நிருபர்: பாஜகவை எதிர்த்து ஓட்டு போட்டது பற்றி நீங்கள் என்ன கூறுகிறீர்கள்?
மூப்பனார் :நான் காந்தி குடும்பத்தின் முழு நேர ஊழியன் என்று மறுபடியும் நிரூபிக்க ஒரு வாய்ப்புக் கிடைத்தது பற்றி மகிழ்ச்சி.
நிருபர்: மீண்டும் அதிமுகவுக்கு ஆதரவாக ஓட்டுப் போட்டிருக்கிறீர்களே?
மூப்பனார்: நான் போபர்ஸ் போன்ற உலகத் தரமான ஊழலை ஆதரிப்பேனே தவிர டான்ஸி, வேட்டி சேலை போன்ற உள்ளூர் ஊழலை ஆதரிக்க மாட்டேன். மற்றும் உலகத்தர
ஊழல் தொடர்வதற்காக உள்ளூர் ஊழலை சகித்துக் கொள்ள எங்களுக்குக் கர்ம வீரர் காமராஜர் சொல்லித்தந்திருக்கிறார். சோனியா பிரியங்கா வழியில் தமிழகத்தில் காமராஜர்
ஆட்சியை நிறுவ நாங்கள் அயராது உழைப்போம் என்று கூறிக் கொள்கிறேன்.
நிருபர்: திமுகவுடன் கூட்டு தொடருமா?
மூப்பனார்: ஊழல்ராணியான ஜெயலலிதா தமிழக முதல்வராக ஆவதை நாங்கள் தொடர்ந்து எதிர்ப்போம். அதற்கான எங்கள் கூட்டணி தொடரும். ஆனால் அவர் இந்திய
பிரதமராக ஆனால் என்ன செயவது என்று யோசிப்பதற்கு பொதுக்குழு கூட்டம் கூட்ட இருக்கிறோம். அதை பொதுக்குழு முடிவு செய்யும்.
நிருபர்: கலைஞர் பாஜக ஆட்சி தோற்றதற்கு தமகாவை காரணமாக சொல்லியிருக்கிறாரே?
மூப்பனார் எங்கோ பார்த்துக்கொண்டு இருக்கிறார். அரைமணிநேரம் காத்திருந்த நிருபர் மெல்ல அங்கிருந்து நகர்கிரார்.
நிருபர்: வடவர் எதிர்ப்பு, இந்துமத எதிர்ப்பு, பிராமணர் எதிர்ப்பு என்ற கொள்கைகளை துறந்து இன்று பாஜகவுக்கு ஆதரவு அளித்திருக்கிறீர்களே?
கருணாநிதி : வடவர் நம்மவரும் அல்லர், நல்லவரும் அல்லர் என்ற பழைய வசனங்களை நினைவு படுத்திட வேண்டியதில்லை. ஜெயலலிதாவின் உதவியாளர்கள் அமர்ந்த
அமைச்சர் நாற்காலியில் உட்கார என் மருமான் மாறனுக்குத் தகுதி இல்லையா என்ன? வாஜ்பாயி வல்லவர் நல்லவர். என் அரசைக் கலைத்திடும் எண்ணம் சிறிதும் இல்லாத
உத்தமர். சோனியா காந்தி வடவரை மணம் புரிந்ததனால் வடவரே. இவர்தம் ஆட்சி இந்தியாவுக்கு மட்டுமல்ல இத்தாலிக்கும் இசைந்ததல்ல என்பதே நம் கருத்து. சொல்வதையே
செய்வோம் செய்வதையே சொல்வோம்.
நிருபர்: (பேஜரை பார்த்துவிட்டு) திடீர்ச்செய்தி. சோனியா பிரதமர் என்று நாராயணன் சொல்லிவிட்டார்.
கலைஞர்: இந்திராவின் மருமகளே வருக. இனியதோர் ஆட்சியைத் தருக.
நிருபர்: பாரதீய ஜனதா ஆட்சிக்கு உங்கள் ஆட்சேபம் என்ன?
ஜோதிபாசு: பாரதீய ஜனதா ஆட்சியில் மார்க்ஸிஸ்ட் கட்சி போன்ற சிறுபான்மை இனத்தவர்க்குப் பாதுகாப்பு இல்லை. மம்தா பனர்ஜி போன்ற பிற்போக்கு வாதிகளுடன் இணைந்து
விட்டார்கள்.
நிருபர்: இந்தியப் பாதுகாப்புக்காக அணுகுண்டு வெடிப்பது பற்றி?
ஜோதிபாசு: ரஷ்யா, சீனா போன்ற நாடுகள் அணுகுண்டு வெடித்தால் அது சோஷலிச அமைப்பைப் பாதுகாக்கச் செய்யப்படுவது என்பதை பாட்டாளி வர்க்கம் அறியும். இந்தியா
அணுகுண்டு வெடித்தால் அது பிரசினைகளைத் திசை திருப்பச் செய்யும் முயற்சி என்றும் பாட்டாளிவர்க்கம் அறியும். காஷ்மீரை பாகிஸ்தானுக்கு கொடுத்தால் பாகிஸ்தானிய
பாட்டாளிவர்க்கம் வெற்றியடையும் என்றும், அருணாசலப் பிரதேசத்தை சீனாவிற்கு கொடுத்தால் சீனப் பாட்டாளிவர்க்கம் வெற்றிய்டையும் என்றும் நாங்கள் வற்புறுத்திக் கூறி
வருகிறோம். பாதுகாப்பு அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் இந்திய பாட்டாளிவர்க்கத்தின் பிரதிநிதிகளான எங்களை எதிர்த்தால் பரவாயில்லை. சீனப் பாட்டாளிவர்க்கத்தை எதிர்க்கும்
போக்கில் திபெத்தை ஆதரிப்பதும் தலாய் லாமாவை ஆதரித்துப் பேசுவதும் உலகப் பாட்டாளி வர்க்கத்துக்கு செய்யும் துரோகம்.
நிருபர்: சோனியாவிற்கு ஆதரவு தருவது சரியா?
ஜோதிபாசு: மார்க்ஸ் அன்றே சொன்னது போல, முதலாளித்துவக் கைக்கூலிகளான வாஜ்பாயியை எதிர்க்கிறோம். பாட்டாளி மக்களின் பாதுகாவலாரான சோனியாவை நாட்டுக்குத்
தலைமையேற்க அழைக்கிறோம். சிறுபான்மை மக்களின் நன்மை கருதி, மதச்சார்பின்மையை வலுப்படுத்த மேலும் மேலும் ஊழல் புரியுமாறு, ஜெயலலிதா, சுப்பிரமணியம் சுவாமி
போன்ற பிற்படுத்தப்பட்ட பிராமணர்களை வரவேற்கிறோம். இவர்கள் லல்லு , முலாயம் போன்ற யாதவர்களுடன் இணைந்து புதிய சாதிபேதமற்ற பொற்காலத்தை உருவாக்கி
சிறுபான்மை மக்களைக் காப்பாற்ற நாங்கள் வெளியேயிருந்து ஆதரவு கொடுக்க அழைக்கிறோம்.
நிருபர்: பாராளுமன்ற உறுப்பினராகக் கூட இல்லாத நீங்கள் பிரதமராவது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
சோனியா: எல்லோரும் சேர்ந்து எனக்கு இந்தியாவைத் தாரை வார்த்தால் எனக்கு சந்தோஷமே. வெறும் ராஜீவ் காந்தி பவுண்டேஷனை மட்டும் வைத்துக் கொண்டு பிழைக்க
முடியுமா என்ன?
நிருபர்: உங்கள் கொள்கை என்ன என்பது பற்றித் தெரியவில்லையே?
சோனியா: காங்கிரஸின் கொள்கைதான் என் கொள்கை. காங்கிரசின் பாரம்பரியமான முதுகில் குத்துதல், ஜால்ராக்களுக்குப் பதவியளித்தல், கொள்ளையடித்தல், அவ்வப்போது
சிறுபான்மை மக்களைப் பற்றி பேசுதல், பொன்றவற்றைக் காப்பாற்றுவேன் என்று சொல்லிக் கொள்கிறேன்.
நிருபர்: வெளிநாட்டுக் கொள்கை பற்றி?
சோனியா: இத்தாலி நாட்டின் நலன் தான் இந்தியா. இந்திராதான் இந்தியா என்று சொன்னது போலவே, இத்தாலிதான் இந்தியா என்று சொல்லக் காங்கிரஸ் காரர்களைத் தயார்
செய்ய வேண்டும்.
நிருபர்: உங்களை எதிர்த்தவர்கள் எல்லாரும் உங்களை ஆதரிக்கிறார்களே?
சோனியா: ஜெயலலிதாவுடன் நடந்த பேரம், மாயாவதியுடன் நடந்த பேரம், இன்னும் தெலுங்கு தேசம் எம்.பிக்களுடன் நடக்கவிருக்கும் பேரம், சைபுதீன் சோசுடன் நடந்த பேரம்
இவற்றைப் பற்றியெல்லாம் நான் சொல்வதற்கில்லை.
நிருபர்: அகாலிதளம் தங்களை ஆதரிக்கிறதா?
சோனியா: ராஜீவ் ஆண்டபோது 84இல் சில சீக்கியர்கள் இறந்ததற்காக நான் மன்னிப்பு கேட்டுவிட்டேன். இருந்தாலும் என்னை ஆதரிக்க மாட்டேன் எஙிறார்கள். எதிர்காலத்தில்
ஏதாவது மரம் விழுந்து பூமி அதிர்ந்தால் அதற்கு நான் பொறுப்பல்ல.
நிருபர்: கிரிஸ்தவமக்களுக்கு எதிரான கலகங்கள்தான் அரசை இறக்கிவிட்டதா?
வாஜ்பாய்: பாஜகவைச் சேர்ந்தவர்கள் கிரிஸ்தவ மக்களுக்கு எதிராக பிரச்சாரம் செய்கிறார்களே தவிர கிரிஸ்தவ மக்களுக்கான கலகங்களில் ஈடுபடுவதில்லை. அதற்காக தனி
நிருவனங்களை உருவாக்கி இருக்கிறோம்.
நிருபர்: ஊழலற்ற ஆட்சியென்று கூறிவிட்டு ஜெயலலிதாவை அரசில் இணைத்துக் கொண்டு ஆட்சி செய்தீர்களே?
வாஜ்பாய்: நேற்றுவரை அவர்மீது திமுக ஆட்சி கொண்டுவந்த வழக்குகள் அரசியல் ரீதியான பழிவாங்குதல் காரணமாக போடப்பட்ட வழக்குகள் என்றுதான் நினைத்தோம்.
இன்றுதான் ஜெயலலிதா செய்த ஊழல்களை பற்றி கருணாநிதி எனக்கு விளக்கினார். நான் அதிர்ச்சி அடைந்து இருக்கிறென்.
நிருபர்: வழக்கம் போல ஜெயலலிதாவின் கோரிக்கைகளை நிறைவேற்றியிருந்தால் இந்தப் பிரசினை வந்திருக்காதே?
வாஜ்பாய்: ஜெயலலிதாவின் எல்லாக் கோரிக்கைகளையும் நிறைவேற்றத் தயார் தான். ஜெயலலிதா வீட்டு நாய்க்குட்டியை அமைச்சராக்கச் சொன்னால் கூட நான் தயார் தான்.
அந்த நாய்க்குட்டியைவிட விவரமற்றவர்களை அமைச்சர்களாக ஆக்கியிருக்கிறோம் என்பதற்கு அதிமுகவுக்கே ஓட்டு போடாத சேடப்பட்டி முத்தையாவெ சாட்சி. ஆர் எஸ் எஸ்
சொன்னதால், சுவாமியை அமைச்சராக்குவது தான் முடியவில்லை. பெர்னாண்டசையும் போகச் சொல்லியிருப்போம். ஆனால், அடுத்த நிபந்தனையாக வாஜ்பாயியை நீக்கிவிட்டு,
புரட்சித்தலைவியை பிரதமராக்க வேண்டுமென்ற நிபந்தனை வருவதாய் அறிந்தோம். என்ன செய்வது? கீழே இறங்கிவிட்டோம்.
பேட்டிகள் : தின கப்சா விற்கு மட்டுமே கிடைத்தவை.

- ஒளிர்ந்து மறைந்த நிலா
- இறைவனின் எல்லாக் குழந்தைகளுக்கும் அப்போது சிறகுகள் இருந்தன
- அன்புள்ள ஆசிரியருக்கு
- மங்கையர் மலரில் இதுவரை வெளிவராத சமையல் குறிப்புகள்
- குடி குடியைக் கெடுக்கும் – தமிழ்நாடு பற்றிய திண்ணை அட்டவணை1998ஏப்ரல்-1999 மார்ச் – ல் டஸ்மாக் நிறுவனம் வழியாக விற்பனையான மதுவகைகளின் அளவு: 22 கோடி லிட்டர்
- திண்டுக்கல் சோதிடரும் மழையும்
- எங்கே மகிழ்ச்சி ?
- பேட்டிகள் : தின கப்சா விற்கு மட்டுமே கிடைத்தவை.
- ஜெயலலிதா பிரதமரானால்
- ஆன்மீகமும் யூத எதிர்ப்பும் பற்றிய உரையாடல்
- ரிச்சர்ட் டாகின்ஸ் (Richard Dawkins)
- செவ்வாய் கிரகத்தின் கடந்த காலம்
- 2001 க்கு அப்புறம் – ஆர்தர் சி கிளார்க்
- ஒரு தனி அமீபா எவ்வாறு சமூக உயிரியாக ஆபத்துக்காலத்தில் மாறுகிறது என்பது பற்றி..