வாழிய உலகநல நற்பணி மன்றம்
தமிழ் மொழியை கூர்மைபடுத்தி அதன் ஆற்றல்களை வெளிக்கொணர்வது படைப்பிலக்கியத்தை உற்சாகப்படுத்தி ஊக்குவிப்பது மேலும் பாதுகாப்பது என்ற வகையில் பழனி வாழிய உலகநற்பணி மன்றம் வருடந்தோறும் எழுத்தாளர்களுக்கு விருதுகள் வழங்கி கெளரவித்து வருகிறது .
அத்தன்மையாக கடந்த 2004 ஆம் ஆண்டிற்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன . சுமார் 178 நூல்கள் வரப்பெற்றதில் மொத்த பிரதிகளையும் பரிசீலனை செய்த நடுவர் குழு கவிஞர் பிரம்மராஜனின் “தேர்ந்தேடுக்கப்பட்ட கவிதைகள்” என்ற நூலை ஒருமனதாக தெரிவு செய்து 2005 ம் வருடத்திற்கான தமிழ் பரிதி விருது தமிழின் சிறந்த ஆய்வாளர்களில் ஒருவரான ப .சரவணன் அவர்களுக்கு வழங்குவதென ஒருமித்து முடிவு செய்திருக்கிறது .
தமிழ் நவீன கவிதையில் குறிப்பிடத்தகுந்த வரும் உலக கவிதையியல் ஆய்வாளரும் , இசையும் மொழியுமாக தமிழ்க் கவிதைகளை புதிய தளத்திற்கு எடுத்துச் சென்றவர் என்ற முறையிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட கவிஞர் . பிரம்மராஜனின் இந்நூலானது 2004 ல் பதிப்பிக்கப்பட்டிருப்பதாலும் விருதிற்கு அனுப்பப்பட்ட பட்டியல்களில் இடம்பெற்ற வகையிலும் நடுவர் குழுவின் தீவிர பரிசீலனைக்கு உட்பட்டு இம்முடிவு அறிவிக்கப்படுகிறது .
அருட்பா X மருட்பா எழுதியவரும் கானல்வரி மற்றும் திமிழ் மூதாட்டி அவ்வையார் பற்றிய ஆய்வுகளைச் செய்தவரும் மயிலை சீனி வேங்கடசாமி அவர்களின் எழுத்து முழுவதையும் தொகுத்தளித்தவருமான ப . சரவணன் தமிழில் மிகவும் குறிப்பிடத்தகுந்த ஆராய்ச்சியாளர் என்பது தமிழ்ப்பரிதி விருதிற்கு பொருத்தமாகிறது .
அதன்படி வரும் ஜீன் மாதம் 5 ஆம் தேதி பழனி அடிவாரம் அருள்ஜோதி வீதியிலுள்ள அங்காளபரமேஸ்வரி கல்யாண மண்டபத்தில் மாலை 5 .00 மணியளவில் நடைபெற இருக்கும் நிகழ்ச்சி நிரலில் சட்டப்பேரவைத் தலைவர் மாண்புமிகு முனைவர் க . காளிமுத்து அவர்களால் மேற்கண்ட விருதுகள் வழங்கப்பட இருக்கிறது என்பதையும் இவ்விழாவில் தமிழகத்தின் மூத்த எழுத்தாளர்களும் , கவிஞர்களும் திரளாக கலந்து கொண்டு சிறப்பிக்க இருக்கிறார்கள் எனவும் , வாழிய உலகநல நற்பணி மன்றத் தலைவர் இல . ஞானசேகரன் மகிழ்ச்சியுடன் அறிவித்துக்கொள்கிறார் . இதற்கான நிகழ்ச்சி நிரல் அடங்கிய அழைப்பிதழ் பின்னர் அனுப்பப்படும் .
வாழிய உலகநல நற்பணி மன்றம்
7, மங்களம் தெரு,
பழனி — 624601 .
poopathy_acct@yahoo.co.in
- தெருவொன்றின் குறு நேர வாழ்வு
- சென்ற வார தமிழ்க் கதையில் வந்த எழுத்துப் பிழைகள்
- கீதாஞ்சலி (23) உனக்காகக் காத்திருக்கிறேன்! ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )
- சூனியக்காரி ஜோன் ஆஃப் ஆர்க் (பெர்னாட்ஷா நாடகத்தின் தழுவல்) (இரண்டாம் காட்சி தொடர்ச்சி பாகம்:5)
- கடிதம்
- ஞானவாணி மற்றும் தமிழ்ப்பரிதி விருதுகள் -அறிவிப்பு
- சென்ற வார தமிழ்க் கதையில் வந்த எழுத்துப் பிழைகள்
- தமிழ் வாழ்க!
- கவிதைகளின் திசைக்காட்டி
- குளிர்காலத்து ஓய்வில் ஒரு சிங்கம்: ஓ வி விஜயனுடன் ஒரு பேட்டி – பகுதி 3
- பூமியில் மறைந்து கிடக்கும் புதையல் களஞ்சியங்கள்
- பெரிய புராணம் – 41 திருநாளைப்போவார் நாயனார் புராணம் (தொடர்ச்சி)
- ‘தறு ‘
- பாடங்கள்
- எறும்புக்கடி.
- ஏன் தமிழில் மனிதவியல் துறை வளரவில்லை ?
- புரட்சியாளர்களும் தலைவர்களும் – 5 – மா சே துங் – பாகம் 3 சென்ற வாரத் தொடர்ச்சி….
- மாநிலத்திலும் கூட்டாட்சி!
- ஆகாயத்தில் முட்டிக் கொண்டேன் -கடைசிப் பகுதி
- உறவின் முறிவு
- புண்ணும் மீன்களும்
- வாமனர்கள்
- உதவி
- ஈஸுக்கா ரூமி