தேவையான பொருட்கள்
தக்காளி – 1/4 கிலோ
தேங்காய் – 1 மூடி துருவியது
பெரிய வெங்காயம் – 200
பூண்டு – 5 பல்
இஞ்சி – 1 அங்குல அளவு துண்டு
கொத்தமல்லித் தழை – சிறிதளவு
கருவேற்பிலை – சிறிதளவு
பட்டை – சிறு துண்டு
ஏலக்காய் – 1
கிராம்பு – 1
காய்ந்த மிளகாய் – 3
சோம்பு – 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன்
மல்லித் தூள் – 1 ஸ்பூன்
எண்ணெய் – ஒரு குழி கரண்டி அளவு
துருவிய தேங்காய், மிளகாய், மல்லித்தூள், சோம்பு (1 ஸ்பூனில் பாதி), மஞ்சள் தூள் இவற்றை நைசாக அரைத்துக் கொள்ளவும், இஞ்சி பூண்டை விழுதாக தனியாக அரைத்து வைத்துக் கொள்ளவும், வெங்காயம் தக்காளி இவற்றைப் பொடியாக அரிந்து வைத்துக் கொள்ளவும், எண்ணெய் சட்டியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு பட்டை, ஏலக்காய், பொடி செய்த சோம்பு, கிராம்பு எல்லாம் போட்டு வெடித்தவுடன், இஞ்சி பூண்டு விழுது மற்றும் அரிந்த வெங்காயத்தில் பாதி, தக்காளியில் பாதி போட்டு வதக்கி கொள்ளவும், பின்னர் தனியாக ஒரு பாத்திரத்தில் மீதி தக்காளி, வெங்காயம், அரைத்த மசாலா இவற்றைப் போட்டு கையால் பிசைந்து விட்டு தாளித்ததில் கொட்டி, கொஞ்சம் தண்ணீர் விட்டு , நன்றாக கொதித்து சுண்டியவுடன் கொஞ்சம் தளதளப்பாக இரக்கவும். இட்லி, தோசை, பூரி, சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ளலாம்.