புகாரி கவிதை நூல் வெளியீடு

This entry is part [part not set] of 22 in the series 20051006_Issue

மதுரகவி


தமிழ்க் கவிதை நூல் வெளியீட்டு விழாவென்றால், இன்று, கனடாபோன்ற, வாழ்வு யந்திரமயமாக்கப்பட்ட நாட்டில், எவ்வளவு தூரம் ஆர்வம் காட்டப்படுமென்ற ஆதங்கம் மிக்க கேள்வி எழுவதில் வியப்பில்லை. இங்கே, மணித் துளிகள் ஒவ்வொன்றும் டாலர்களால் அபகாிக்கப்பட்டிருக்கும் நிலைமை ஒருபுறம், தமிழுக்கு ஒரு பிழைப்புக்கான மொழிச் செயற்பாடு இங்கு இல்லாதிருப்பது மறுபுறம். அதுமட்டுமன்றி, தொடர்பாடலுக்கான பங்கினையும் தமிழ் இங்கே பெரும்பாலும் இழந்துபோயுள்ள நிலையில் இங்குவாழ் தமிழ் மக்கள் பலருக்கும் தமிழார்வம் குன்றிப்போயுள்ளது – குறிப்பாக இளைய தலைமுறையினருக்கு.

இந் நிலையில் கவிதை போன்ற, ஆழ்ந்த ரசனைக்குாிய விடயங்களை ரசித்துணரும் நுண்மதி சாதாரணர் மத்தியில் அறவே மழுங்கிப்போய் |கல்லுளி மங்கா;கள்| நிலைக்குத் தாழ்ந்துபோய் நிற்பதுதான் வேதனை. இம் மனிதா;களின் ரசிகா உணர்வானது நேரடிப் புலநுகா;வு என்பதாக, சப்தங்களையும் பிம்பங்களையும் கேட்கும், பார்க்கும் கணத்தோடு மறைந்துவிடும் ஒன்றாகச் சுருங்கிக் கிடக்கிறது. அவர்களோ, |ரசனை| என்பதை வெறும் |பொழுதுபோக்கு| என்பதாக அர்த்தங்கண்டுகொண்டு களியாட்ட விழாக்களுக்கும் நட்சஸ்திர |ஷோ| களுக்கும் மட்டுமே அள்ளுண்டு சென்றபடியுள்ளார்கள். கவிதை வெளியீடுகள் போன்ற அர்த்தபுஷ்டியான விடயங்களுக்குச் சலித்துக் கொள்கிறார்கள்.

இப்படியான ஒரு அவலச் சூழ்நிலையிலும் சிலர் இதையெல்லாவற்றையும் சட்டை செய்யாமல் இங்கே கவிதை செய்தபடி இருக்கத்தான் செய்கிறார்கள். கற்பாறைகளுக்குள்ளும் சில வித்துக்கள் வேர்தள்ளி முளைவிடத்தானே செய்கின்றன, அதுபோல! அப்படியான ஒருவராக, கவிஞர் புகாாி அவர்கள், கனடாவில் வெளியிட்ட கவிதை நூல் வெளியீட்டு விழாவொன்று கடந்த ஒக்டோபர் 1ம் திகதி, ஸ்காபரோ சிவிக் சென்டாில் இனிதே நிகழ்ந்தேறியதானது உண்மையில் ஒரு சாதனையேதான்.

கணிசமான ஆர்வலர்கள் வருகை தந்திருந்தார்கள். கவிதைகளை நயம்பட எடுத்தாய்ந்துரைக்கவல்ல பேச்சாளர்கள் பங்கேற்றிருந்தார்கள். இந்தியாவிலிருந்து வருகை நந்திருந்த சிறப்புப் பேச்சாளர் கவிஞர் ரமணன் அவைக்குப் பெருமை சேர்க்கும் வகையில் அர்த்பூர்வமான உரையொன்றை வளங்கியிருந்தார். அவர் கவிஞர் புகாாியின் கவிதைகளில் உள்ளார்ந்திருந்த |பொஸிடிவ்னஸ்| என்ற நம்பிக்கை இழையோட்டத்தை பிரதானமாக எடுத்துக் காட்டினார்.

கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் சார்பில் சிவதாஸன்அவர்கள் தலைமையில் நிகழ்ந்த இந் நிகழ்வில் சிறப்புப் பேச்சாளர் ரமணன் தவிர விமர்சகா; ஜெயவர்தன், பொன் குலேந்திரன், ஆர். எஸ். மணி, அதிபர் பொன். கனகசபாபதி, எழுத்தாளர் ஆ. முத்துலிங்கம் ஆகியோருடன் உதயன் பிரதம ஆசிாியர் என். லோகேந்திரலிங்கமும் உரையாற்றியிருந்தனர்.

இந் நிகழ்ச்சிபற்றிக் குறிப்பிடுகையில் மறவாது சுட்டிக்காட்டப்படவேண்டிய ஒரு விடயம் என்னவென்றால் இந் நிகழ்ச்சியில் சேர்ந்த நிதியில் செலவு போக மீதம் அனைத்தையும் கவிஞர் புகாாி அவர்கள் கனடா இலக்கியத் தோட்டத்துக்கே நன்கொடையாக வழங்கியுள்ளார். தனது வருமானத்தைவிட இங்கே இலக்கிய வளர்ச்சியில் அவர் கொண்டுள்ள அக்கறையை முதன்மைப்பட்டு நிற்பதை அவதானிக்க முடிகிறது. இத்தகைய ஒரு செயலால் மட்டுமல்ல, அவர் தனது சொந்த முயற்சியாகவே கணனி வெப் தளமொன்றை அமைத்து கவிதைகள் பற்றிய இலக்கியப் பாிமாற்றங்களிலும் கவிதா ஆர்வலர்களை உற்சாகப்படுத்தி வளர்ப்பதிலும் பெருமுயற்சி எடுத்து வருகிறார். அத்துடன் கணனியில் தமிழைப்பயன்படுத்துவது பற்றியும் அவர் பலருக்கும் அறிமுகப்படுத்தி வருகிறார். இந் நிகழ்ச்சியைக்கூட அதற்கே அவர் பயன்படுத்தியதானது அவரது இயல்பான இலக்கிய அக்கறையின் பாலானதே.

இந் நிகழ்ச்சியில் |பச்சைமிளாகாய் இளவரசி| என்ற படிமம் சுவையான அரங்காடலாக அமைந்தது. அதற்கு ஒவ்வொருவரும் வெவ்வேறு கோணங்களில் விளக்கமளிக்க முற்பட்னர். கவிஞர் தன் மகளைக் குறித்தே இச் சொற் பிரயோகத்தைச் செய்திருந்தார். பச்சை மிளாகாய் இளவரசி! சுள்ளென்று நாவில் உறைக்கும் பச்சை மிளகாயுடன் இளவரசி என்ற பதத்தை இணைத்தவுடன் அற்புதமான ஒரு படிமம் தோன்றுகிறது. அது மகளின் கோபத்தையும் குறிக்கிறது. அக் கோபத்தைப் பிரயோகிக்க, தந்தை மீது மகள் கொண்ட பிரத்தியேக உாிமையையையும் தொனிக்கிறது. தந்தை மகள்மீது பாராட்டும் பாசத்தையும் அப் பாசத்தால் மகளைச் சீராட்டும் செல்லச் செருக்கையும் முரண்சுவையாக வெளிப்படுத்தும் இந்த அழகான படிமம் மிக உயிர்ப்புள்ளதாக அமைந்திருந்தது. ஒவ்வொரு பேச்சாளரும் அதை வெவ்வேறு விதமாக சுவைத்தார்கள்.

கவிஞர் புகாாி, தனது பதிலுரையில் இந்தச் சொற்பதத்தம் தனது பாட்டியார் சொன்ன சிறுபராயக் கதைகளில் வந்த ஒன்றாகக் கூறி கதையொன்றைச் சொன்னார். அதுவும் சுவையாகவே இருந்தது.

அதுபோலவே மற்றொரு கவிதைவாி மலைக்க வைத்தது. | படுத்துக் கிடக்கும்போதே பயமாய் இருக்கும் கடல், எழுந்து நின்றால் என்னாவது!| கடலை அழகழகாக ரசிக்கும் எவரும் கடலுள் சஞ்சாிக்கும்போது சற்று நெஞ்சப் பதைபதைப்போடுதான் செல்வர். அதே கடல் எழுந்து நின்றால்…! நினைக்கவே பிரமாண்டமான ஒரு அழிவின் சொரூபம் சட்டெனப் புலப்படும், – எவருக்கும். ஆனால், அது எழுந்து நின்றதே! சுனாமியாக… அந்த அழிவுக் கோலத்தை தத்ரூபமாக ஒரே வாியில் சித்திாித்திருந்தார் கவிஞர். இந்த வாிகளும் எல்லாப் பேச்சாளர்களையும் ஈர்த்த ஒன்றாக இருந்தது.

கணிசமான ஆர்வலர்கள் கலந்துகொண்டதால் இந்த சுவையான இலக்கிய நிகழ்வு வீணாகிப் போய்விடவில்லை என்ற மனநிறைவு ஏற்படுகின்றது. வராதவர்கள் எதையோ இழந்தவர்களென்றே எண்ணத் தோன்றுகிறது. நல்லது. எம் மக்களிடம் கவிதா ஆர்வத்தை ஊன்றும் இந்தகைய பகீரதப் பிரயர்த்னங்கள் இன்னும் பல தொடரவேண்டும். என்றாவது ஒருநாள் இம் முயற்சிகள் பலன்தரும் என்று நம்பிக்கை கொள்வோமாக. – நன்றி

-மதுரகவி

—-

bskrnt@yahoo.com

Series Navigation

மதுரகவி

மதுரகவி