தமிழாக்கம் : ரவிக்குமார்.
சிறை என்பது ஏழைகளையும் கிரிமினல்களையும் அடைத்து வைக்கிற இடமாகப் பொதுவாகக் கருதப் படுவதுண்டு. ஆனால், (இந்தியாவை ஆண்ட) பிரிட்டிஷ் காலனிய வாதிகளோ சிறை பயமுறுத்துகிற ஒன்றாக இல்லாமல், போய் விடுமோ என்று அப்போது அஞ்சினார்கள். 1838-ம் ஆண்டில் அமைக்கப் பட்ட சிறை அமைப்பு ஒழுங்குக் குழு ‘சிறைக்கு வெளியே இருக்கின்ற பொதுமக்களில் பெரும்பாலானாவர்களைக் காட்டிலும் சிறை வாசிகள் உணவு, உடை, இருப்பிடம் ஆகியவற்றில் வசதியான நிலையில் உள்ளனர் ‘ எனக்கருத்துத் தெரிவித்தது. சென்னையில் இன்ஸ்பெக்டராக இருந்த ரோ டேவின் கருத்தோ இதை விடக் கடுமையானதாய் இருந்தது. 1856-ல் அவர் கூறினார்: ‘சிறை வாசம் என்பது பெரும் பாலோர்க்கு அதிர்ஷ்டமாக அமைந்துள்ளது. சிறை வாசிகளில் பத்தில் ஒன்பது பேர்கள் தமது வாழ்நாளில் கண்டிராத செளகரியங்களை சிறையில் தான் காண்கிறார்கள். ‘
உண்மையில், சிறைவாசிகள் எல்லோரும் சமூகத்தின் கீழ்த் தட்டிலிருந்து வந்தவர்கள் அல்ல. அது போலவே சிறைவாசிகள் எல்லோரும் சிறைக்குள் சமமாக நடத்தப்படவும் இல்லை. மாறாக அவர்கள் இனம் , சாதி, பாலின அடிப்படையில் பாகு படுத்தப் பட்டிருந்தனர்.
இன அடிப்படையிலான பாகுபாடு, மிகவும் தெளிவாக செய்யப் பட்டிருந்தது. ஐரோப்பிய சிறை வாசிகளுக்கு விசேஷமான சலுகைகள் வழங்கப் பட்டன. ஐரோப்பியர்களுக்கென பிரத்தியேகமான வார்டுகள் ஒதுக்கப் பட்டிருந்தன. ஊட்டியில் அவர்களுக்கென்று விசேஷமாகச் சிறை ஒன்று கட்டப் பட்டது. அவர்கள் இந்திய ஜெயிலர்களின் கீழ் ஒரு போதும் வைக்கப் படவில்லை. கேவலமானவையாகக் கருதப் பட்ட வேலைகளும் அவர்களுக்குத் தரப் பட்டதில்லை.
பிரிட்டிஷ் நிர்வாகமானது சிறை வாசிகளுக்கிடையே சாதி ரீதியான பாகுபாட்டை அங்கீகரிக்க வேண்டியது அரசியல் ரீதியில் அவசியம் எனக் கண்டு கொண்டது. காலனிய தண்டனை அமைப்பில் இதற்கு அதிகார பூர்வமான இடம் ஏதும் இல்லையென்ற போதிலும் தினப்படி சிறை வாழ்வில் புறக்கணிக்கத் தக்க ஒன்றாக சாதியை அவர்கள் கருத முடிய வில்லை. (19ம் நூற்றாண்டின் துவக்கத்தில் தான் நீதித்துறையில் கொண்டு வரப் பட்ட சீர்திருத்தம் ஒன்று பிராமணர்களுக்கும் மரண தண்டனை வழங்கலாம் என முடிவு செய்தது). இப்படி சாதி ரீதியிலான சலுகைகள் வழங்கப் படுவதற்கு 1840-களிலும் 1850-களிலும் ராஜ புத்திரர்களும், பிராமணர்களும், காயஸ்தர்களும் சிறைகளில் நடத்திய வெளிப் படையான கலவரங்கள் ஒரு காரணமாக அமைந்தது. இந்தியர்கள் எல்லோரும் ஐரோப்பியர்களைப் போலன்றி இயற்கையிலே சாதியாகப் பிளவுண்டுள்ளனர்என அப்போது நம்பப் பட்டது. எனவே தனிமைச் சிறையில் அடைத்து வைப்பதென்பது ஒரு ஐரோப்பியரை விடவும் இந்தியருக்கு மிகவும் கொடூரமான தண்டனை யாக அமைந்து விடுகிறது. இந்தியர் ஒருவர் மிகவும் அஞ்சக் கூடிய ஒரு தண்டனை தனது சாதியிலிருந்தும் சொந்தக்காரரகளிடமிருந்தும் பிரித்து வைக்கப் படுவது தான்.
வட மேற்கு மாகாணத்தை நிர்வகித்து வந்த உட்காக் போன்றவர்கள் 1840-ல் புதிதாக அறிமுகப் படுத்தப் பட்ட சேர்ந்து சாப்பிடும் வழக்கம் சாதியமைப்புக்கு இடையூறு செய்யாது என்றே நம்பினார்கள். சைறையமைப்பிஅ மேலும் ஒழுங்கு படுத்துவதையும், கட்டுப் பாடு மிக்கதாக மாற்றுவதையும் எதிர்ப்பதற்கு சேர்ந்துண்ணும் முறையை எதிர்ப்பதைப் பயன் படுத்துகிறார்கள் என்று உட்காக் கருதினார். ஆனல் சாதி என்பது இந்து சமய மற்றும் சமூக அடிஅயாளத்தின் முக்கிய பகுதியாக இருக்கிறது. எனவே சிறைக்குள்ளும் அந்த நிலை காப்பாற்றப் பட வேண்டும் என்று பிரிட்டிஷ் நிர்வாகம் கருதியது. 1846 மே மாதத்தில் அலகாபாத் சிறையில் சேர்ந்துண்ணும் வழக்கம் அறிமுகப் படுத்தப் பட்டதை எதிர்த்து கலவரம் ஏற்பட்டதற்குப்பின் வட மேற்கு மாகாண அரசாங்கத்தின் செயலாளர் இவ்வாறு எழுதினார். :இந்தியர்களிடம் சாதி ஏற்படுத்தியுள்ள விளைவுகள் ஏராளமானவை. அவற்றைப் பற்றி ஐரோப்பிய அதிகாரிகளுக்கு அவ்வளவாகத் தெரியாது. எனவே சாதி போன்ற சிக்கலான விஷயத்தோடு தொடர்பு கொண்ட ஒரு பிரசினையை ஐரோப்பிய அதிகாரிகளைக் கையாள அனுமதிப்பது அவ்வளவு பாதுகாப்பானதல்ல. ‘
‘ எனவே, சிறைவாசிகளின் விருப்பத்துக்கு எதிராக சேர்ந்துண்ணும் வழக்கத்தை சிறைக்குள் திணிக்க முயல்வது இத்தகைய கலவரங்களை உண்டு பண்ணுவது மட்டுமின்றி சிறை அமைப்பே மோசம் என்ற எண்னத்தை நாடெங்கிலும் உண்டாக்கி விடும் ‘ எனவும் அவர் எச்சரித்தார். 1847 ஏப்ரல் மாதத்தில் சேர்ந்துண்ணும் வழக்கத்தை ஆதரிக்கும் நிலையை அரசாங்கம் மேற்கொண்டது. இப்படியான முறையால் நிறைய நன்மைகள் உண்டாகும் என்று அரசு கருதிய போதிலும் ‘சிறைவாசிகளின் மன உணர்வுகளைக் காயப் படுத்தாவண்ணம் இந்த முறை கையாளப் பட வேண்டுமென ‘ அது கருதியது. லண்டனிலிருந்த அதிகாரிகளும் (Court of Directors) இத்தைகய எண்னத்தையே கொண்டிருந்தனர். ‘ இந்தியாவிலுள்ள அரசாங்கம் அங்குள்ல மத நம்பிக்கைகளில், உணர்வுகளில் தலிஅயிடாமல் அவர்களிடம் அதிருப்தியை உண்டாக்கி விடாமல் இருக்க வேண்டும் ‘ என்று அவர்கள் கருத்துத் தெரிவித்தனர்.
மோவாத் என்பவர் 1856-ல் பீகார் சிறைச்சாலையைப் பார்வையிடச் சென்ற போது சிறைவாசிகளின் உணர்வுகளை , அபிப்பிராயங்களை பிரிட்டிஷ் அரசாங்கம் எந்த அளவுக்கு அங்கீகரித்துள்லது என்பதைக் கண்கூடாகக் கண்டார். அந்ஹ சிறையிலிருந்த 504 சிறைவாசிகளுக்கு 53 சமையல் காரர்கள் இருந்ததை ஆர் கண்டார். ‘ பீகாரில் சாதியுணர்வு மிக அதிகமாக இருக்கிறது என்பது உண்மை தான். ஒருவர் கையில் மற்ரவர்கள் உணவு வாங்கிச் சாப்பிட மறுக்கிறார்கள். ஒரே சாதிக்குள்ளும் கூட பல்வேறு உட்பிரிவுகள். ஒவ்வொன்றுக்கும் அதர்ஏயான சட்ட திட்டங்கள். ‘ என வியந்ஹ்டு குறிப்பிட்டார் அவர். அவத் என்ணும் ஊரில் சிறை அதிகாரி , பிராமனர்கள் தனியே தமது உணவை சமைத்து சாப்பிட அனுமதித்தார். அது மட்டுமின்றி சாப்பிடுவதற்கு முன் குளிப்பதற்கும், சமைப்பதற்கான உணவுப் பொருட்களை பிராமணர்கள் பெற்றுக் கொள்வதற்கும் அந்தச் சிறையில் ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. பிராமணர்கள் சமைக்க ,சாப்பிட ஒதுக்கப் பட்ட இடத்தில் வேறு யாரும் பிரவேசிக்க முடியாத படியும் செய்யப் பட்டிருந்தது.
சாதி விஷயத்தில் பிரிட்டிஷ் அரசும் நிர்வாகிகளும் கைக்கொண்ட வழிமுறைகள் பிற அதிகாரிகளால் வெறுக்கப் பட்டன. தமது குடிமக்களிடையே சாதி ரீதியான வேற்றுமைகளை , உரிமைகளை அங்கீகரிப்பது மோசமான விஷயமாகும். அதிலும் சிறை வாசிகளுக்கு அத்தகைய சலுகையை அளிப்பது பிரிட்டிஷ் அரசாங்கத்தின் பலவீனத்தையே காட்டுகிரது என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.
சிறைக்குள் சிறைவாசிகளுக்குத் தரப்பட்டிருந்த முக்கியத்துவம் தெளிவாகி விடும். ‘மேல் சாதி ‘ சிறைவாசிகளை பிற குற்றவாளிகளோடு இணையாக வைத்து சாலைகளில் வேலை செய்யச் சொல்வது அந்ஹ்டச் சிறை வாசிகளுக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் மரண தண்டனையை விட மோசமான தண்டனையாகக் கருதப் பட்டது.
மேல் சாதி சிறை வாசிகளுக்கு அவர்களுக்கான மரியாதை தரப்பட்ட அதே வேளையில் சாதியப் படி நிலையில் கீழே இருக்கும் நாவிதர் , வண்ணார் துப்புரவாளர், போன்ற சாதிகளைச் சேர்ந்தவர்கள் அவர்களது குலத் தொழில்களைச் செய்யும்படி நிர்ப்பந்திக்கப் பட்டனர். பிற சிறை வாசிகளுக்கும் அவர்கள் ஏவல் புரிய வேண்டும். இப்படியாக சிறைச் சாலையென்பது வெளியில் நிலவிய சமூகப் படி நிலையை காலனிய அரசாங்கம் அங்கீகரித்ததன் இன்னொரு வெளிப்பாடாகவே விளங்கியது.
சிறைச்சாலை விதிகள் அடங்கிய புத்தகமானது (Jail Manual) மதச் சடங்குகள் பற்றிய களஞ்சியம் போல அவை குறித்த விவரங்களை விரிவாக உள்ளடக்கியிருந்தது. 1867-ல் வெளியிடப்ப்பட்ட வங்காள சிறை விதிகளின் தொகுப்பானது, ஆயுள் சிறை வாசிகள் யாவருக்கும் அவர்களது தலை பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை மொட்டையடிக்கப் பட வேண்டுமெனக் குறிப்பிட்டது. கூடவே
‘இந்துக்கள் தங்களது குடுமியை வைத்துக் கொள்ளலாம். எல்லா சிறை வாசிகளும் தாடி மீசையை வெட்டிக் கொள்ள வேண்டும். முகமதியர்களது தாடி மட்டும் ஒரு அங்குல நீளத்துக்கு அனுமதிக்கப் படலாம். இப்படி செய்வது எந்தவொரு சிறைவாசியின் மத நம்பிக்கையை பாதிப்பதாக இருக்குமெனில் அதைத் தவிர்த்து விடலாம். சீக்கியர்களும் முகமதியர்களும் இம்மாதிரி நடைமுறைகளிலிருந்து விலக்களிக்கப் படலாம். ‘ எனக் குறித்தது.
இது போலவே , பம்பாய் மாகாணத்திலிருந்த சிறைகளுக்குள் நுழையும் போதும் விதிக்கப் பட்டிருந்தது.
எல்லோருக்கும் சிறை சீருடைகள் அணிய வேண்டும் என்பது விதியாக இருப்பினும் அதிலிருந்து பிராமணர்கள் , பார்சிக்கள் போன்றவர்களுக்கு விலக்களிக்கப் பட்டிருந்தது. ஆனால் எல்லா மதத்தினருக்கும் சமமான சலுகைகள் தரப் படவில்லை. சீக்கியர்கள் தங்களது தலை முடியை வெட்டாமல் வளர்த்துக் கொள்ளலாம். வழக்கம் போல தலைப் பாகையும் வைத்துக்கொள்ளலாம். அவர்கள் கிர்பான் (கத்தி) வைத்துக் கொள்ள அனுமதியில்லை. இப்படி சிறைக்குள் சாதி மத அடிப்படையில் வழங்கப் பட்ட மர்றும் மறுக்கப் பட்ட சலுகைகளால் பல்வேறு தகறாறுகள் ஏற்பட்டன. சிறைவாசிகளுக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்வதாகக் கூறிக்கொண்ட அரசியல் , மதத் தலைவர்கள் இந்தப் பிரசினையை தமக்கு சாதகமாகப் பயன் படுத்திக் கொண்டனர்.
சமபந்தியில் உணவுண்ணும் வழக்கம் 1840-களில் சிறைகளில் கொண்டு வரப் பட்டது. சிறை வாசிகளைக் கட்டுப் பாட்டுக்குள் வைக்கும் உத்தியாகவே கையாளப் பட்டது அது போவே 1780-களில் சிறைவாசிகளை இந்தியாவிலிருந்து தென் கிழக்கு ஆசியாவுக்கு நாடு கடத்தும் வழக்கமெளம் 1838-ல் கூடிய சிறை ஒழுங்குக் குழுவினால் பாராட்டப் பட்டது. சமுத்திரத்தைக் கடந்து செல்வதை பாதகமாகப் பார்க்கும் இந்து மத நம்பிக்கையை இந்தத் தண்டனை கடுமையாகச் சிதைத்தது. நாடு கடத்தல் என்ன்னும் தண்டனை மிகவும் கொடூரமானதாக இந்தியர்களால் கருதப் பட்டது. மரண தண்டனையை விடவும் மோசமானதாக அதை இந்தியர்கள் நினைத்தனர். இதனால தான் பிரிட்டனில் இந்த தண்டனை வழக்கொழிந்து போனாலும் இந்ஹ்டியாவில் நடைமுறைப் படுத்தப் பட்டது.
குறிப்புகள் ;
1. அவத் சிறையிலிருந்த 4458 சிறைவாசிகளில் 746 பேர்கள் சேவை புரியும் பிரிவிலிருந்து வந்தவர்கள். 905 பேர்கள் உழைப்பில் ஈடுபடும் பிரிவிலிருந்தும் 2157 பேர்கள் விவசாயத் தொழிலில் ஈடுபடும் பிரிவிலிருந்தும் வந்தவர்கள். 80 பேர்கள் ஜமீன்தார்கள். 296 பேர் வியாபாரிகள். 68 பேர் கடை வைத்திருப்பவர்கள். 89 பேர் பிச்சைக்காரர்கள். 21 பேர் நெசவாளர்கள். 16 பேர் பொற்கொல்லர்கள். சாதி ரீதியாகப் பர்த்தால் 675 பேர் பிராமணர்கள். 612 பேர் ராஜபுத்திரர்கள். 219 பேர் பனியாக்கள். 51 காயஸ்தர்கள். 910 பார்ஸிக்கள். மொத்தச் சிறைவாசிகளில் படிக்கத் தெரிந்தவர்கள் 217 பேர் மட்டும்.
2. ஐரோப்பியர்களுக்குக் காட்டப்பட்ட சலுகைகளை எதிர்த்து , பல போராட்டங்கள் பின்னால் நடந்தன.
(The Colonial Poison : Power , Knowledge and Penology in 19th Centruy India. வை ஆதாரமாய்க் கொண்டது இந்தக் கட்டுரை.)
தலித் – 1997, ஏப்ரல்
திண்ணை
|