K.ரவி ஸ்ரீநிவாஸ்
அரசியல் சட்டமும், மத சுதந்திரமும் – ஒரு அறிமுகக் குறிப்பு
போன பகுதியில் சில கேள்விகளை எழுப்பினோம். இனி வரும் பகுதிகளில் மேலும் சில கேள்விகளை
எழுப்பி, சில சர்ச்சைகளை அலசுவோம். அதை செய்யும் போது அரசியல் சட்டம் தரும் மத உரிமைகள்
குறித்தும் குறிப்பிட விருப்பதால் இந்த அறிமுகக் குறிப்பு இங்கு தரப்படுகிறது. (இது போன்ற ஒரு
குறிப்பு இணையத்தில் தமிழில் இருப்பதாகத் தெரியவில்லை. இருந்திருந்தால் நான் இதை எழுதத்
தேவையிராது).
இந்திய அரசியல் சட்டம் மத,வழிபாட்டு உரிமைகளை உறுதி செய்துள்ளது. இந்த உரிமை குறித்த
புரிதல் தேவை. ஏனெனில் இவ்வுரிமை இந்திய குடிமக்களுக்கு தரும் சில உத்தரவாதங்களை அரசால்
நீக்க முடியாது, அரசியல் சட்டத்தினையே மாற்றாமல். எனவே எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும் இவ்வுரிமை குறித்த விஷயங்களில் நினைத்த படி அரசு செயல்பட முடியாது. என்ன செய்யலாம் என்பதை அரசியல் சட்டமும், அதற்கு தரப்பட்டுள்ள விளக்கங்களும் சுட்டிக் காட்டுகின்றன. அரசியல் சட்டப் பிரிவுகளை அர்த்தப்படுத்துவதில் உச்ச நீதிமன்றம் பல வழக்குகளில் விளக்கங்களை அளித்துள்ளது. இவ்விளக்கங்களின் அடிப்படையில் இப்பிரிவுகளை புரிந்து கொள்ள வேண்டும். மேலும் சிறுபான்மையினர் உரிமைகள் குறித்த பிரிவுகளையும் மத சுதந்திரம் குறித்த பிரிவுகளையும் சேர்த்து படித்துப் புரிந்துகொள்ள வேண்டும்.அப்போதுதான் சிறுபான்மையினர் உரிமைகள் எத்தகையவை என்பதை அறிய முடியும்.
அரசியல் சட்டத்தின் 25,26,27,28 பிரிவுகள் மத சுதந்திரம் குறித்தவை. அரசியல் சட்டத்தினை உருவாக்கியவர்கள் மத சுதந்திரம் குறித்து விரிவாக விவாதித்துள்ளனர். மத சுதந்திரம் என்ற கருத்து இப்போது
மிகவும் சாதாரணமான ஒன்றாக தோன்றலாம்.ஆனால் அது எல்லாக் காலங்களில் ஒரு உரிமையாக
அங்கீகரிக்கப்பட்டதில்லை. இன்னும் சொல்லப் போனால் மதன் சுட்டிக்காட்டுவது போல் நவீன கருத்தான
மத சுதந்திரம் சுமார் முன்னூறு ஆண்டுகளாகத்தான் இருக்கிறது.(1)
http://www.epw.org.in/showArticles.php?root=2003&leaf=03&filename=5609&filetype=html
இந்திய அரசியல் சட்டத்தினை வகுத்தவர்கள் நவீன இந்தியாவை உருவாக்க விழைந்தவர்கள். தேசப்
பிரிவினை, யூத இனப்படுகொலை, இரண்டாம் உலகப் போர் போன்றவற்றின் பிண்ணனியில் அவர்களின்
கருத்துக்களை புரிந்து கொள்ள வேண்டும். அவர்கள் இந்திய தத்துவ மரபுகளையும், மேற்கத்திய
கருத்தாங்கள், பிற நாடுகளில் உள்ள சட்டங்கள் போன்றவற்றையும் ஆய்ந்து, விவாதித்தே இப்பிரிவுகளை
வகுத்தனர். அரசியல் சட்டத்தினை உருவாக்கியவர்கள் நடத்திய விவாதங்கள் அவர்களது அறிவிற்கும்,
வருங்கால இந்தியா குறித்த அக்கறைகளுக்கும் சான்றாக உள்ளன. சமத்துவம் அரசியல் சட்டத்தின் மையக் கருத்துக்களில் ஒன்று. மேலும் இந்திய அரசியல் சட்டத்தினை வகுத்தவர்கள் இந்திய அரசு மதச்சார்பற்றதாக இருக்க வேண்டும், மதங்களிடையே பாரபட்சம் காட்டக் கூடாது என்பதையும் கருத்தில் கொண்டே அடிப்படை உரிமைகளில் ஒன்றாக இதைக் வகுத்தனர். அவர்களின் தீர்க்கதரிசனத்தினை நாம் பாராட்ட வேண்டும். மத சுதந்திரம் மனித உரிமைகள் குறித்த பிரகடனம் உட்பட பல்வேறு மனித உரிமை சாசனங்கள், உடன்படிக்கைகளால் அங்கீகரிக்கப்பட்ட ஒன்றுமாகும். மதன் மத சுதந்திரம் என்ற கருத்தின் வரலாற்றையும், இந்தியச் சூழலில் அது குறித்த சர்சைக்களையும் விளக்குகிறார். அவற்றை நான் மீண்டும் இங்கு குறிப்பிட விரும்பவில்லை.
அரசியல் சட்டத்தின் 25வது பிரிவு கூறுகிறது
Freedom of conscience and free profession, practice and propagation of religion.-(1) Subject to public order, morality and
health and to the other provisions of this Part, all persons are equally entitled to freedom of conscience and the right freely to
profess, practise and propagate religion. (2) Nothing in this article shall affect the operation of any existing
law or prevent the State from making any law-
(a) regulating or restricting any economic, financial, political or other secular activity which may be associated with religious
practice;
(b) providing for social welfare and reform or the throwing open of Hindu religious institutions of a public character to all classes and
sections of Hindus.
Explanation I.- The wearing and carrying of kirpans shall be deemed to be included in the profession of the Sikh religion.
Explanation II.- In sub-clause (b) of clause (2), the reference to Hindus shall be construed as including a reference to persons
professing the Sikh, Jaina or Buddhist religion, and the reference to Hindu religious institutions shall be construed accordingly.
அரசியல் சட்டத்தின் 26வது பிரிவு கூறுகிறது
Freedom to manage religious affairs.- Subject to public order, morality and health, every religious denomination or any section
thereof shall have the right-
(a) to establish and maintain institutions for religious and charitable purposes;
(b) to manage its own affairs in matters of religion;
(c) to own and acquire movable and immovable property; and
(d) to administer such property in accordance with law.
மதம் என்றால் என்ன என்பதை புரிந்து கொள்ள நீதிபதி முகர்ஜியா ஒரு வழக்கில் தந்த தீர்ப்பில் குறிப்பிட்டதைப் பார்க்கலாம். இது உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள வேறு பல தீர்ப்புகளில் மேற்கோளிடப்படுவதால் இது முக்கியமானது.
“Religion is certainly a matter of faith with individuals or communities and it is not necessarily theistic. There are well-known religions in India like Buddhism and Jainism which do not believe in God or in any intelligent first cause. A religion undoubtedly has its basis in a system of beliefs or doctrines which are regarded by those who profess that religion as conducive to their spiritual well-being, but it would not be correct to say that religion is nothing else but a doctrine or belief. A religion may not only lay down a code of ethical rules for its followers to accept, it might prescribe rituals and observances, ceremonies and modes of worship which are regarded as integral parts of religion, and these forms and observances might extend even to matters of food and dress.” (Commr. HRE v. Sri Lakshmindra Thirtha Swamiar of Sri Shirur Mutt)
மத சுதந்திரம் என்பது தடைகளற்ற சுதந்திரமல்ல. இப்பிரிவின் கீழ் அது பொது ஒழுங்கு, ஒழுக்கம், சுகாதாரம் உட்பட வேறு காரணங்களுக்காக, கட்டுப்பாடுகளுக்குட்பட்டது. அரசு இப்பிரிவின் கீழ் மத சுதந்திரம் என்ற பெயரில் கோயில்களில் இந்துக்களில் அனைத்து தரப்பினருக்கும் வழிபாட்டு உரிமையை தர மறுப்பதை தடுக்க முடியும்.வேறுவார்த்தைகளில் சொன்னால் இந்துக்களில் இந்தப் பிரிவினர் இந்த இந்துக் கோயிலுக்குள் நுழையக் கூடாது என்று தடை விதிக்க முடியாது. மேலும் எவை மதம் தொடர்புடையவை, எவை மதம் தொடர்பில்லாத அல்லது மதம் சாராதவை என்பதையும் கருத்தில் கொண்டு அரசு மதம் சாராத விஷயங்களில் தலையிட அரசியல்
சட்டம் உரிமை தருகிறது. அரசின் முடிவு நீதிமன்ற ஆய்விற்குட்டப்பட்டது. உதாரணமாக கோயிலை நிர்வகிக்கும்
அறக்கட்டளை கோயில் நிதியை முறை கேடாக பயன்படுத்தினால் அரசு தலையிட முடியும். கோயில் பூசாரி/ அரச்சகர் நியமனம் மதச்சார்பற்ற நடவடிக்கை என்று நீதிமன்றம் கூறியுள்ளது (Bhuri Nath Vs State of J&K).
அரசின் நடவடிக்கை/ ஒழுங்குமுறை மதம்சாராத நடவடிக்கைள் குறித்து இருக்க வேண்டும், மதத்தினைப் பின்பற்றுவது குறித்த நடவடிக்கைகள் குறித்ததாக இருக்கக் கூடாது என்று தீர்பளிக்கப்படிருக்கிறது. (Ratillal Vs.
State of Bombay). ஆனால் நடைமுறையில் இந்த எல்லைக்கோட்டினை வகுப்பது எளிதாக இல்லை. இருப்பினும்
இக்கோட்பாடு இதற்கு பின் வழங்கப்பட்ட பல தீர்ப்புகளிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒரு மதப்பிரிவிற்கு சடங்குகள், பின்பற்றப் பட வேண்டிய விதிகள் குறித்து தீர்மானிக்கும் உரிமை உண்டு. அதில் அரசு தலையிட்டு மாற்ற முடியாது. ஆகம விதிகள் பின்பற்றப்படும் கோயில்களில் ஆகமங்கள் கூறும் விதிகளின் படி விக்கிரகங்களை
யார் தொடுவது, பூஜை செய்வது என்பதை பின்பற்றும் உரிமை மதப்பிரிவினருக்கு உண்டு. (Seshammal Vs. State of Tamil Nadu). [இவ்வழக்கு அனைத்து ஜாதியினரும் அரச்சகர் ஆவது குறித்த வழக்கு. யார் அர்ச்சகராக இருக்கலாம் என்பதை அரசு தீர்மானிக்கலாம்.ஆகம விதிகள் பின்பற்றபட வேண்டும் என்ற கோரிக்கை மத சுதந்திரத்தின் பகுதி என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இங்கு விக்கிர வழிப்பாட்டில், பூஜைகள் செய்வதில் ஆகம
விதிகள் பின்பற்றப்பட வேண்டும் என்று வரும் போது அது மதவழிப்பாட்டின் பகுதி என்பதால் அதில் அரசு தலையிட முடியாது].
மதப்பிரிவு என்று கூறும் போது அரசியல் சட்டம் ஒரு மதத்தில் பல பிரிவுகள் இருப்பதை அங்கீகரிக்கிறது. இப்பிரிவுகள் மாறுபட்ட வழிபாட்டு முறைகளை பின்பற்றினாலும், சடங்குகள், நம்பிக்கைகள் வேறாக இருந்தாலும் உரிமை உண்டு. கிறித்துவ மதத்தின் ஒரு பிரிவு தாங்கள் மட்டுமே உண்மையான கிறித்துவப் பிரிவு, பிற பிரிவுகளை அங்கீகரிக்கக் கூடாது என்றெல்லாம் கோரினால் அதை சட்டம் ஏற்காது. மேலும் ஒரு மதத்தின் முக்கிய அம்சங்கள் எவை, எவையில்லை என்பதையும் நீதிமன்றம் ஆராய முடியும் (Ramanuja Vs. State of Tamil Nadu).அதாவது இது நீதிமன்ற ஆய்விற்க்கப்பாற்பட்டது என்று யாரும் கூற முடியாது. மேலும் மதப்பிரிவுகள் அறக்கட்டளைகள் துவங்க, சொத்துக்களை வாங்க,விற்க உரிமை உடையவை. தனி நபர் சொத்துரிமைகள் அவற்றிற்கும் பொருந்தும். அத்தகைய சொத்தினை அரசு கையக்கப்படுத்த நினைத்தால் அதை செய்ய தேவையான காரணம் இருக்க வேண்டும், அக்காரணம் நியாயமானது என்று நீதிமன்றம் ஏற்க வேண்டும். அதாவது அரசின் முடிவுகள் நீதிமன்ற ஆய்விற்குட்பட்டவை. அரசு தனியார் கோயில்களை தன்னிசையாக எடுத்துக் கொள்ள முடியாது. ஒரு மதப்பிரிவு கோயிலை நிர்வகிக்க விதிமுறைகளை ஏற்படுத்தி, அவ்விதிமுறைகளை நீதிமன்றம் ஏற்றிருந்தால் அங்கு நிர்வாகத்தில் தலையிட, கோயிலை எடுத்துக் கொள்ள அரசுக்கு அதிக உரிமைகள் இல்லை. தகுந்த காரணங்கள் இன்றி அரசு அத்தகைய கோயில்களை எடுத்துக் கொள்ள முடியாது. அப்படியே எடுத்துக் கொள்ள முயன்றாலும் அதுவும் நீதிமன்ற ஆய்விற்குட்பட்டதே. இங்கு கோயில் என்பது அனைத்து வழிபாட்டுத் தலங்களுக்கும் பொருந்தும்.
மதம் என்று ஒன்றிருந்தால் அம்மதம் இறை நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டிருக்கவேண்டும் என்றில்லை. மேலும் மதம் வேறு, தத்துவம் வேறு.மதம் நியமங்களை, விதிகளை, நம்பிக்கைகளை கொண்டிருப்பது. அவற்றை நடைமுறைப்படுத்த சில ஒழுங்குகளையும், கட்டுப்பாடுகளையும் அது விதிக்கலாம். இவை பொது ஒழுங்கு, ஒழுக்கம், சுகாதாரம் போன்றவற்றிற்கு எதிராக இருக்க முடியாது.மத சுதந்திரம் குறித்த பிரிவு சட்ட விரோதச் செயல்களை மத ஒழுங்கு என்ற போர்வையில் அனுமதிக்கவில்லை. இந்தியாவில் தீண்டாமை சட்ட விரோதம் என்று அரசியல் சட்டம் கூறுகிறது. தீண்டாமை மதத்தின் கோட்பாடு/விதி என்ற பெயரில் கோயில்களில் நுழைய விடாமல் செய்ய முயன்றால் அதை மத சுதந்திரம் என்ற வகையில் சட்டம் அனுமதிக்காது. ஒரு தனிப்பட்ட பிரிவினருக்கான கோயிலில் பிற பிரிவினரை அனுமதிக்க மறுக்கும் உரிமை உண்டா என்ற கேள்வி எழுந்தது. அதற்கு தரப்பட்ட தீர்ப்பு மிகவும் முக்கியமானது. மத சுதந்திரம் எது வரை செல்லுபடியாகும் என்பதற்கு இது ஒரு உரைகல்.
தீண்டாமையை நீக்கி, இந்துக் கோயில்களுக்குள் தலித்கள் செல்ல உரிமையளிக்கும் சட்டம் ஒரு தனிப்பட்ட
பிரிவினரின் கோயிலுக்கு பொருந்துமா என்று கேள்வி எழுந்தது. கெளட சரஸ்வத் பிரமணர்களுக்கு சொந்தமான
கோயிலிற்கு தலித்களுக்கு நுழைய உரிமை தரும் சட்டம் செல்லுபடியாகுமா என்ற கேள்விக்கு உச்ச நீதிமன்றம்
தந்த பதிலில் அரசியல் சட்டம் 25ம் பிரிவின் கீழ் அரசுக்கு தரப்படும் அதிகாரம், மதப்பிரிவுகளுக்கு அரசியல் சட்டம் 26வது பிரிவின் கீழ் தரப்படும் உரிமைகளுக்கு முரணானதா என்பது ஆராயப்பட்டது. அரசியல்சட்டத்தினை ஒத்திசைவாக பொருள் கொள்வது என்பதன் அடிப்படையில் நீதிபதி வெங்கட்ராம ஐயர் தந்த தீர்ப்பில் 26(பி) பிரிவின் கீழ் மதப்பிரிவினருக்கு மத நிறுவனங்களை நிறுவ,நிர்வாகிக்க உரிமை உண்டு, பிரிவு 25(2)ன் கீழ் அரசுக்கு விரிவான அதிகாரம் தரப்பட்டுள்ளது, இந்த அதிகாரம் 26(பி) பிரிவின் உரிமையை கட்டுப்படுத்தக் கூடியது என்று குறிப்பிட்டார். அதாவது 26(பி) பிரிவின் உள்ள உரிமைக்கும் 25ம் பிரிவின் கீழ் உள்ளவற்றிற்கும் முரண்பாடு ஏற்படும் போது பொது நலன் கருதி அரசு எடுக்கும் முடிவு 26(பி) பிரிவு தரும் உரிமைகளை கட்டுபடுத்த முடியும். (இந்த முடிவும் நீதிமன்ற ஆய்விற்குட்டப்பட்டதே). இவ்வழக்கில் அக்கோயிலில் சில சடங்களில் கெளட சரஸ்வத்களை மட்டும் அனுமதிக்க அப்பிரிவினருக்கு உரிமை உண்டு, கோயிலில் நுழையக் கூடாது என்று பிற இந்துக்களை தடுக்கும் உரிமை கிடையாது என்று தீர்ப்பானது. முன்னது 26(பி) பிரிவின் கீழ் தரப்படும் உரிமை, பின்னது 25ம் பிரிவு 2ம் உப பிரிவின் அடிப்படையிலானது. எனவே கோயிலிற்கு அந்த சட்டத்திலிருந்து விதிவிலக்கு அளிக்குமாறு கோர உரிமை இல்லை என்று தீர்ப்பானது. (Venkataramana Devaru v. State of Mysore).
மத நடைமுறைகள் குறித்து இன்னொரு வழக்கில் கஜேந்திரகட்கர் தன் தீர்ப்பில் கூறியதும் மிக முக்கியமானது. ஏனெனில் எல்லாவற்றையும் மத நடைமுறைகள் என்ற பெயரில் கொண்டு வர முடியுமா என்ற கேள்விக்கு இது பதில் தருகிறது. ஒரு மதம் அந்த நடைமுறை(யை/களை)
“as its essential and integral part; otherwise even purely secular practices which are not an essential or an integral part of religion are apt to be clothed with a religious form and may make a claim for being treated as religious practices within the meaning of Article 26…. in other words, the protection must be confined to such religious practices as they are an essential and an integral part of it and no other.” (Durgah Committee v. Syed Hussain Ali).
இதிலிருந்து மத நடைமுறை என்ற பெயரில் எதை வேண்டுமானாலும் செய்ய உரிமையை அரசியல் சட்டம் தரவில்லை. அந்த நடைமுறை இந்த உரிமையின் கீழ் வருமா என்பதை நீதிமன்றம் தீர்மானிக்க முடியும். அதாவது அந்த நடைமுறை அம்மதத்தின் மிகமுக்கியமான ஒன்றாக இல்லாத போது அந்த நடைமுறையை வழிபாட்டு உரிமை என்ற பெயரில் நியாயப்படுத்த முடியாது.
(தொடரும்)
- புது வழித்தோன்றல்!
- சூடேறும் கோளம், உருகிடும் பனிப்பாறை, காலநிலை மாறுதலுக்குக் காரணமான பூகோளச் சுழற்திரிபுகள் -7
- கடந்த திண்ணையிதழில் வெளிவந்த நண்பர் நேசகுமாரின் ‘எண்ணச்சிதறல்கள்’ பற்றி…..
- நேச குமார் மற்றும் ஜெயமோகன் பார்வைகளுக்கு
- மந்திரவாதி அம்மாவை அடிக்கணுமா?
- எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்: அங்கம்-2, பாகம்-12)
- கீதாஞ்சலி (84) – பிரிவுத் துயர்..!
- கல்வெட்டாய்வு: ஸானான் வர்த்தினை
- எண்ணச் சிதறல்கள் – இளைய தலைமுறை, ரீடா கோத்தாரி, தி எகனாமிஸ்ட், அருண் ஷோரி, இஸ்ரேல் ஷங்கர், சின்னக் கருப்பன், அல்லாஹ¥ அக்பர்!
- பெரியபுராணம் – 98 – திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி
- ஏன் தற்கொலை?
- கவிதைகள்
- சாதியத்தின் பண்பாட்டுச் சிக்கல் – 10. நம்பிக்கைகள்
- உள்நாட்டு இஸ்லாமிய ஜிகாதி தீவிரவாதத்தின் கோர முகம் தோலுரிக்கப் பட வேண்டும்
- Screening of ‘a little dream’ a docu-film on Dr.APJ.Abdul Kalam
- வடக்கு வாசல் – இசை விழா – நினைத்தாலே இனிக்கும்
- கடிதம்
- களையிழந்தக் கச்சேரிகள்
- மறுபடியும் ஒரு மகா பாரதம் – அத்தியாயம் – 32
- ஒப்புக்கொண்ட உண்மை
- கோயில்கள், பெண்கள், மொழி,வழிபாடு : சர்ச்சைகளும், புரிதல்களும் -2
- இஸ்லாமிய தீவிரவாதத்தைப் பூசி மெழுகும் இப்னு பஷீர்
- பெண் போனால் . . .
- கடித இலக்கியம் – 16
- கண்களைத் திறக்கும் கலை – (மலரும் மணமும் தேடி – பாவண்ணனின் கட்டுரைத் தொகுப்பு அறிமுகம் )
- அம்பேத்கரின் பன்முகம் – நூல் அறிமுகம்
- அட்லாண்டிக்குக்கு அப்பால்
- புதுவை ஞானத்தின் நாட்குறிப்பிலிருந்து 7 : தேவ லோக இசை
- தாய் வீடு
- 2006 தேர்தல் / சில குறிப்புகள்
- தோழர் யேசுவுடன் பேசாது திருமபிய இரவு
- இஸ்லாமியருக்கெதிரான இந்துத்துவ சூழ்ச்சிகள்!
- தமிழ் இசை , தமிழர் இசை, தமிழ் மொழி , தமிழர் மொழி