பின்நவீன ஜிகாத்தும் தலித்தும்

This entry is part [part not set] of 39 in the series 20060825_Issue

ஹெச்.ஜி.ரசூல்


ஜிகாதின் அர்த்தங்கள் கடினமாக முயற்சிசெய்,போராட்டம்,புனிதப்போர் என சூழல்சார்ந்து மாறுபாடடைகிறது.

ஜிகாதை இஸ்லாம் அல்லாதவரை வன்முறையின் மூலமாக இஸ்லாம் ஆக்கும் போர் என ஒரு மாற்றுசமயவாதி பொருள்கொள்ளலாம்.

எனினும் நேர்மையற்ற ஆட்சியாளனின் முன்னே உண்மையை பேசுவதும் ஜிகாதென கருத்தியல் போராட்டத்தை முதன்மைப் படுத்தும் அர்த்தமும் உண்டு.சூபிகளின் பரிமாணத்தில் தீமையை அடக்கி நன்மையை உருவாக்கும் மன இச்சைக்கு எதிரானபோர் ஜிகாதுல் அக்பர்.

தற்கால உலகச் சூழலில் இது வேறொரு முக்கியத்துவம் பெறுகிறது. தானும் தன் சமூகமும் பாதிப்படையும் போது பாதுகாப்புக்காக போரிடுவதும் ஜிகாத் ஆகிறது.இது ஆக்ரமிப்பிற்கு எதிரான பாதுகாப்பிற்கான யுத்தம்.

பாலஸ்தீனம்,ஆப்கன்,ஈராக்,லெபனானில் அமெரிக்க,ஐரோப்பியப் படைகள் முஸ்லிம்களை கொன்றொழிக்கிறது.இதற்கு எதிரான முஸ்லிம் இயக்கங்களின் யுத்தம் பின்நவீன ஜிகாத் வகைப்பட்டதாகும்.மார்க்ஸியம்,மாவோயிசத்திடமிருந்து இதற்கான உள்ளாற்றல் பெறப்படுகிறது.

இது இஸ்லாமிய அடிப்படைவாதிகள் பேசும் ஜிகாதிலிருந்து மாறுபட்டது. இந்த ஜிகாத் ஒடுக்குமுறையிலிருந்து விடுபட போராடும் தலித்திற்கும் கறுப்பின அடிமைக்கும் பொருந்தும்.

Series Navigation

ஹெச்.ஜி.ரசூல்

ஹெச்.ஜி.ரசூல்