, மார்க்யூஸ், வால்டர் பெஞ்சமின், பின்னை மார்க்ஸீயர்களாக அறியப்பட்ட லூயி அல்தூசர், அந்தோனியா கிராம்ஷி, மிஷேல் பூக்கோ எனப்பலரும் இத்தளங்களில் விவாதங்களை தொடர்ந்தனர். சோவியத் மாதிரி சோசலிச கட்டுமான சிதறலுக்குப் பிறகு இவ்விவாதங்கள் மிகவும் கவனத்திற்கொள்ளப்பட்டன. பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் தனது இழப்பின் மூலமாக தொழிலாளி, விவசாயி, விளிம்பு நிலை மக்கள், பெண்கள் என்பதான மறு அணி சோக்கை அடிப்படைகளை உருவாக்கின. காலனிய ஒடுக்குமுறையிலிருந்து எதிர்த்து போராடுகின்ற ஆசிய மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளிலிருந்தும் புதிய வெளிச்சங்கள் புறப்பட்டன. எட்வர்ட் சையத், ஹோமிபாபா, இஹாப்ஹசன், காயத்ரி சக்ரவர்த்தி ஸ்பீவாக் சினுவா ஆச்சிபி என ,ந்த சிந்தனை அறிவுத்துறையில் படாந்தது. இதன் தொடர்ச்சியாகத்தான் மார்க்ஸீய சொல்லாடல்கள் பன்மிய அடையாளங்களாக பண்பாட்டு மார்க்ஸீயம், பின்னை மார்க்ஸீயம், திறந்த மார்க்ஸீயம், பின் நவீன மார்க்ஸீயம், வெகுசன மார்க்ஸீயம் என பல அர்த்தங்களை சமூக அளவில் உற்பத்தி செய்ததை கவனிக்கலாம்.

நவீனத்துவ கோட்பாட்டின் உருவாக்க காலங்களிலேயே நவீனத்துவம் (modernism) கம்யூனிஸம் (Communism) யதார்த்தம் (Realism) மிகையதார்த்தம் (Survealism) பிராயிடிசம் அமைப்பியல் வாதம் (Stucturalism) என இஸம்கள் (ISMS) வலுப்பெற்றன. அறிவு, ஜனநாயகம், தொழில் முதலாளித்துவம் சார்ந்த மாறுதல்களுக்கு பிறகு பின்னை முதலாளித்துவ சூழலை புரிந்து கொள்ளும் வகையில் இந்த இசங்களுக்கு பிறகான (Post) என்பதன் ஒட்டு சேர்ந்தது. பின் நவீனத்துவம், பின் காலனியம், பின் பெண்ணியம், என இதன் பின் அமைப்பில், பின் யதார்த்தம் நீட்டித்து பார்க்கலாம். இத்தகைய பின் நவீனயுகக் கூறை டி (de) என்ற சொல்லின் மூலம் மறுஉருவாக்கம் செய்யப்படுகிறது. கட்டமைப்புக்கு (Construction) மாற்றான கட்டவிழ்ப்பு (Deconstruction), மையப்படுத்துதலுக்கு (Centering) மாற்றான மையம் விலக்குதல் (Decontering) புனைவாக்கம் (mythification) மாற்றான புனைவு நீக்கம் (Demythification) உள்ளிட்ட சிந்தனை முறைகள் முன்வைக்கப்பட்டன.

மார்க்ஸீயம் நவீனத்துவ கோட்பாடுகளுடனான உரையாடலை தொடர்ந்து நிகழ்த்தி வந்துள்ளது. பிராயிடு, யூங், லகான் வழியாக உளவியல் நுட்பங்களையும், ஜுன்பால்சர்த்தா வழி அந்நியமாதல் சா¡ந்த இருத்தலிய சிந்தனைகளோடும், மொழியின் உள்கட்டமைப்பினை குறித்த அறிதலை முன்வைத்த அமைப்பியலோடும், தற்போது பின்னை நவீனத்துவத்தோடும் இடையறாத உரையாடலை செய்து வருகிறது.

அமெரிக்க மார்க்ஸீயர் பிரடெரிக் ஜேம்சன் பின்நவீனத்துவத்தை பின் முதலாளித்துவத்தின் கலாச்சார தர்க்கமாக (cultural Logic of Late Capitalism) மதிப்பிடுகிறார். பிரான்ஸ¤க்கு புலம் பெயர்ந்த அல்ஜீரியர்களுக்காக போராடிய ழாக்தெரிதாவின் பின்நவீனத்துவ முக்கியப் பங்களிப்புகளில் ஒன்று கட்டுடைத்தல் கோட்பாடு. குறிகளாலும், சமூக கல’ச்ச’ர உறவுகள’லும் கட்டமைக்கப்பட்ட மெ’ழி இலக்கண, இலக்கியப் பேச்சு பிரதிநிகளிலும் வாழ்வின் நடத்தைகளில் உட்புதைந்து கிடக்கிய ஆதிக்கம்சா¡ கூறுகளை இதன்வழி அம்பலப்படுத்த முடிகிறது.

ரோலன்பர்த்தின் சிந்தனைமுறை படைப்பாளி – படைப்பு – வாசகன் என மாறுபட்ட எல்லைகளை ஒன்றோடொன்று மோதவிடுகிறது. தீர்மானிக்கப்பட்ட அர்த்தத்தை உற்பத்தி செய்து வாசகனை நிர்ப்பந்தப்படுத்துகிற அதிகாரத்திற்கு மாற்றாக வாசக ஜனநாயகத்தை முதன்மைப்படுத்துகிறது. ‘ஆசிரியரின் மரணம்’ என்பது நூலுக்கு ஆசிரியன் உண்டு என்பதை மறுக்கவில்லை. ஒற்றைப் பொருண்மை தரும் முடிந்து போன பொருளாக இருக்கும் நூல் – வாசகனின் அர்த்தப்படுத்துதலில் பிரதியாக மாறுபாடடைவதையே அது குறிக்கிறது. தன் கலாச்சாரம், இடம் மற்றும் கால வர்க்கச் சூழல் சார்ந்தும் வாசிப்பின் அரசியல் வேறுபடுகிறது. இங்கு பிரதியின் அர்த்தம் (Textual meaning) பிரதியின் சுழல் சா¡ந்த அ¡த்தம்(Contextual meaning) இந்த வாசிப்பின் அரசியல் சமூகநீதி சார்ந்ததாக இருக்க வேண்டும் என்பதும் ஒரு கூடுதலான உண்மை.

பின் நவீனத்துவ நிலை (Postmodern Condition) எழுத்துப் பரப்பில் கலை, இலக்கியம், இசையென நீட்சி செய்து பெருங்கதையாடல்களின் தகர்ப்பு பற்றி லியோதர்த் பேசுகிறார். நவீனத்துவம் உருவாக்கி வைத்துள்ள எல்லோருக்குமான ஒட்டுமொத்த விடுதலை, ஜனநாயகம், பேருண்மைகள் பற்றிய புனைவுகள் கட்டுடைப்பு செய்யப்படுகிறது.
இதாலிய கம்யூனிஸ இயக்கப்போராளி அந்தோனியா கிராம்ஷி கருத்தியல் அதிகாரம், பொதுப் புத்தியின் பயங்கரம், உளவியல் மாதிரியான சமூக ஒப்புதல், வெகுஜன மனோபாவங்களின் உறைந்திருக்கும் சர்வாதிகாரம் முதலிய கருத்தாக்கங்களை முன்வைத்தா¡

மார்க்ஸீயத்திற்கும் பின்நவீனத்திற்குமான உரையாடலில் உடலின் மொழி, புது இடது சித்தாந்தம், பின்நவீனத்துவம் முன்வைக்கும் முழுமைகளை நிராகரித்தலை ஏற்றுக் கொள்ளுதல் சாத்தியமா, கோட்பாட்டிற்கு பிறகான நிலை எது என்பதான கருதுகோள்கள் குறித்து பிரிட்டிஷ் மா¡க்சீய இலக்கிய விமர்சகரும் தத்துவவாதியுமான டெர்ரி ஈகிள்டனும் விரிவான உரையாடலை நிகழ்த்துகிறார்.

மொழியியல் கட்டமைப்பு, மனம்-மொழி சார்ந்த உறவு, அதிகாரத்தின் செயல்பாடும் சித்தாந்தமும், ஊடக அரசியல், விஞ்ஞானப் பண்பாடு வெள்ளை ஆணாதிக்க விஞ்ஞானம், பயங்கரவாதத்தின் பெயர் சொல்லி இஸ்லாமியர்களுக்குஎதிராக அமெரிக்கா நடத்தும் ஆக்கிரமிப்பு யுத்தங்களுக்கான எதிர்நிலை பாலஸ்தீனத்தின் மீதான இஸ்ரேலின் அணுகுமுறை குறித்த விமாசனமென அமெரிக்க மார்க்ஸியா நோம்சாமஸ்கியின் ஆய்வுப் பரப்பு, விரிவாக்கம் கொள்கிறது.

பிரஞ்சு சிந்தனையாளரான ஜீன் போத்ரிலார்டு (Jean Baudrillard) மரபு மார்க்ஸீயம் தொடாத பல எல்லைகளை பின்நவீன பொருளியல் பண்பாட்டு சூழலில் விவாதத்திற்கு உட்படுத்துகிறார். இதில் நுகர்வு கலாச்சரத்திற்கு அடிமையாகிப்போன மனோபாவங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. உண்மைகள் இல்லை. எங்கும் நகல்களின் பிம்ப ஆட்சியே நடக்கிறது. இதனை ஊடகங்கள் கட்டமைக்கின்றன. ஒரு பொருளுக்கான பயன்பாட்டு மதிப்பு (use value) பரிமாற்ற மதிப்பு (exchange value) குறியீட்டு பரிமாற்ற மதிப்பு (Symbalic Exchange value) குறி பரிமாற்ற மதிப்புகளை (singn exchange value) ஊடகங்கள் உற்பத்தி செய்யும். காட்சி மதிப்பையும் (Exibitional value) இணைத்துப் பார்த்தலும் அவசியமாகிறது. முடிந்துபோன மனித உழைப்பு உற்பத்தி செய்த நவீன எந்திரங்கள் திரும்ப உயிர்ப்புமிக்க மனித உழைப்பின் மீது ஆதிக்கம் செலுத்துவதையும், உபரி உழைப்புச் சுரண்டல் வழி மூலதன உருவாக்கம் நிகழும் உபரி மதிப்புக் கோட்பாடு (Surplus theory of value) நெருக்கடிக்கு ஆளாவதையும் பின்னை மார்க்ஸீயம் எதிர்கொண்டேவருகிறது.

இவ்வாறாக எல்லா பரிமாணங்களோடும் பின்னை நவீனத்துவத்திற்கும் மார்க்ஸியத்திற்குமான உரையாடலை முத்துமோகன் அவர்கள் தொடர்ந்து நிகழ்த்தி வருகிறார். இந்திய நிலையில் சாதீய, பாலின, வர்க்க, இந்துத்துவ பிளவுச் சூழலில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக அவர் இதனை அர்த்தப்படுத்துகிறார். இந்த நூலும் நமது பயணப்பாதைக்கு கைவிளக்காகவும், அதுவே உருமாறி கைவாளாகவும் மாறிமாறிப் பயன்படுமென நம்புகிறேன்.

தமிழ்சூழலில் எட்வர்ட் சையதுகள், பிரான்ஸ் பனோன்கள், நோம்சாம்ஸ்கிகள் உருவாவதற்கு அண்ணன் முத்துமோகன் ஒரு மூதாய்.

(வெளிவர உள்ள முனைவா ந.முத்துமோகனின் தொடரும் மார்க்சீய உரையாடல் நு¡லுக்கான மதிப்பீட்டுரை )


mylanchirazool@yahoo.co.in

Series Navigation

ஹெச்.ஜி.ரசூல்

ஹெச்.ஜி.ரசூல்