பிறைநதிபுரத்தான்
ஒவ்வொரு முஸ்லிமும் உம்மத் என்ற இஸ்லாமிய சமுதாய கூட்டமைப்பின் ஒரு அங்கம். அந்த பேரமைப்பைபோடு ஒருங்கிணைந்து வாழாத முஸ்லிமுக்கு, இஸ்லாமிய சமுதாயத்தினர் மத்தியில் எந்த முக்கியத்துவமும் இல்லை. அத்தகைய ஒருங்கிணைந்த உம்மத்தை உருவாக்க ஜமாத் என்ற அடிப்படை அமைப்பு மிகவும் அவசியம். ஜமாத் என்றால் கொள்கை அடிப்படையிலான ‘குழு ‘ ‘கூட்டமைப்பு ‘ ‘சங்கம் ‘ என்று பொருள். ஜமாத்தி அமைப்பு, செயல்முறை ஆகியவை முழுவதும் இஸ்லாத்தின் இரு பெரும் கூறுகளான குரான் மற்றும் ஹதீஸ் அடிப்படையை சர்ந்தவையாகும். ஜமாத்தின் அத்தியாவசியம் பற்றி மார்க்க அறிஞர்கள் ‘ஜமாத் இல்லாத வாழ்க்கை, அறியாமை (ஜாஹிலிய்யா) மிகுந்த வாழ்க்கை ‘ ‘ஜமாத்திலிருந்து விலகியிருத்தல் இஸ்லாத்திலிருந்தே விலகியிருத்தலுக்கே சமம் ‘ என்றும் கூறியிருக்கிறார்கள்.
முஸ்லிம்கள் வசிக்கும் பகுதிகளில், தங்களுக்கென்று ஒரு அமைப்பை ஏற்படுத்திக்கொண்டு, தங்களுக்கிடையே எழும் திருமணம், விவாகரத்து மற்றும் சொத்து சம்பந்தமான பிரச்சினைகளை இறைமொழி (குரான்) மற்றும் நபிவழியின் (ஹதீஸ்) அடிப்படையில் தீர்த்துக்கொள்ளப்படுகிறது. தமிழகத்தில் உள்ள அனைத்து ஜமாத்களும் வக்பு வாரியத்தின் தலைமையிலும் அதன் கட்டுப்பாட்டிலும்தான் இயங்கி வருகின்றன.
ஜமாத்தின் பணிகள்
பள்ளிவாசலை பராமரிப்பதல், குறிப்பிட்ட ஜமாத்தின் கீழ் உள்ள உறுப்பினர்களின் திருமணங்களை நடத்துதல், ஜமாத்துக்குட்பட்ட இடத்தில் நடக்கும் சமூகத்துக்கு புறம்பான செயல்களை தடுத்து நிறுத்துவது, உறுப்பினர்களுகிடையே நடக்கும் பிரச்சினைகள் மற்றும் அவர்களின் குடும்பத்தில் ஏற்படும் சொத்து பிரச்சினைகளை தீர்த்து வைத்தல், மணமுறிவு போன்றவைகளில் தலையிட்டு சுமூகமாக தீர்த்து வைத் தல்தான் முக்கியப்பணிகள். சமீபகாலங்களில் இஸ்லாமியர்களுக்கும் – மற்ற சமுதாயத்தினருக்குமிடையே சுயநலவாத மதவெறியர்கள் மூலம் உருவாக்கப்படும் பிரச்சினைகளிலும் தலையிட்டு சமுதாய அமைதியை நாட்ட முயல்வது போன்றவையும் அடங்கும்.
உறுப்பினராக தகுதி
பெரும்பாலான ஊர்களில் உள்ள ஜமாத்களில் 18 அல்லது 21 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் அனைவரும் உறுபினராக இயலும் ஆனால் சில ஊர்களில் திருமணம் முடித்த ஆண்கள் மட்டும்தான் உறுப்பினராக முடியும் என்ற கட்டுப்பாடு உள்ளது. உறுப்பினராக கட்டணம் வசூலிப்பது பெரும்பாலான ஊர்களில் நடைமுறையில் இல்லை. ஒரு ஜமாத்தை சார்ந்த ஆண், வேறோர் ஊரில் நிரந்தரமாக குடியிருக்கும் சூழ்நிலையில் அந்த ஊரின் ஜப 1ாத் உறுப்பினராக இயலும். மேலும், பணியிலிருக்கும் முஸ்லிம்கள், இடமாற்றத்திற்கு ஆளாகி செல்கின்ற ஊர்களில் உள்ள ஜமாத்தில் உறுப்பினராக முடியும்.
ஜமாத்தும் பெண்களும்:
முகம்மது நபி (ஸல்) அவர்கள் காலத்திலே ஜமாத்தில் பெண்களும் பங்கேற்றதற்கான ஆதாரங்கள் இருப்பதாக ஜமாத்தில் பென்களின் பங்கேற்பை வலியுறுத்தும் இஸ்லாமிய சகோதரிகளால் கூறப்படுகிறது. உம்மு இமார போன்ற நபி தோழியர்கள் போர்க்களங்கள் சென்று தீரத்தோடு போரிட்டு, காயம்பட்ட நபித்தோழர்களுக்கு பணிவிடையாற்றியிருக்கிறார்கள். நபி (ஸல்) அவர்கள் தூதுத்துவ பணியை மேற்கொண்டபோது அடைந்த துன்பங்களை தாங்க கூடிய உள வலிமையையும், தன்னுடைய அரவனைப்பால் தந்தவர் அன்னை கதீஜா (ரலி) அவர்கள். ஆனால், தற்போதுள்ள இஸ்லாமிய சமூகமானது பெண்ணை மனைவியாகவும், தாயாகவும், குடும்பத்தலைவியாக மட்டுமே நோக்குகிறது. அதனால்தான், ஆண்கள் பெரும்பான்மையாக உள்ள ஜமாத் நிர்வாகத்தில் பெண்களை இணைந்து செயலாற்ற அனுமதிக்கவில்லை. இதை இஸ்லாமிய ஆணா திக்க குறியீடாக எடுத்துக்கொள்ள முடியாது, ஏனென்றால், பெண்களை ஜமாத் நிர்வாகிகளாக நியமிக்க தயங்கும் இதே முஸ்லிம் ஆண்களும், ஜமாத்களும் ஊராட்சி, பேரூராட்சி மற்றும் நகராட்சி உறுப்பினர்களாக போட்டியிட்ட முஸ்லிம் பெண்களை எந்த ஒரு ஜமாத்தும் தடுக்கவோ அல்லது புறக்கணிக்கவோ இல்லை. முஸ்லிம்களின் இந்த போக்கு மாறவேண்டும் என்றால், இஸ்லாம் பெண்களுக்கு அளித்த உரிமைகளை வ ிளக்கி ஆண்களின் மத்தியில் சிந்தனை மாற்றம் ஏற்படச்செய்யவேண்டும். முஸ்லிம் பெண்களிடம் கடமையை மட்டும் எதிர்பார்க்கும் சமுதாயமும் ஆண்களும், இஸ்லாம் பெண்களுக்கு அளித்த உரிமைகளை வழங்க முன்வரவேண்டும்.
தமிழ்நாடு முஸ்லிம் பென்கள் முன்னேற்ற கழகம் போன்ற மேற்கத்திய சிந்தனை கொண்ட முற்போக்கு பென்கள் இயக்கத்தினர், ஒட்டு மொத்த இஸ்லாமிய ஆண் சமுதாயத்தை எதிரிகளாக சித்தரித்து பென்களுக்கென தனி பள்ளிவாசல் கட்ட முயற்சிப்பது சமுதாயத்தில் குழப்பத்தையே விளைவிக்கும். இவர்கள் ஜமாத்துக்கு எதிராக வைக்கும் முக்கியமான குற்றச்சாட்டு, பெண்கள் பங்கெடுக்காததால் தலாக் (விவாகரத்து) சம்பந்தமான வழக்குகளில் ஜமாத்தின் முடிவுகள் பெரும்பாலும் பென்களுக்கு பாதகமாக இருக்கிறது என்பதுதான். இந்த குற்றசாட்டில் உண்மை இருந்தாலும், ஜமாத் நிர்வாகத்தில் ஆண்கள் மட்டும் உறுப்பினர்களாக இருப்பதால்தான் முடிவுகள் இவ்வாறு அமைகின்றன என்ற குற்றசாட்டை முழுவதும் ஏற்க இயலாது. (விவாகரத்து சம்பந்தமான வழக்குகளில் ஜமாத்தின் பங்குபற்றிய விவரங்கள் விரைவில் தனிக்கட்டுரையில்)
ஆண்கள் பஞ்சாயத்து தலைவர்களாக இருந்தாலும் அவர்களுக்கென்று தாய், மனைவி, சகோதரிகள் மற்றும் பெண் பிள்ளைகள் இருக்கிறார்கள். அதனால் ஜமாத்துக்கும் பெண்களின் உணர்வுகளும், பிரச்சினைகளும் தெரிய நியாயமான வாய்ப்பிருக்கிறது. பெண்கள் சம்பந்தமான விவாகரத்து பிரச்சினைகளில் ஜமாத் தலைவர்கள் பெண்ணின் கருத்தையும், முடிவையும் அவளின் தாய் மற்றும் சகோதரிகளை கலந்தாலோசி_ f2து உண்மையறிந்து, பெண் துனை இல்லாத பட்சத்தில் அவளின் தந்தை மற்றும் சகோதரர்கள் அல்லது உறவினர்களின் கருத்தை அறிந்தே முடிவெடுக்கின்றனர். தற்போது, பாதிக்கப்பட்ட பெண்கள இதுதான் நடைமுறை உண்மை. விதிவிலக்குகள் இருக்கலாம் மறுக்கவில்லை. அதை களைய வேண்டியது ஒவ்வொரு உண்மையான முஸ்லிமின் கடமை. அதனால் தமிழ்நாடு முஸ்லிம் பென்கள் முன்னேற்ற கழகத்தை சார்ந்த சகோதரிகள் _ a6சால்வது போல் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று ஜமாத்களும் செயல்படவில்லை. (மெளலாசா http://www.thinnai.com/le0311047.html) .
(தமிழகத்தில், பென்கள் ஜமாத்தில் பங்கெடுத்தல் இதுவரை வழக்கத்தில் இல்லை ஆனால், சமீபத்தில், மதுரை MSS வக்பு போர்டு காலேஜ் KK நகர் பள்ளிவாசல் ஜமாத் கமிட்டி யின் உறுப்பினராக 59 வயதான, அரசு கல்லூரியில் முதல்வராக பணியாற்றி ஓய்வு பெற்ற நான்ஜிம் பரகத் என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது (The Hindu, Oct 27, 2004 திருச்சி பதிப்பு) நல்ல தொடக்கம்.)
ஜமாத்தின் வரவு மற்றும் செலவுகள்:
அரசு உதவிகள்:
ஜமாத் நிர்வாகத்தின் செயல்பாடுகளை கண்கானிக்க அரசால் ஏற்படுத்தப்பட்ட அமைப்புத்தான் வக்பு வாரியம். தமிழகத்தை பொறுத்தவரை வக்பு வாரியம் என்பது மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அமைப்பாகும். அதனால், வக்பு வாரிய தலைவர்களாக நியமிக்கப்படுபவர்கள் இஸ்லாமிய அடிப்படைகளும், சட்ட திட்டதிட்டங்களிலும் தேர்ந்தவர்களாக இருக்கவேண்டிய அவசியம் இல்லை. இஸ்லாமிய பெயட் 7 தாங்கிய ஆளுங்கட்சியின் ஜால்ராக்களாக இருந்தாலே போதும். வக்பு வாரிய தலைவராக மாறி ஆட்டிப்படைத்துவிடலாம்.
வக்பு வாரியத்திற்கென்று அரசு ஒதுக்கிய நிதியிலிருந்து பள்ளிவாசல் கட்டவோ, புனரமைப்பு செய்யவோ ஜமாத் நிர்வாகம் நிதி பெற விரும்பினால், வட்ட, மாவட்ட ஆளும் அரசியல்வாதிகளின் கருணையின்றி நிதி பெறுவது என்பது இயலாத காரியம். நிதி கோரிய விண்ணப்பங்களுக்கு முறையான பதிலே கிடைக்காது. விடிவு காலம் எப்பொழுது வரும் தெரியுமா ? சட்டசபை தேர்தல் நெருங்கியவுடன், கண்துடைப்புக்காக, கடந்த ஐந்தாண்டுகளில் கொடுக்கப்பட்ட மனுக்கள் தூசி தட்டப்பட்டு, பரீசீலிக்கப்பட்டு பதிலளிக்கப்படும். வழக்கம் போல், நிதி நெருக்கடியை காரணம் காட்டி, ஒரு சில ஜமாத்களின் கோரிக்கைகளை மட்டும் ஏற்று கண்துடைப்புக்காக குறைந்தபட்ச நிதி மட்டும் ஒதுக்கப்படும். அதனால், நடைமுறை அரசியல் நெளிவு சுளிவுகளை அறிந்த சில ஜமாத் நிர்வாகிகள் லஞ்சம் கொடுத்து வக்பு வா ரியத்திடம் காரியம் சாதித்துகொள்வதுண்டு. சுருக்கமாக சொல்லப்போனால், ஜமாத்துக்கு அரசு மூலமாக கிடைக்கும் உதவிகளும், சலுகைகளும் மிகவும் சிறியது. பிறகு ஜமாத்துக்கு வருமானம் என்ன ?
வருமானம்:
உறுப்பினர்களிடமிருந்து, ஜமாத்திற்கு வருட சந்தாவாக சிறுதொகையை ந்ன்கொடையாக வசூலிப்பது வழக்கம். இந்த தொகையை ஒவ்வொரு தலைக்கட்டும் ( ஒரு தம்பதி மற்றும் திருமணமாகாத அவர்களின் குழந்தைகள் அடங்கியது) கண்டிப்பாக செலுத்தவேண்டும். சில ஊர்களில், தனவந்தர்களும் வசதி படைத்த முஸ்லிம்களும், தான் சார்ந்த ஜமாத்திற்கு சொந்தமான பள்ளிவாசல் பராமரிப்பு மற்றும் சமுதாய நலம் கருதி, அசையும் மற்றும் அசையா சொத்துக்களை தானமாக அளிப்பது வழக்கம். இத்தகைய, நில புலன்கள், கடைகன்னிகள், தென்னை தோப்புக்கள் போன்றவைகளை வாடகைக்கு, ஏலத்திற்கு விடுவதன் மூலம்தான் ஜமாத்திற்கு வருமானம் வருகிறது. நிச்சயதார்த்தம், திருமணம், சுன்னத்து (விருத்த சேதனம்) போன்ற நிகழ்வுகளுக்கும், வெளிநாடு சென்று பொருளீட்டி வருபவர்கள் மகிமை பணம் என்ற பெயரில் ஜமாத்திற்கு சிறுதொகை நன்கொடையாக கொடுக்கவேண்டும். இத்தகைய வருமானத்திற்கு, ஆண்டுதோறும் ஆறு சதவிகிதத்தை, தமிழ் நாடு வக்பு வாரியத்திற்கு வரியாக செலுத்தி, முறையான கணக்கு வழக்குகளை சமர்ப்பிக்க ஒவ்வொரு ஜமாத்தும் கடமைப்பட்டுள்ளது. இதிலிருந்து தவறுகிற ஜமாத்தின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வக்பு வாரியத்திற்கு அதிகாரம் உண்டு.
செலவுகள்:
பள்ளிவாசலில் பணியாற்றும் ஹஜ்ரத், மோதினார்களுக்கு சம்பளமும், பள்ளிவாசலை பராமரிக்க ஆகும் மின்சாரம் மற்றும் தண்ணீருக்கான செலவுகள், மராமத்து பணி ஆகியவைகளுக்கும், புதிதாக மார்க்க கல்வி நிலையங்கள் கட்டவும் மற்றும் இறையில்லங்களை விரிவுபடுத்தவும் பயன்படுத்தப்படுகிறது.
ஜமாத்தின் அதிகாரம்:
ஜமாத்தின் அதிகாரம் மிகவும் வரையறுக்கப்பட்டது. திருமணம், விவாகரத்து, சொத்துப்பிரிவினை போன்றவைகளை இஸ்லாமிய தனியார் சட்ட அடிப்படையில் மட்டுமே தீர்த்துவைக்கிறது. இவ்விசயங்களில், இஸ்லாமிய சட்டத்திற்கு முரனாக தன்னிச்சையாக ஜமாத் முடிவெடுக்க முடியாது. இது தவிர, ஊரில் வசிக்கும் முஸ்லிம்கள் மத்தியில் ஒற்றுமை மற்றும் ஒழுங்குமுறையை பாதுகாப்பதற்காக, சமுதாய முன்னேற்றத்தை கருத்தில் கொண்டு சூழ் நிலைக் கேற்ற கட்டுப்பாடுகளை, நடவடிக்கைகளை சுயமாக வரையறுத்துக்கொள்ள அதிகாரமிருக்கிறது.
சமுதாய நலன் மற்றும் முன்னேற்றத்துக்காக ஜமாத் நிர்வாகம் இயற்றும் கட்டுப்பாடுகளை உறுப்பினர்கள் அனைவரும் மதித்து நடக்க கடமைபட்டவர்கள். ஆனால், சிலர் எதிர்ப்பு குரல் எழுப்புவர்கள். அத்தகையவர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஜமாத்திற்கு அதிகாரம் உண்டு. இத்தகையவர்களை வழிக்கு கொண்டுவர எடுக்கப்படும் எல்லா முயற்சிகள் தோல்வியடைந்தால், இறுதி முயற்சியாக, ஜமாத் நிர்வாகிகளில் பெ 0ரும்பான்மையோரின் முடிவின் அடிப்படையில், ஜமாத்தை மதிக்காத, குறிப்பிட்ட நபர் சம்பந்தமான விசயங்களிலிருந்து ஜமாத் நிர்வாகமும், உறுப்பினர்களும் முற்றிலும் ஒதுங்கிக்கொள்வார்கள். அவர் வீட்டில் நடைபெறும் எந்த ஒரு நிகழ்வுகளிலும் ஜமாத்தை சார்ந்த எவரும் கலந்துக்கொள்ளமாட்டார்கள். மந்தையிலிருந்து வழி தவறி செல்லும் ஆட்டை சரியான வழிக்கு கொண்டு வரும் உத்தியாக இத்தகைய நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
ஜமாத் நிர்வாகம், அரசின் காவல் மற்றும் நீதி துறையின் அதிகாரத்திற்கு முழுவதும் கட்டுப்பட்டது. அதனால் ஜமாத் எடுக்கும் முடிவுகளில் காவல் துறையும் நீதிமன்றமும் தலையிட முடியும். இந்திய அரசியல் சட்டத்திற்கு முரனாகவோ, அல்லது அடிப்படை மனித உரிமைகளை அவமதித்து, சில ஜமாத்கள் ‘கட்டை பஞ்சாயத்துகளாக ‘ மாறும் சூழ்நிலையில், பாதிக்கப்பட்டவர்கள் காவல் மற்றும் நீதி துறைகளின் த_ a8லயீட்டின் மூலம் பாதுகாப்பு பெற்றிருக்கின்றனர். காவல் மற்றும் நீதித்துறையின் வலிமையை அனைத்து ஜமாத் தலைவர்களும் அங்கீகரித்திருப்பது போலவே, ஜமாத்தின் செயல்பாட்டையும் பயன்பாட்டையும் மேற்கண்ட இரு துறைகளும் அங்கீகரித்திருக்கின்றனர். முஸ்லிம்களுக்குள் ஏற்படும் பிரச்சினைகளை ‘ஜமாத்தின் ‘ மூலம் தீர்வு காண்பதையே காவல் துறை விரும்புகிறது.
ஜமாத் தேர்வு:
தமிழகத்தில், 1980 வரை ஜமாத் அமைப்புக்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதும் செயல்பட்டதும் ஏறக்குறைய அரசியல் கட்சிகளை போலத்தான். இரு பெரும் கழகம் சார்ந்த ‘கரை கைலிகள் ‘ அணிந்த முஸ்லிம் உடன் பிறப்புக்களும் – இஸ்லாமிய இரத்தத்தின் இரத்தங்களும்தான், பள்ளிவாசல் நிர்வாகத்தில் ஆதிக்கம் செலுத்தினர். அரசியலில் நடப்பது போலவே ஜமாத் தலைமைக்கு போட்டி போடுவது, அதற்காக, ஆட்களை ப 0ிடித்தல், கடத்தல் மற்றும் அடிதடிகள் நடைபெற்றது. இந்த இழி நிலைமை மாறுவதற்கு, தமிழக முஸ்லிம்கள் மத்தியில் ஓரிறை கொள்கையை வலியுறுத்தும் இயக்கங்கள் வலுப்பெற ஆரம்பித்தது மிக முக்கியமான காரனம். அதன் விளைவாக, அரசியல்வாதிகளின் பிடியிலிருந்து பெரும்பாலான ஜமாத்கள் வெளியேறி ஜனநாயக முறையில் ஜமாத் நிர்வாகிகளை தேர்ந்தெடுக்கும் முறை வளர ஆரம்பித்தது. ஊரில் உ ள்ள ஆண்கள் அனைவரும் கூடி, ஒரு மித்த நிலை எடுக்க இயலாத பட்சத்தில் ஓட்டெடுப்பு மூலம்மும் நிர்வாகம் முடிவு செய்யப்படுகிறது. சுருக்கமாக, ஜமாத் நிர்வாகிகள் தேர்தலின் போது ஒட்டுமொத்த சமுதாய நலனை கருத்தில் கொண்டுதான் நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள் அதனால், பணச்செல்வாக்கு மற்றும் வாரிசுரிமை போன்றவைகளுக்கு முக்கியத்துவம் அளிக்காமல் இஸ்லாமிய அறிவு பெற்றவர்களும், ஐவேளை தொழுபவர்களும் தான் பெரும்பாலான ஊர்களில் ஜமாத் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.
ஊருக்கு ஒரு ஜமாத்துதானா ?
சில ஊர்களில் ஒன்றுக்கு மேற்பட்ட ஜமாத்கள் இருக்கிறது. இதற்கு பல காரணங்கள் உண்டு. அதிக எண்ணிக்கையில் முஸ்லிம்கள் வசிக்கும் ஊர்களில், நிர்வாக வசதியை கருதி, சில தெருக்களை இணைத்து அந்தப்பகுதிக்கென்ற ஜமாத் தேர்ந்தெடுக்கப்படுகிறது. இஸ்லாமிய அடிப்படைக்கு முற்றிலும் முரனான மதஹபு அடிப்படையில் ஷாபி -ஹனபிகளுக்கென தனி ஜமாத்கள் சில ஊர்களில் உள்ளது. குழு சார்ந்த விருப்பு வெறுப்புக்களின் அடிப்படையில் இருக்கின்ற ஜமாத்தை உடைத்து ஏற்படுத்தப்பட்ட போட்டி ஜமாத்களும் உண்டு.
ஜமாத்தின் அவசியம்
முஸ்லிம்கள் தங்களுக்குக்குள் எழும் பிரச்சினைகளை, காவல் துறை மற்றும் நீதி மன்றங்களுக்கு தூக்கிச்சென்று ஏற்கனவே அதிகப்படியான வழக்குகளை முடிக்க இயலாத அத்துறைகளின் பழுவை இன்னும் அதிகரிக்காமல், அரசின் பணியை எளிதாக்கி, இஸ்லாமியர்களின் தனித்தன்மையை பாதுகாக்கும் முஸ்லிம் ஜமாத்களின் இருப்பு என்றென்றும் அவசியம்.
பிறைநதிபுரத்தான்
say_tn@hotmail.com
- ஞாநியின் ‘மறதி அல்லது வெட்கங்கெட்டவர்கள் ‘ பற்றிய ஒரு எதிர்வினை.
- ஓவியப் பக்கம் எட்டு – இஸாமு நகூச்சி – வெளியை உணர்த்தும் ச்ிற்ப உடல் (பகுதி – 2)
- பாரதி இலக்கிய சங்கமும், காவ்யா அறக்கட்டளையும் நடத்திய சி. க நினைவரங்கத்தில் இணையம் வழியாக நேரடியாக வழங்கிய ஏற்புரை இது
- தியாகம் என்னும் உண்மை (போர் தொடர்கிறது – ஸ்பானிய நாவல் அறிமுகம் )
- என் பார்வையில் =நவீன தமிழ்க்கவிதைகளில் பரிசோதனை முயற்சிகள்
- ரவி ஸ்ரீநிவாஸின் லிபரலிஸம் – சில குறிப்புகள்
- நபிகள் நாயகத்தின் வாழ்வு , அன்னை ஜைனப்பின் திருமணம், இறுதிநபி : சலாஹூதீனுக்கு சில வரிகள்
- கடிதம்
- சங்கராச்சாரியார் கைதும் முஸ்லிம்களும்:
- சுந்தர ராமசாமியின் கோரிக்கை பற்றி
- கடிதம் டிசம்பர் 2, 1004 – இந்து ஒற்றுமை – சில எண்ணங்கள்
- கடிதம் டிசம்பர் 2,2004 – ஏகலைவன்: ஜெய மோகன்: பி.கே.சிவக் குமார்
- லீனா மணிமேகலை – சந்திப்பு – டிசம்பர் 16, 2004
- மெய்மையின் மயக்கம்-28
- சர்வதேச அறிவியல் புனைகதைப் போட்டி
- ஜமாத் என்றால் என்ன ?
- சீனாவின் தொழில் வளர்ச்சியும் மிதமிஞ்சிய அமில மழையும்
- வெண்ணிலாப்ரியன் கவிதைகள் 5 – இரண்டாம் தேடல்
- உருளைக்கிழங்கு உரிப்பவர்கள்
- உன்னால் நான்
- பெரியார் கொள்கைக்கு கிடைத்த வெற்றிகள்
- அழியத் துடிக்கும் அப்ரஹாக்கள்
- Evaluation of Meera Nanda ‘s articles
- ஜோதிர்லதா கிரிஜா அவர்களின் கட்டுரை பற்றி
- தமிழ்மணவாளனின் அதற்குத் தக கவிதை நூல் வெளியீட்டு விழா அழைப்பிதழ்-அறிவிப்பு
- கவிக்கட்டு 38-மனிதனைத் தேடி
- ஜே.ஜே. சில விளக்கங்கள்
- ஒரு பெரியாரிஸ்டின் தீபாவளி
- அறிவியல் சிறுகதை வரிசை.3- விசும்பு
- நீலக்கடல் – (தொடர்)- அத்தியாயம் – 48
- கிராமப்புற வேலைவாய்ப்பு உத்திரவாதச் சட்டம் பற்றி…
- மனச்சாட்சியற்றோரிடையே மாதர்க்கு மரியாதை!
- தேம்பித் திரிவர்
- இன்ரர்நெற் உலகமும் எம் சிறார்களும்
- ஜயேந்திரர் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் : சக இந்துக்களுக்கு ஓர் வேண்டுகோள்
- தமிழ்மணவாளன் கவிதைகள்
- ஈசனும் ஆசானும்.
- டேவிட் சசூன்
- மாற்றம்
- கீதாஞ்சலி (6)-உன்னிசைக் கீதம் (மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்)
- உயிர் மலரும்
- சென்னை நகரமோர் செல்வமடி!
- உன்னால் நான்
- பெரிய புராணம் – 20
- கண்ணீர் விட்டுத் தண்ணீர் வேண்டுமா ? அல்லது தண்ணீர் விட்டுக் கண்ணீர் வேண்டுமா ? இந்தியப் பூத நதிகளை ஓயும் நதிகளுடன் இணைக்க முயலும
- தமிழில் பறக்கும் குறுஞ்செய்திகள்
- ஹைட்ரஜன் ஆற்றலைப் பயன் படுத்த ஆய்வுகள்
- விஞ்ஞானக் கோட்பாடு- தவறென நிரூபிக்கும் தன்மை
- சிற்றளவாக்கத்தின் ஒரு பிண்ணனி மந்திரம்: தளப்பரப்பில் ஏற்றும் தொழில்நுட்பம்
- கடற்கரய் கவிதைகள்