கொடுப்புளி
அரிசி – 2 ஆழாக்கு
உப்பு – 1 ஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 6
சீரகம் – 1/2 ஸ்பூன்
தேங்காய் – 1
நல்ல எண்ணெய் – 2 குழி கரண்டி
தண்ணீர் – 3 குழி கரண்டி
அரிசியை 2 மணிநேரம் ஊற வைத்து கொண்டு, அரிசியுடன் சீரகம், உப்பு, மிளகாய் ஒன்றாக போட்டு சிறிது கரகரப்பாக அறைத்து எடுத்துக் கொண்டு. தேங்காயை துருவி மாவுடன் கலந்து கெட்டியாக பிசைந்து கொண்டு. (தேவையானால் வெங்காயம் அரிந்து சேர்த்துக் கொள்ளலாம்) மாவை ஒரு நீட்ட வாக்கில் உருட்டிக் கொண்டு பின்பு அதை சுருட்ட வேண்டும். பின்பு ஒட்டாத கடாயில் (Non Stick) மூண்று கரண்டி தண்ணீரும் இரண்டு கரண்டி எண்ணெய்யும் விட்டு சூடாக்கவும், சூடானவுடன்
மாவில் செய்து வைத்துள்ளதை வைத்து மூடி 20 நிமிடம் வேகவிடவும்.
பின்பு எடுத்து சூடாக பரிமாறவும். சாப்பிட சுவையாக இருக்கும்.