ப்ரவாஹனின் தொடரும் “போலி சாதி ஒழிப்பு” பிரச்சாரங்கள்

This entry is part [part not set] of 33 in the series 20061221_Issue

சிங்கதுரைப் பாண்டியன்


இவரின் இரண்டு திண்ணை கட்டுரைகளைப் படித்த பின்னர், புரிவது ப்ரவாஹனின் நோக்கம் சாதி ஒழிப்பு அன்று. தம் சாதி ஒரு காலத்தில் மேல் சாதியாகவும், பின்னர் வேளாளரின் சூழ்சியால் கீழிறக்கப் பட்டதாகவும் வரலாற்றை எழுத ஆசை.

சாதியை ஒழிக்கப் பிறப்பட்டிருப்பதாக, மற்ற இடங்களில் எல்லாம் கூறிக் கொள்ளும் இவர், வேளாளர், முக்குலத்தோர், பள்ளர், எல்லாம் பிறப்பால் மட்டம். பறையர், நாடார், கம்மாளர் எல்லோரும் பிறப்பால், 1000 ஆண்டுகளுக்கு முன் உயர் சாதியினர் என்று ‘போலிப்’ பிராசாரம் செய்வது எவ்விதத்தில் சரி?

ப்ரவாஹனின் கூட்டத்திற்கு வேள் என்பதை வேளாளருக்கு பொருத்த மனமில்லை. ஆனால், தொல்காப்பியம் வேளாண் மாந்தர் என
கூறும் போது, அது வேளாளரைக் குறிக்கும் என எழுதுவது எப்படி? முக்குலத்தோர் பூணுல் அணைவதில்லை. மறவர் என்று புறநானுற்றில் சொல்லப் படுகிறவர்களுக்கு உரிய குணாதிசியம் எல்லாம் இன்று வரை ஓரளவாவது இருக்கப் பெற்றவர்கள். வட
இந்திய வீர மரபினற்கு குறையாத வீரமும், ஆளுமையும் உள்ளவர்கள். தம்மை சத்திரியர் என்று போலியாக கூற விரும்பாதவர்கள், அப்படி அழைக்க எல்லா தகுதியும் இருப்பினும். முக்குலத்தோர் தம்மை வேளாளரினால் தாழ்த்தப் பட்டதாக என்னுவதில்லை. மாறாக,
சோழ, பாண்டிய மண்டலங்களில், கிராமத்தில் மாமன், மச்சான் உறவு இன்றும் கொள்கின்றனர். கொங்கு மண்டலத்தில், கொங்கு வேளாளர் வீரமும், விவசயாமும் புரிந்து, Peasant – warrior communities என்பதற்கு உதாரணமாக விளங்கினர். தமிழ் சமுகத்தில், இவ்விரு இன்றைய சாதிகளும், பள்ளரும் பாதிக்கு மேல் இருக்கக் கூடும்.

ஆக, தமிழ் வரலாற்றில் தெளிவாக குறிப்பிடப் படும் மூன்று பெரிய மக்க்ட் கூட்டங்கள் பூணுல் அணிவதில்லை. தாம் தமிழர் என்றும்,
தமது அடையாளம் தனி என்றும், நாங்கள் தொடர்புடையவர் என்றும், தாம் வர்ணாசிரமத்தின் கீழ் வருவதில்லை என்றும் இவ்ர்களின் கற்றரிவாளர் கூறினால், பிரவாஹ்ன் முதலிய ஆரிய அடிவருடிகளுக்கு பொத்துக் கொண்டு வருவதேன்? மறைமலை அடிகள் வேளாளரை உயர்த்தினால், இன்னொறு வேளாளரான ஜிவாதானே அதையும் கேள்வி கேட்கிறார்?

பேராசிரியர் சிவ சுப்ரமணியன் தமிழர்கள் மத்தியில் சாதி உயர்வு ஏற்றத் தாழ்வு ஆரம்பத்தில் இல்லை. பின்னர் புகுத்தப் பட்டது என்று எழுதினால், இதில் வேளாளர் உயற்சி எப்படி? இவர்களுக்கு வசதிப் பட்டால், அக நானுறு, புற நானூறு, தொல்காப்பியம், திருக்குறளை மேற்கோள் காட்டுவார்கள். ஏன் 12 நூற்றாண்டு சிலப்பதிகார உறையும் சரி. அவற்றிலேயெ, நாம் தமிழ் சமுதாயம் எப்படி,
வட இந்திய வர்ணாசிரம் கூறும் சமுதாயத்திலிருந்து, வேறு பட்டது என்றால், வரலாற்றுத் திரிபு என்பார்கள்.

வட இந்திய என்பதே தவறு. நன்தர் முதல், மௌரியர், குப்தர், வர்த்தனர், ராஸ்டிரகூடர் வரை இவர்கள கணக்கில் சத்திரியர் இல்லை. ராமர் குலத்திற்கு பின், நேராக, 11 ஆம் நூற்றாண்டில் சத்திரியரை ராஜபுத்திரரில் காண்கிறார்கள். இது மட்டும் போதும், வர்ணாசிரம் இந்திய சமுதயாத்தில் வலுக் கட்டாயமாக, ஒரு சிறிய கூட்டத்தினால் எற்றப் பட்டது என்பதை அறிய. இதனை சாதி உயர்வு பெற்றவர்களும், பெற வாய்ப்பு இருப்பதாக எண்ணிக் கொள்ளும் சிலரும் உயர்த்திப் பிடிக்கிறார்கள். இவர்கள் துரதிருஸ்டம், பெரும்பாலான தமிழருக்கு, தாம் 2000 ஆண்டுகளுக்கு முன்பே, “யாதும் ஊரே, யாவரும் கேளிர்” என்று சொன்ன பாரம்பரியமும், அடைய வேண்டிய இலக்கும் தெரிந்திருப்பதுதான்.

சிங்கதுரைப் பாண்டியன்


assi1947@yahoo.co.in

Series Navigation

சிங்கதுரைப் பாண்டியன்

சிங்கதுரைப் பாண்டியன்