ஆர். சந்திரா
தேவைப் படும் பொருட்கள்:
கோழித் துண்டங்கள் – 2 கோப்பை (தோல் எலும்பு நீக்கியது)
பச்சைமிளகாய் – 15 (நன்றாக பொடிப் பொடியாக நறுக்கியது)
எண்ணெய் – ஒரு முட்டை கரண்டி அளவு
புளிச்சாறு – 1/2 தேக்கரண்டி (இதற்குப் பதில் 2 தேக்கரண்டி வினிகரும் பயன் படுத்தலாம்.)
சோயா சாஸ் – 2 தேக்கரண்டி
சோள மாவு (அல்லது மைதா மாவு) – 2 தேக்கரண்டி
உப்பு தண்ணீர் அஜினோமோட்டோ என்கிற பெயர் கொண்ட சுவை உப்பு சிறிது
செய்முறை :
அடி கனமான பாத்திரத்தில் எண்ணெயை விட்டு, பச்சை மிளகாயைப் போட்டு வதக்கவும்.
பின்பு அதனுடன் கோழித்துண்டங்களைச் சேர்த்து வதக்கவும்.
பிறகு சிறிது நீரை விட்டு வேக விடவும்.
வெந்த வுடன், உப்பு, புளி நீர் (அல்லது வினிகர்) சோயா சாஸ் சேர்க்கவும்.
ஒரு சிட்டிகை அஜினோமோட்டோ என்ற உப்பைச் சேர்க்கவும் . (இது இல்லாவிட்டாலும் சுவை குறைபடாது.)
பிறகு மைதா (அல்லது சோள மாவை) நீரில் கரைத்து கோழிக் கலவையில் விட்டு கிண்டவும். நன்றாக கெட்டியாகி விடும். சிறிது நல்லெண்ணெயை விட்டுக் கிளறி இறக்கவும். இது சப்பாத்தி, நாண் போன்ற ரொட்டி வகைகளுக்கு சுவை கூட்டும். ரசம் தயிர் சாதத்திற்கும் வலுவூட்டும். செய்ய எளியது. சுவையோ நிறைந்தது.
சில்லி சிக்கன் என்று அழைத்தால் தான் நவீனமாகத் தொனிக்கிறது என்று நினைப்பவர்கள் இதனை அப்படியும் அழைக்கலாம்.
திண்ணை
|