கேள்விஞானி
1. தமிழினத் தலைவர் என்று உங்களை நீங்கள் அழைத்துக் கொள்கிறீர்கள். உங்கள் கட்சியில் இருப்பவர்களும் அப்படித்தான் உங்களை அழைக்கிறார்கள். தமிழினம் என்றெல்லாம் இனவாதம் பேசாவிட்டாலும் தமிழர்களின் நல்வாழ்வில் அக்கறையுள்ளவர்கள் தெரிந்து கொள்ள விரும்புவது இதுதான். உலகத் தமிழர்களுக்காக எங்கே எப்படி குரல் கொடுக்கிறீர்கள்? மலேசியாவில் தமிழர்கள் தம் உரிமைகளை இழந்து நின்று போராடுகளார்கள். இலங்கையில் தமிழர்கள் பெரும் கொடூரத்திற்கு ஆளானார்கள்.இவர்களுக்காக என்ன செய்திருக்கிறீர்கள்?
2. நீங்கள் தமிழ்நாட்டின் முதல் குடும்பம் என்று சொல்லத்தக்கவாறு முடிசூடா மன்னராக – தவறு முடிசூட்டிக் கொண்ட மன்னராகவே- ஆகிவிட்டீர்கள். நீங்கள் மன்னர்களில் சிபிச் சக்கரவர்த்தியாகவும், மனுநீதிச் சோழனாகவும் தன் குடும்பத்தினராயினும் தவறு செய்தால் தண்டிக்கிறவாறு செயல்படுகிறீர்களா? ஏன் தன் மக்கள் கௌரவராய் இருந்தாலும் அவர்களைக் காப்பாற்றும் திருதராஷ்டிரனாக இல்லாமலாவது இருக்கலாம். பாசம் கண்ணை மறைத்து தம்முடைய மக்களை அரியணையில் ஏற்றி அழகு பார்க்கும் வாரிசு அரசியல்வாதியாக ஏன் மாறிப் போனீர்கள்?
3. உங்களை எதிர்காலம் எப்படி நினைவு கூர வேண்டும் என்று விரும்புகிறீர்கள்? வெறும் கோடீஸ்வரக் குடும்பத்தின் தலைவனாகவா , அல்லது தமிழ்நாட்டின் அரசியல் வாழ்வில் பெரு மாற்றம் கொண்டு வந்த ஒருவராகவா? இரண்டாவது என்றால் என்ன மாற்றம் கொண்டு வந்தீர்கள்?
4. உங்கள் அரசியல் வாழ்வில் மிக முக்கியமான நிகழ்வு அவசர நிலைப் பிரகடனத்தின் போது அதற்கு எதிராக நிலைபாடு கொண்டு, அவசரநிலையை எதிர்த்த பலருக்கும் அடைக்கலம் கொடுத்தது தான். அப்படியொரு எமெர்ஜன்சி இன்னொரு முறை வந்தால் நீங்கள் அதே பழைய கலைஞராக குரல் கொடுப்பீர்களா?
5. இலக்கியவாதியாக உங்களை நீங்கள் இனங்காண்பதில் பெருமை கொள்வதுண்டு. ஆனால் தமிழ்நாட்டில் நவீன இலக்கியத்தைப் பற்றிய கருத்தோ, அல்லது உலக இலக்கியப்போக்குகள், அதில் தமிழ்நாட்டு இலக்கியத்தின் பங்கு பற்றியோ என்ன கருத்து வைத்திருக்கிறீர்கள்?
6. நீங்கள் எழுதிய கதை, கவிதைகள், திரைக்கதை, நாவல்களில் எவை உலகத்தரம் வாய்ந்தது என்று நினைக்கிறீர்கள்?
7. சிக்கலான சமயங்களில் உங்களால் உபயோகப்படுத்தப்படும் வார்த்தை “நான் சூத்திரன் என்பதால் இப்படி கேட்கிறார்கள்”. உங்களால் பதில் சொல்ல முடிகிற கேள்விகளின் போது எழாத இந்த பதில் ஏன் உங்களால் பதில் சொல்ல முடியாதபோது உங்களிடமிருந்து வருகிறது என்பதை நீங்கள் தெளிவு படுத்த முடியுமா?
8. தலித்துகள் தனிகட்சி ஆரம்பிக்க முனைந்ததற்கும், வன்னியர்கள் தனிகட்சி ஆரம்பிக்க முனைந்ததற்கும், சுமார் 30 வருடங்களுக்கு மேல் இரண்டு நபர்களே முதலைச்சர்களாக மாறி மாறி இருந்திருக்கிறார்கள் என்பது ஒரு காரணம் என்று நினைக்கிறீர்களா? ஒரு நபர் இரண்டு முறைக்கு மேல் முதலமைச்சராக இருக்கக்கூடாது என்ற சட்டம் வருவது அனைத்து சமூக பிரதிநிதிகளும் அதிகாரம் பெற வாய்ப்பாக இருக்கும் என்று கருதுகிறீர்களா?
9. சமீபத்தில் ராஜா மீதான குற்றச்சாட்டுகளுக்கு பதிலாக, தலித் என்பதால் அவர் மீது பிரச்னை கிளப்புகிறார்கள் என்று கூறியுள்ளீர்கள். அவர் திமுக அமைச்சராக இல்லையென்றாலும் இதே போல கூறுவீர்களா?
10. தலித் அமைச்சர்கள் ஊழலே செய்யமாட்டார்கள் என்பது உங்கள் நிலைப்பாடா? அல்லது திமுகவில் இருக்கும் தலித் அமைச்சர்கள் ஊழலே செய்யமாட்டார்கள் என்பது உங்கள் நிலைப்பாடா? அல்லது ஊழல் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவருமே தலித்துகள் என்பது உங்கள் நிலைப்பாடா? அல்லது இதுவரை பார்ப்பனர்களோ அல்லது தலித் அல்லாதவர்கள் மீதோ ஊழல் குற்றமே சாட்டப்பட்டதில்லை என்பது உங்கள் நிலைப்பாடா?
- சமஸ்கிருத பாரதி – ஆரம்பநிலை பேச்சு சமஸ்கிருதம்- நியூ ஜெர்ஸி வகுப்புகள் துவக்கம்
- வேதவனம் –விருட்சம் 84
- ஆசிரியர் அவர்களுக்கு
- மொன்றியல் மாநகரில் மகாஜனா கல்லூரியின் நூற்றாண்டு ஆரம்ப முத்தமிழ் விழா-2010
- கலாப்ரியா படைப்புக்களம் என்ற நிகழ்வு கோவையில்
- காற்றுவெளி ஏப்ரல் 2010 இதழ் வெளிவந்துள்ளது.
- எழுத்தின் அரசியல் கன்னியாகுமரி மாவட்டம் முட்டத்தில் கலை இலக்கிய முகாம்
- ஆசிரியருக்கு
- கலைஞருக்குப் பத்துக் கேள்விகள்
- சீதாம்மாவின் குறிப்பேடு -ஜெயகாந்தன் -13
- பூமியின் மையப் பூத அணு உலை உண்டாக்கிய பாதுகாப்புக் காந்த மண்டலம் ! (Geo-Reactor & Geo-Magnetism)(கட்டுரை -3)
- அன்னையர் தினம்
- டோரா மற்றும் நாங்கள்
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) ஆலயத்தின் வாசலில் கவிதை -28 பாகம் -2
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) இரவில் அடிக்கும் காற்று கவிதை -8 பாகம் -2
- பரிச்சய முகமூடிகள்…
- நினைவுகளின் சுவட்டில் – (47)
- சுஜாதா எழுதாத கதை
- ஆயுத மனிதன் (The Man of Destiny) ஓரங்க நாடகம் அங்கம் -1 பாகம் -16
- விஸ்வரூபம் – அத்தியாயம் அறுபது
- முள்பாதை 28