நகைச்சுவைத் தொடர் – இம்மொபைல் ஆக்கும் மொபைல் -3

This entry is part [part not set] of 34 in the series 20051209_Issue

சந்திரசேகர்


முக்கியமான மேட்டரை இந்த பதிவுல எழுதலாம்னு விட்டேன்.

செல்லுபுராணங்கள் தொடர்ச்சி, அப்புறம் செல் கம்பெனிங்க பண்ற ‘லொள்ளு ‘!!

செல்புராணங்கள் தொடர்ச்சி…

மும்பையில இருக்கறப்ப பார்த்த நிகழ்ச்சி…

அங்கெல்லாம் எலெக்ட்ரிக் ட்ரெயின்ல போறதுக்கு, ரொம்ப பயிற்சி வேணும். ஒரு சைடா ஓடிப் போயி, கால் வைக்கும் இடத்துல ஒரு சின்ன ஏரியாவைக் கண்டுபிடிச்சு, காலை வெச்சுறணும்! வண்டி ஓடுதா, நிக்குதா இதெல்லாம் கண்டுக்கக் கூடாது! அப்படியே ‘அலேக் ‘கா நாம் உள்ளே தள்ளப் படுவோம்! இலவச அக்குள் சென்ட், பாடி மசாஜ், முறுக்கு வைத்தியம், இன்னும் பல நமக்குக் கிடைக்கும்! வழக்கமா மும்பைக்காரங்க Pant ல் ஒரு சிறிய உள்பை தைத்து அதில் தான் பணத்த வெச்சிருப்பாங்க! இதுக்கும் மொபைலுக்கும் என்ன சம்பந்தம்னு கேக்கறீங்களா ? இருக்கு, மேலே படிங்க!

இந்த மொபைல் லெதர் பவுச்னு ஒண்ணை, அவனவன் டார்ஜான் மாதிரி மாட்டிகிட்டு அலைவானுங்க! அதுல பிக் பாகெட் காரன் உருவுறது ரொம்ப சுலபம்!

ஒரு தடவை புதுசா மும்பைல வேலைக்குச் சேர்ந்த நம்ம சென்னைவாசி (பேரு- ராமன்) தவறிப்போய், இந்த எலெக்ட்ரிக் ட்ரெயின்ல ஏறிட்டாரு! V.T. எனும் சத்ரபதி சிவாஜி டெர்மினஸ் வந்தாச்சு. அய்யா ராமன் வண்டிய விட்டு கீழ இறங்குற முன்னாடியே, அய்யா Pant அவனுக்கு முன்னாடி இறங்குது! அட என்னய்யா இது, எசகு பிசகான்னு ஓடிப்போய் பார்த்தா, ‘பணம் எடுக்கறேன் பேர்வழி ‘ன்னு பிக் பாக்கெட் பேர்வழி, முதல்ல கீழ் பாக்கெட்ல பணம் தேடியிருக்கான்; கிடைக்கலைன்னதும், மொபைலைத் தேடியிருக்கான்; அய்யாதான், டார்ஜான் ஸ்டைல்ல தொங்கு மணி ( லெதர் பவுச்சுக்குள் மொபைல்- அதன் சுருக்கம்) கட்டியிருந்தான்ல ? அவசரத்துல ப்ளேடுக்கு பதிலா கத்தியே போட்டான் போல! மொபைலும் போச்சு! அதோடு, பான்ட்லயும் வெட்டு விழுந்துருச்சு! அதான், ராமன், அய்யோராமனா இறங்க வேண்டியதாப் போச்சு! அப்புறம் என்ன ? சின்னப் பிள்ளக்கி ஹூக்கு போட்டு டையாப்பர் மாட்டுற மாதிரி, பின்னெல்லாம் போட்டு, அவனை ஆபீஸுக்கு அனுப்பிவெச்சோம்!

மத்தவன் செல்லு வெச்சுகிட்டா நமக்கென்னன்னு கேக்கறீங்களா ? அதுலயும் பல தொல்லைகள் இருக்கு!!

புதுப் புருஷன் மாதிரி புதுசா மொபைல் வெச்சிருக்கிறவன் பண்ற இம்சைகள் நிறைய!

நல்லா கும்பல் இருக்குற பஸ் நெறிசல்ல திடார்னு பைக்குள்ள கைய விடுவான்! அடுத்தவன் தாடைல குத்துவிட்டோமேங்கிற கவலையில்லாம!!

டக்னு காதுல வெச்சு, ‘ஓ, சரி ப்லீஸ் வெயிட், ஜஸ்ட் கமிங் ‘னு பீட்டர் விடுவான்! இல்ல, உட்கார இடம் கிடைச்சுருச்சுன்னா, பல விதமான டயல் டோன்களை மாத்தி, மாத்தி, ஒண்ணு இறங்க வேண்டிய ஸ்டாப்பின்ங்ல இறங்க மறந்துடுவான், இல்ல இந்த டயல் டோன் இம்சை தாங்காத பக்கத்து சீட்டுக்காரன், இறங்க வேண்டிய ஸ்டாப் வரதுக்கு முன்னாடியே, இறங்கி ஓடிடுவான்!

கொஞ்ச திடார் பணக்காரங்க மொபைல் வெச்சுகிட்டு பண்ர அலம்பல் இருக்கே, அது தனி ரகம்! பெரிய குரல் எடுத்து, என்னமோ பேசுறது, நேரா கேக்குற ஆளோட காதுலயே போய் நுழையிற அளவுக்கு ஹை டெஸிபல்லில், கத்துவான்! அது ஆஸ்பத்திரியா இருந்தாலும் சரி! என் நண்பன் மொபைல் கடை நடத்துறான். அவன் சொன்ன ஒரு திடார் பணக்கார மொபைல் ஆசாமி, இவன் கடைல போயி, ‘என்னய்யா,இந்த SMS, அது இதுன்றா

‘edக, பாட்டு படிக்கும்னாங்க, TMS அ காணோமே ? பழைய தலைவர் பாட்டெல்லாம் வராதா ?பின்ன என்னாத்துக்கு வேஸ்டா, க்ரெடிட் கார்டுல (அதுவும் இருக்குதுன்னு எல்லாருக்கும் தெரியணும்ல ?) 12,000 ரூபா பிடிச்ச ? ‘ ன்னு, இவன பிடிச்சுகிட்டாறாம்!! அவருக்கு தனியா ஒரு ட்ரெய்னர் போட்டு, மொபைல எப்படி யூஸ் பண்றதுன்னு ஒரு நாள் முழுக்க சொல்லவேண்டியதாப் போச்சாம்!

இப்ப, மொபைல் கம்பெனிங்க பண்ற டார்ச்சர்!

1. ஆட்டோ டெபிட் முறையில நம்ம கார்டிலிருந்து அவனுங்களாவே பணத்த எடுத்துக்கச் சொல்லி, பார்ம்மெல்லாம் கொடுத்து கிட்டத்தட்ட ரெண்டு வருஷமா, பண பட்டுவாடா ஆகியிருச்சி. ஆனாலும், மாற்றலாகி வேற ஊருக்கு போறப்ப, நம்பரை சரண்டர் பண்ணியாச்சு! சரண்டர் பண்ண மாசமும், அதற்கு மேலும் தொடர்ந்து பில் வந்துகிட்டேயிருந்துச்சு! எத்தன முறை நேர்ல சொல்லி, போன்ல சொல்லி, அஞ்சல் (மின், குரியர், போஸ்ட் என எல்லா வழிகளிலும்) அனுப்பி – ம்ஹூம்! எப்படிச் சொன்னாலும் பில் வந்துகிட்டேயிருந்துச்சு! நான் மாறலாகிப் போனப்புறமும், எங்க அப்பா அம்மாவை வீட்ல வந்து டார்சர் பண்ண ஆரம்பிச்சாங்க! பணம் பட்டுவாடா தனி கோஷ்டி! பில் அனுப்புவது தனி காண்டராக்ட்! அவனுக்கும் இவனுக்கும் பேச்சே கிடையாது! ஆயிரந்தான் கம்ப்யூட்டர், சிஸ்டம், ஆட்டோமேஷன்னு பேசுனாலும், மனுசனுக்கு பொது அறிவும் இருக்கணும். அது இந்த மாதிரி பணம் புடுங்கி ஏஜண்டுகளுக்கு இருக்குமாங்கறது சந்தேகமே! போலீசுக்கும், கன்சுயூமர் கோர்ட்டுக்கும் போவோம்னு மிரட்டுனாலும், பலனில்லை! ஊர விட்டு வந்தப்புரம்தான், ‘லொள்ளு ‘ நின்னது!

2. புது ஊர்லயும் அதே முறைல (ஆட்டோ டெபிட்) பணம் கட்டிகிட்டுவந்தேன்; இது வேற மொபைல் கம்பெனி! சரி, இதுவாச்சும் ஒழுங்காயிருக்கேன்னு சந்தோஷப் பட்டதுலயும் மண் விழுந்திருச்சு! வேலை நிமித்தம்,. பெங்களூர்ல இருக்கறப்ப, போன் வருது! பணம் கட்டலைன்னு! அட, ஆட்டோ டெபிட்ல கட்டிட்டேண்டா, ஊருக்கு வந்தப்புறம் பேசிக்கலாம்னா, கேட்கவேயில்லை! லைன் ‘கட் ‘! 3 நாள் டூர் முடிஞ்சு [மொபைல் இல்லாம இம்  6மாபைல் ஆகித்தான்!! 🙁 ] அந்த கம்பெனியோட தக்க ஆதாரங்களோட சண்டை போட்டா, ‘ஸாரி சார், ஸிஸ்டம்ல பணம் கட்டலைன்னுதான் காட்டுது ; ரொக்கமா கட்டுங்க, அப்புறம் லைன கனெக்ட் பண்றோம் ‘ ன்னு சொன்ன ஒரு மேக்கப் போட்டு உட்கார்ந்திருந்த கஸ்டமர் (கஷ்டமர் ? ?) கேர் (லெஸ் ? ?) எக்ஸிக்யூடிவ்!! எனக்கா, பல ஊர்கள்ல இருக்கிற என் எக்ஸ்போர்ட் சப்ளையர்ஸ் தினமும் போன் செய்ய மொபைல் தான் சரி! பணத்தை

‘ec கட்டித்தொலைச்சேன்! முடிவாக மொபைல் சரண்டர் பண்ணி டெபாசிட்டை திரும்பி வாங்க, நான் எல்லா வழிகளிலும் (மீண்டும் மின்னஞ்சல், போஸ்ட், கூரியர் இத்யாதி) எழுதிப் போட்டு, வெற்றிகரமாக 7வது மாசத்தில் பணம் கிடைச்சுது! இத யார் கிட்ட போய் சொல்ல ? நாம கட்டின பணம் அவங்க ஸிஸ்டத்துல காட்டலைங்கிற பாவத்துக்கு, நாம பணம் அழுதோம்; ஒரு நாள் கூட விட்டுவெக்கலை! ஆன, நம்ம பணம் திரும்_ c0 வர, 7 மாசம் தேவுடு காக்கவேண்டியிருக்கு!

3. இதைவிடக் கொடுமை, தொலை தூர போகும்போது! என்னமோ தூக்குச்சட்டியில சிக்னல போட்டுக் கொடுத்தமாதிரி எல்லா மொபைல்காரங்களும் டி.வி. பேப்பர், பத்திரிகை ஒண்ணுவிடாம விளம்பரம் பண்றானுங்க! ஆனா, நிஜத்துல ? குலதெய்வம் கும்பிடப்போன ஒரு கம்பெனி முதலாளி, ‘ ‘நேஷனல் ரோமிங் ‘ இருக்கு, எப்ப வேணா கூப்பிடுன்னு ‘ சொல்லிட்டுப்போனவரு, திரும்பி வந்து பார்த்தா, 57 மிஸ்ட் கால்ஸ், 3 5 SMS!! அதுல பாதி எக்ஸ்போர்ட் கேஸ்! அவருக்கு ஆர்டர் இழப்ப பார்த்து, மூச்சு இழுப்பே, வந்துருச்சு!!

இதனால் நான் சொல்ல வர்றது என்னன்னா, பின் விளைவுகளை நல்லா யோசிச்சு,மொபைல் வெச்சுக்கங்க, வெச்சுக்காம போங்க, சொல்லிட்டேன்! முக்கியா பலவிதமான வசதி படைத்த (காமெரா, பாட்டு, போட்டோ, இத்யாதிகள்) செல்லை மட்டும் வாங்காதீங்க! அதுல ரிங் டோன், மெயில் டவுன்லோடு பண்றப்ப தான் வைரஸ் வருதாம்!! இந்த கம்ப்யூட்டர் வைரஸ், எயிட்ஸ் வைரஸ் மாதிரி, எதையும் விட்டுவெக்கலை

‘a7பால!! பில் கம்பெனியோட எப்படி பணம் கட்டிட்டும் சண்டைகளை சமாளிக்கிறது, என்னென்ன பேப்பர் வர்க், கன்ஸ்யூமர் கோர்ட்டுக்கு போக வழிகள் போன்றவற்றை என்னுடைய அனுபவத்த வெச்சே, ஒரு புத்தகமே போடலாம் போல! இன்னபிற சந்தேகங்கள் இருக்குன்னா, என் மொபைல்ல கூப்பிடுங்க!!! ஹி, ஹி!!

—-

chandra_jgp@yahoo.co.uk

Series Navigation

சந்திரசேகர்

சந்திரசேகர்