ஜோதிர்லதா கிரிஜா அவர்களின் கட்டுரை பற்றி

This entry is part [part not set] of 50 in the series 20041202_Issue

விசிதா


வணக்கம்.ஜோதிர்லதா கிரிஜா குருமூர்த்தி எழுதியதற்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவத்துவம் தருகிறார்.

சோ பெண்ணுரிமைகளை ஏற்காதவர், பெண்ணியம் என்பது அவருக்கு ஏற்புடையது அல்ல என்பது

அனைவருக்கும் தெரியும். விதவைகளைக் குறித்து குருமூர்த்தி ஒரு பேட்டியில் கூறியுள்ள கருத்துக்களைப்

படித்தால் அவர் எவ்வளவு பிற்போக்கு கருத்துடையவர் என்பதைப் புரிந்து கொள்ளலாம். துரதிருஷ்டவசமாக

கிரிஜா எழுதுவது குருமூர்த்தியின் கருத்துக்களை முற்றிலுமாக நிராகரிப்பதாக இல்லை. மாறாக அவர் குருமூர்த்தி எழுதுவதில் 50% த்தினை ஏற்பவர் போல் தோன்றுகிறது. பெண்களின் உடை குறித்து கிரிஜா

எழுதியுள்ளது வேடிக்கையாக உள்ளது. மேல் நாட்டில் பெண்கள் தட்ப வெப்ப நிலைக்கு ஏற்றபடி, செய்யும்

தொழில் மற்றும் சந்தர்ப்பத்திற்கு ஏற்றவாறே உடையணிகின்றனர். வெயில் காலத்தில் அணியும் உடை குளிர் காலத்தில் பொருத்தமாயிராது. விளையாடும் இடத்தில் அணியும் உடைக்கும், அலுவலகத்தில் அணியும் உடையும் ஒன்றாக இருக்க வேண்டியதில்லை. இன்று இந்தியாவிலும் பல பெண்கள் business casual

உடைகளை அணிகிறார்கள். இது பொருத்தமாகவும், செளகரியமாகவும் இருக்கிறது என்று பலர் உணர்வதால் இது பிரபலமாகி வருகிறது. இதை இந்தியாவிலும் அணிய முடியும், அமெரிக்காவிலும் அணிய முடியும். இப்படி தங்களுக்குத் தேவையான, பொருத்தமான, செளகரியமான உடைகளை தேர்ந்தெடுக்கும் உரிமை பெண்களுக்கு கிடையாதா.துப்பட்டா அணிய வேண்டும் என்பதற்காக கிரிஜா கூறும் காரணங்கள் நகைப்_ d2க்குரியவை. நாட்டில் திருடர் பயம் அதிகம், பாதுகாப்பில்லை என்பதற்காக யாரும் பர்ஸ் வைத்துக் கொள்ளக்கூடாது, ரூபாய் நோட்டுக்களைக் கொண்டு செல்லக் கூடாது என்று கூறுவது போலுள்ளது அவர் எழுதியுள்ளது. பிரச்சினை செய்யும் ஆண்களுக்கு சரியான பாடம் கற்பிக்க வேண்டுமே தவிர எல்லாப் பெண்களும் கட்டாயம் துப்பட்டா அணிய வேண்டும் என்று கட்டாயப்படுத்தக் கூடாது. ஆண்களின் கண்ணோட்டத்திலும், மபே 9ாபாவங்களிலும் மாற்றம் வரவேண்டும். அதை விடுத்து பெண்கள் இதை அணியக் கூடாது, இதை இப்படி அணிய வேண்டும் என்று கலாச்சார கமிசார்கள் கூறுவதை பெண்கள் ஏன் ஏற்க வேண்டும். பிரச்சினையின் மூலம் மதம் சார்ந்த அவரது, அதாவது குருமூர்த்தியின் சிந்தனையில் உள்ளது.

ஆதிசங்கரர் முதல் சின்மயானந்தா வரை இந்து மத தத்துவவாதிகளால் ஆண் பெண் சமத்துவத்துவத்தை

முழுமையாக ஏற்க முடியாத போது குருமூர்த்தி மட்டும் விதிவிலக்காக இருப்பாரா. கிரிஜா இது போன்ற

கேள்விகளை எழுப்பினால் பயனுள்ளதாக இருக்கும்.

விசிதா

http://wichitatamil.blogspot.com

Series Navigation

விசிதா

விசிதா