விக்டோரியா டெய்ட்
ஹாலிவுட் இயக்குனரான பிலிப் நோய்ஸ், ஆஸ்திரேலியாவின் வெட்கப்படவேண்டிய ரகசியத்தை (பழங்குடி குழந்தைகளை அரசாங்கம் கடத்திச் சென்ற வரலாற்றை) குறைந்த செலவில் ஒரு திரைப்படமாக, ‘Rabbit-Proof Fence ‘ என்ற பெயரில் எடுத்திருக்கிறார்.
இந்தப்படம், மூன்று பழங்குடிச் சிறுமிகள், ஆஸ்திரேலிய அரசாங்கம் ஏற்படுத்திய பழங்குடியினர் கலாச்சார அழிப்பு திட்டத்தின் கீழ் தங்களது பெற்றோர்களிடமிருந்து பிரிக்கப்பட்ட உண்மைக்கதையைச் சொல்கிறது. பல ஆஸ்திரேலியர்கள் இன்னும், ‘திருடப்பட்ட தலைமுறை ‘ பற்றி குற்ற உணர்வோடு பேசுகிறார்கள். இந்தத் திட்டத்தின் கீழ், பல லட்சக்கணக்கான பழங்குடியினர் குழந்தைகள் தங்கள் பெற்றோர்களிடமிருந்து பலவந்தமாகப் பிரிக்கப்பட்டு, வெள்ளை இன மக்களிடம் கொடுக்கப்பட்டன. இது சுமார் 80 ஆண்டுகள், 1960வரை நீடித்தது.
‘முயல் தடுப்பு வேலி ‘ என்ற இந்தப்படம், ஆஸ்திரேலியாவின் இருண்ட வரலாற்றை பிரிட்டிஷ் பார்வையாளர்களுக்கு இந்த ஆகஸ்டிலும், அமெரிக்க பார்வையாளர்களுக்கு அக்டோபரிலும் வெளியிடப்பட இருக்கிறது. மூன்று சிறுமிகள், அரசாங்கத்திடமிருந்து தப்பி, தங்கள் பெற்றோரை கண்டுபிடிக்க, சுமார் 2400 கிலோமீட்டர் ஆஸ்திரேலியப் பாலைவனத்தில் நடந்து சென்ற இந்த கதையைப் போலவே, இந்தப் படம் எடுக்கப்பட்டதும் சற்று ஆச்சரியமானது.
நோய்ஸ் எதேச்சையாக தனது லாஸ் ஏஞ்சல்ஸ் நகர வீட்டில் நடு இரவில் ஒரு ஆஸ்திரேலியப் பெண்ணிடமிருந்து தொலைபேசி மூலம் கூப்பிடப்பட்டார். கிரிஸ்டின் ஆல்ஸன் என்ற திரைப்படக் கதாசிரியர் அந்த எண் நோய்ஸை தெரிந்த ஒருவரின் எண் என்று நினைத்தார்.
நோய்ஸ் அப்போது, டென்ஜல் வாஷிங்டனும் அஞ்சலினா ஜோலியும் நடித்த ‘போன் கலெக்டர் ‘ என்ற படத்தை வெளியிடும் மும்முரத்தில் இருந்தார். அப்போது கிரிஸ்டின் ஆல்ஸன் தன்னுடைய திரைக்கதையைப் படிக்கும்படி நோய்ஸை கட்டாயப்படுத்திக்கொண்டிருந்தார். நோய்ஸ் இறுதியில் 2 மாதங்களுக்குப் பின்னர் அந்த திரைக்கதையைப் படித்தார். ‘ இந்த கதை நான் இதுவரை படித்த எந்த திரைக்கதையையும் விட உணர்ச்சிப்பூர்வமாக இருந்தது. இதைவிட முக்கியம் இந்த சிறுமிகள் உண்மையிலேயே இந்த பயணத்தை மேற்கொண்டார்கள் என்பது ‘ என்று நோய்ஸ் குறிப்பிட்டார்.
ஹாரிஸன் போர்டு நடித்த பாட்ரியட் கேம்ஸ், கிலியர் அண்ட் பிரஸண்ட் டேன்ஜர் ஆகிய படங்களை எடுத்த நோய்ஸ், அடுத்த படமாக 100 மில்லியன் டாலர்கள் செல்வழித்து எடுக்கப்படும் ‘ஸம் ஆஃப் ஆல் பியர் ‘ என்ற படத்தை எடுக்க திட்டமிட்டிருந்தார். ஆனால் இந்த புதிய திரைக்கதை காரணமாக, தன்னுடைய அடுத்தப் படமாக முயல் தடுப்பு வேலியை எடுக்கத் திட்டமிட்டார்.
நோய்ஸ் இந்தப் படத்தை எடுக்க திட்டமிட்டதும், கென்னத் ப்ரானாக் என்ற பிரிட்டிஷ் நடிகர் தன்னுடைய சம்பளத்தைக் குறைத்துக்கொண்டு, நடிக்க முன்வந்தார். அதே போல இசை இயக்குனரான பீட்டர் கேப்ரியல் தன் சம்பளத்தைக் குறைத்துக்கொண்டு இசை அமைத்தார். இந்தப் படம் நிச்சயமாக எடுக்கப்படும் என்பதில் எனக்கு எந்த வித சந்தேகமும் இல்லை ‘ என திரைக்கதை எழுதி இந்த பட வேலையை ஆரம்பித்த ஆல்ஸன் குறிப்பிட்டார்.
பழங்குடி எழுத்தாளரான டோரிஸ் பில்கின்ஸன் காரிமாரா அவர்களால் எழுதப்பட்ட ‘முயல் தடுப்பு வேலியைத் தொடர்ந்து ‘ என்ற (Follow the Rabbit-Proof Fence) புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது ஆல்ஸன் எழுதிய திரைக்கதை. இந்த ஆஸ்திரேலிய கண்டத்தை மேலிருந்து கீழாகப் பிரிக்கும் வேலியின் பெயரை தலைப்பாகக் கொண்டது இந்தப் புத்தகம். இந்த வேலி, பயிர்களையும் வயல்களையும் மேய்ச்சல் நிலங்களையும் முயல்களிலிருந்து காப்பாற்ற விளிம்புநிலை பணியாளர்களால் கட்டப்பட்டது. ‘இந்த வேலிக்கு அருகாமையில் இருக்கும் எங்கள் வீட்டில் என் தாயாரும் என் பாட்டியும் வசித்துவந்தார்கள்.அதனாலேயே கதையின் அந்தப்பகுதி எனக்கு மிகவும் முக்கியமானது ‘ என்று பில்கின்ஸன் கூறினார்.
பில்கின்ஸனின் தாய் மோலி, அப்போது 14 வயதுடையவர். மோலியின் சகோதரி டெய்ஸிக்கு வயது 8. அவரது கஸின் கிரேஸியின் வயது 10 ஆகியோர் தங்கள் பெற்றோரைத் தேடி அந்த வேலியோரம் தங்கள் வீடு நோக்கி பயணம் செய்தார்கள். 86 வயதான மோலியும், 80 வயதான டெய்ஸியும் இந்த படத்தின் சிறிதளவு வருகிறார்கள். பில்கின்ஸனுக்கு வயது இப்போது 65 (அரசாங்கம் சொன்ன பிறந்த நாளான சூலை 1இன் படி). இவர் மார்பகப் புற்றுநோயால் அவதிப்பட்டு வருகிறார். இவரது 6 குழந்தைகளில் ஒருவர் இதே நோயால் இறந்துவிட்டார்.
தன்னுடைய புத்தகத்தை முடித்தபோது எப்படி இருந்தது என்று கேட்டபோது, பில்கின்ஸன், ‘அவர்களைப் போலவே உணர்ந்தேன்— வெற்றிகரமாக ‘ என்று கூறினார். தன்னுடைய அம்மாவின் தைரியத்தையு, தன் குடும்பத்தின் அசாதாரணமான சாதனையையும் ஆவணமாக்க முனைந்ததாக கூறிய அவர், ‘இது அதையெல்லாம் தாண்டி சென்றுவிட்டது. அந்த கதையே எல்லோராலும் பகிர்ந்து கொள்ளப்படுகிறது. நாடு முழுவதும் மட்டுமல்ல, உலகெங்கும்… ‘ என்று கூறினார்.
எல்லாப் பிரச்னைகளையும் கடந்து, திரைப்படம் பணம் பண்ணிக்கொண்டிருக்கிறது.
முயல் தடுப்பு வேலி- படம் சுமார் 5 மில்லியன் அமெரிக்க டாலர்கள் கொண்டு எடுக்கப்பட்டது. இதில் நடிக்கும் நடிகர்கள் பெரிய நடிகர்கள் அல்லர். அதற்குள்ளாகவே தன்னுடைய பட்ஜெட்டை விட அதிகமாக பணம் ஈட்டி விட்டது. ஆஸ்திரேலியாவில் வெளியிடப்பட்ட முதல் வாரமே, ஹாலிவுட் படமான ‘அலி ‘க்கும், ‘ப்ளாக் ஹாக் டவுண் ‘ என்ற படத்துக்கு பிந்தி மூன்றாவதாக வந்தது. வெளிநாடுகளில் முன்னேற்பாடாக விற்கப்படும் டிக்கெட்டுகள் மூலம் 8.4 மில்லியன் பெற்றிருக்கிறது. மிராமாக்ஸ் நிறுவனம் 4.6 மில்லியன் கொடுத்து, அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் பல நாடுகளில் வெளியிட உரிமையைப் பெற்றிருக்கிறது.
இந்தப் படத்தை வெளியிட, மிராமாக்ஸ் நிறுவனம் நெற்றியடியாக போஸ்டர் ஒட்டும் தன் வழக்கத்தை தொடர்ந்திருக்கிறது. ‘உன் மகளை அரசாங்கம் கடத்தினால் என்ன செய்வாய் ? ‘ என்ற கேள்வியோடு அமெரிக்காவில் வெளியிடப்பட இருக்கும் போஸ்டர்கள் கத்துகின்றன. கறுப்புக் குழந்தைகளை அரசாங்கம் கடத்துவது என்ற இந்த கதை உண்மையாக இருந்தாலும், இதயத்தை பிழிவதாக இருந்தாலும், பொது மக்கள் இடையே இதற்கு அவ்வளவு வரவேற்பு இருக்காது என்பதால், இப்படிப்பட்ட கூச்சலான போஸ்டர் எனக் கூறுகிறது. ‘உண்மையைச் சொன்னதற்காக மன்னிப்புக்கேட்க முடியாது ‘ என்று மிராமாக்ஸ் நிறுவனம் கூறியிருக்கிறது.
சில ஆஸ்திரேலிய அரசியல்வாதிகள், மிராமாக்ஸ் நிறுவனம் தன்னுடைய போஸ்டர்களுக்காக மன்னிப்புக் கேட்க வேண்டும் எனக் கோரியிருக்கிறார்கள். ஆனால், நோய்ஸ், இந்த அரசியல்வாதிகள் முதலில் பழங்குடியினரிடம் மன்னிப்புக்கோரவேண்டும் எனக் கூறியிருக்கிறார்.
1997இல், ஆஸ்திரேலிய மனித உரிமை கமிஷனது அறிக்கை, பல லட்சக்கணக்கான பழங்குடி குழந்தைகலை குடும்பங்களிலிருந்து பிரிப்பது இந்த பழங்குடி மக்களது இனப்படுகொலை நோக்கிய ஒரு திட்டம் என்றும், இவர்களை அழித்தொழிக்கும் திட்டம் என்றும் கண்டனம் செய்தது. பல விவசாயப்பண்ணைகளில் இந்த பழங்குடி சிறுவர்கள் ஏறத்தாழ அடிமைகள் போல வேலை வாங்கப்படுகிறார்கள். இந்த பழங்குடி சிறுமிகள் வெள்ளையாடை உடுத்தி, வெள்ளையின மக்களுக்கு வீட்டு வேலைக்காரிகளாக பயன் படுத்தப்படுகிறார்கள். பலர் கற்பழிக்கப்பட்டு, சவுக்குக்களால் அடிக்கப்பட்டிருக்கிறார்கள்.
ஆஸ்திரேலியாவின் 4 லட்சம் பழங்குடியினர், வெள்ளை ஆஸ்திரேலியர்கள் ‘திருடப்பட்ட தலைமுறைக்காக ‘ மன்னிப்புக்கேட்க வேண்டும் எனக் கோருகிறார்கள். மூன்றாம் முறை பிரதமராக இருக்கும் இன்றைய பிரதமரான ஜான் ஹோவர்ட் நிர்த்தாட்சண்யமாக அப்படி மன்னிப்புக் கோரமுடியாது என்று மறுத்துவிட்டார்.
இதற்கிடையில், பில்கின்ஸன், தன்னுடைய மூன்றாம் புத்தகத்தை எழுத முயன்றுவருகிறார். அவரது அம்மா மோலி, தன்னுடைய வீட்டுக்கு இரண்டுமுறை வெகுதூரம் பயணப்பட்டு வந்திருக்கிறார். தன்னுடைய 24ஆம் வயதில், மோலி தன்னுடைய இரண்டு குழந்தைகளுடன் பிடிபட்டு, தான் முன்னர் குழந்தையாக இருந்தபோது இருந்த கூடாரத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார். மீண்டும், அங்கிருந்து தப்பி தன்னுடைய வீட்டுக்கு வந்தார். ஆனால், தன்னுடைய ஒரே ஒரு குழந்தையைத்தான் கூட்டிக்கொண்டு வர முடிந்தது. 2 வயது கொண்ட அனாபெல்லைக் கூட்டிக்கொண்டு, ஆனால் 4 வயது நிரம்பிய டோரிஸை விட்டுவிட்டு ஓடினார். அதிகாரிகள் அனாபெல்லை மோலியிடமிருந்து ஒரு வருடம் கழித்து பிரித்து எடுத்துக்கொண்டு சென்று விட்டார்கள். இருவரும் ஒருவரை ஒருவர் பிறகு சந்திக்கவே இல்லை.
இந்தப்படம் இங்கிலாந்தில், ஆகஸ்ட் 30ஆம் தேதி வெளியிட இருக்கிறது.
***
http://www.rabbitprooffence.com.au/
http://www.eniar.org/info/background5.html
http://library.trinity.wa.edu.au/aborigines/stolen.htm
http://old.smh.com.au/news/specials/natl/stolen/
***
இதர குறிப்புகள்:
1. 10 சதவீதத்திலிருந்த்து 47 சதவீதம் வரை என கணக்கிடப்படும் பழங்குடி குழந்தைகள் இவ்வாறு அரசாங்கத்தால் கடத்தப்பட்டிருக்கிறது. இந்த பழங்குடி குழந்தைகளின் எண்ணிக்கை 1 லட்சத்துக்கும் மேல்.
2. மே 1997இல் மனித உரிமைக்கழகம் வெளியிட்ட அறிக்கை அரசாங்கத்தை நேரடியாகக் குற்றம்சாட்டியது. அது ஆஸ்திரேலிய அரசாங்கத்தை இனப்படுகொலை அரசாங்கம் எனக் கூறி, பழங்குடி மக்களிம் மன்னிப்புக் கேட்கவேண்டும் எனவும் அவர்களுக்கு நஷ்ட ஈடு வழங்கவேண்டும் எனவும் கோரியது.
3. சூலை 1997இல் கத்தோலிக்க கிரிஸ்தவ மத நிறுவனமும், ஆங்கிலிகன் கிரிஸ்தவ மத நிறுவனமும், இவ்வாறு பழங்குடி மக்களின் குழந்தைகளை கடத்தவும் அவர்தம் பெற்றோரிடமிருந்து வலுக்கட்டாயமாகப் பிரிப்பதற்கும் அடிமைகளாக வைத்திருப்பதற்கும் உதவிய இந்த திட்டத்துக்கு வெகுகாலம் உதவியதற்கு பழங்குடி மக்களிடம் மன்னிப்புக் கோரின.
4. ஆகஸ்ட் 1999இல் ஆஸ்திரேலிய பாராளுமன்றம், தன் தவறுக்கு வருந்தி ஒரு தீர்மானம் நிறைவேற்றியது. ஆயினும் மன்னிப்பும் கோரவில்லை. ‘திருடப்பட்ட தலைமுறைகள் ‘ என்று குறிப்பிடவும் இல்லை.
***
2.
- துப்பறியும் சாம்பு
- ஆண்கள் – எப்படிப்பட்டவர்கள்
- காலச்சுவடு
- முயல் தடுப்பு வேலி – திரைப்படம்- ஆஸ்திரேலியாவின் பழங்குடியினர் வரலாற்றில் ஒரு கொடிய அத்யாயம்
- காலச்சுவடு பதிப்பகம் ஆகஸ்ட் 2002 வெளியிட இருக்கும் ‘புதுமைப்பித்தன் கட்டுரைகள்’ நூலுக்கு எம். ஏ. நுஃமான் அளித்துள்ள முன்னுரையின்
- பாரதிதாசன்
- பரவசமும் துக்கமும் (எனக்குப் பிடித்த கதைகள் -20 க.நா.சு.வின் ‘கண்ணன் என் தோழன் ‘)
- இத்தாலிய முட்டை தோசை
- காய்கறி முட்டைதோசை (வெஜிடபிள் ஆம்லெட்)
- ப்ரெஞ்ச் முறை ரொட்டி ( ப்ரெஞ்ச் டோஸ்ட் )
- அசுர விண்வெளி மீள்கப்பல்கள் புரிந்து வரும் அண்டவெளிப் பணிகள்
- அறிவியல் மேதைகள்- மைக்கேல் ஃபாரடே (Michael Faraday)
- சிறு சிறுத் துளிகள்
- ஒரு வரம்.
- சத்தியமாய் நீ பண்டிதனல்ல
- புதுயுகம் பிறக்கிறது
- கழுதை ஞானம்
- இருத்தல் குறித்து 3 கவிதைகள்
- இந்த நாடு விற்பனைக்கு.
- பரல்கள்
- திண்ணைப் பாடல்கள்
- இந்த வாரம் இப்படி – சூலை 28 2002 (ஜெயலலிதாவுக்கு அழைப்பு, கிருஷ்ணகாந்த், பாகிஸ்தான், என் ராம்)
- முயல் தடுப்பு வேலி – திரைப்படம்- ஆஸ்திரேலியாவின் பழங்குடியினர் வரலாற்றில் ஒரு கொடிய அத்யாயம்
- சரவணன் கட்டுரை பற்றி மாலன் – ஒரு பின் குறிப்பு
- நற்பண்பு (Virtue)
- உலக நாடுகளின் கடன் – ஆரம்பமும், தொடர்ச்சியும் – ஒரு எளிய முன்னுரை -1
- பெரியண்ணா மீது பெருவியப்பு
- குஜராத்தும் நமது அறிவுஜீவிகளும்
- போதி