நகைச்சுவைத் துணுக்குகள்

This entry is part [part not set] of 46 in the series 20031218_Issue


***

ABCD என்றால் என்னவென்று அனைவருக்கும் தெரியும். American Born Confused Desi

ABCDEFGHIJKLMNOPQRSTUVWXYZ என்றால் என்னவென்று தெரியுமா ?

இதோ அது

American Born Confused Desi Emigrated From Gujarat, Housed In Jersey, Keeping Lots of Motels , Named Omkarnath Patel ,Quickly Reached Success Through Underhanded Vicious Ways ,Xenophobic Yet Zestful

**

ஒரு தம்பதியினர் தங்களுடைய திருமணம் ஆகி ஐம்பதாம் ஆண்டு விழாவைக் கொண்டாடினர். அவர்கள் இருவரும் மனமொத்து வாழ்வது அந்த ஊரிலேயே அதிகம் பேசப்படும் விஷயம்.

‘என்ன அமைதியான அன்பான தம்பதியினர் ‘ என்று ஊரில் உள்ள அனைவரும் பேசினார்கள். அங்கிருந்த ஒரு பத்திரிக்கை நிருபர் அந்த தம்பதியரிடம் வந்து அவர்கள் இவ்வளவு காலம் நீண்ட திருமண வாழ்க்கைக்கும், சந்தோஷமான வாழ்க்கைக்கும் காரணம் என்னவென்று வினவினார்.

கிழவனார், ‘ஓ அதுவா, அது எங்களுடைய தேனிலவு காலத்திலிருந்து தொடங்குகிறது ‘ என்று சொன்னார்.

‘நாங்கள் தேனிலவுக்கு கிராண்ட் கான்யான் சென்றோம். அதன் அடி ஆழத்துக்குச் செல்வதற்கு மட்டக்குதிரைகளை ஏற்பாடு செய்து அதன் மீது பயணித்து கீழே இறங்கினோம். சற்று நேரம் சென்றபின்னர் என் மனைவியின் மட்டக்குதிரை தடுமாறியது. என் மனைவி ‘இது முதல்தடவை ‘ என்று சொன்னாள். இன்னும் கொஞ்ச தூரம் சென்றோம். குதிரை இரண்டாம் முறை தடுமாறியது. என் மனைவி ‘இது இரண்டாம் தடவை ‘ என்று அமைதியாகச் சொன்னாள். இன்னும் ஒரு கால் மைல் தூரம் சென்றதும், என் மனைவியின் குதிரை மறுபடி தடுமாறியது. என் மனைவி அமைதியாக குதிரையிலிருந்து இறங்கி தன்னுடைய பர்ஸிலிருந்து ரிவால்வரை எடுத்து குதிரையை அங்கேயே சுட்டுக்கொன்றாள். நான் கோபத்துடன் அவ்வாறு குதிரையை கொன்றிருக்கக்கூடாது என்று சத்தம் போட்டேன். என் மனைவி என்னைப் பார்த்து அமைதியாகச் சொன்னாள். ‘இது முதல் தடவை ‘ .. அன்றிலிருந்து நாங்கள் சந்தோஷமாக வாழ்ந்துவருகிறோம் ‘

***

ஒரு சர்க்கஸ் சொந்தக்காரர் ஒரு கடைக்குள் நுழைந்தார். அங்கு பலர் கூடி ஒரு மேஜை முன்னால் நின்று கொண்டு பார்த்துக்கொண்டிருந்தார்கள். அந்த சின்ன மேஜையில் ஒரு சட்டி தலைகீழாகக் கவிழ்க்கப்பட்டிருந்தது. அதன் மீது ஒரு வாத்து நடனமாடிக்கொண்டிருந்தது.

அதைப் பார்த்து மிகவும் ஆச்சரியப்பட்ட அந்த சர்க்கஸ் சொந்தக்காரர், அந்த வாத்தை அந்த கடையின் சொந்தக்காரரிடமிருந்து வாங்கிக்கொள்வதாகக் கேட்டார். அதன் பிறகு பேரம் பேசி சுமார் 10000 ரூபாய்க்கு அந்த வாத்தை வாங்கிக்கொண்டு சந்தோஷத்துடன் சர்க்கஸ்காரர் சென்றார்.

மூன்று நாட்களுக்குப் பின்னர், அந்த சர்க்கஸ்காரர் மிகுந்த கோபத்துடன் அந்தக் கடைக்குத் திரும்பி வந்தார். ‘உன்னுடைய வாத்து பெரும் மோசடி. சர்க்கசுக்கு வந்திருந்த அனைவருக்கும் முன்னால் ஒரு சட்டியை கவிழ்த்துப்போட்டு அந்த வாத்தை நடனமாடச் சொன்னேன். அது ஒரே ஒரு அடி கூட எடுத்து வைக்கவில்லை ‘

அந்தக் கடை சொந்தக்காரர் யோசித்துக்கொண்டே. ‘ ,ம்,,,ம்ம்… அந்த சட்டிக்குக்கீழே ஒரு பெரிய மெழுகுவர்த்தியை மறக்காமல் ஏற்றி வைத்தாயா ? ‘ என்று கேட்டார்.

***

Series Navigation

செய்தி

செய்தி